என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    இதுவரை பார்த்திராத வகையில் மிகவும் Fresh ஆக காண்பீர்கள்.

    இயக்குனர் அட்லீ, தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கிறார்.

    முன்னதாக அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடித்த ஜவான் படத்திலும் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

    இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய அட்லீ, " தீபிகா படுகோன் எனது லக்கி சார்ம் (Lucky Charm). இந்த படத்தில் அவர் இதுவரை பார்த்திராத வகையில் மிகவும் Fresh ஆகவும், புதிய தோற்றத்திலும் காண்பீர்கள்" என்று தெரிவித்தார்.

    ஜவான் படத்தை குறிப்பிட்ட தீபிகாவின் நடிப்பு இந்தப் படத்திலும் அனைவரையும் ஈர்க்கும் எனத் தெரிவித்தார்.  

    • மாணவர்களுக்கு தட்டுகள் வாங்க ஏற்கனவே நிதி விடுவிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
    • இதுதான் உங்கள் நல்லாட்சியா? என அங்கு ஆளும் பாஜக அரசிடம் காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.

    மத்திய பிரதேசத்தின் மைஹர் மாவட்டத்தில் பாத்திக்வான் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இங்கு குடியரசு தினவிழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு சிறப்பு மதிய உணவு வழங்கப்பட்டது. அந்த உணவானது நோட்டு, புத்தக பேப்பரில் வழங்கப்பட்டுள்ளது.

    மாணவர்கள் காகிதங்களில் உணவை வைத்துச் சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கண்டனத்தை குவித்து வருகிறது.

    மாணவர்களுக்கு தட்டுகள் வாங்க ஏற்கனவே நிதி விடுவிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

    மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் விஷ்ணு திரிபாதி மற்றும் மதிய உணவுப் பிரிவு பொறுப்பாளருக்கு மெத்தனமாகச் செயல்பட்டதற்காக மாவட்ட ஆட்சியர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    இந்தச் சம்பவம் குறித்து மோகன் யாதவ் தலைமையில் ஆளும் பாஜக அரசை விமர்சித்த அம்மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சங்கீதா சர்மா, "இதுதான் உங்கள் நல்லாட்சியா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    கடந்த ஆண்டு மத்தியப் பிரதேசத்த்தின் ஷீயோபுர் பகுதியிலும் இதேபோல பேப்பரில் மதிய உணவு வழங்கப்பட்டது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

    • நியூசிலாந்து தொடரில் 3 போட்டிகளில் வெறும் 16 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.
    • உலகக் கோப்பைக்கான அணியின் தொடக்க வீரராக சஞ்சு சாம்சன் உள்ளார்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முடிவடைந்துள்ள முதல் மூன்று போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று 3-0 எனத் தொடரை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.

    அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால், சஞ்சு சாம்சன் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. 3 போட்டிகளில் வெறும் 16 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். அவரது ஃபார்ம் அணிக்கு கவலை அளிக்கும் விதமாக உள்ளது. என்றாலும், இந்திய அணி நிர்வாகம் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளது.

    நம்பிக்கை, மீண்டும் ஃபார்முக்கு வர சஞ்சு சாம்சனுக்கு ஒரு ஆட்டம் போதும் என பந்து வீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மோர்னே மோர்கல் கூறியதாவது:-

    நம்பிக்கை மற்றும் மீண்டும் ஃபார்முக்கு வருவதற்கு சஞ்சு சாம்சனுக்கு ஒரு போட்டியில் அதிரடி ஆட்டம் அமைந்தால் போதும். எங்களுக்கு, உலகக் கோப்பைக்கான அணியை கட்டமைக்க வேண்டும். போட்டி நடைபெறும் நேரத்தில் வீரர்கள் அவர்களுடைய உயர்ந்த ஆட்டத்தை வைத்திருக்க வேண்டும். அவர் சிறப்பாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். பந்தை சிறப்பாக ஹிட் செய்கிறார்.

