என் மலர்
நீங்கள் தேடியது "ராகுல் காந்தி"
- மக்களவையில் இன்று பேசுவதற்கான ஜனநாயக உரிமை நிராகரிக்கப்பட்டுள்ளது.
- தேசப் பாதுகாப்பு விவகாரத்தில் என்னைப் பேசவிடாமல் செய்ய திட்டமிட்டு முயற்சி நடந்தது.
புதுடெல்லி:
எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
மக்களவையில் இன்று பேசுவதற்கான ஜனநாயக உரிமை நிராகரிக்கப்பட்டுள்ளது.
என்னை நாடாளுமன்றத்தில் பேச விடாமல் தடுத்தது ஜனநாயகம் மீதான கரும்புள்ளி.
எதிர்க்கட்சி தலைவரான என்னை மத்திய அரசின் அழுத்தத்தால் சபாநாயகர் பேச விடவில்லை.
தேசப் பாதுகாப்பு விவகாரத்தில் என்னைப் பேசவிடாமல் செய்ய திட்டமிட்டு முயற்சி நடந்துள்ளது.
மக்களவையில் அடிப்படை ஜனநாயக உரிமைகள் நிராகரிக்கப்படுகின்றன. இது ஜனநாயகத்தின்மீதான தாக்குதல் என தெரிவித்துள்ளார்.
- மக்களவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.
- 9 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த விவகாரம் மக்களவயில் இன்று பெரும் புயலை கிளப்பியது. எதிர்க்கட்சி தலைவர் இந்த விவகாரம் குறித்து பேச முற்பட்டது, அவருக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டது மக்களவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.
எதிர்க்கட்சியினருக்கு மக்களவையில் பேச அனுமதி வழங்கப்படாததை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மக்களவையில் இருந்து எதிர்க்கட்சியை சேர்ந்த 9 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் இந்தக் கூட்டத்தொடர் முடியும் வரை பங்கேற்க முடியாது.
இதையடுத்து, மக்களவையில் இருந்து 9 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது, இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கும் எதிரா்ப்பு தெரிவித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் பிற பாாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் பாராளுமன்றத்தின் மகர வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களில் ஹிபி ஈடன், அமரிந்தர் சிங் ராஜா வாரிங், மாணிக்கம் தாகூர், குர்ஜீத் சிங் அஜ்லா, கிரண் குமார் ரெட்டி, பிரசாந்த் படோலே, எஸ். வெங்கடேசன் மற்றும் டீன் குரியகோஸ் ஆகியோர் அடங்குவர்.
- பாஜக அரசு விமர்சனங்களை ஏற்கத் தயாராக இருக்க வேண்டும்.
- ராகுல் காந்தி பேச்சைத் தடை செய்த இந்த நடவடிக்கையை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்களின் பேச்சைத் தடை செய்த நடவடிக்கை, இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையான கருத்துச் சுதந்திரத்துக்கும் நாடாளுமன்ற மரபுக்கும் எதிரானது.
மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்க வேண்டிய எதிர்க்கட்சியின் உரிமையை பறிப்பது, அதிகாரத்தை விமர்சனத்திலிருந்து காப்பாற்றும் முயற்சியாகும். இது ஜனநாயகத்தில் ஆரோக்கியமான விவாதத்தையும், பொறுப்புணர்வையும் அடக்கும் செயலாகும்.
ஒன்றிய பாஜக அரசு விமர்சனங்களை ஏற்கத் தயாராக இருக்க வேண்டும். கருத்து வேறுபாடு துரோகம் அல்ல. அது ஜனநாயகத்தின் வலிமை. திரு.ராகுல் காந்தி அவர்களின் பேச்சைத் தடை செய்த இந்த நடவடிக்கையை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்க, கருத்துச் சுதந்திரத்தை உறுதி செய்ய, இத்தகைய அடக்குமுறைகளை மக்கள் ஒருமித்த குரலில் எதிர்க்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
- நரேந்திர மோடியின் பிம்பம் சேதமடையக்கூடும்.
- அதானி ஜி மீது அமெரிக்காவில் ஒரு வழக்கு உள்ளது.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடி மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு கடும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் அவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி பிரதமர் மோடி நாட்டை விற்றுவிட்டார் என கூறினார்.
