என் மலர்
நீங்கள் தேடியது "Devotees come and"
- சென்னிமலை காமாட்சியம்மன் கோவில் பொங்கல் திருவிழா நடந்தது.
- பக்தர் ஒருவர் முதுகில் குத்தி பறவைக்காவடியில் வந்தார்.
சென்னிமலை:
சென்னிமலை காமாட்சியம்மன் கோவில் பொங்கல் திருவிழா நடந்தது.
இதையொட்டி பொறை யன்காடு, களத்துக்காடு, மேலப்பாளையம், மதேஸ்வரா நகர் ஆகிய பகுதிகளில் இருந்து பெண்கள் கோவிலுக்கு மாவிளக்கு எடுத்து வந்தும், பொங்கல் வைத்தும் அம்மனை வழிபட்டனர்.
மேலப்பாளையத்தில் உள்ள மாதேஸ்வரன் நகர் பகுதியிலிருந்து காமாட்சி யம்மன் கோவில் வரை பக்தர்கள் அலகு குத்தி தேர் இழுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர் ஒருவர் முதுகில் குத்தி பறவைக்காவடியில் வந்தார்.
இந்த ஊர்வலம் மேலப்பாளையத்திலிருந்து தொடங்கி ஊத்துக்குளி ரோடு, குமரன் சதுக்கம், வடக்கு ராஜ வீதி, அரச்சலூர் ரோடு வழியாக கோவிலை அடைந்தது.
காமாட்சி யம்மனுக்கு சிறப்பு அலங்கா ரம் செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது. பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பொங்கல் வைத்தும் வழிபாடு செய்தனர்.






