என் மலர்tooltip icon

    இந்தியா

    • வாரத்தின் இறுதிநாளில் தங்கம் விலை சற்று உயர்ந்தது.
    • வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த வாரத்தில் ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமான நிலையிலேயே நீடித்து வந்தது.

    இந்த மாத தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.96,560-க்கும், கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.12,070-க்கும் விற்பனையானது. இதனை தொடர்ந்து தங்கம் விலை குறைவதும், ஏறுவதுமாக இருந்த நிலையில், வாரத்தின் இறுதிநாளில் தங்கம் விலை சற்று உயர்ந்தது. கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,040-க்கும், சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,320 ஆயிரத்துக்கும் விற்பனையானது. நேற்றும் இதே விலையில் விற்பனையானது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் ரூ.12,040-க்கும், ஒரு சவரன் ரூ.96,320 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

    வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.198-க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    07-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,320

    06-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,320

    05-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,000

    04-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,160

    03-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,480

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    07-12-2025- ஒரு கிராம் ரூ.199

    06-12-2025- ஒரு கிராம் ரூ.199

    05-12-2025- ஒரு கிராம் ரூ.196

    04-12-2025- ஒரு கிராம் ரூ.200

    03-12-2025- ஒரு கிராம் ரூ.201

    • நாட்டின் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு இன்று கொண்டாடப்படுகிறது.
    • பிரதமர் மோடி இன்று 10 மணி நேர சிறப்பு விவாதத்தை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்

    பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் கடந்த 1 ஆம் தேதி தொடங்கியது. வருகிற 19-ந் தேதி வரை இந்த கூட்டம் நடைபெறுகிறது.

    SIR குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் சில நாட்களுக்கு பாராளுமன்றம் முடங்கியது. திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது.

    இந்நிலையில், நாட்டின் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு இன்று கொண்டாடப்படுவதால் அதன் வரலாறு குறித்த விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெறுகிறது.

    'வந்தே மாதரம்' இயற்றப்பட்டதன் 150வது அண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மக்களவையில் பிரதமர் மோடி இன்று 10 மணி நேர சிறப்பு விவாதத்தை தொடங்கி வைத்து உரையாற்ற உள்ளார்

    இதன் மூலம் வந்தே மாதரம் பாடல் குறித்து பல்வேறு முக்கியமான, அறியப்படாத தகவல்கள் தெரியவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வந்தே மாதரம் பாடலில் இருந்து முக்கிய வரிகள் கடந்த1937-ம் ஆண்டு நீக்கப்பட்டதே இந்தியாவின் பிரிவினைக்கு காரணம் என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உள்நாட்டில் அதிகளவில் விமானங்களை இயக்கும் இண்டிகோ நிறுவனம் சிக்கல்களை சந்தித்து வருகிறது.
    • நேற்று மட்டும் சென்னையில் 100க்கும் அதிகமான இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

    உள்ளாட்டு விமான பயணங்களில் விமானிகள் மற்றும் பணியாளர்களுக்கான புதிய பணி நேரக்கட்டுப்பாடு கடந்த 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. இதன்படி விமானிகள் தொடர்ச்சியாக 18 மணி நேரம் வேலை பார்க்கலாம் என்ற விதியை திருத்தி 8 மணி நேரமாக குறைத்தது. விமானிகளின் விடுப்பு நேரம் முன்பு வாரத்திற்கு 36 மணி நேரமாக இருந்தது. அது தற்போது 48 மணி நேரமாக அதிகரித்தது.

    மேற்கண்டவை உள்ளிட்ட பல்வேறு புதிய நடைமுறைகளை அமல்படுத்த மற்ற விமான நிறுவனங்கள் படிப்படியாக தேவையான ஏற்பாடுகளை செய்தது. ஆனால் இண்டிகோ விமான நிறுவனம் இதில் மெத்தனம் காட்டியதாக விமானிகள் கூட்டமைப்பு குற்றம்சாட்டியது.

