என் மலர்
ஆசிரியர் தேர்வு
- மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து மசோதா சட்டமாக மாறியது.
- ஆகஸ்ட் 11 அன்று மக்களவையிலும், ஆகஸ்ட் 12 அன்று மாநிலங்களவையிலும் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய விளையாட்டு நிா்வாக மசோதா, 2025 க்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளார்.
விளையாட்டு அமைப்புகளின் மீது கூடுதல் கட்டுப்பாட்டைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு இந்த மசோதா உருவாக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்ததாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து மசோதா சட்டமாக மாறியது.
ஆகஸ்ட் 11 அன்று மக்களவையிலும், ஆகஸ்ட் 12 அன்று மாநிலங்களவையிலும் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, தேசிய விளையாட்டு சம்மேளனங்களை வழிநடத்த ஒரு தேசிய விளையாட்டு வாரியம் அமைக்கப்படும். விளையாட்டு தொடர்பான சச்சரவுகளுக்கு விரைந்து தீர்வு காண ஒரு தேசிய விளையாட்டுத் தீர்ப்பாயம் உருவாக்கப்படும்.
சம்மேளன தேர்தல்கள் நேர்மையாகவும் முறையாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய, ஒரு தேசிய விளையாட்டுத் தேர்தல் குழு அமைக்கப்படும்.
நிர்வாகப் பொறுப்புகளுக்குப் போட்டியிடுவோருக்கான வயது வரம்பில் தளர்வுகள் கொண்டுவரப்படும்.
தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும்.
- பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
- பஞ்சாபின் சிரோமணி அகாலிதளத் தலைவர் சுக்பீர் சிங் பாதல் வலியறுத்தி உள்ளார்.
பிரிட்டனில் இந்தியாவை சேர்ந்த 2 முதிய சீக்கியர்கள் தாக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி, வால்வர்ஹாம்டன் ரெயில் நிலையத்திற்கு வெளியே மூன்று இளைஞர்கள் இரண்டு சீக்கியர்களைத் தாக்கினர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அதில் பாதிக்கப்பட்டவர்கள் தரையில் கிடப்பதையும், தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் அவர்களை உதைப்பதையும், இரு சீக்கியர்களின் அகற்றப்பட்ட தலைப்பாகைகள் தரையில் கிடப்பதையும் காண முடிகிறது.
சம்பவ இடத்திலிருந்து மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். ஆனால் பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
பஞ்சாபின் சிரோமணி அகாலிதளத் தலைவர் சுக்பீர் சிங் பாதல் இந்த சம்பவத்தை கடுமையாகக் கண்டித்து, இது ஒரு கொடூரமான இனவெறி குற்றம் என்று தெரிவித்துள்ளார்.
சீக்கிய சமூகம் எப்போதும் மற்றவர்களின் நலனுக்காக பாடுபடுவதாகவும், உலகம் முழுவதும் பாதுகாப்பையும் மரியாதையையும் பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்தப் பிரச்சினையை பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் வலுவாக எழுப்புமாறு பாதல் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- அட்லி, தற்போது அல்லு அர்ஜூன்-தீபிகா படுகோனே நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார்.
- அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.
'ராஜா ராணி', 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' என தமிழ் படங்களில் தொடர் வெற்றி படங்களை கொடுத்த அட்லி, பாலிவுட் சினிமாவிலும் அசத்தினார். ஷாருக்கான்-நயன்தாரா கூட்டணியில் அவர் இயக்கிய 'ஜவான்' படம் ரூ.1,000 கோடியை தாண்டி வசூல் குவித்து சாதனை படைத்தது.
அட்லி, தற்போது அல்லு அர்ஜூன்-தீபிகா படுகோனே நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார். இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தமாகி இருக்கிறாராம். படத்தில் அவர் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.
- நடுவானில் பறந்து கொண்டிருந்த போயிங் 757 ரக விமானத்தின் எஞ்சினில் திடீரென தீப்பிடித்தது
- இந்த விமானத்தில் 273 பயணிகளுடன் 8 ஊழியர்கள் பயணம் செய்துள்ளனர்.