இது குறித்து பேசிய ராகுல் காந்தி, "மோடி ஜி கலக்கமடைந்துள்ளார். கடந்த சில மாதங்களாக முடங்கிக் கிடந்த (அமெரிக்க-இந்தியா) வர்த்தக ஒப்பந்தத்தில் நரேந்திர மோடி நேற்று இரவு கையெழுத்திட்டார். அவர் மீது கடுமையான அழுத்தம் உள்ளது. நரேந்திர மோடியின் பிம்பம் சேதமடையக்கூடும்."
"முக்கிய விஷயம் என்னவென்றால், நமது பிரதமர் சமரசத்திற்கு உள்ளாகியுள்ளார். இதைப்பற்றி மக்கள் சிந்திக்க வேண்டும். முதல் முறையாக, குடியரசு தலைவர் உரை குறித்து பேச எதிர்க்கட்சி தலைவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. நரேந்திர மோடி ஜி சமரசத்திற்கு உள்ளாகியிருப்பதால், இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் உங்கள் உழைப்பை விற்றுவிட்டார். அவர் நாட்டை விற்றுவிட்டார்."
"நரேந்திர மோடி ஜி பயப்படுகிறார், ஏனென்றால் அவருடைய பிம்பத்தை உருவாக்கியவர்களே இப்போது அந்த பிம்பத்தை உடைக்கிறார்கள். அதானி ஜி மீது அமெரிக்காவில் ஒரு வழக்கு உள்ளது, அது உண்மையில் மோடி ஜி மீதான வழக்குதான். எப்ஸ்டீன் கோப்புகளில் அமெரிக்கா இன்னும் வெளியிடாத பல விஷயங்கள் உள்ளன. அதன் காரணமாகவும் அழுத்தம் உள்ளது. இவைதான் அந்த இரண்டு அழுத்த புள்ளிகள். இதை நாடு புரிந்துகொள்ள வேண்டும்," என்றார்.
- ஒரு புத்தகத்தின் ஐந்து வரிகளுக்கு முன்னால் மோடி அரசின் கதறல் நாடே எதிரொலிக்கும் படி கேட்கிறது.
- உண்மைகள் அதிகாரத்தை எவ்வளவு கதறவைக்கும் என்பதற்கு இன்றைய நாளே எடுத்துக்காட்டு
மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இன்று பராளுமன்றத்தில் உரையாற்ற தொடங்கியபோது, முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவணே எழுதியதாக கூறப்படும், இன்னும் வெளியிடப்படாத ஒரு புத்தகத்தை சார்ந்த இதழ் கட்டுரையை கையில் ஏந்தி பேச தொடங்கினார். இது, ஆளும் பாஜக உறுப்பினர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.
2020ஆம் ஆண்டு இந்தியா–-சீனா இடையே லடாக் எல்லை பகுதியில் ஏற்பட்ட மோதல் குறித்து எழுதப்பட்டுள்ள குறிப்புகள் அடங்கிய ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி (Four Stars of Destiny) என்ற வெளியிடப்படாத புத்தகத்தை ராகுல் காந்தி மேற்கோள் காட்டியதும், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடனடியாக தலையிட்டு எதிர்ப்பு தெரிவித்தார்.
"வெளியிடப்படாத புத்தகத்தை மேற்கோள் காட்டுவது அவை விதிகளுக்கு எதிரானது" என்று அவர் கூறினார்.
கிழக்கு லடாக் எல்லை பகுதியில் பதற்றம், 2020 மே 5ஆம் தேதி, பாங்காங் ஏரி பகுதியில் இந்திய மற்றும் சீன படைகள் இடையே ஏற்பட்ட வன்முறை மோதலுக்கு பிறகு தீவிரமடைந்தது. இந்த சம்பவம் குறித்து, ஜெனரல் நரவணே தனது வெளியிடப்படாத நினைவு குறிப்புகளில் எழுதியுள்ளதாகவும், அந்த புத்தகத்தை அடிப்படையாக கொண்டு ஒரு பிரபல இதழில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அந்த இதழின் அச்சு பிரதியை கையில் வைத்திருந்த ராகுல் காந்தி, புத்தகத்தில் உள்ள தகவல்கள் குறித்து பேச முயன்றார். ஆனால் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மட்டுமல்லாமல், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாராளுமன்ற விவகார துறை அமைச்சர் கீரன் ரிஜிஜு ஆகியோரும் அவரை கடுமையாக எதிர்த்தனர்.
