என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • ஃபஹத் பாசில் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து அல்தாஃப் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஓடும் குதிரா சாடும் குதிரா.
    • இன்னாரிட்டு உடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை ஒருமுறை கிட்டத்தட்ட பெற்றிருந்தார்.

    மலையாள சினிமாவின் பல்திறமைசாலி நடிகர் ஃபஹத் பாசில், உலக புகழ்பெற்ற, ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் அலெஹாண்ட்ரோ கொன்சாலஸ் இன்னாரிட்டு (Birdman, The Revenant) உடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை ஒருமுறை கிட்டத்தட்ட பெற்றிருந்தார். ஆனால் அந்த வாய்ப்பு இறுதியில் சாத்தியமாகாமல் போனது. இதுக்குறித்து அவர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.

    "அவருக்கு நான் பிடிக்கவில்லை; ஆடிஷனுக்குப் பிறகு என்னை ரிஜெக்ட் பண்ணிட்டாங்க" என்று நகைச்சுவையாக சொன்னார்.

    ஆனால் பின்னர் அவர் உண்மையான காரணத்தை விளக்கினார்.

    "அது அவர் என்னை ரிஜெக்ட் செய்தது இல்லை. என் ஆக்சென்ட் மேல் அவர் கவலைப்பட்டார். அதைப் பூர்த்தி செய்ய மூன்று நான்கு மாதங்கள் அங்கே இருக்க சொல்லப்பட்டது. ஆனால் அதற்கு சம்பளம் எதுவும் கிடைக்கவில்லை. அந்த அளவு நேரத்தையும், உழைப்பையும் ஆக்சென்ட் கற்றுக்கொள்வதற்காக செலவிடும் ஆர்வம் எனக்குள் இல்லை. அதனால்தான் அந்த வாய்ப்பை விட்டுவிட்டேன்." – ஃபஹத் பாசில்

    ஃபஹத் பாசில் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து அல்தாஃப் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஓடும் குதிரா சாடும் குதிரா. இப்படம் வரும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக தற்பொழுது நடைப்பெற்று வருகிறது.

    • என்.டி.ஏ. கூட்டணி வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
    • இன்று மாலை கார்கே வீட்டில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்துகிறார்கள்.

    துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய அடுத்த மாதம் 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது. பா.ஜ.க. கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த மகாராஷ்டிர மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் வருகிற 21ஆம் தேதியாகும். அன்றைய தேதி வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு எதிராக போட்டி வேட்பாளரை நிறுத்துவோம் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. சி.பி. ராதாகிருஷ்ணனை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் யாரை களம் இறக்குவது என்று இந்தியா கூட்டணி ஆலோசனை நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் திமுக மாநிலங்களவை எம்.பி.யான திருச்சி சிவாவை இந்தியா கூட்டணி சார்பில் நிறுத்த திட்டம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சி.பி. ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டை சேர்ந்தவர். இதனால் அவரை எதிர்த்து மற்றொரு தமிழகத்தைச் சேர்ந்தவரை நிறுத்தினால் நன்றாக இருக்கும் என எதிர்க்கட்சிகள் நினைக்கலாம்.

    இன்று மாலை டெல்லியில் உள்ள மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் இந்தியா சுட்டணி தலைவர்கள் ஆலோசனை நடத்துகிறார்கள். அதில் யாரை வேட்பாளராக நிறுத்துவது? என்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிகிறது.

    பாஜக தலைவர்கள் எதிர்க்கட்சி தலைவர்களை தொடர்பு கொண்டு சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கேட்டு வருகிறார்கள்.

    • மகாராஷ்டிர கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
    • பாராளுமன்ற கூட்டத்தொடருக்கு பிறகு பா.ஜ.க.வை சேர்ந்த எச்.ராஜா ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தமிழகத்தை சேர்ந்த பா.ஜ.க. மூத்த தலைவரும், மகாராஷ்டிர கவர்னருமான சி.பி.ராதாகிருஷ்ணனை தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    பாராளுமன்ற இரு அவைகளிலும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் அதிகமாக இருப்பதால் சி.பி.ராதாகிருஷ்ணன் எளிதில் வெற்றி பெறுவார் என அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

    இந்நிலையில் பாராளுமன்ற கூட்டத்தொடருக்கு பிறகு பா.ஜ.க.வை சேர்ந்த எச்.ராஜா ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதி வேட்பாளராக்கிய நிலையில், தமிழர் ஒருவருக்கு ஆளுநர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • ஒடிசாவின் பல பகுதிகளில் தங்கம் இருப்பதை ஓடிசா சுரங்கத்துறை அமைச்சர் சட்டசபையில் அறிவித்தார்.
    • இந்தியா கடந்த ஆண்டில் 700 முதல் 800 மெட்ரிக் டன் தங்கத்தை இறக்குமதி செய்தது.

