search icon
என் மலர்tooltip icon
    • நாட்டுமாடுகள் 45 ஆயிரம், வளர்ப்பு கன்றுகள் 5 ஆயிரம் வரை விற்பனையானது.
    • மொத்தம் கால்நடைகள் ரூ.1 கோடியே 10 லட்சத்திற்கு விற்பனை ஆனது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் நகராட்சி வாரச்சந்தை புதன் மற்றும் வியாழன் அன்று கூடுவது வழக்கம். இது தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய சந்தையாகும்.

    இந்த சந்தையில் கர்நாடகா, கேரளா ஆகிய வெளிமாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களான திருப்பூர், நாமக்கல், கரூர், கோவை, நீலகிரி மற்றும் புளியம்பட்டி சுற்றுப்பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை விற்பதும், வாங்கி செல்வதும் வழக்கம்.

    இந்நிலையில் இந்த வாரம் கூடிய மாட்டுசந்தையில் ஜெர்சி 41 ஆயிரம், சிந்து 46 ஆயிரம், எருமை மாடுகள் 15 முதல் 33 ஆயிரம் வரை விற்றது.

    நாட்டுமாடுகள் 45 ஆயிரம், வளர்ப்பு கன்றுகள் 5 ஆயிரம் வரை விற்பனையானது. எடைக்கேற்ப வெள்ளாடு 7 ஆயிரம், செம்மறியாடு 6 ஆயிரம் வரை விற்றது.

    இதில் மொத்தம் கால்நடைகள் ரூ.1 கோடியே 10 லட்சத்திற்கு விற்பனை ஆனது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.16 அடியாக உள்ளது.
    • அணையில் இருந்து 1,055 கன அடி தண்ணீர் வெளியே ற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    அணைக்கு நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.16 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,064 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    கீழ்பவானி பாசனத்திற்காக 5 கனஅடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 900 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 1,055 கன அடி தண்ணீர் வெளியே ற்றப்பட்டு வருகிறது.

    இதேப்போல் குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 34.17 அடியாக உள்ளது. பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 23.95 அடியாக உள்ளது.

    வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 26.44 அடியாக உள்ளது. மழைப்பொழிவு இல்லாத காரணத்தால் அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    • இன்று காலை எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
    • ஈரோடு மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 7-வது இடத்தை பிடித்துள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி முடிவடைந்தது. ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 12,229 மாணவர்களும், 12,428 மாணவிகளும் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 24,657 பேர் எழுதினர்.

    இந்நிலையில் தேர்வு முடிந்து வினாத்தாள் திருத்தும் பணிகளும் நிறைவடைந்ததையொட்டி இன்று தமிழ்நாடு முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் 11,287 மாணவர்களும், 12, 022 மாணவிகளும் என மொத்தம் 23,309 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.53 சதவீதம் ஆகும். மாநில அளவில் ஈரோடு மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 7-வது இடத்தை பிடித்துள்ளது.

    மாணவர்கள் 92.30 சதவீதம் பேரும், மாணவிகள் 96.73 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்று ள்ளனர். வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 180 அரசு பள்ளிகளை சேர்ந்த 6,163 மாணவர்களும், 6,588 மாணவிகளும் என மொத்தம் 12 ஆயிரத்து 751 பேர் எழுதினர்.

    இதில் 5,452 மாணவர்களும், 6,242 மாணவிகளும் என மொத்தம் 11 ஆயிரத்து 694 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 91.71 ஆகும்.

    மாணவ, மாணவிகள் தேர்வு முடிவுகளை தங்கள் செல்போன்களிலும் தெரிந்து கொண்டனர். இன்னும் சில மாணவ, மாணவிகள் தங்கள் படித்த பள்ளியில் சென்று தேர்வு முடிவுகளை ஆர்வத்துடன் தெரிந்து கொண்டனர்.

    • சோதனையில் அனுமதி இன்றி மதுவிற்ற 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • 75 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறு கிறதா? என்பதை கண்காணி க்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் மதுவிலக்கு போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் இ.வி.கே. சம்பத் சாலை, மூலப்பட்டறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அந்த பகுதியில் ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார்.