தொடர்ச்சியான இடையூறுகளுக்கிடையே, ராகுல் காந்தி, "இதில் என்ன இருக்கிறது, அவர்களை இவ்வளவு பயமுறுத்துகிறது? அவர்கள் பயப்படவில்லை என்றால், நான் தொடர்ந்து வாசிக்க அனுமதிக்கப்பட வேண்டும்," என்றார். தான் மேற்கோள் காட்டிய கட்டுரையும் புத்தகமும் "100 சதவீதம் உண்மையானவை" என ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
இதனால் அவையில் ஏற்பட்ட கடும் அமளி மற்றும் சலசலப்பு ஏற்பட்டு நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்திய ராணுவ முன்னாள் தலைமைத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே எழுதிய "விதியின் நான்கு நட்சத்திரங்கள்" புத்தகத்தின் வரிகளை வாசிக்கவிடாமல் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சரும் உள்துறை அமைச்சரும் நாடாளுமன்றத்தில் போராடியதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே
எழுதிய "விதியின் நான்கு நட்சத்திரங்கள்" (Four Stars of Destiny) என்ற புத்தகத்தின் ஐந்து வரிகளை வாசிக்கவிடாமல் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சரும் உள்துறை அமைச்சரும் கடந்த ஒன்றரரை மணி நேரமாக நாடாளுமன்றத்தில் போராடினர்.
ஒரு புத்தகத்தின் ஐந்து வரிகளுக்கு முன்னால் மோடி அரசின் கதறல் நாடே எதிரொலிக்கும் படி கேட்கிறது. உண்மைகள் அதிகாரத்தை எவ்வளவு கதறவைக்கும் என்பதற்கு இன்றைய நாளே மிகச்சிறந்த எடுத்துக்காட்டு" என்று தெரிவித்துள்ளார்.
- பாஜக உறுப்பினர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.
- புத்தகத்தில் உள்ள தகவல்கள் குறித்து பேச முயன்றார்.
மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இன்று பராளுமன்றத்தில் உரையாற்ற தொடங்கியபோது, முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவணே எழுதியதாக கூறப்படும், இன்னும் வெளியிடப்படாத ஒரு புத்தகத்தை சார்ந்த இதழ் கட்டுரையை கையில் ஏந்தி பேச தொடங்கினார். இது, ஆளும் பாஜக உறுப்பினர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.
2020ஆம் ஆண்டு இந்தியா–-சீனா இடையே லடாக் எல்லை பகுதியில் ஏற்பட்ட மோதல் குறித்து எழுதப்பட்டுள்ள குறிப்புகள் அடங்கிய ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி (Four Stars of Destiny) என்ற வெளியிடப்படாத புத்தகத்தை ராகுல் காந்தி மேற்கோள் காட்டியதும், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடனடியாக தலையிட்டு எதிர்ப்பு தெரிவித்தார்.
"வெளியிடப்படாத புத்தகத்தை மேற்கோள் காட்டுவது அவை விதிகளுக்கு எதிரானது" என்று அவர் கூறினார்.
கிழக்கு லடாக் எல்லை பகுதியில் பதற்றம், 2020 மே 5ஆம் தேதி, பாங்காங் ஏரி பகுதியில் இந்திய மற்றும் சீன படைகள் இடையே ஏற்பட்ட வன்முறை மோதலுக்கு பிறகு தீவிரமடைந்தது. இந்த சம்பவம் குறித்து, ஜெனரல் நரவணே தனது வெளியிடப்படாத நினைவு குறிப்புகளில் எழுதியுள்ளதாகவும், அந்த புத்தகத்தை அடிப்படையாக கொண்டு ஒரு பிரபல இதழில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அந்த இதழின் அச்சு பிரதியை கையில் வைத்திருந்த ராகுல் காந்தி, புத்தகத்தில் உள்ள தகவல்கள் குறித்து பேச முயன்றார். ஆனால் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மட்டுமல்லாமல், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாராளுமன்ற விவகார துறை அமைச்சர் கீரன் ரிஜிஜு ஆகியோரும் அவரை கடுமையாக எதிர்த்தனர்.