    அவருடைய ஃபார்மை கொஞ்ச காலத்திற்கும் பெற்றுவிடுவார். ஆனால், முக்கிய கவனம் அணி வெற்றி பெற வேண்டும் என்பதுதான். தற்போது நாங்கள் 3-0 என இருக்கிறோம். வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். உலகக் கோப்பைக்கு முன்னதாக இரண்டு போட்டிகள் உள்ளன. சஞ்சு சாம்சன் அவரது ஃபார்மை பெற்றுவிடுவார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

    இவ்வாறு சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.

    • அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது
    • கூட்டணியின் தலைவராக பொறுப்புடன் நடந்துகொள்ளும் முதலமைச்சர் அவர்களை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்காமல் அரசியல் செய்யுங்கள்.

    தேர்தல் கூட்டணி பற்றி பொது வெளியில் பேசக்கூடாது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,. 

    "கூட்டணி, தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணிக் கட்சியினர் தொடர்பான கருத்துகளை கட்சி நிர்வாகிகள் பொதுவெளியில் விவாதிப்பதை முழுமையாகத் தவிர்த்திட வேண்டும். தேவையற்ற சர்ச்சைகளினால் எவ்வித பலனும் இல்லை என்பதால் ஆக்கப்பூர்வமான கட்சி பணிகளில் கவனம் செலுத்தி தேர்தல் வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும். கூட்டணி தொடர்பான முடிவுகளை கட்சித் தலைவர் உரிய நேரத்தில் அறிவிப்பார்." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    காரணம் என்ன?

    கூட்டணியில் இருந்தாலும் கடந்தசில நாட்களாகவே திமுக-காங்கிரஸ் நிர்வாகிகளிடையே வார்த்தை போர் வெடித்து வருகிறது. இது கூட்டணிக்குள்ளும், கூட்டணிக்குள் இருக்கும் பிற கட்சிகளுக்கும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. முக்கிய தலைவர்கள் இதுகுறித்து கருத்து தெரிவிக்காவிட்டாலும், இருகட்சி நிர்வாகிகளும் ஒவ்வொரு நிகழ்வுகளும் மூலமும் மனகசப்பு இருப்பதை உறுதிப்படுத்தி கொண்டே வருகின்றனர். இதன் சமீபத்திய உதாரணம் மதுரை வடக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ. தளபதியின் பொதுக்கூட்ட பேச்சு.

    "மாணிக்கம் தாகூர், ஜோதி மணி போன்றோர் இன்று அதில் பங்கு வேண்டும். இதில் பங்கு வேண்டும் என்கிறார்கள். இந்த தேர்தலில் யார் எம்எல்ஏ ஆனால் என்ன, ஆகாவிட்டால் என்ன என அவர்கள் நினைக்கிறார்கள். இவையெல்லாற்றையும் தலைமை புரிந்து அவர்களுக்கு அடுத்த முறை 'சீட்'டே கொடுக்கக்கூடாது. நாம் இல்லாவிட்டால் இந்தியா கூட்டணியே கிடையாது. ஒரு தொகுதிக்கு 3000, 4000 ஓட்டு தான் இருக்கிறது. வார்டுகளில் பூத் கமிட்டி போட ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ்" என மதுரையில் நடைபெற்ற வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் திமுக எம்எல்ஏ கோ.தளபதி பேசியிருந்தார்.

    இவரின் இந்தப் பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக மதுரை வடக்கு தொகுயில் போட்டியிட கார்கேயிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக மாணிக்கம் தாகூர் தெரிவித்திருந்தார். மேலும் அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது எனவும் தெரிவித்திருந்தார்.

    இவரைத்தொடர்ந்து எம்.பி.ஜோதிமணி, " காங்கிரஸ் கட்சியை இப்படி தொடர்ந்து பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். களத்தில் செயல்படுவதில் கடுமையான நெருக்கடிகள் உள்ளபோதும், கூட்டணி தர்மம் கருதியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காகவும் தான் அனுசரித்துப் போகிறோம். அமைதி காக்கிறோம். தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியின் தலைவராக பொறுப்புடன் நடந்துகொள்ளும் முதலமைச்சர் அவர்களை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்காமல் அரசியல் செய்யுங்கள். அதுதான் அனைவருக்கும் நல்லது." எனக் குறிப்பிட்டிருந்தார். 

