வீட்டை விட்டு வெளியே சென்ற 9-ம் வகுப்பு மாணவர் திடீர் மாயம்

சஞ்சய் குமார் தனது தங்கையிடம் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார்.அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
வீட்டை விட்டு வெளியே சென்ற 9-ம் வகுப்பு மாணவர் திடீர் மாயம்
Published on

கோபி:

கோபிசெட்டிபாளையம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி பிரபா தேவி. இவர்களுக்கு சஞ்சய் குமார் (15) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இதில் சஞ்சய்குமார் கோபி நகராட்சி பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து முடித்து விடுமுறையில் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

கணவன்-மனைவி இருவரும் காலையில் வேலைக்கு சென்று இரவில் தான் வீட்டுக்கு வருவார்கள். இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம் போல் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர்.

வீட்டில் சஞ்சய்குமாரும், அவரது தங்கை மட்டும் இருந்தனர். பின்னர் மதியம் சஞ்சய் குமார் தனது தங்கையிடம் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார்.

அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. நீண்ட நேரம் வராததால் அவரது பெற்றோர் சஞ்சய்குமாரை உறவினர், நண்பர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடினர். எனினும் சஞ்சய்குமார் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்க வில்லை.

இதனையடுத்து பெற்றோர் தனது மகனை மீட்டுத் தரக்கோரி கோபி போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். அதன் பேரில் கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாயமான அன்று சஞ்சய் குமார் வெள்ளையில் பிரவுன் கலர் கோடு போட்ட டி சர்ட், கருப்பு கலர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com