    இதன் காரணமாக உள்நாட்டில் அதிகளவில் விமானங்களை இயக்கும் இண்டிகோ நிறுவனம் சிக்கல்களை சந்தித்து வருகிறது. கடந்த சில நாட்களாக அந்த விமானங்கள் தாமதம் மற்றும் ஏராளமான விமானங்கள் ரத்து காரணமாக பயணிகள் பரிதவித்தனர். இதை பயன்படுத்தி மற்ற விமான நிறுவனங்கள் தங்கள் விமான கட்டணங்களை பன்மடங்கு அதிகரித்தன.

    இந்நிலையில், இன்று 7வது நாளாக சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை பாதிப்படைந்துள்ளது.

    சென்னையில் நிர்வாக காரணமாக இன்று 38 புறப்பாடு. 33 வருகை என 71 விமான சேவை ரத்தாகியுள்ளதாக இண்டிகோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • விராட் கோலி தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் தான் விளையாடி வருகிறார்.
    • தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி தொடர் நாயகன் விருது வென்றார்.

    டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் தான் விளையாடி வருகிறார்.

    2027 ஒருநாள் உலகக்கோப்பை வரை விராட் கோலி விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் 2 சதம், ஒரு அரைசதம் அடித்த விராட் தொடர் நாயகன் விருது வென்று தன மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

    3 ஆவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்த நிலையில், அந்த ஊரில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் விராட் கோலி சாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் வீடியோ இணையத்தில் வைரலாகி வைரலாக பரவி வருகிறது. 

    • இந்த முழு விவாதத்திற்கும் மொத்தம் 10 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
    • வாக்கு மோசடி மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தின் நமபகத்தன்மை குறித்த பிரச்சினையை எழுப்புவார்

    வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு திருத்தம் குறித்த முக்கியமான விவாதம் செவ்வாய்க்கிழமை மக்களவையில் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சிகள் கோரிய விவாதத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமை தாங்குவார்.

    இந்த விவாதத்தில் ராகுல் தலைமையின்கீழ் காங்கிரஸ் தலைவர்கள் வேணுகோபால், மணீஷ் திவாரி, வர்ஷா கெய்க்வாட், முஹம்மது ஜாவேத், உஜ்வல் ராமன் சிங், இஷா கான் சவுத்ரி, மல்லு ரவி, இம்ரான் மசூத், கோவல் பதி, ஜோதிமணி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    இந்த முழு விவாதத்திற்கும் மொத்தம் 10 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    விவாதத்தின் போது, ராகுல் காந்தி வாக்கு மோசடி மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தின் நமபகத்தன்மை குறித்த பிரச்சினையை எழுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தின் போது வாக்குச் சாவடி நிலை அதிகாரிகள் மீது சுமத்தப்படும் அழுத்தம் குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • இந்த மாத இறுதியில் தனிக்கட்சி தொடங்க போவதாகவும் அறிவித்தார்.
    • 1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டு அங்கு தற்போது ரூ.1,800 கோடி செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது

    மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    அங்குள்ள பரத்பூர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஹூமாயூன் கபீர். இவர் முர்ஷிதாபாத்தில் பாபர் மசூதி பாணியிலான மசூதி கட்ட அழைப்பு விடுத்தார்.

    இதைதொடர்ந்து அவரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 'சஸ்பெண்டு' செய்தது. இதனால் அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய போவதாகவும், இந்த மாத இறுதியில் தனிக்கட்சி தொடங்க போவதாகவும் அறிவித்தார்.

