என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Boeing 737"

    • நடுவானில் பறந்து கொண்டிருந்த போயிங் 757 ரக விமானத்தின் எஞ்சினில் திடீரென தீப்பிடித்தது
    • இந்த விமானத்தில் 273 பயணிகளுடன் 8 ஊழியர்கள் பயணம் செய்துள்ளனர்.

    கிரீஸில் இருந்து ஜெர்மனிக்கு நடுவானில் பறந்து கொண்டிருந்த போயிங் 757 ரக விமானத்தின் எஞ்சினில் திடீரென தீப்பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த விமானத்தில் 273 பயணிகளுடன் 8 ஊழியர்கள் பயணம் செய்துள்ளனர். எஞ்சினில் தீப்பிடித்தவுடன் கவனமாக செயல்பட்ட விமானிகள் விமானத்தை அவசரமாக தரையிறங்கி பயணிகளின் உயிரை காப்பாற்றினர்.

    கிரீஸில் இருந்து புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு இத்தாலியின் பிரிண்டிசி நகரில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

    பிரிண்டிசி நகரத்தில் தங்குவதற்கான போதிய ஹோட்டல்கள் இல்லாததால் விமான நிலையத்திலேயே பயணிகள் தூங்க வேண்டிய சிரமத்திற்கு ஆளாகினர். இதற்காக விமான நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டது. பின்னர் அவர்கள் வேறு விமானம் ஜெர்மனிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    இரவைக் கழிக்க வேண்டிய பயணிகளுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் காண்டோர் மன்னிப்புக் கேட்டுள்ளது. மறுநாள் அவர்கள் டஸ்ஸல்டார்ஃப் நகருக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

    இதனிடையே நடுவானில் விமானத்தின் எஞ்சினில் தீப்பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    • டோயாமா விமான நிலையம் நோக்கி ஏ.என்.ஏ.-வின் போயிங் 737-800 விமானம் புறப்பட்டது.
    • அவசர அவசரமாக நியூ சிடோஸ் விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது.

    ஜப்பானை சேர்ந்த ஆல் நிப்பான் ஏர்வேஸ்-க்கு (ஏ.என்.ஏ.) சொந்தமான விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சப்போரோவின் நியூ சிடோஸ் விமான நிலையத்தில் இருந்து டோயாமா விமான நிலையம் நோக்கி ஏ.என்.ஏ.-வின் போயிங் 737-800 விமானம் புறப்பட்டது.

    பயணத்தை துவங்கிய சில நிமிடங்களில் இந்த விமானத்தின் காக்பிட் பகுதி கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விமானம் அவசர அவசரமாக நியூ சிடோஸ் விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது.

    இந்த விமானத்தில் மொத்தம் 59 பயணிகள், ஆறு பணியாளர்கள் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக பயணிகள் மற்றும் பணியாளர்கள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. விமான கண்ணாடியில் ஏற்பட்ட விரிசலால் விமானத்தை இயக்குவதில் எந்த சிரமமும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

    முன்னதாக அலாஸ்கா ஏர்லைன்ஸ்-க்கு சொந்தமான போயிங் 737-9 விமானம் ஒன்று புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அவசர அவசரமாக தரையிறங்கிய சம்பவம் அரங்கேறியது. இந்த விமானத்தின் கதவுகளில் ஒன்று நடுவழியில் திறந்ததே இதற்கு காரணம் ஆகும். இந்த சம்பவத்தை தொடர்ந்து விமானத்தின் கதவு தனியே பிரிந்து கீழே விழுந்தது குறிப்பிடத்தக்கது.

    157 உயிர்களை பறித்த எத்தியோப்பியா விமான விபத்தை தொடர்ந்து தங்களது வான்எல்லையில் போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்களை இயக்க மலேசியா, பிரிட்டன் அரசுகள் தடை விதித்துள்ளன. #Boeing737MAX8 #MalaysiabansBoeing737MAX8

    எத்தியோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபா நகரில் இருந்து கென்யா தலைநகர் நைரோபி நோக்கிச் சென்ற எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமானம் சமீபத்தில் விழுந்து நொறுங்கிய விபத்தில் 8 இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்ததையடுத்து, விபத்துக்குள்ளான போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்களை தரையிறக்கி நிறுத்தி வைக்க சீன அரசு உத்தரவிட்டுள்ளது. 



    சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட மேலும் சில நாடுகள் இந்த முடிவுக்கு வந்துள்ளன. இந்நிலையில், தங்களது வான்எல்லையில் போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்களை இயக்க மலேசியா அரசு தடை விதித்துள்ளது.

    இதேபோல் பிரிட்டன் அரசும் தங்கள் நாட்டுக்குட்பட்ட வான்எல்லைக்குள் போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்களை இயக்க இன்றுமுதல் தடை விதித்துள்ளது.

    முன்னதாக, போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானத்தில் உலகில் உள்ள பல நாடுகளின் விமானச்சேவை நிறுவனங்கள் இந்த விமானங்களை வாங்க ஏராளமான அளவில் ஆர்டர் செய்துள்ளது, குறிப்பிடத்தக்கது. #Boeing737MAX8 #EthiopianFlightCrash  #MalaysiabansBoeing737MAX8 
    ×