கிரீஸில் இருந்து ஜெர்மனிக்கு நடுவானில் பறந்து கொண்டிருந்த போயிங் 757 ரக விமானத்தின் எஞ்சினில் திடீரென தீப்பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விமானத்தில் 273 பயணிகளுடன் 8 ஊழியர்கள் பயணம் செய்துள்ளனர். எஞ்சினில் தீப்பிடித்தவுடன் கவனமாக செயல்பட்ட விமானிகள் விமானத்தை அவசரமாக தரையிறங்கி பயணிகளின் உயிரை காப்பாற்றினர்.
கிரீஸில் இருந்து புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு இத்தாலியின் பிரிண்டிசி நகரில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
பிரிண்டிசி நகரத்தில் தங்குவதற்கான போதிய ஹோட்டல்கள் இல்லாததால் விமான நிலையத்திலேயே பயணிகள் தூங்க வேண்டிய சிரமத்திற்கு ஆளாகினர். இதற்காக விமான நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டது. பின்னர் அவர்கள் வேறு விமானம் ஜெர்மனிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இரவைக் கழிக்க வேண்டிய பயணிகளுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் காண்டோர் மன்னிப்புக் கேட்டுள்ளது. மறுநாள் அவர்கள் டஸ்ஸல்டார்ஃப் நகருக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதனிடையே நடுவானில் விமானத்தின் எஞ்சினில் தீப்பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
- தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பு ஒரு கேலிக்கூத்தாக இருந்தது.
- தேர்தல் ஆணையம் உண்மையான பிரச்சினையைப் பற்றி கூட பேசவில்லை.
குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ரம்யா. கர்நாடகாவை சேர்ந்த ரம்யா முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஆவார்.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் குறித்து ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரம்யா, "ராகுல் காந்தி சொல்வது சரியானது. தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பு ஒரு கேலிக்கூத்தாக இருந்தது. அவர்கள் உண்மையான பிரச்சினையைப் பற்றி கூட பேசவில்லை. வாக்காளர் பட்டியலில் ஏன் போலி வாக்காளர்கள் உள்ளனர், அவர்களை நீக்க அவர்கள் என்ன செய்வார்கள் என்பதற்கு அவர்கள் பதிலளிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகள் மற்றும் பீகார் SIR சர்ச்சை தொடர்பாக ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தை கடுமையாக சாடினார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு செய்தியாளர்கள் சந்திப்பில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்ததுகுறிப்பிடத்தக்கது.
- ஒருவேளை இது எளிதான ஒன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.
- ஈரானின் எதிர்கால அணுசக்தி திறனை நாங்கள் முற்றிலுமாக அழித்தோம்
உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் 7 ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் வெள்ளை மாளிகையில் வைத்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன்போது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ரஷ்யா-உக்ரைன் போர் எப்போது முடிவடையும் என்று என்னால் சொல்ல முடியாது, ஆனால் போர் முடிவடையும். புதின் அதை முடிக்க விரும்புகிறார். முழு உலகமும் இதனால் சோர்வடைந்துவிட்டது.
நான் 6 போர்களை நிறுத்தியுள்ளேன். ஒருவேளை இது எளிதான ஒன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இது எளிதான ஒன்றல்ல. இது இருப்பதிலேயே கடினமானது. இந்தியா-பாகிஸ்தான்-ஐ எடுத்துக்கொண்டால் நாம் பெரிய இடங்களைப் பற்றிப் பேசுகிறோம்.
இந்தப் போர்களில் சிலவற்றைப் பாருங்கள். நீங்கள் ஆப்பிரிக்காவுக்குச் சென்று அதைப் பாருங்கள். ரூவாண்டா மற்றும் காங்கோ இடையே இந்த மோதல் 31 ஆண்டுகளாக நடந்து வருகிறது.
