என் மலர்
நீங்கள் தேடியது "ஜெர்மனி விமானம்"
- நடுவானில் பறந்து கொண்டிருந்த போயிங் 757 ரக விமானத்தின் எஞ்சினில் திடீரென தீப்பிடித்தது
- இந்த விமானத்தில் 273 பயணிகளுடன் 8 ஊழியர்கள் பயணம் செய்துள்ளனர்.
கிரீஸில் இருந்து ஜெர்மனிக்கு நடுவானில் பறந்து கொண்டிருந்த போயிங் 757 ரக விமானத்தின் எஞ்சினில் திடீரென தீப்பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விமானத்தில் 273 பயணிகளுடன் 8 ஊழியர்கள் பயணம் செய்துள்ளனர். எஞ்சினில் தீப்பிடித்தவுடன் கவனமாக செயல்பட்ட விமானிகள் விமானத்தை அவசரமாக தரையிறங்கி பயணிகளின் உயிரை காப்பாற்றினர்.
கிரீஸில் இருந்து புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு இத்தாலியின் பிரிண்டிசி நகரில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
பிரிண்டிசி நகரத்தில் தங்குவதற்கான போதிய ஹோட்டல்கள் இல்லாததால் விமான நிலையத்திலேயே பயணிகள் தூங்க வேண்டிய சிரமத்திற்கு ஆளாகினர். இதற்காக விமான நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டது. பின்னர் அவர்கள் வேறு விமானம் ஜெர்மனிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இரவைக் கழிக்க வேண்டிய பயணிகளுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் காண்டோர் மன்னிப்புக் கேட்டுள்ளது. மறுநாள் அவர்கள் டஸ்ஸல்டார்ஃப் நகருக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதனிடையே நடுவானில் விமானத்தின் எஞ்சினில் தீப்பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
- முதியவரின் மூக்கிலும், வாயிலும் இருந்தும் ரத்தம் அதிகமாக வெளியேறியது
- சிபிஆர் முறையில் சுவாச மீட்புக்கு மருத்துவரும் பணியாளர்களும் முயன்றனர்
கடந்த வியாழன் அன்று, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து ஜெர்மனியின் மியூனிச் (Munich) நகருக்கு புறப்பட்டு சென்ற ஒரு லுஃப்தான்சா (Lufthansa) விமானத்தில் 63 வயதான ஒரு பயணி, தன் மனைவியுடன் பயணித்தார்.
அந்த முதியவர் விமானத்தில் ஏறும் போதே வேகவேகமாக சுவாசித்து கொண்டு, வியர்வை குளியலில் உள்ளே நுழைந்தார்.
சிறிது நேரத்தில் விமானம் புறப்பட்டது.
அப்போது அந்த முதியவரின் மூக்கில் இருந்தும் வாயில் இருந்தும் திடீரென லிட்டர் கணக்கில் ரத்தம் வழிய தொடங்கியது.
அவரது மனைவி உதவி கேட்டு கூக்குரலிட்டார். அதிகமாக ரத்தம் கொட்டுவதை கண்ட சக பயணிகளும் கூச்சலிட்டதில் உடனிருந்த சில பயணிகள் அவருக்கு உதவ முன் வந்தனர். ஒரு சிலர், அவரது நாடி துடிப்பை பரிசோதித்தனர்.
ரத்தம் வெளியேறுவது நிற்காமல், அந்த ஜெட் விமானத்தில் அந்த பயணியின் இருக்கைக்கு அருகே உள்ள உட்புற சுவர்களில் ரத்தம் பீய்ச்சி அடித்தது.
அதை தொடர்ந்து அவர் மயக்க நிலைக்கு சென்றார்.
சுமார் அரை மணி நேரம், விமான பணியாளர்களும், அங்கு இருந்த மருத்துவர் ஒருவரும், அவருக்கு "இதய-நுரையீரல் புத்துயிர் சிகிச்சை" (CPR) வழிமுறையை கையாண்டு சுவாச மீட்புக்கு முயற்சித்தனர்.
ஆனால், சிகிச்சை முறைகள் பலனளிக்காமல், அந்த முதியவர் உயிரிழந்தார்.
விமான கேப்டன் அவர் உயிரிழந்ததை அறிவித்ததும், விமானத்தில் சோகமான அமைதி நிலவியது.
இதையடுத்து விமானம், தாய்லாந்திற்கு திருப்பப்பட்டது.
அந்த முதியவரின் மனைவி, பெரும் சோகத்திற்கு இடையே அனைத்து விதமான சட்டபூர்வ வழிமுறைகளையும், தனியொருவராக கையாண்டது பார்ப்பவரின் மனதை நெகிழ செய்தது.
இது குறித்து லுஃப்தான்சா விமான நிறுவனம், "அனைத்துவிதமான உதவிகளும் வழங்கப்பட்டும் அந்த முதியவர் உயிரிழந்தது வருத்தத்தை அளிக்கிறது. அவரது உறவினர்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். எதிர்பாராதவிதமாக சக பயணிகளுக்கு ஏற்பட்ட அசவுகரியத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்" என அறிவித்தது.






