என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பு... மேடையில் இருந்து ஆக்ரோஷமாக கீழே இறங்கிய சீமான் - நடந்தது என்ன?
    X

    பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பு... மேடையில் இருந்து ஆக்ரோஷமாக கீழே இறங்கிய சீமான் - நடந்தது என்ன?

    • சீமான் தலைமையில் கொனேரிகொன் கோட்டை மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • சீமான் பேசிக்கொண்டிருக்கும் போது கூட்டத்தின் நடுவே திடீர் சலசலப்பு ஏற்பட்டது.

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கொனேரிகொன் கோட்டை மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசிக்கொண்டிருக்கும் போது கூட்டத்தின் நடுவே திடீர் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மேடையில் இருந்து ஆக்ரோஷமாக கீழே இறங்கிய சீமான் சலசலப்பு ஏற்பட்ட இடத்திற்கு சென்றார். இதனால் பொதுக்கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் மீண்டும் மேடையேறிய சீமான், "சலசலப்புக்கும் சத்தத்திற்கு அஞ்சும் திராவிட நரிகள் அல்ல நாம்" என்று பேச தொண்டர்கள் சத்தமாக கூச்சலிட்டனர்.

    பொதுக்கூட்டத்தில் செய்தி சேகரித்த செய்தியாளர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் பவுன்சர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பொதுக்கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×