ஈரானின் எதிர்கால அணுசக்தி திறனை நாங்கள் முற்றிலுமாக அழித்தோம் என்பதைத் தவிர்த்து, மொத்தம் 6 போர்களைச் முடித்துள்ளோம்.
இந்த (ரஷியா - உக்ரைன்) போரையும் நாங்கள் முடிவுக்குக் கொண்டுவருவோம் என்று நான் நம்பிக்கையுடன் உணர்கிறேன்" என்று கூறினார். அப்போது அவர் அருகில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் இருந்தார்.
கடந்த ஏப்ரல் 22 ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை அடுத்து மே 7 அன்று இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது.
இதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் ஏற்பட்ட மோதல் மே 9 அன்று போர் நிறுத்தம் மூலம் முடிவுக்கு வந்தது.
இந்த போர் நிறுத்தத்தை வர்த்தக தடைகளை வைத்து மிரட்டி இரு நாட்டு தலைவர்களையும் சம்மதிக்க வைத்து தானே நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இதுவரை 25 முறைக்கும் மேலாக கூறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இரத்த நாளங்களை முன்கூட்டியே 5 வருடங்கள் வயதாக செய்து பலவீனப்படுத்துகிறது
- இந்த ஆய்வின் முடிவுகள் யூரோப்பியன் ஹார்ட் ஜர்னல் இதழில் வெளியிடப்பட்டன.
கொரோனா தொற்றுநோய் மற்றும் தடுப்பூசி ஆகியவற்றின் நீண்டகால விளைவுகள் குறித்த கவலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்திய ஆய்வில், கோவிட் தொற்று, அது லேசானதாக இருந்தாலும், நமது இரத்த நாளங்களை முன்கூட்டியே 5 வருடங்கள் வயதாக செய்து பலவீனப்படுத்துகிறது என்றும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது என்றும் தெரியவந்துள்ளது.
ஆண்களை விட பெண்களில் இந்த விளைவு அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
பிரான்சில் உள்ள பாரிஸ் நகர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரோசா மரியா புருனோ தலைமையிலான ஆராய்ச்சிக் குழு இந்த ஆய்வை நடத்தியது.
செப்டம்பர் 2020 முதல் பிப்ரவரி 2022 வரை 16 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2,390 பேரிடம் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் யூரோப்பியன் ஹார்ட் ஜர்னல் இதழில் வெளியிடப்பட்டன.
"கோவிட் வைரஸ் நேரடியாக இரத்த நாளங்களைப் பாதிக்கிறது என்பதை நாங்கள் கண்டறிந்தோம். இது இரத்த நாளங்களை இயல்பை விட 5 வருடங்கள் வேகமாக வயதாக்குகிறது. இதன் விளைவாக, இதய நோய்க்கான ஆபத்து அதிகரிக்கிறது" என்று பேராசிரியர் ரோசா மரியா புருனோ தெரிவித்தார்.
கோவிட் தொற்று ஏற்படாதவர்களுடன் ஒப்பிடும்போது, கோவிடால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் குறிப்பாக பெண்கள், மற்றும் மூச்சுத் திணறல் மற்றும் சோர்வு போன்ற நீண்டகால கோவிட் அறிகுறிகள் கொண்டவர்களுக்கு இரத்த நாளங்கள், தமனிகள் (Arteries) இறுக்கமாக இருந்தன என்பதை ஆய்வு காட்டுகிறது.
இருப்பினும், கோவிட் தடுப்பூசி போட்டவர்களுக்கு தமனிகள் அவ்வளவு விறைப்பாக இல்லை என்றும், அவர்களின் நிலை சற்று சிறப்பாக இருந்தது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
பெண்களில் இந்த அதிக விளைவுக்குக் காரணம் அவர்களின் நோயெதிர்ப்பு அமைப்பு மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதே என்று பேராசிரியர் புருனோ நம்புகிறார்.
