என் மலர்tooltip icon

    இந்தியா

    துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன்: பயோடேட்டா
    X

    துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன்: பயோடேட்டா

    • துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறும்.
    • தே.ஜ.கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதிக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.

    புதுடெல்லி:

    துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு சிபி ராதாகிருஷ்ணன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.

    1957 அக்டோபர் 20-ல் திருப்பூரில் பிறந்தார்.

    இளம் வயதில் ஆர்.எஸ்.எஸ்., ஜன சங்கத்தில் பணியாற்றினார். பி.பி.ஏ. முடித்துள்ளார்.

    சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை தொகுதியில் 5 முறை போட்டியிட்டு இரு முறை வெற்றி பெற்றுள்ளார்.

    கோவையில் பா.ஜ.க. வலுவாகக் காலூன்றியபோது முக்கிய முகமாக இருந்தார்.

    2004 முதல் 2006 வரை தமிழ்நாடு மாநில பா.ஜ.க. தலைவராக பதவி வகித்தார்.

    அப்போது கன்னியாகுமரி முதல் சென்னை வரை யாத்திரை மேற்கொண்டார்.

    2014-ல் பா.ஜ.க. மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தேசிய கயிறு வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டது.

    பா.ஜ.க. தேசிய செயலாளர், தேசிய நிர்வாக குழு உறுப்பினர், கேரள மாநில பாஜக பொறுப்பாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார்.

    எஸ்.ராதாகிருஷ்ணன், ஆர்.வெங்கட்ராமனுக்கு பின், துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட உள்ள மூன்றாவது தமிழர்.

    தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்தார்.

    தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராக பதவியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×