என் மலர்
நீங்கள் தேடியது "who gambled with money"
- கருங்க ல்பாளையம் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.
- போலீசார் 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
ஈரோடு:
கருங்கல்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் அபூபக்கர் தலைமையி லான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது கருங்க ல்பாளையம் அழகரசன் நகர் ஹவுசிங் போர்டு பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டி ருந்தது தெரிய வந்தது.
அந்த கும்பல் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர்.
அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் மணிகண்டன் (31), கார்த்திக் (28), பிரகாஷ் (33), மணிகண்டன் (35), பிரகாஷ் (35), ராஜா (32) ஆகியோர் என தெரிய வந்தது. அவர்கள் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.
இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். அவர்களிட மிருந்து சீட்டு கட்டுகள், பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- ஆற்றுப்பகுதி அருகே சிலர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர்.
- சீட்டு கட்டுகள், ரூ.1600 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் கடத்தூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அரசூர் ஆற்றுப்பகுதி அருகே சிலர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அந்த கும்பல் தப்பி ஓட முயன்றது.
அந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் அரசூர் பகுதியைச் சேர்ந்த மதியழகன் (64), ஆறுமுகம்(64), சந்திரன் (65), சுந்தரம் (70), அன்பழகன் (58), செல்வன் (53), திருமூர்த்தி (52), குமரேசன் (53) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள், ரூ.1600 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கடத்தூர் போலீசார் 8 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக காஞ்சிக்கோவில் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் காஞ் சிகோவில் கொண்டையன் காட்டு வலசுபகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக காஞ்சிக்கோவில் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த சேலம் மாவட்டம் ராமகிருஷ்ணா காலனியை சேர்ந்த முனுசாமி மகன் மணி (வயது 42), காஞ்சிகோவில் பகுதியை சேர்ந்த பூபதி மகன் ஜெ கதீஷ் (29),
பெத்தம்பாளையத்தை சேர்ந்த மாணிக்கம் மகன் ரவி (53), காஞ்சிக்கோவில் தெற்கு ரத வீதியை சேர்ந்த தண்டபாணி மகன் ராமராஜ் (32), வெங்கட்ராமர் தெருவை சேர்ந்த காவிரி மகன் சுந்தரம் (28) ஆகியோரை மடக்கி பிடித்தார்.
பின்னர் அவர்களிடம் இருந்த சீட்டு கட்டு மற்றும் ரூ.1,650 போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