    ஒடிசாவின் பல மாவட்டங்களில் மண்ணில் புதைந்துள்ள கனிமங்கள் குறித்து இந்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கொண்டது. இதில் தியோகர், சுந்தர்கர், நபரக்பூர், கியோன்ஜர், அங்குல் மற்றும் கோராபுட் ஆகிய பகுதிகளில் தங்க கனிமங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மயூர்பன்ச் மல்கன்கிரி, சம்பல்பூர் மற்றும் பவுத் ஆகிய இடங்களில் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ஒடிசா தங்க சுரங்கமாக மாற உள்ளது. இங்கு 10 முதல் 20 மெட்ரிக் டன்கள் அளவுக்கு தங்கம் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    ஒடிசாவின் பல பகுதிகளில் தங்கம் இருப்பதை ஒடிசா சுரங்கத்துறை அமைச்சர் கடந்த மார்ச் மாதமே சட்டசபையில் அறிவித்தார். இதனால் இங்கு தங்க சுரங்கம் தோண்டுவதற்கான ஏலம் விரைவில் நடைபெறும் எனத் தெரிகிறது.

    இந்தியா கடந்த ஆண்டில் 700 முதல் 800 மெட்ரிக் டன் தங்கத்தை இறக்குமதி செய்தது. நாட்டின் உள்நாட்டு தங்க உற்பத்தி ஆண்டுக்கு 1.6 டன்கள் என்ற அளவிலேயே உள்ளது. ஒடிசாவில் தங்கம் எடுக்கப்பட்டால் இந்தியாவில் உள்நாட்டு தங்கம் உற்பத்தி அதிகரிக்கும், இறக்குமதியும் ஓரளவு குறையும்.

    முதல் கட்டமாக ஒடிசாவின் தியோகர் பகுதியில் தங்க சுரங்கத்தை ஏலம் விடுவதற்கான பணிகளை ஒடிசா அரசு, ஒடிசாசுரங்க கார்பரேஷன், இந்திய தொல்லியல் துறை ஆகியவை விரைவுப்படுத்தி உள்ளன. இதன்மூலம் ஒடிசாவில் போக்குவரத்து கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டு பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • சீமான் தலைமையில் கொனேரிகொன் கோட்டை மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • சீமான் பேசிக்கொண்டிருக்கும் போது கூட்டத்தின் நடுவே திடீர் சலசலப்பு ஏற்பட்டது.

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கொனேரிகொன் கோட்டை மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசிக்கொண்டிருக்கும் போது கூட்டத்தின் நடுவே திடீர் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மேடையில் இருந்து ஆக்ரோஷமாக கீழே இறங்கிய சீமான் சலசலப்பு ஏற்பட்ட இடத்திற்கு சென்றார். இதனால் பொதுக்கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் மீண்டும் மேடையேறிய சீமான், "சலசலப்புக்கும் சத்தத்திற்கு அஞ்சும் திராவிட நரிகள் அல்ல நாம்" என்று பேச தொண்டர்கள் சத்தமாக கூச்சலிட்டனர்.

    பொதுக்கூட்டத்தில் செய்தி சேகரித்த செய்தியாளர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் பவுன்சர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பொதுக்கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    • துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறும்.
    • தே.ஜ.கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதிக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.

    புதுடெல்லி:

    துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு சிபி ராதாகிருஷ்ணன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.

    1957 அக்டோபர் 20-ல் திருப்பூரில் பிறந்தார்.

    இளம் வயதில் ஆர்.எஸ்.எஸ்., ஜன சங்கத்தில் பணியாற்றினார். பி.பி.ஏ. முடித்துள்ளார்.

    சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை தொகுதியில் 5 முறை போட்டியிட்டு இரு முறை வெற்றி பெற்றுள்ளார்.

    கோவையில் பா.ஜ.க. வலுவாகக் காலூன்றியபோது முக்கிய முகமாக இருந்தார்.

    2004 முதல் 2006 வரை தமிழ்நாடு மாநில பா.ஜ.க. தலைவராக பதவி வகித்தார்.

    அப்போது கன்னியாகுமரி முதல் சென்னை வரை யாத்திரை மேற்கொண்டார்.