தொடர்ச்சியான இடையூறுகளுக்கிடையே, ராகுல் காந்தி, "இதில் என்ன இருக்கிறது, அவர்களை இவ்வளவு பயமுறுத்துகிறது? அவர்கள் பயப்படவில்லை என்றால், நான் தொடர்ந்து வாசிக்க அனுமதிக்கப்பட வேண்டும்," என்றார். தான் மேற்கோள் காட்டிய கட்டுரையும் புத்தகமும் "100 சதவீதம் உண்மையானவை" என ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
மேலும், "நாளை பாஜக உறுப்பினர்களும் வெளியிடப்படாத புத்தகங்களை சுட்டிக்காட்டி கற்பனை தகவல்களை முன்வைக்கலாம். ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் போலி செய்திகளை பரப்பும் தொழிற்சாலையாக மாறியுள்ளார்," என்றும் அரசு வட்டாரங்கள் குற்றம்சாட்டின. இதனால் அவையில் ஏற்பட்ட கடும் அமளி மற்றும் சலசலப்பு ஏற்பட்டது.
- ராகுல் காந்தியை அனைவருக்கும் பிடிக்கும், எனக்கும் அவரிடம் மாற்றுக் கருத்து இல்லை
- நான் ஒரு காங்கிரஸ்காரன், கட்சியை விட்டு எங்கும் செல்ல மாட்டேன்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்பியுமான சசி தரூர், ராகுல் காந்தியை தெளிவான பார்வை கொண்ட தலைவர் என்றும், மதவாதத்திற்கு எதிரான நாட்டின் வலுவான குரல்என்றும் பாராட்டியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை சசி தரூர் இன்று டெல்லியில் சந்தித்துப் பேசினார்.
சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, தமக்கும் கட்சித் தலைமைக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் பேசித் தீர்க்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
ராகுல் காந்தியை பொறுப்புள்ள மற்றும் தெளிவான பார்வை கொண்ட தலைவர் என பாராட்டிய சசி தரூர், "மதவாதம், வெறுப்பு அரசியல் மற்றும் பிரிவினைவாதத்திற்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ராகுல் காந்தியை அனைவருக்கும் பிடிக்கும், எனக்கும் அவரிடம் மாற்றுக் கருத்து இல்லை" என்று கூறினார்.
தனது கருத்துக்கள் பாஜகவிற்கு ஆதரவாக ஊடகங்களால் தவறாகச் சித்தரிக்கப்பட்டதாகவும் நாட்டின் நலன் சார்ந்த விஷயங்களில் மட்டுமே தான் அரசாங்கத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததாக அவர் கூறினார்.
மேலும், "நான் ஒரு காங்கிரஸ்காரன், கட்சியை விட்டு எங்கும் செல்ல மாட்டேன். வரும் கேரளா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்காக முழுமையாகப் பணியாற்றுவேன்" என்று தெரிவித்தார்.
- சசிதரூர் சமீப காலமாக பிரதமர் மோடி, மத்திய அரசின் செயல்பாடுகளை புகழ்ந்து வருகிறார்.
- கேரள காங்கிரஸ் தலைமையும், ராகுலும் உரிய மரியாதை வழங்கவில்லை என்றார் சசிதரூர்.
புதுடெல்லி:
கேரளாவின் திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாக இருந்து வருபவர் சசி தரூர். இவர் சமீபகாலமாக பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய அரசின் செயல்பாடுகளையும் புகழ்ந்தும், பாராட்டியும் பேசி வருகிறார். இது காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. சக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதற்கிடையே, கேரள சட்டசபைக்கு நடைபெற உள்ள தேர்தல் குறித்து ஆலோசிக்க அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களை மேடையில் இருந்த ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்தார். நிர்வாகிகளுடன் கை குலுக்கினார். அப்போது மேடையில் நின்றிருந்த சசி தரூரை ராகுல் காந்தி கண்டு கொள்ளவே இல்லை. அவருடன் பேசுவதை தவிர்த்தார்.
இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், சசி தரூர் நேற்று காங்கிரஸ் தலைவர் கார்கேவைச் சந்தித்துப் பேசினார். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கார்கே அறையில் அரை மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரும் உடனிருந்தனர்.
அதன்பின், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர், நாங்கள் ஒரு கலந்துரையாடல் மற்றும் மிகச் சிறந்த, ஆக்கப்பூர்வமான, நேர்மறையான விவாதத்தை நடத்தினோம். எல்லாம் நன்றாக இருக்கிறது. நாங்கள் ஒரே நிலைப்பாட்டில் ஒன்றாகச் செல்கிறோம். இதற்குமேல் என்ன சொல்ல முடியும்.
நான் ஏற்கனவே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த எனது வாக்காளர்களின் நம்பிக்கையை நான் பெற்றிருக்கிறேன். நாடாளுமன்றத்தில் அவர்களின் நலன்களைக் கவனிப்பதுதான் எனது வேலை என தெரிவித்தார்.
- விமான விபத்தில் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்தார்
- அஜித் பவார் மரணத்திற்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதலமைச்சர் அஜித் பவார் (66) சென்ற விமானம் இன்று காலை தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியது.
இந்த விமான விபத்தில் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்தார். மேலும் இந்த விமான விபத்தில் அஜித் பவார் உட்பட 3 பயணிகளும், 2 விமானிகளும் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் மரணத்திற்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில், அஜித் பவார் மரணத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், " மகாராஷ்டிர துணை முதல்வர் ஸ்அஜித் பவார் மற்றும் அவருடன் பயணித்தவர்கள் இன்று விமான விபத்தில் காலமான செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
இந்த துயரமான தருணத்தில் மகாராஷ்டிர மக்களுடன் நான் நிற்கிறேன். இந்த துக்க நேரத்தில் பவாரின் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- குடியரசு தின விழா நிகழ்ச்சியில் கார்கே, ராகுல் 3-வது வரிசையில அமர வைக்கப்பட்டனர்.
- ராகுல் காந்தியை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் இது பாஜக-வால் வேண்டுமென்றே செய்யப்பட்டது- காங்கிரஸ்
இந்தியாவின் 77-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக்கொடி ஏற்றினார். அதனைத் தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு நடைபெற்றது. மாநில ஊர்திகளின் அணிவகுப்புகளும் நடைபெற்றன.
இந்த விழாவில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி, அமைச்சர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் தேசியத் தலைவர் கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி போன்றோரும் கலந்து கொண்டனர்.
இதில் கார்கே, ராகுல் காந்தி ஆகியோருக்கு 3-வது வரிசையில் இருக்கை அமைக்கப்பட்டிருந்தது. அங்கு அவர்கள் அமர்ந்திருந்தனர். இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. மக்களவை எதிர்க்கட்சி தலைவரை அவமானப்படுத்தியதாக விமர்சனம் செய்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில் "நாட்டில் எதிர்க்கட்சித் தலைவரை இத்தகைய முறையில் நடத்துவது?, இது எந்தவொரு கண்ணியம், மரபு மற்றும் நெறிமுறைகளின் தரங்களுக்கும் பொருந்துமா?. இது தாழ்வு மனப்பான்மையால் பாதிக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தின் விரக்தியை மட்டுமே வெளிப்படுத்துகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
மாணிக்கம் தாகூர் எம்.பி. "ராகுல் காந்தியை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் இது பாஜக-வால் வேண்டுமென்றே செய்யப்பட்டது. 2014-ஆம் ஆண்டு எல்.கே. அத்வானி எங்கு அமர வைக்கப்பட்டிருந்தார் என்று பாருங்கள். இப்போது ஏன் இந்த நெறிமுறை மீறல்? மோடியும், அமித் ஷாவும் கார்கே மற்றும் ராகுல் காந்தியை அவமானப்படுத்த விரும்புவதால்தான் இது நடந்ததா?" என்று கேள்வி எழுப்பினார்.