    அவரை பிடித்து விசாரித்ததில் அவர் மதுரை, மேலூர் பகுதியை சேர்ந்த அழகுபாண்டி (45) என்பதும் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அவரிட மிருந்து 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    இதேபோல் கவுந்தப்பாடி, கோபிசெட்டிபாளையம், சூரம்பட்டி மலைய ம்பாளையம், சிறுவலூர் என மாவட்டம் முழுவதும் போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் அனுமதி இன்றி மதுவிற்ற 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 75 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு தயார்படுத்தினர்.
    • வெற்றிகரமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த 41 வயது நோயாளி ஒருவர் சிறுநீரகம் செயல் இழந்து ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவ மனையில் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

    மேலும் அவர் தமிழ்நாடு உடல் உறுப்பு தான அமைப்பில் சிறுநீரகம் பெற பதிவு செய்து கடந்த 3 ஆண்டுகளாக காத்தி ருந்தார்.

    இந்நிலையில் கோவை யில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த 62 வயதுடையவரின் சிறுநீரகம், கோபியை சேர்ந்தவருக்கு முன்னுரிமை அடிப்படை யில் வழங்க முடிவானது.

    இதையடுத்து ஈரோட்டில் உள்ள அபிராமி கிட்னி கேர் தலைமை மருத்துவ மனையில் கோபியை சேர்ந்தவர் அனுமதிக்க ப்பட்டு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு தயார்படுத்தினர்.

    தொடர்ந்து கோவையில் இருந்து சிறுநீரகம் ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனைக்கு ஆம்புலன்சு மூலம் ஒரு மணி நேரத்தில் கொண்டு வரப்பட்டு டாக்டர். சரவணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கோபியை சேர்ந்தவருக்கு வெற்றிகரமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தனர்.

    இது குறித்து அபிராமி கிட்னி கேர் மருத்துவ மனையின் நிர்வாக இயக்கு நர் டாக்டர் சரவணன் கூறுகையில், கோபியை சேர்ந்தவருக்கு குரோனிக் கிட்னி வியாதி (சி.கே.டி.) என்ற நோய் பாதிப்பு காரணமாக சிறுநீரகம் செயல் இழந்து விட்டது.

    கடந்த 3 ஆண்டுகளாக எங்களது மருத்துவ மனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். தற்போது, கோவையிலிருந்து தானமாக பெறப்பட்ட சிறுநீரகம் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பொருத்தப்ப ட்டுள்ளது என்றார்.

    • மெக்கானிக் அங்கு சென்று பார்த்தபோது மின் மோட்டாரை காணவில்லை.
    • விசாரணை நடத்தி மின்மோட்டார் திருடியவர்களை தேடி வந்தனர்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டை அடுத்த சின்னப்பள்ளம் கே.ஆர்.தோட்டத்தில் செந்தில்குமார் ( 52) என்பவர் வசித்து வருகிறார்.

    இவர் தனது வீட்டு போர்வெலில் தண்ணீர் எடுப்பதற்காக ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள மின்சார மோட்டார் பொருத்தி வைத்துள்ளார். இந்த மின் மோட்டார் கடந்த 13-ந் தேதி பழுது ஏற்பட்டு உள்ளது.

    இதையடுத்து அதனை சரி செய்து மீண்டும் பொருத்தி உள்ளார். அதன் பிறகு செந்தில்குமார் சொந்த வேலையாக சென்னை சென்று விட்டார்.

    இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி வீட்டு குழாயில் தண்ணீர் வரவில்லை என செந்தில்குமாரின் மனைவி அவருக்கு போன் செய்து தெரிவித்துள்ளார்.

    உடனடியாக செந்தில்குமார் அங்குள்ள ஒரு மெக்கானிக்கை செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டில் மின் மோட்டாரை பழுது பார்க்க அனுப்பியுள்ளார்.

