தூத்துக்குடியில் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசிய 4 பேர் கைது

முத்துராஜை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர்.விக்ரம் வீட்டுக்கு சென்று அடுத்தடுத்து 2 பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர்.
தூத்துக்குடியில் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசிய 4 பேர் கைது
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி தாள முத்துநகர் தாய் நகரை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 24). இவர் தனது நண்பர்களான ரிஜோ (21), ஹவுசிங் போர்டு விக்னேசுவரன் (20) மற்றும் வாலிபர்கள் 2 பேருடன் சேர்ந்து கதிர்வேல்நகர் குப்பைகிடங்கு அருகில் மது குடித்தனர்.

அப்போது அங்கு வந்த விக்ரம் (22), ராபர்ட் ஆகிய 2 பேருக்கும் முத்துராஜிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த விக்ரம், ராபர்ட் ஆகிய 2 பேரும் வீட்டில் இருந்து அரிவாளை எடுத்து வந்து முத்துராஜை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர்.

இதில் படுகாயமடைந்த முத்துராஜ் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் முத்துராஜின் நண்பர்கள் நள்ளிரவில் பிஅன்டி காலனியில் உள்ள உள்ள விக்ரம் வீட்டுக்கு சென்று அடுத்தடுத்து 2 பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர்.

இதில் வீட்டின் வளாக முன்பகுதியில் விழுந்த பெட்ரோல் குண்டுகள் வெடித்து தீப்பிடித்தது. வீட்டில் உள்ளவர்கள் உடனே தீயை அணைத்தனர். இதுகுறித்து இருதரப்பினரும் அளித்த புகாரின்பேரில், சிப்காட் போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஹவுசிங் போர்டு திருமுருகன் (19), ஸ்வீட்டன் ரிஜோ (21) ராஜகோபால் நகர் சந்தோஷ் ராஜா (20) மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 4 பேரை கைது செய்தனர். மேலும் மில்லர் புரத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் (20), மதன் (18) ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com