என் மலர்
உலகம்

ஆபரேஷன் சிந்தூரில் 13 ராணுவ வீரர்கள் பலி.. 3 மாதங்களுக்கு பிறகு ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்
- ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.
- பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் விருதுகளை வழங்கினார்.
ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது.
இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூரில் 13 ராணுவ அதிகாரிகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் உறுதிப்படுத்தி உள்ளது.
மூன்று மாதங்களுக்குப் பிறகு இதை பாகிஸ்தான் அதிகாரிகள் சனிக்கிழமை உறுதிப்படுத்தினர்.
பாகிஸ்தான் சுதந்திர தினத்தை முன்னிட்டு (ஆகஸ்ட் 14) வியாழக்கிழமை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூரில் இறந்த ராணுவ அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் விருதுகளை வழங்கினார்.
ஹவில்தார் முகமது நவீத், நாயக் வக்கார் காலித், லான்ஸ் நாயக் திலாவர் கான் மற்றும் பிறருக்கு தங்கா-இ-பசலத் விருதுகள் மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டன.
அதேபோல் நாயக் அப்துல் ரெஹ்மான், லான்ஸ் நாயக் இக்ரமுல்லா, சிப்பாய் அடில் அக்பர் மற்றும் பிறருக்கு தங்கா-இ-ஜுராத் விருதுகள் வழங்கப்பட்டன.