    இதேபோல முன்னரும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளும் காங்கிரஸ் நிர்வாகிகளை விமர்சித்திருந்தனர். இந்நிலையில் கூட்டணி கட்சியினர் மீது விவாதம் கூடாது என ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டுள்ளார். 

    • இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக் ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
    • ஐரோப்பிய நாடுகளில் இந்திய மாணவர்களுக்கு வேலை தேட விசா உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் நேற்று 77-வது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக ஐரோப்பிய ஆணைய தலைவர் ஊர்சுலா வாண்டர்லியன் கலந்துகொண்டார்.

    இந்நிலையில், இந்தியா மற்றும் 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக் ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

    இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் எதிரொலியாக ஐரோப்பிய நாடுகளில் படிப்பை முடிக்கும் இந்திய மாணவர்கள், அங்கேயே தங்கி வேலை தேட 9 மாதங்கள் கால அவகாசம் (POST-STUDY VISA) இனி உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்தியாவில் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவப் படிப்புகளை பயின்ற மருத்துவர்கள், செவிலியர்களின் பட்டங்களை ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரிப்பதால், அவர்கள் அங்கு சென்று பணிபுரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

    • ஒயினுக்கான வரிகள் 150% லிருந்து படிப்படியாக 20% ஆகக் குறைக்கப்படும்.
    • ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பீர் மீதான வரி 50% ஆகக் குறையும்.

    நாடு முழுவதும் நேற்று 77-வது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக ஐரோப்பிய ஆணைய தலைவர் ஊர்சுலா வாண்டர்லியன் கலந்துகொண்டார்.

    இந்நிலையில், இந்தியா மற்றும் 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக் ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

    தொழிலாளர் அதிகம் ஈடுபடும் துறைகள் போன்ற துணி, காலணி, அதேபோல் கார்கள் மற்றும் மதுபானங்கள் மீதான இறக்குமதி வரி குறைப்புகளுக்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும். இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் 2027 முதல் அமலுக்கு வருகிறது.

    இந்தியாவில் இறக்குமதியாகும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சுமார் 97% பொருட்களுக்கான வரிகள் குறைக்கப்படும் அல்லது முற்றிலுமாக நீக்கப்படும். இந்த வரி குறைப்பின் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் ஆண்டுதோறும் சுமார் $4.75 பில்லியன் வரை சேமிக்க முடியும்.

    தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் ஐரோப்பிய ஒன்றியம் பெரும் நன்மைகள்

    1. கார்களுக்கான இறக்குமதி வரிகள், தற்போதுள்ள அதிகபட்சமான 110% லிருந்து படிப்படியாக 10% வரை குறைக்கப்படும்.

    2. ஒயினுக்கான வரிகள் 150% லிருந்து படிப்படியாக 20% ஆகக் குறைக்கப்படும்.

    3. 50% வரி விதிக்கப்படும் பாஸ்தா, சாக்லேட் உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களுக்கான வரிகள் முற்றிலுமாக நீக்கப்படும்.

    4. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பீர் மீதான வரி 50% ஆகக் குறையும்.

    5. பெரும்பாலான இரசாயனப் பொருட்களின் மீதான வரிகளும் முழுமையாக நீக்கப்படும்.

    6. இரும்பு மற்றும் எஃகுப் பொருட்களுக்கு முழு வரி விலக்கு அளிக்ப்படும்.