    இதையடுத்து மெக்கானிக் அங்கு சென்று பார்த்தபோது மின் மோட்டாரை காணவில்லை. இதுகுறித்து மெக்கானிக் செந்தில்குமாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதை தொடர்ந்து சென்னையில் இருந்து வீட்டிற்கு வந்த செந்தில்குமார் மின் மோட்டார் இருக்கும் இடத்தில் சென்று பார்த்தார். அங்கு மோட்டார் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இத குறித்து அவர் அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மின்மோட்டார் திருடியவர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் நெரிஞ்சிப்பேட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன் (27) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர் மின்மோட்டார் திருடியதை ஒப்பு கொண்டார். மேலும் போலீசாரின் விசாரணையில் அதே பகுதி சேர்ந்த ரஞ்சித் குமார் (23), பூனாச்சி அருகே உள்ள முகாசிபுதூர் மனோஜ்( 21) ஆகியோர் மின் மோட்டார் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    அவர்கள் 3 பேரும் சேர்ந்து மோட்டார் திருடி அம்மாபேட்டையில் உள்ள ஒரு எலக்ட்ரிக் கடையில் விற்பனை செய்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து மின் மோட்டாரையும் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து அவர்கள் 3 பேரும் பவானி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • சென்னிமலை காமாட்சியம்மன் கோவில் பொங்கல் திருவிழா நடந்தது.
    • பக்தர் ஒருவர் முதுகில் குத்தி பறவைக்காவடியில் வந்தார்.

    சென்னிமலை:

    சென்னிமலை காமாட்சியம்மன் கோவில் பொங்கல் திருவிழா நடந்தது.

    இதையொட்டி பொறை யன்காடு, களத்துக்காடு, மேலப்பாளையம், மதேஸ்வரா நகர் ஆகிய பகுதிகளில் இருந்து பெண்கள் கோவிலுக்கு மாவிளக்கு எடுத்து வந்தும், பொங்கல் வைத்தும் அம்மனை வழிபட்டனர்.

    மேலப்பாளையத்தில் உள்ள மாதேஸ்வரன் நகர் பகுதியிலிருந்து காமாட்சி யம்மன் கோவில் வரை பக்தர்கள் அலகு குத்தி தேர் இழுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர் ஒருவர் முதுகில் குத்தி பறவைக்காவடியில் வந்தார்.

    இந்த ஊர்வலம் மேலப்பாளையத்திலிருந்து தொடங்கி ஊத்துக்குளி ரோடு, குமரன் சதுக்கம், வடக்கு ராஜ வீதி, அரச்சலூர் ரோடு வழியாக கோவிலை அடைந்தது.

    காமாட்சி யம்மனுக்கு சிறப்பு அலங்கா ரம் செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது. பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பொங்கல் வைத்தும் வழிபாடு செய்தனர்.  

    • கருங்க ல்பாளையம் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.
    • போலீசார் 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

    ஈரோடு:

    கருங்கல்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் அபூபக்கர் தலைமையி லான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது கருங்க ல்பாளையம் அழகரசன் நகர் ஹவுசிங் போர்டு பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டி ருந்தது தெரிய வந்தது.

    அந்த கும்பல் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர்.

    அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அவர்கள் மணிகண்டன் (31), கார்த்திக் (28), பிரகாஷ் (33), மணிகண்டன் (35), பிரகாஷ் (35), ராஜா (32) ஆகியோர் என தெரிய வந்தது. அவர்கள் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். அவர்களிட மிருந்து சீட்டு கட்டுகள், பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

    • புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.
    • 2 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

    மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதித்த வர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 889 ஆக உள்ளது.

    கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 2 பேர் குணமடைந்து வீடு திரும்பியு ள்ளனர்.

    இதனால் மாவட்டத்தில் இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 150 ஆக உயர்ந்துள்ளது.

    மாவட்டத்தில் இதுவரை 736 பேர் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர்.

    தற்போது மாவட்டம் முழுவதும் 3 பேர் மட்டுமே கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • கொடிவேரி அணையில் சுமார் 2 லட்சத்த 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து குளித்து சென்றனர்.
    • இங்கு அடிப்படை வசதிகள் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் அருகே கொடிவேரி தடுப்ப ணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொடிவேரி தடுப்பணையில் கொட்டி செல்கிறது.

    இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பத ற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர் உள்பட தமிழகம் முழுவதும் இருந்தும் தினமும் ஏராள மான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்ப த்துடன் வந்து செல்கிறார்கள்.

    மேலும் கொடிவேரி அணையில் நுழைவு கட்டணமாக ரூ.5 வசூலி க்கப்படுகிறது. இதனால் திருவிழா மற்றும் விடுமுறை நாட்க ளில் வழக்கத்தை விட பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் காணப்படும்.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதமாக வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் மாவட்டத்தில் 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைத்து வருவதால் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இதனால் கொடிவேரி உள்பட பல்வேறு நீர்நிலைகளுக்கு சென்று குளித்து மகிழ்ந்து வருகிறார்கள்.

    மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு ள்ளதால் கொடிவேரி தடுப்பணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    மேலும் சனிக்கி ழமை, ஞாயிற்றுக்கிழ மைகளில் கொடிவேரிக்கு வழக்கத்தை விட அதிகள வில் பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக வந்து செல்கின்றனர்.

    தொடர்ந்து மகிழ்ச்சி அடைந்த பொது மக்கள் அங்கு கொட்டும் தண்ணீரில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

    மேலும் கோடை வெயிலின் தாக்க த்தை தணிப்பதற்காக இளைஞர்கள் பலர் கொடி வேரி தடுப்பணைக்கு வந்து குளித்து மகிழ்ந்தனர்.

    இதனால் கொடிவேரியில் எங்கு பார்த்தாலும் மக்களின் கூட்டமாகவே காணப்ப ட்டது. இதனால் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக கொடிவேரியில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    இந்த நிலையில் கடந்த 1½ மாதங்களில் மட்டும் கொடிவேரி அணையில் சுமார் 2 லட்சத்த 12 ஆயிரத்துக்கும் மேற்ப ட்டோர் வந்து குளித்து சென்றனர்.

    கடந்த ஏப்ரல் மாதம் 1 லட்சத்து 32 ஆயிரத்து 731 பேர் வந்து சென்றனர். மேலும் இந்த மாதம் (மே) நேற்று வரை சுமார் 80 ஆயிரம் பேர் குளித்து மகிழ்ந்தனர்.

    கடந்த 1½ மாதங்களில் மட்டும் 2 லட்சத்து 12 ஆயிரத்து 731 பேர் வந்திருந்தனர். இதன் மூலம் ரூ. 10 லட்சத்து 63 ஆயிரத்து 655 வசூலானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் கொடி வேரி அணைக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கி றார்கள். இங்கு அடிப்படை வசதிகள் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

    கொடிவேரி அணை ப்பகுதியில் பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் சுகாதார வளாகம் இல்லாத தால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகி றார்கள்.

    மேலும் உடை மாற்றும் அறையும் இங்கு இல்லை. இதனால் தடுப்பணையில் குளிக்கும் பொதுமக்கள் உடை மாற்ற முடியாமல் தவிக்கிறார்கள். மேலும் பெண்கள் கடும் அவதி அடைந்து வருகி றார்கள.

    இதனால் பொது மக்கள் மறைவான பகுதி களிலும், கார் மற்றும் அவர்கள் வந்த வாகன ங்களிலும் உடை மாற்றும் அவல நிலை உள்ளது.

    எனவே மாவட்ட நிர்வாகம் கொடிவேரி அணை பகுதியில் ஆய்வு செய்து சுகாதார வளாகம், ஆண்கள் மற்றும் பெண்கள் உடை மாற்றும் அறைகள் தனித்தனியாக அமைத்து தர வேண்டும்.

    மேலும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    • அத்திக்கடவு-அவிநாசி திட்டம் பவானிஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்திலிருந்து செயல்படுத்தப்படுகிறது.
    • தற்போது 99 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    அத்திக்கடவு-அவிநாசி திட்டம் ஈரோடு மாவட்டம் பவானிஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்திலிருந்து செயல்படுத்தப்படுகிறது.