"பெண்களின் நோயெதிர்ப்பு அமைப்புகள் வேகமாகவும் வலுவாகவும் செயல்படுகின்றன. இது அவர்களை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது. ஆனால் அதே வலுவான பதில் தொற்றுக்குப் பிறகு இரத்த நாளங்களுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும்" என்று அவர் கூறினார்.
இந்த சூழலில், கோவிட் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதயம் தொடர்பான ஆபத்தை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
- 43 சமூக வலைதள கணக்குகள் மீது ரம்யா புகார் அளித்தார். இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- கர்நாடக மாநில மகளிர் ஆணையம் மற்றும் திரைப்படத்துறை அமைப்புகளும் காவல்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளன.
குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ரம்யா. கர்நாடகாவை சேர்ந்த ரம்யா முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஆவார்.
இந்நிலையில் ரசிகரை கொலை செய்த வழக்கில் சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷனின் ரசிகர்கள் தன்னை சமூக வலைதளங்களில் தகாத முறையில் பேசுவதாகவும், பாலியல் ரீதியாகவும் அச்சுறுத்துவதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் கொலை வழக்கில் தர்ஷன் சம்பந்தப்பட்டிருப்பதை விமர்சித்து, கொலை செய்யப்பட்ட ரேணுகாமசாமி குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என ரம்யா கருத்து தெரிவித்திருந்தார்.
இதன் காரணமாக, தர்ஷன் ரசிகர்கள் ரம்யாவை சமூக வலைதளங்களில் ஆபாசமான கருத்துக்களையும், கொலை மிரட்டல்களையும் பதிவிட்டு தொல்லை கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, 43 சமூக வலைதள கணக்குகள் மீது ரம்யா புகார் அளித்தார். இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமூக வலைதளங்களில் தனக்கே இத்தகைய அச்சுறுத்தல் ஏற்பட்டால், மற்ற பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என கேள்வி எழுப்பிய ரம்யா, தான் புகார் அளித்த பிறகு இது போன்ற மிரட்டல்கள் குறைந்திருப்பதாகவும், பெண்கள் தங்களுக்கு நேரும் கொடுமைகளுக்கு எதிராக தைரியமாக புகார் அளிக்க முன்வர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் நியாயம் கிடைக்க வேண்டுமென கோரி, கர்நாடக மாநில மகளிர் ஆணையம் மற்றும் திரைப்படத்துறை அமைப்புகளும் காவல்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளன.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- இரண்டு கண்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், போலீசார் கைது செய்துள்ளனர்.
தனியார் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், கொரோனா கால ஊக்கத்தொகை, தீபாவளி போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மாநகராட்சி வளாகத்தில் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் மாநகராட்சி நிர்வாகம் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியது. இரண்டு முறை நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனால் போராட்டம் தொடரும் என தூய்மைப் பணியாளர்கள் அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இரவு 9 மணியளவில் திடீரென போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
- தினமும் 1 ஜிபி டேட்டாவை வழங்கிய ஒரே ஒரு ப்ரீபெய்ட் திட்டம் ரூ.249 ரீசார்ஜ் ஆகத்தான் இருந்தது.
- ரூ.299 (1.5GB/Day) ப்ளான் தற்போது அந்நிறுவனத்தின் குறைந்தபட்ச மாதாந்திர பேக் ஆகியுள்ளது.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது ப்ரீபெய்ட் திட்டங்களின் தொகுப்பில் இருந்து ரூ.249 மதிப்புள்ள திட்டத்தை நீக்கி உள்ளது. இந்த நடவடிக்கையை தொடர்ந்து, ஜியோ சேவையின் கீழ் டெய்லி 1ஜிபி டேட்டாவுடன் வரும் எந்த பேஸிக் ரீசார்ஜும் இல்லை என்கிற சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் ரூ.299 (1.5GB/Day) ப்ளான் தற்போது அந்நிறுவனத்தின் குறைந்தபட்ச மாதாந்திர பேக் ஆகியுள்ளது.
