என் மலர்
நீங்கள் தேடியது "Boeing plane crash"
- நடுவானில் பறந்து கொண்டிருந்த போயிங் 757 ரக விமானத்தின் எஞ்சினில் திடீரென தீப்பிடித்தது
- இந்த விமானத்தில் 273 பயணிகளுடன் 8 ஊழியர்கள் பயணம் செய்துள்ளனர்.
கிரீஸில் இருந்து ஜெர்மனிக்கு நடுவானில் பறந்து கொண்டிருந்த போயிங் 757 ரக விமானத்தின் எஞ்சினில் திடீரென தீப்பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விமானத்தில் 273 பயணிகளுடன் 8 ஊழியர்கள் பயணம் செய்துள்ளனர். எஞ்சினில் தீப்பிடித்தவுடன் கவனமாக செயல்பட்ட விமானிகள் விமானத்தை அவசரமாக தரையிறங்கி பயணிகளின் உயிரை காப்பாற்றினர்.
கிரீஸில் இருந்து புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு இத்தாலியின் பிரிண்டிசி நகரில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
பிரிண்டிசி நகரத்தில் தங்குவதற்கான போதிய ஹோட்டல்கள் இல்லாததால் விமான நிலையத்திலேயே பயணிகள் தூங்க வேண்டிய சிரமத்திற்கு ஆளாகினர். இதற்காக விமான நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டது. பின்னர் அவர்கள் வேறு விமானம் ஜெர்மனிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இரவைக் கழிக்க வேண்டிய பயணிகளுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் காண்டோர் மன்னிப்புக் கேட்டுள்ளது. மறுநாள் அவர்கள் டஸ்ஸல்டார்ஃப் நகருக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதனிடையே நடுவானில் விமானத்தின் எஞ்சினில் தீப்பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
- ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- இன்ஜின் செயல்பாடு உள்ளிட்டவற்றை சோதனை செய்த பிறகே விமானத்தை இயக்க வேண்டும்.
ஏர் இந்தியாவின் போயிங் 787 விமானங்களில் ஆய்வு செய்யுமாறு விமான போக்குவரத்து துறை இயக்குநகரம் உத்தரவிட்டுள்ளது.
போயிங் 787 விமானங்களில் கூடுதல் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறும் விமான போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
எரிபொருள் இருப்பு நிலவரம், இன்ஜின் செயல்பாடு உள்ளிட்டவற்றை சோதனை செய்த பிறகே விமானத்தை இயக்க வேண்டும்.
ஏர் இந்தியாவின் போயிங் 787 விமானம் நேற்று அகமதாபாத்தில் வெடித்து சிதறியதில் 241 பேர் பலியான நிலையில் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எத்தியோப்பியா நாட்டு அரசுக்கு சொந்தமான ‘737’ ரக போயிங் விமானம் நேற்று காலை 149 பயணிகளுடன் கென்யா தலைநகரான நைரோபி நோக்கி புறப்பட்டு சென்றது. வானில் உயர எழும்பிய அந்த விமானம் 6 நிமிடங்களுக்குள் தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பை இழந்தது. இதனால் அவ்விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
இந்த விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் சுஷ்மா சுவராஜ், ஹர்ஷ் வர்தன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
விமான விபத்தில் இறந்த இந்தியர்களின் பெயர்களை வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டரில் வெளியிட்டார்.
“இந்தியாவைச் சேர்ந்த வைத்திய பன்னகேஷ் பாஸ்கர், வைத்திய ஹன்சின் அன்னகேஷ், நுகவரபு மனிஷா மற்றும் ஷிகா கார்க் ஆகியோர் விமான விபத்தில் மரணம் அடைந்திருப்பதாக எத்தியோப்பியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எனக்கு தகவல் தெரிவித்தனர்.
இறந்தவர்களில் ஷிகா கார்க், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஆலோசகர் என மத்திய மந்திரி ஹர்ஷ் வர்தன் உறுதி செய்துள்ளார். ஷிகா கார்க், நைரோபியில் நடைபெறும் ஐநா கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்றபோது விமான விபத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இந்தியர்களின் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்படி எத்தியோப்பியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் கூறி உள்ளேன்” என சுஷ்மா குறிப்பிட்டார். #EthiopianAirlines #Boeing737MAX8 #EthiopianFlightCrash