    இந்த நிலையில் ஏற்கனவே அறிவித்தவாறு ஹூமாயின் கபீர் மேற்குவங்காளத்தில் பாபர் மசூதிக்கான அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கினார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    இந்நிலையில் யோகி ஆதித்யநாத் ஆட்சி செய்யும் உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

    செய்தியாளர்களிடம் பேசிய கேசவ் பிரசாத் மௌரியா, "மசூதி கட்டுவதற்கு எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இருப்பினும், பாபரின் பெயரில் யாராவது மசூதி கட்டினால், அதை எதிர்ப்பது மட்டுமல்லாமல், அது உடனடியாக இடிக்கப்படுவதை உறுதி செய்வோம்" என்று மிரட்டல் விடுத்தார்.

    முன்னதாக உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இந்து அமைப்பினரால் 1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டு அங்கு தற்போது ரூ.1,800 கோடி செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

    • இசை நடனத்துடன் கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தது.
    • முன்னா கானின் மகன் ஷஹாத் (17) படுகாயமடைந்தார்.

    உத்தர பிரதேசத்தின் எட்டா மாவட்டத்தில் உள்ள உமை ஆசாத்நகர் கிராமத்தில் சனிக்கிழமை இரவு திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தின் போது துப்பாக்கி தவறுதலாக சுட்டதில் இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.

    இசை நடனத்துடன் கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தபோது துப்பாக்கி வெடித்தது.இதில் அசாதுதீனின் மகன் சுஹைல் (12) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முன்னா கானின் மகன் ஷஹாத் (17) படுகாயமடைந்தார். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். 

    துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடும் போது இந்த சம்பவம் நடந்ததாக சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்த கூடுதல் எஸ்பி ஸ்வேதாம்ப பாண்டே தெரிவித்தார். ஆனால் சரியான காரணம் மற்றும் யார் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்பது விசாரணைக்குப் பிறகுதான் உறுதிப்படுத்தப்பட முடியும் என்றார். 

    • நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்த ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெற்றது.
    • லண்டனில் உள்ள உலக சாதனை புத்தகத்தில் நிதிஷ் குமார் இடம்பிடித்து உள்ளார்.

    நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்த ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெற்றது.

    இதைத்தொடர்ந்து ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் 10வது முறையாக பீகார் முதல்வராக பதவியேற்றார். கடந்த 2005 இல் 20 வருடங்களாக அவர் அந்த பதவியில் நீடித்து வருகிறார்.

    இந்நிலையில் லண்டனில் உள்ள உலக சாதனை புத்தகத்தில் நிதிஷ் குமார் இடம்பிடித்து உள்ளார்.

    சுதந்திர இந்தியாவின் ஒரு மாநில முதல்வராக 10வது முறையாக பதவியேற்ற ஒரே நபர் என்ற பெருமையை பெற்றுள்ளதாக அங்கீகரித்து, நிதிஷ் குமார பெயர் உலக சாதனை புத்தகத்தில் சேர்க்கப்பட்டு உள்ளார் என ஐக்கிய ஜனதா தளம் தேசிய செயல் தலைவர் சஞ்சய்குமார் ஜா இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.

    நிதிஷ் குமார் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏவாக அல்லாமல் எம்எல்சியாக நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    • இதனால் பக்தர்கள் பீதியில் அங்கிருந்து ஓடத் தொடங்கியதால் குழப்பம் ஏற்பட்டது.
    • தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர்.

    பக்தர்கள் வருகையை ஒட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதானத்தில் உள்ள மரங்களில் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இன்று காலை 8.20 மணிக்கு அவ்வாறு அலங்காரம் செய்யப்பட்ட ஆலமரத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் பீதியில் அங்கிருந்து சிதறி ஓடத் தொடங்கியதால் குழப்பம் ஏற்பட்டது.

    தகவலறிந்து  தீயணைப்பு வீரர்கள் மற்றும் சன்னிதான தீயணைப்பு படை கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை பரவ விடாமல் துரிதமாக செயல்பட்டு அணைத்தனர். இந்த சம்பவத்தால் சற்று நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

    • மருத்துவமனையின் வளாகத்தில் ஒரு பெண் மருத்துவருக்கு நடந்த இந்த கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கியது.
    • நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    நிர்பயா சம்பவத்தை எப்படி யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாதோ.. அதேபோல், கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தையும் யாராலும் மறக்க முடியாது...!

    கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 9ம் தேதி அன்று மேற்கு வங்காள மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் வளாகத்தில் ஒரு பெண் மருத்துவருக்கு நடந்த இந்த கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கியது.

    ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி மருத்துவராக பயின்று வந்த 31 வயதான பெண் மருத்துவர், கடந்த ஆண்டு ஆகஸ்டு 8ம் தேதி இரவு பணியில் முடித்துவிட்டு மருத்துவமனையின் வளாகத்தில் உள்ள கருத்தரங்கக் கூட்டத்தில் அதிகாலை 3 மணியளவில் உறங்கச் சென்றார்.

    மறுநாள் காலையில், அவர் தலை, முகம் சிதைக்கப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக நடந்த முதற்கட்ட விசாரணையில், பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து கொல்கத்தாவில் போராட்டங்கள் வெடித்தன. மாநிலத்தை தாண்டி நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல்.. மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கினர். 

    மருத்துவர்களுக்கும், குறிப்பாக பெண் மருத்துவர்களுக்கும் பாதுகாப்பு துளியும் இல்லை என அரசாங்கத்தை கண்டித்து பல்வேறு மாநிலங்களிலும் மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் போராட்டக் களத்தில் குதித்தனர். இதனால், மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் அடுத்த கட்டத்தை எட்டியது. காவல்துறையினர் விசாரணைக் குழுவை அமைத்தனர். தீவிர விசாரணை மற்றும் சிசிடிவி ஆய்வை தொடர்ந்து, அதே மருத்துவமனையில் தன்னவார்வலராக பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்ற நபரை அதிரடியாக கைது செய்தனர்.இதைதொடர்ந்து மருத்துவக் கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் ராஜினாமா செய்தார்.

    உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து கொல்கத்தா பாலியல் வன்கொடுமை-கொலை வழக்கை விசாரித்தது. நாடு முழுவதும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாதது குறித்து உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்தது. அதோடு, ஒரு தேசிய விசாரணைக் குழுவை அமைத்தது. 

    போராட்டங்களின் எதிரொலியாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கோரிக்கையைத் தொடர்ந்தும், கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (CBI) மாற்றப்பட்டது.

    சிபிஐ தனது விசாரணையில், சஞ்சய் ராயை மட்டுமே பிரதான குற்றவாளியாக உறுதி செய்தது. இதற்கிடையே, சிபிஐ வழக்குப் பதிவு செய்து மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை கைது செய்தது. முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராய் மீது சிபிஐ கடந்த அக்டோபர் 7ஆம் தேதி குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தது.

    இந்த வழக்கின் மீதான விசாரணை விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 18ம் தேதி அன்று இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளதி என சியால்டா மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பின்னர் ஜனவரி 20ம் தேதி அன்று குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

    குற்றவாளி சஞ்சய் ராய்க்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அனிர்பன் தாஸ் தீர்ப்பளித்தார். ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு மேற்கு வங்க அரசு ₹17 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், பாதிக்கப்பட்டவரின் குடும்பம் இந்த நிவாரணத் தொகையை வாங்க மறுத்துவிட்டனர்.

    இருப்பினும், குற்றவாளி சஞ்சய் ராய்க்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து சிபிஐ தரப்பு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பமும், சிபிஐயும் அவருக்கு மரண தண்டனை கோரி வருகின்றனர்.

    மேற்கு வங்க அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இதே கோரிக்கையை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது, ஆனால் சிபிஐயின் மனுவை ஏற்று விசாரணைக்கு எடுத்துள்ளது. அதன் மீதான பிரதான விசாரணை மற்றும் இறுதித் தீர்ப்பு இன்னும் நிலுவையில் உள்ளது.

    கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. உயர் நீதிமன்றம், ஆயுள் தண்டனையை உறுதி செய்யலாமா அல்லது சிபிஐ கோரியபடி மரண தண்டனையாக மாற்றலாமா என்று முடிவு செய்யும்.

    • கர்நாடக கிரிக்கெட் சங்கமே காரணம் எனக்கூறி கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் 3 வழக்கு.
    • சின்னசாமி ஸ்டேடியத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகி இருந்தார்கள்.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சாம்பியன் கோப்பையை வென்ற ஆர்.சி.பி. அணிக்கு கடந்த 4-ந் தேதி பெங்களூரு விதானசவுதா முன்பு பாராட்டு விழாவும், சின்னசாமி ஸ்டேடியத்தில் வெற்றிக் கொண்டாட்டமும் நடைபெற்றது.

    இதில், கலந்துகொள்ள ஆர்.சி.பி. ரசிகர்கள் லட்சக்கணக்கானோர் குவிந்தனர். இதனால் சின்னசாமி ஸ்டேடியத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகி இருந்தார்கள். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவத்திற்கு ஆர்.சி.பி. அணி நிர்வாகம், கர்நாடக கிரிக்கெட் சங்கமே காரணம் எனக்கூறி கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் 3 வழக்குகளும் பதிவாகின.

    இந்த விவகாரத்தில் தங்கள் மீது எந்த தவறும் இல்லை என்று முதல்வர் சித்தராமையா கூறி வருகிறார். ஆனால் அரசின் அலட்சியமே 11 பேர் சாவுக்கு காரணம் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி வருகிறார்கள்.

    பெங்களூரு சின்னசாமி மைதானத்தை நகரின் மையப்பகுதியிலிருந்து அகற்ற பரிசீலிக்கப்பட்டு வருவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

    இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளை சின்னசாமி மைதானத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற அனுமதிக்க மாட்டோம் என கர்நாடக துணை முதலமைச்சர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர்," ஐபிஎல் போட்டிகளை சின்னசாமி மைதானத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற அனுமதிக்க மாட்டோம். சின்னசாமி மைதானத்தின் பெயரைப் பாதுகாப்போம், மாற்றாக ஒரு புதிய கிரிக்கெட் மைதானத்தையும் கட்டுவோம்" என்றார்.

    • உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் அனைத்து இண்டிகோ விமான சேவைகளை ரத்து செய்தது.
    • பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறோம் என பதிவிட்டது.

    இண்டிகோ விமான நிறுவனம் கடந்த 4 நாட்களாக விமான சேவைகளை நிறைவேற்றுவதில் சொதப்பி வருகிறது. மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் பிறப்பித்த புது விதிகளை காரணம் காட்டி, பல்வேறு விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்து வருகிறது.

    உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் அனைத்து இண்டிகோ விமான சேவைகளை ரத்துசெய்தது. சில இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக புறப்பட்டன. இதனால் பயணிகள் கடுமையாக பாதிப்பு அடைந்தனர்.

    இதைதொடர்ந்து, இண்டிகோ நிறுவனம் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ரத்து செய்யப்பட்ட இண்டிகோ விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு விமான கட்டணம் தானாகவே திருப்பிச் செலுத்தப்படும் என அந்நிறுவனம் அறிவித்தது.

    டிசம்பர் 5 முதல் 15ம் தேதி வரை பயணிகள் டிக்கெட் ரத்து செய்தல் அல்லது வேறு தேதிகளுக்கு மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளுக்கும் எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறோம் என பதிவிட்டது.

    இந்நிலையில், இண்டிகோ விமான சேவைகள் வரும் டிச.10ம் தேதிக்குள் வழக்கம்போல இயங்கும் வகையில் சரிசெய்யப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

    சேவைகள் முழுமையாக சரியாக 2026 பிப்.10 வரை ஆகும் என முன்னர் தெரிவித்திருந்த நிலையில், விரைவில் சரியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் சுமார் 650 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    ×