பணம் வைத்து சூதாடிய 5 பேர் மீது வழக்கு

பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக காஞ்சிக்கோவில் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணம் வைத்து சூதாடிய 5 பேர் மீது வழக்கு
Published on

 ஈரோடு:

ஈரோடு மாவட்டம் காஞ் சிகோவில் கொண்டையன் காட்டு வலசுபகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக காஞ்சிக்கோவில் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த சேலம் மாவட்டம் ராமகிருஷ்ணா காலனியை சேர்ந்த முனுசாமி மகன் மணி (வயது 42), காஞ்சிகோவில் பகுதியை சேர்ந்த பூபதி மகன் ஜெ கதீஷ் (29),

பெத்தம்பாளையத்தை சேர்ந்த மாணிக்கம் மகன் ரவி (53), காஞ்சிக்கோவில் தெற்கு ரத வீதியை சேர்ந்த தண்டபாணி மகன் ராமராஜ் (32), வெங்கட்ராமர் தெருவை சேர்ந்த காவிரி மகன் சுந்தரம் (28) ஆகியோரை மடக்கி பிடித்தார்.

பின்னர் அவர்களிடம் இருந்த சீட்டு கட்டு மற்றும் ரூ.1,650 போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com