பணம் வைத்து சூதாடிய 6 பேர் மீது வழக்கு

கருங்க ல்பாளையம் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.போலீசார் 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
பணம் வைத்து சூதாடிய 6 பேர் மீது வழக்கு
Published on

ஈரோடு:

கருங்கல்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் அபூபக்கர் தலைமையி லான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது கருங்க ல்பாளையம் அழகரசன் நகர் ஹவுசிங் போர்டு பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டி ருந்தது தெரிய வந்தது.

அந்த கும்பல் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர்.

அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் மணிகண்டன் (31), கார்த்திக் (28), பிரகாஷ் (33), மணிகண்டன் (35), பிரகாஷ் (35), ராஜா (32) ஆகியோர் என தெரிய வந்தது. அவர்கள் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.

இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். அவர்களிட மிருந்து சீட்டு கட்டுகள், பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com