    2014-ல் பா.ஜ.க. மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தேசிய கயிறு வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டது.

    பா.ஜ.க. தேசிய செயலாளர், தேசிய நிர்வாக குழு உறுப்பினர், கேரள மாநில பாஜக பொறுப்பாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார்.

    எஸ்.ராதாகிருஷ்ணன், ஆர்.வெங்கட்ராமனுக்கு பின், துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட உள்ள மூன்றாவது தமிழர்.

    தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்தார்.

    தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராக பதவியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தற்போது, ஒருநாள் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
    • அடுத்த உலகக் கோப்பை வரை விளையாடுவதை இலக்காக கொண்டுள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் சர்மா டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார்.

    தற்போது, ஒருநாள் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாடி வருகிறார். அடுத்த உலகக் கோப்பை (2027) வரை விளையாடுவதை இலக்காக கொண்டுள்ளார்.

    இந்நிலையில்,ரோகித் சர்மா இந்திய அணிக்கு அவசியம் என முன்னாள் வீரரான யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, இந்திய முன்னாள் வீரரான யோக்ராஜ் சிங் கூறியதாவது:

    ரோகித் சர்மா, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான கடினமான இறுதிப்போட்டியில் 83 பந்துகளில் 76 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதினை வென்றார்.

    ஒரு பக்கம் ரோகித் சர்மாவின் பேட்டிங், மறுபக்கம் மற்ற வீரர்களின் பேட்டிங். அந்த ஆட்டம் அவரால் 45 வயது வரை விளையாட முடியும் என்பதை நிரூபித்தது.

    தேவைப்பட்டால் தினமும் 10 கிலோமீட்டர் அவரை ஓட வையுங்கள். அப்படி அவரை பயிற்சி செய்ய சொன்னால் நிச்சயம் 45 வயது வரை அவரால் விளையாட முடியும். அடுத்த 5 வருடங்களுக்கு ரோகித் சர்மா நிச்சயமாக நமக்கு தேவை.

    ரோகித் சர்மா போன்ற வீரர்களை அணியிலிருந்து தூக்கி எறியக்கூடாது. நான் பயிற்சியாளராக இருந்தால், இதே வீரர்களை வைத்து யாராலும் வெல்ல முடியாத ஒரு அணியை உருவாக்குவேன் என தெரிவித்தார்.

    யோகராஜ் சிங் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

    • இதற்காக அமெரிக்கா பிரதிநிதிகள் குழு டெல்லிக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
    • இந்த அபராத வரி வருகிற 27-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது

    அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிகளை கடந்த ஏப்ரல் மாதம் விதித்தார்.

    அதன்பின் வரி விதிப்பை நிறுத்தி வைத்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை அமெரிக்கா நடத்தியது.

    இதில் இந்தியா-அமெரிக்கா பிரதிநிதிகள் குழுக்கள் இடையே 5 சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் உடன்பாடு எதுவும் எட்டப் படவில்லை.

    இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக வருகிற 25-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை 6-வது சுற்று பேச்சு வார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக அமெரிக்கா பிரதிநிதிகள் குழு டெல்லிக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதற்கிடையே பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்ததால் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாக டிரம்ப் சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். மேலும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்குவதால் இந்தியாவுக்கு அபராதமாக மேலும் 25 சதவீதம் வரியை விதித்தார்.

    இந்த அபராத வரி வருகிற 27-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் வரி பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை இந்தியாவுடன் பேச்சுவார்த்தை கிடையாது என்று டிரம்ப் தெரிவித்தார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இந்த நிலையில் வருகிற 25-ந்தேதி தொடங்குவதாக இருந்த இந்தியா-அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க பிரதிநிதிகள் குழுவின் இந்திய வருகை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த 6-வது சுற்று பேச்சுவார்த்தை வேறு தேதியில் நடத்த திட்டமிடப்படலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை ரத்து செய்வதற்கான அதிகாரபூர்வ காரணம் வெளியிடப்படவில்லை.

