என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ரோகித் சர்மாவை தினமும் 10 கிலோமீட்டர் ஓட விடுங்கள்: முன்னாள் வீரர் சொன்ன காரணம் இதுதான்
    X

    ரோகித் சர்மாவை தினமும் 10 கிலோமீட்டர் ஓட விடுங்கள்: முன்னாள் வீரர் சொன்ன காரணம் இதுதான்

    • தற்போது, ஒருநாள் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
    • அடுத்த உலகக் கோப்பை வரை விளையாடுவதை இலக்காக கொண்டுள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் சர்மா டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார்.

    தற்போது, ஒருநாள் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாடி வருகிறார். அடுத்த உலகக் கோப்பை (2027) வரை விளையாடுவதை இலக்காக கொண்டுள்ளார்.

    இந்நிலையில்,ரோகித் சர்மா இந்திய அணிக்கு அவசியம் என முன்னாள் வீரரான யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, இந்திய முன்னாள் வீரரான யோக்ராஜ் சிங் கூறியதாவது:

    ரோகித் சர்மா, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான கடினமான இறுதிப்போட்டியில் 83 பந்துகளில் 76 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதினை வென்றார்.

    ஒரு பக்கம் ரோகித் சர்மாவின் பேட்டிங், மறுபக்கம் மற்ற வீரர்களின் பேட்டிங். அந்த ஆட்டம் அவரால் 45 வயது வரை விளையாட முடியும் என்பதை நிரூபித்தது.

    தேவைப்பட்டால் தினமும் 10 கிலோமீட்டர் அவரை ஓட வையுங்கள். அப்படி அவரை பயிற்சி செய்ய சொன்னால் நிச்சயம் 45 வயது வரை அவரால் விளையாட முடியும். அடுத்த 5 வருடங்களுக்கு ரோகித் சர்மா நிச்சயமாக நமக்கு தேவை.

    ரோகித் சர்மா போன்ற வீரர்களை அணியிலிருந்து தூக்கி எறியக்கூடாது. நான் பயிற்சியாளராக இருந்தால், இதே வீரர்களை வைத்து யாராலும் வெல்ல முடியாத ஒரு அணியை உருவாக்குவேன் என தெரிவித்தார்.

    யோகராஜ் சிங் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×