    இங்கு ஆண்டொன்றிக்கு 1.50 டி.எம்.சி உபரிநீரைநீரேற்று முறையில் நிலத்தடியில் குழாய் பதிப்பின் மூலம் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மொத்தம் 24,468 ஏக்கர் நிலம் பயன்பெறும் வகையில் 32 பொதுப்பணித்துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் 971 குளம் குட்டைகள் (மொத்தம் 1045) நீர் நிரப்பும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தினை நீரேற்று முறையில் செயல்படுத்திட தமிழக அரசின் மூலம் ரூ.1652.00 கோடிக்குநிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், ரூ.1756.88 கோடிக்குதிருத்திய நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், தற்போது 99 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றின் குறுக்கே திருப்பணைமற்றும் ஆறு நீர் உந்து நிலையங்களுக்கான பவானி, நல்லக்கவுண்டன் பாளையம், திருவாச்சி ,போலநாயக்கன்பாளையம், எம்மாம்பூண்டி, அன்னூர் கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ளது.

    குழாய் பதிக்கும் பணிகள் 267.5 கி.மீ. நீளத்திற்கு முடிவடைந்துள்ளது (மொத்தநீளம் 267.5 கி.மீ) மற்றும் குழாய்கள் பதிக்கும் பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது.

    தற்சமயம் சுமார் 797.40கி.மீ. அளவு குழாய் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மின்மாற்றிகள், பம்புகள், மின்மோட்டார்கள், சுவிட்ச்கியர் மற்றும் பேனல் போர்டு ஆகியவை அனைத்து நீர் உந்து நிலையங்களிலும் பொருத்தப்பட்டுள்ளது.

    மின்கம்பங்கள் அமைக்கும் பணிமற்றும் பூமிக்கடியில் மின்சாரதொடரமைப்புகள் பதிக்கும் பணி100 சதவீதம் முடிவுற்றுள்ளது (மொத்தநீளம் 63.15 கி.மீ) பயன்பாட்டு உரிமை பெறும் பணி 100 சதவீதம் முடிவுற்றுள்ளது.

    இத்திட்டத்திற்கு இதுவரை ரூ.1624.7 3கோடிஅளவில் செலவீனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதி முதல் சோதனைஓட்டம் தொடங்கப்பட்டுத ற்போதுவரை ஆறு நீரேற்றுநிலையங்கள் மற்றும்பிரதானக் குழாய்களுக்கு சோதனை ஓட்டம் முடிக்கப்பட்டுள்ளது.

    மேலும் நீரேற்று நிலையங்களின் இடையிலுள்ள கிளைக் குழாய்கள் மற்றும் 1045 குளம் குட்டைகளில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளில் சோதனைஓட்டம் நடைபெற்றுவருகிறது. 

    • சஞ்சய் குமார் தனது தங்கையிடம் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார்.
    • அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி பிரபா தேவி. இவர்களுக்கு சஞ்சய் குமார் (15) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இதில் சஞ்சய்குமார் கோபி நகராட்சி பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து முடித்து விடுமுறையில் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

    கணவன்-மனைவி இருவரும் காலையில் வேலைக்கு சென்று இரவில் தான் வீட்டுக்கு வருவார்கள். இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம் போல் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர்.

    வீட்டில் சஞ்சய்குமாரும், அவரது தங்கை மட்டும் இருந்தனர். பின்னர் மதியம் சஞ்சய் குமார் தனது தங்கையிடம் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார்.

    அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. நீண்ட நேரம் வராததால் அவரது பெற்றோர் சஞ்சய்குமாரை உறவினர், நண்பர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடினர். எனினும் சஞ்சய்குமார் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்க வில்லை.

    இதனையடுத்து பெற்றோர் தனது மகனை மீட்டுத் தரக்கோரி கோபி போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். அதன் பேரில் கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாயமான அன்று சஞ்சய் குமார் வெள்ளையில் பிரவுன் கலர் கோடு போட்ட டி சர்ட், கருப்பு கலர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார். 

    ×