search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vice president poll"

    • பாராளுமன்றத்தின் இரு அவைகளும் சேர்ந்து 788 எம்.பி.க்களின் அனுமதிக்கப்பட்ட பலத்தைக் கொண்டுள்ளன.
    • ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் பதவிக்காலம் முடிவடையும் வெங்கையா நாயுடுவுக்குப் பிறகு அவர் பதவியேற்க வாய்ப்புள்ளது.

    இந்தியாவின் அடுத்த துணைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது, இதில் முதலில் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார். மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    இந்த தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரும், மேற்கு வங்க முன்னாள் ஆளுநருமான ஜக்தீப் தன்கர் (71), கூட்டு எதிர்க்கட்சி வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவை (80) ஆகியோர் எதிர்த்துப் போட்டியிடுகின்றனர்.

    ஆளும் பாஜக மக்களவையில் அறுதிப்பெரும்பான்மையையும், மாநிலங்களவையில் 91 உறுப்பினர்களையும் கொண்டுள்ள நிலையில், தனது போட்டியாளரைவிட தன்கருக்கு அதிகளவில் ஆதரவு பெற்றுள்ளார். ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் பதவிக்காலம் முடிவடையும் வெங்கையா நாயுடுவுக்குப் பிறகு அவர் பதவியேற்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    மக்களவை மற்றும் மாநிலங்களவையின் அனைத்து எம்.பி.க்களும், நியமன உறுப்பினர்கள் உட்பட, துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க உரிமை உள்ளது.

    பாராளுமன்றத்தின் இரு அவைகளும் சேர்ந்து 788 எம்.பி.க்களின் அனுமதிக்கப்பட்ட பலத்தைக் கொண்டுள்ளன. இதில் மேல்சபையில் எட்டு காலியிடங்கள் உள்ளன. எனவே, இந்த தேர்தலில் 780 எம்.பி.க்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

    ×