தினமும் 1 ஜிபி டேட்டாவை வழங்கிய ஒரே ஒரு ப்ரீபெய்ட் திட்டம் ரூ.249 ரீசார்ஜ் ஆகத்தான் இருந்தது. இனிமேல் இது ரீசார்ஜ் செய்ய முடியாது. இந்த நடவடிக்கையை தொடர்ந்து ஜியோ நிறுவனம் 1 ஜிபி தினசரி டேட்டாவுடன் வரும் புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.
இருப்பினும் ஜியோவின் ரூ.249 திட்டத்தை விட மலிவான திட்டங்கள் இன்னமும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. அதாவது ரூ.189, ரூ.198 மற்றும் ரூ.239 ஆகிய திட்டங்கள் இன்னமும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. ஆனால் இந்த திட்டங்கள் ரூ.249 திட்டத்தை விட கணிசமாக குறைவான வேலிடிட்டியை வழங்குகின்றன.
ரிலையன்ஸ் ஜியோ கஸ்டமர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தை ஜியோ நிறுவனம் திடீரென நீக்கியது ஜியோ பயனார்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
- விண்வெளி நிலையத்திற்கு சென்று திரும்பினார் சுபான்ஷு சுக்லா.
- பயணத்தின்போது 60-க்கும் மேற்பட்ட பரிசோதனைகளை மேற்கொண்டார்.
இந்தியாவைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதி பிளோரிடாவில் இருந்து புறப்பட்டார். அவர் சென்ற விண்கலம் ஜூன் 25ஆம் தேதி விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. ஜூலை 15ஆம் தேதி பூமிக்கு திரும்பினார்.
இதன்மூலம் விண்வெளிக்கு சென்ற 2ஆவது இந்தியர் என்ற பெருமையை பெற்றார். தற்போதைய இந்த விண்வெளி நிலையத்திற்கு சென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனைப் படைத்தார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி, சுபான்ஷு சுக்லாவை தன்னுடைய பிரதம மந்திரி இல்லத்திற்கு அழைத்து பாராட்டு தெரிவித்தார்.
விண்வெளி ஆய்வு மையத்தில் 60-க்கும் மேற்பட்ட பரிசோதனைகளை மேற்கொண்டார்.
- 5ஆவது மாடி முதல் 13ஆவது மாடி வரை 9 மாடிகளை குத்தகைக்கு எடுத்துள்ளது.
- ஒரு சதுர அடிக்கு 235 ரூபாய் விதம் வாடகை செலுத்தி வருகிறது.
மொபைல் உற்பத்தியில் மிகப்பெரிய நிறுவனமாக திகழ்ந்து வருவது ஆப்பிள். ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் மொபைல் போன்களை உற்பத்தி செய்து அதிக அளவில் ஏற்றுமதி செய்து வருகிறது.
ஆப்பிள் நிறுவனம் பெங்களூருவில் Embassy Zenith கட்டிடத்தில் 5 ஆவது மாடியில் இருந்து 13ஆவது மாடி வரை 9 மாடிகளை 10 வருடத்திற்கு குத்தகைக்கு எடுத்துள்ளது. அந்த கட்டடிடத்தில் பார்க்கிங் இடம் உள்பட மொத்தமாக 2.7 லட்சம் சதுர அடி இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது.
மாதத்திற்கு சுமார் 6.3 கோடி ரூபாய் வாடகையாக செலுத்துகிறது. 10 வருடத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதியில் இருந்து வாடகை செலுத்தி வருகிறது.
மாத வாடகையாக 6.3 கோடி ரூபாய் செலுத்தும் நிலையில், பாதுகாப்பு டெபாசிட்டாக 31.57 கோடி ரூபாய் செலுத்தியுள்ளது. ஒரு சதுர அடிக்கு 235 ரூபாய் என்ற அடிப்படையில் மாத வாடகை செலுத்துகிறது. இது வருடத்திற்கு வரடம் 4.5 சதவீதம் அதிகரிக்கும். அதன்படி 10 வருடத்தில் ஆயிரம் கோடி ரூபாய் வாடகை செலுத்தியிருக்கும்.