    • மீண்டும் வருவார் என்ற எண்ணமோ, எதுவோ, எதுவாகினும் நான்கு நாட்களாக அங்கேயே இருந்துள்ளது
    • விலங்குகளால் மட்டுமே மரணத்தையும் தாண்டிய விசுவாசத்தையும், அன்பையும் காட்ட முடியும்

    ஐந்து அறிவு என்றாலும் நாய்களின் பாசம் என்பது நாம் பலரும் அறிந்ததே. அதனால்தான் பலரது வீட்டிலும் குடும்ப உறுப்பினர்கள் போலவே வளர்ந்து வருகின்றன நாய்கள். இந்நிலையில் ஹிமாச்சல்பிரதேசத்தில் வளர்ப்பு நாய் ஒன்றின் செயல் பலரது கவனத்தையும் ஈர்த்து, மனதை உருக்கிவருகிறது. இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் உள்ள பார்மூரில் பிக்ஷித் ராணா மற்றும் பியூஷ் என்ற இளைஞர்கள் ஜன.23 அன்று பர்மணி கோயிலுக்கு சென்றதாக கூறப்படுகிறது. 

    ஆனால் கடும் பனிப்பொழிவில் சிக்கி இருவரும் உயிரிழந்துள்ளனர். பின்னர் இருவரையும் தேடி, உள்ளூர்வாசிகளும், மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்தை (உடல்கள் இருந்த இடத்தை) அடைந்துள்ளனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

    அதிக பனிப்பொழிவால் பியூஷின் உடல் பனி அடுக்குகளுக்கு அடியில் புதைந்துள்ளது. ஆனால் பியூஷ் உடலின் அருகிலேயே நான்கு நாட்களாக அவனது நாய் அமர்ந்திருந்துள்ளது. உறைபனி, காற்று, பனிப்புயல் என அனைத்தையும் தாண்டி, உணவு உண்ணாமல் பியூஷின் வளர்ப்பு நாயான பிட்புல் அவரின் உடலுக்கு அருகிலேயே இருந்துள்ளது. மேலும் காட்டு விலங்குகளிடம் இருந்தும் உடலை காத்துள்ளது.



    அவர் மீண்டும் வருவார் என்ற எண்ணமோ, எதுவோ, எதுவாகினும் நான்கு நாட்களாக அங்கேயே இருந்துள்ளது. மீட்புக் குழுவினர் சென்றபோதும் முதலில் உரிமையாளரின் உடலை அணுகவிடாமல் ஆக்ரோஷமாக நடந்துக் கொண்டுள்ளது. பின்னர் உதவுவதற்காகத்தான் வந்துள்ளனர் என்பதை அறிந்து உடலை விட்டு சிறிதுதூரம் விலகிச்சென்று மீட்புக்குழுவினரை அவர்களின் கடைமையை செய்ய அனுமதித்துள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    விலங்குகளால் மட்டுமே மரணத்தையும் தாண்டிய விசுவாசத்தையும், அன்பையும் காட்ட முடியும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.   


    • குறிப்பிட்ட சொத்தில் அடமானம் இருந்தால், அடமான உரிமையாளர் வழங்கும் தடையில்லா சான்றிதழ் இல்லாமல் பதிவு செய்யக்கூடாது.
    • அரசு ஆவணங்கள் மற்றும் மாநில அரசு அறிவிக்கும் சில வகை ஆவணங்களுக்கு முந்தைய மூல ஆவணத்தை வழங்கும் அவசியமில்லை.

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த காலங்களில் நடந்த மோசடி பத்திர பதிவுகளை முற்றிலும் தடுக்கும் விதமாக ஐகோர்ட்டு பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அந்த அடிப்படையில் பத்திரப்பதிவு துறை, ஒருவர் பத்திரப்பதிவு செய்யும் போது, அதன் அசல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று விதியை வகுத்து அதனை பின்பற்றி வந்தது. இந்த நிலையில், இந்த விதி சட்டமாக இல்லாததால், அந்த விதியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. அதனால் அசல் ஆவணங்கள் இல்லாவிட்டாலும் பத்திரப்பதிவு செய்யும் சூழ்நிலை உருவானது.

