search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lufthansa"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதியவரின் மூக்கிலும், வாயிலும் இருந்தும் ரத்தம் அதிகமாக வெளியேறியது
    • சிபிஆர் முறையில் சுவாச மீட்புக்கு மருத்துவரும் பணியாளர்களும் முயன்றனர்

    கடந்த வியாழன் அன்று, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து ஜெர்மனியின் மியூனிச் (Munich) நகருக்கு புறப்பட்டு சென்ற ஒரு லுஃப்தான்சா (Lufthansa) விமானத்தில் 63 வயதான ஒரு பயணி, தன் மனைவியுடன் பயணித்தார்.

    அந்த முதியவர் விமானத்தில் ஏறும் போதே வேகவேகமாக சுவாசித்து கொண்டு, வியர்வை குளியலில் உள்ளே நுழைந்தார்.

    சிறிது நேரத்தில் விமானம் புறப்பட்டது.

    அப்போது அந்த முதியவரின் மூக்கில் இருந்தும் வாயில் இருந்தும் திடீரென லிட்டர் கணக்கில் ரத்தம் வழிய தொடங்கியது.

    அவரது மனைவி உதவி கேட்டு கூக்குரலிட்டார். அதிகமாக ரத்தம் கொட்டுவதை கண்ட சக பயணிகளும் கூச்சலிட்டதில் உடனிருந்த சில பயணிகள் அவருக்கு உதவ முன் வந்தனர். ஒரு சிலர், அவரது நாடி துடிப்பை பரிசோதித்தனர். 

    ரத்தம் வெளியேறுவது நிற்காமல், அந்த ஜெட் விமானத்தில் அந்த பயணியின் இருக்கைக்கு அருகே உள்ள உட்புற சுவர்களில் ரத்தம் பீய்ச்சி அடித்தது.

    அதை தொடர்ந்து அவர் மயக்க நிலைக்கு சென்றார்.

    சுமார் அரை மணி நேரம், விமான பணியாளர்களும், அங்கு இருந்த மருத்துவர் ஒருவரும், அவருக்கு "இதய-நுரையீரல் புத்துயிர் சிகிச்சை" (CPR) வழிமுறையை கையாண்டு சுவாச மீட்புக்கு முயற்சித்தனர்.

    ஆனால், சிகிச்சை முறைகள் பலனளிக்காமல், அந்த முதியவர் உயிரிழந்தார்.

    விமான கேப்டன் அவர் உயிரிழந்ததை அறிவித்ததும், விமானத்தில் சோகமான அமைதி நிலவியது.

    இதையடுத்து விமானம், தாய்லாந்திற்கு திருப்பப்பட்டது.

    அந்த முதியவரின் மனைவி, பெரும் சோகத்திற்கு இடையே அனைத்து விதமான சட்டபூர்வ வழிமுறைகளையும், தனியொருவராக கையாண்டது பார்ப்பவரின் மனதை நெகிழ செய்தது.

    இது குறித்து லுஃப்தான்சா விமான நிறுவனம், "அனைத்துவிதமான உதவிகளும் வழங்கப்பட்டும் அந்த முதியவர் உயிரிழந்தது வருத்தத்தை அளிக்கிறது. அவரது உறவினர்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். எதிர்பாராதவிதமாக சக பயணிகளுக்கு ஏற்பட்ட அசவுகரியத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்" என அறிவித்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி இன்று திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
    • சென்னையில் இருந்து அமெரிக்கா, கனடா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல வேண்டிய லுப்தாப்சா விமான பயணிகளும் தவிப்புக்கு உள்ளாகினர்.

    ஜெர்மனியின் மிகப்பெரிய விமான நிறுவனமான லுப்தான்சா ஐரோப்பாவில் 2-வது பெரிய விமான நிறுவனமாக திகழ்கிறது.

    லுப்தான்சா விமான நிறுவன கிளைகளில் சுமார் 25 ஆயிரம் பேர் பணிபுரிகிறார்கள். ஜெர்மனி நாட்டில் பிராங்க்பர்ட், முனிச் பகுதிகளில் லுப்தான்சா விமான நிறுவனங்களின் முக்கிய அலுவலகங்கள் உள்ளன.

    அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் லுப்தான்சா கிளைகள் செயல்பட்டு வருகின்றன. பல நாடுகளுக்கும் விமான சேவைகள் நடந்து வருகிறது.

    இந்நிலையில் ஜெர்மனியில் உள்ள லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி இன்று திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் 1000 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

    இந்த வேலை நிறுத்தத்தால் ஜெர்மனியில் இருந்து சென்னை வரும் விமானங்களும், சென்னையில் இருந்து ஜெர்மனி செல்லும் விமானங்களும் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.

    சென்னையில் இருந்து அமெரிக்கா, கனடா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல வேண்டிய லுப்தாப்சா விமான பயணிகளும் தவிப்புக்கு உள்ளாகினர். ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் 1 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    இந்த போராட்டம் இன்று காலை 7 மணிக்கு ஜெர்மனியில் தொடங்கியது. 27 மணி நேரம் இந்த போராட்டம் நீடிக்கும். நாளை (வெள்ளிக்கிழமை) காலை 7:10 மணிக்கு போராட்டம் முடிவடையும் என விமான தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

    ×