பவானிசாகர் அணை நிலவரம்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.16 அடியாக உள்ளது.அணையில் இருந்து 1,055 கன அடி தண்ணீர் வெளியே ற்றப்பட்டு வருகிறது.
பவானிசாகர் அணை நிலவரம்
Published on

ஈரோடு:

ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

அணைக்கு நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.16 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,064 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

கீழ்பவானி பாசனத்திற்காக 5 கனஅடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 900 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 1,055 கன அடி தண்ணீர் வெளியே ற்றப்பட்டு வருகிறது.

இதேப்போல் குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 34.17 அடியாக உள்ளது. பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 23.95 அடியாக உள்ளது.

வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 26.44 அடியாக உள்ளது. மழைப்பொழிவு இல்லாத காரணத்தால் அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com