    புதிய வரி விதிப்பு அமலுக்கு வருவதற்கு 2 நாட்களுக்கு முன்பு இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற இருந்த நிலையில் ரத்து செய்யப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி.
    • கூலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

    நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

    இந்நிலையில் உலகம் முழுவதும் கூலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்நிலையில் அமெரிக்காவில் மிக வேகமாக 3 மில்லியன் டாலர்கள் வசூலித்த ஒரு தமிழ் திரைப்படம் என்ற அங்கீகாரத்தை கூலி கைப்பற்றியுள்ளது. மேலும் உலகளவில் முதல் நாளில் அதிகம் வசூலித்த தமிழ் திரைப்படம் என்ற பெருமை மற்றும் வரலாற்றை கூலி திரைப்படம் படைத்துள்ளது. இதற்கு முன் 140 கோடி ரூபாய் வசூலித்த லியோ படத்தின் வசூலை முந்தியுள்ளது.

    படத்தின் மூன்றாம் நாள் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி திரைப்படம் தமிழ்நாட்டில்38.6 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. மூன்று நாள் முடிவில் திரைப்படம் இந்தியன் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் 158.35 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

    • ஒட்டுமொத்த தேர்தல் சீர்திருத்தத்தின் ஒரு பகுதி தான் SIR நடவடிக்கை.
    • வாக்கு திருட்டு போன்ற வார்த்தை பிரயோகம் அரசியலமைப்புக்கு அவமரியாதை.

    மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் 'வாக்கு திருட்டு' குற்றச்சாட்டுகள், பீகார் தேர்தல் நெருங்கும் சமயத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) மூலம் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது என தேர்தல் ஆணையம் தொடர் சர்ச்சைகளில் சிக்கி உள்ளது.

    இந்நிலையில் இன்று பிற்பகலில் டெல்லியில் செய்தியாளர் சந்திப்புக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது.

    அதன்படி தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

    அப்போது, "எங்கள் கடமைகளில் இருந்து ஒருபோதும் தவறமாட்டோம். அரசியல் கட்சிகளுக்கு இடையே நாங்கள் எந்த பாரபட்சமும் பார்ப்பதில்லை. ஒட்டுமொத்த தேர்தல் சீர்திருத்தத்தின் ஒரு பகுதி தான் SIR நடவடிக்கை. பீகாரின் SIR நடவடிக்கையில் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்குள்ளது.

    பீகாரைப் போல பிற மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை எப்போது மேற்கொள்வது என தேர்தல் ஆணையர்கள் கூடி முடிவெடுப்போம்

    இந்த விவகாரத்தில் போலியான, உண்மைக்கு புறம்பான தகவல்கள் பரப்பப்டுகின்றன. ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு இந்திய அரசியலமைப்பை அவமதிப்பதாகும்.

    வாக்கு திருட்டு போன்ற வார்த்தை பிரயோகம் அரசியலமைப்புக்கு அவமரியாதை. எதிர்க்கட்சிகளின் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறோம். எதிர்க்கட்சிகள் தங்கள் புகாரை தெளிவாக வரையறுத்துக் கூற வேண்டும்" என்று தெரிவித்தார்.  

    • ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.
    • பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் விருதுகளை வழங்கினார்.

    ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது.

    இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூரில் 13 ராணுவ அதிகாரிகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் உறுதிப்படுத்தி உள்ளது.

    மூன்று மாதங்களுக்குப் பிறகு இதை பாகிஸ்தான் அதிகாரிகள் சனிக்கிழமை உறுதிப்படுத்தினர்.

    பாகிஸ்தான் சுதந்திர தினத்தை முன்னிட்டு (ஆகஸ்ட் 14) வியாழக்கிழமை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூரில் இறந்த ராணுவ அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் விருதுகளை வழங்கினார்.

    ஹவில்தார் முகமது நவீத், நாயக் வக்கார் காலித், லான்ஸ் நாயக் திலாவர் கான் மற்றும் பிறருக்கு தங்கா-இ-பசலத் விருதுகள் மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டன.

    அதேபோல் நாயக் அப்துல் ரெஹ்மான், லான்ஸ் நாயக் இக்ரமுல்லா, சிப்பாய் அடில் அக்பர் மற்றும் பிறருக்கு தங்கா-இ-ஜுராத் விருதுகள் வழங்கப்பட்டன. 

    • விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் இன்று தனது 63-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
    • அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் இன்று தனது 63-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில்,விசிக தலைவர் திருமாவளவனுக்கு இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான பா.ரஞ்சித் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அவரது பதிவில் "இந்திய அரசியல் தளத்தில் தவிர்க்க முடியாத பெரும் அரசியல் ஆளுமை, பெரும் மதிப்புக்குறிய தலைவர், அண்ணன் திரு தொல்.திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்❤️?" என பதிவிட்டுள்ளார்.

    ×