- நம்முடைய அரசியலமைப்பு ஒவ்வொரு இந்தியனுக்குமான சிறந்த ஆயுதம்.
- அது நம்முடைய குரல். நம்முடைய உரிமைகளை பாதுகாக்கும் கேடயம்.
இந்தியாவின் 77-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தேசியக்கொடி ஏற்றி வைத்தார். இந்த விழாவில் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
பின்னர் அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள குடியரசு தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
நம்முடைய அரசியலமைப்பு ஒவ்வொரு இந்தியனுக்குமான சிறந்த ஆயுதம். அது நம்முடைய குரல். நம்முடைய உரிமைகளை பாதுகாக்கும் கேடயம். நமது குடியரசு இந்த வலிமையான அடித்தளத்தின் மீது நிற்கிறது. மேலும் அது சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் மூலமாகவே மேலும் வலுப்பெறும்.
அரசியலமைப்பைப் பாதுகாப்பது என்பது இந்தியக் குடியரசைப் பாதுகாப்பதாகும்; இது நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும். ஜெய் ஹிந்த்! ஜெய் சம்விதான்! அரசியலமைப்பு பாறைபோன்ற உறுதியுடன் பாதுகாப்ப உறுதிக் கொண்டுள்ளோம்.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
- குறிப்பிட்ட சமூகத்தினர் மற்றும் காங்கிரஸ் ஆதரவு வாக்குச் சாவடிகளின் வாக்குகள் தேடித் தேடி நீக்கப்பட்டுள்ளன.
- இதன் மூலம் மக்கள் அல்ல, மாறாக யார் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதை பாஜகவே தீர்மானிக்கிறது.
பீகாரை தொடர்ந்து தேர்தலை எதிர்கொள்ளும் தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், குஜராத் உட்பட 10 மாநிலங்களிலும், 2 யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்(SIR) நடைபெற்று வருகிறது.
இதில் சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளின் வாக்குகள் திட்டமிட்டு நீக்கப்படுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையானது திட்டமிட்டு வாக்குகளைத் திருடும் கருவியாகப் பயன்படுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், "எங்கெல்லாம் SIR நடக்கிறதோ, அங்கெல்லாம் வாக்குத் திருட்டு நடக்கிறது.
குறிப்பாக குஜராத்தில் SIR என்ற பெயரில் செய்யப்படுபவை எவ்விதமான நிர்வாக நடைமுறையும் அல்ல. இது திட்டமிடப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் வியூகத்துடன் செய்யப்படும் வாக்குத் திருட்டு.
மிகவும் அதிர்ச்சிகரமான மற்றும் ஆபத்தான விஷயம் என்னவென்றால், ஒரே ஒரு பெயரில் ஆயிரக்கணக்கான ஆட்சேபனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட சமூகத்தினர் மற்றும் காங்கிரஸ் ஆதரவு வாக்குச் சாவடிகளின் வாக்குகள் தேடித் தேடி நீக்கப்பட்டுள்ளன.
எங்கெல்லாம் பாஜகவிற்குத் தோல்வி பயம் தெரிகிறதோ, அங்கெல்லாம் வாக்காளர்களையே அமைப்பிலிருந்து மறைந்து போகச் செய்கிறார்கள்.
இதே போன்ற ஒரு முறைதான் ஆலந்திலும், ராஜூராவிலும் நடந்தது. இப்போது அதே Blueprint குஜராத், ராஜஸ்தான் மற்றும் SIR திணிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் அமல்படுத்தப்படுகிறது.
ஒரு நபர், ஒரு வாக்கு என்ற அரசியலமைப்பு உரிமையை அழிப்பதற்கான ஆயுதமாக SIR மாற்றப்பட்டுள்ளது.
இதன் மூலம் மக்கள் அல்ல, மாறாக யார் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதை பாஜகவே தீர்மானிக்கிறது.
மற்றும் மிகக் கசப்பான உண்மை என்னவென்றால், தேர்தல் ஆணையம் இப்போது ஜனநாயகத்தின் காவலனாக இல்லை, மாறாக இந்த வாக்குத் திருட்டுச் சதியின் முக்கியப் பங்காளியாக மாறிவிட்டது." என்று சாடியுள்ளார்.