    இந்த நிலையில் தமிழக அரசு, அசல் ஆவணம் கட்டாயம் என்ற பதிவுத்துறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து சட்டசபையில் மசோதாவை நிறைவேற்றியது. அதனை கவர்னர், ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 9-ந்தேதி ஜனாதிபதி முர்மு, அந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். அதனைத்தொடர்ந்து இந்த சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

    அதன்படி, பத்திரப்பதிவின் போது அசல் ஆவணங்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். தற்போது செயலில் உள்ள பிற எந்தச் சட்டத்தையும் பொருட்படுத்தாமல், சொத்துகள் தொடர்பான ஒரு ஆவணம் பதிவு செய்ய முன்வைக்கப்படும் போது பதிவு அதிகாரி, அந்தச் சொத்தில் உரிமை பெற பயன்படுத்தப்பட்ட முந்தைய மூல ஆவணத்தையும், மேலும் சமர்ப்பிக்கும் தேதிக்கு முன் 10 நாட்களுக்குள் பெறப்பட்ட அந்தச் சொத்திற்கான வில்லங்க சான்றிதழையும் கொடுக்கவில்லை என்றால், அந்த ஆவணத்தை பதிவு செய்ய மாட்டார்.

    சொத்து குறித்த விற்பனை ஒப்பந்தம் செய்யப்பட்டு, அது நிறைவேற்றப்படாதிருந்தால், அந்த ஒப்பந்தத்தை குறிப்பிட்ட செயல்பாடுடன் நிறைவேற்ற வழக்கு தொடரும் காலக்கெடு முடிவடையாத வரை பதிவு அதிகாரி புதிய ஆவணத்தை பதிவு செய்யக்கூடாது என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், அசல் ஆவணங்கள் இல்லாமல் பதிவு செய்வதற்கான சில விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு;-

    * குறிப்பிட்ட சொத்தில் அடமானம் இருந்தால், அடமான உரிமையாளர் வழங்கும் தடையில்லா சான்றிதழ் இல்லாமல் பதிவு செய்யக்கூடாது.

    * பூர்வீக சொத்தாக இருந்தால் முந்தைய மூல ஆவணம் இல்லை என்றால், அந்தச் சொத்திற்கான வருவாய்த் துறை வழங்கிய பட்டா வழங்கப்பட வேண்டும்.

    * அசல் ஆவணம் தொலைந்து விட்டால், போலீஸ் துறை வழங்கிய 'கண்டறிய முடியாத சான்றிதழ்' மற்றும் அந்த ஆவணம் இழந்ததை அறிவிக்கும் விதமாக நாளிதழ்களில் வெளியிடப்பட்ட விளம்பரம் ஆகியவற்றை கொடுக்க வேண்டும்.

    * அரசு ஆவணங்கள் மற்றும் மாநில அரசு அறிவிக்கும் சில வகை ஆவணங்களுக்கு முந்தைய மூல ஆவணத்தை வழங்கும் அவசியமில்லை.

    இவ்வாறு புதிய சட்டத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

    சொத்தின் அடமானம் என்பது பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்ட சொத்திற்கு மட்டுமே பொருந்தும் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

    • அதிபர் டிரம்ப் பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிப்பதாக அறிவித்தார்.
    • குறிப்பாக இந்தியா தங்களுக்கு அதிக வரி விதிப்பதாக குற்றம்சாட்டினார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிப்பதாக அறிவித்தார். குறிப்பாக இந்தியா தங்களுக்கு அதிக வரி விதிப்பதாக குற்றம்சாட்டினார்.

    இதனால் கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி முதல் இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார். அதன்பின், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 50 சதவீதமாக உயர்த்தினார்.

    இதேபோல், பல்வேறு நாடுகள் மீது அதிபர் டிரம்ப் வரிவிதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், தென் கொரிய பொருட்களுக்கான இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதில் தென் கொரியா தாமதப்படுத்தி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என டிரம்ப் தெரிவித்தார்.

    வரி அதிகரிப்பு குறித்து முறையான அறிவிப்பு எதுவும் வரவில்லை என்றும், வாஷிங்டனில் உள்ள அதிகாரிகளுடம் இதுகுறித்து பேசுவோம் என தென் கொரியா தெரிவித்துள்ளது.

    • இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 11-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் Title Glimpse வீடியோவை ரசிகர்கள் இணையதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா தனது 'Taxiwaala' இயக்குனர் ராகுல் சங்க்ரித்யனுடன் மீண்டும் இணைந்துள்ளார். இது விஜய் தேவரகொண்டாவின் 14-வது படமாகும்.

    இந்த நிலையில் விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்திற்கான தலைப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அப்படத்திற்கு 'ரணபாலி' என்று பெயரிடப்பட்டுள்ளது. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 11-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் Title Glimpse வீடியோவை ரசிகர்கள் இணையதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    இதனிடையே, விஜய் தேவகொண்டா- ராஷ்மிகா மந்தனா இருவரும் அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்வதாக தகவல்கள் வெளியான நிலையில், இருவரும் இணைந்து நடித்துள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 



    • வங்கிகளுக்கு மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
    • வாரத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோருகின்றனர்.

    இன்று (ஜனவரி 27) நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

    வங்கிகளில் வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை முறையை உடனடியாக அமல்படுத்தக் கோரி இந்த வேலை நிறுத்தம் நடத்தப்பட உள்ளது.

    தற்போது வங்கிகளுக்கு மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

    வாரத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வேண்டும், அதற்கு பதிலாக வார நாட்களில் தினமும் 40 நிமிடங்கள் கூடுதல் நேரம் பணியாற்றவோம் என வங்கி சங்கங்கள் தெரிவித்தன.

    இந்நிலையில் ஜனவரி 23 அன்று மத்திய தொழிலாளர் ஆணையருடன் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்படாததால், வங்கி சங்கங்களின் கூட்டமைப்பான 'யுனைடெட் போரம் ஆஃப் வங்கி யூனியன்ஸ்' இன்று வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

    ஸ்டேட் பேங்க், பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் கனரா வங்கி உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை வங்கிகளின் கிளைகளில் பணியாற்றும் ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.

    இதனால் பணம் டெபாசிட் செய்தல், பணம் எடுத்தல் உள்ளிட்ட வங்கி சேவைகள் பாதிக்கப்படும்.

    அதெல்லாம், HDFC, ICICI, Axis போன்ற தனியார் வங்கி ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. எனவே தனியார் வங்கிச் சேவைகள் வழக்கம் போல் இயங்கும்.  

    • இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது பிராட்மேன் இதை அணிந்திருந்தார்.
    • கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் தொப்பியை மூன்று தலைமுறைகளாகப் பத்திரமாகப் பாதுகாத்து வந்தனர்.

    மறைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன் பயன்படுத்திய புகழ்பெற்ற தொப்பி, ஏலத்தில் சாதனை விலைக்கு விற்பனையாகியுள்ளது.

    ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் பகுதியில் நேற்று (திங்கள்கிழமை) நடைபெற்ற ஏலத்தில், இந்தத் தொப்பி 4,60,000 ஆஸ்திரேலிய டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 4.2 கோடி) விற்பனையானது.

    இந்தத் Baggy Green தொப்பிக்கு ஒரு சிறப்பு வரலாறு உண்டு. 1947-48இல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது பிராட்மேன் இதை அணிந்திருந்தார்.

    பின்னர் இதை இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீரங்க வாசுதேவ் சோஹோனிக்கு பிராட்மேன் பரிசாக வழங்கினார்.

    சோஹோனி குடும்பத்தினர் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் தொப்பியை மூன்று தலைமுறைகளாகப் பத்திரமாகப் பாதுகாத்து வந்தனர்.

    தொப்பியின் உட்புறத்தில் பிராட்மேன் மற்றும் சோஹோனியின் பெயர்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

    70 ஆண்டுகளைக் கடந்து தற்போது இந்த தொப்பி சாதனை விலைக்கு விற்பனை ஆகியுள்ளது.

    ×