search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    • தோனி 103 வயதான அந்த ரசிகரைநேரில் சந்தித்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
    • எம்.எஸ்.தோனி 103 வயது ரசிகருக்கு சிறப்பு பரிசு வழங்கிய வீடியோ இணைய தளத்தில் வைரலாகி வருகிறது

    சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் சேப்பாக்கத்தில் நடந்தது.

    இந்த போட்டியில் இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி ஆடினார். அப்போது அவரது ஆட்டத்தின் போது ரசிகர்கள் உற்சாக மிகுதியில் ஆரவார கோஷமிட்டனர்.ஆனாலும் பஞ்சாப் அணி இந்த போட்டியில் எளிதாக வென்றது.




    இந்நிலையில் சென்னையை சேர்ந்த 103 வயது ராம்தாஸ் என்பவர் தோனியின் தீவிர கிரிக்கெட் ரசிகர். இவர் தோனி பங்கேற்கும் கிரிக்கெட் போட்டியை தவறாமால் பார்த்து ரசிப்பார்.

    தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனி ஆட்டத்தை பார்த்து ரசித்துள்ளார். இது பற்றி கேள்விபட்ட தோனி 103 வயதான அந்த ரசிகரைநேரில் சந்தித்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வாழ்த்து தெரிவித்து உள்ளார்.




    மேலும் அந்த ரசிகருக்கு தனது கையொப்பமிட்ட சிறப்பு பரிசாக ஜெர்சி சட்டை ஒன்று வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    எம்.எஸ்.தோனி 103 வயது ரசிகருக்கு சிறப்பு பரிசு வழங்கிய வீடியோ தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக ரசிகர்கள் தோனியை பாராட்டி வருகிறார்கள்.

    • ஆரம்ப கட்டத்தில் அவரது சாதனைகள், 17 வயதிலேயே தனது கவுண்டி கிளப்புடன் தனது முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
    • சர்வதேச சுற்றுகளில் அவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான இங்கிலாந்து அணியிலும் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சுழற்பந்து வீச்சாளர் ஜோஷ் பேக்கர் 20 வயதில் மரணமடைந்ததாக வொர்செஸ்டர்ஷைர் கிரிக்கெட் கிளப் நேற்று அறிவித்துள்ளது. ஜோஷ் பேக்கர் இறப்புக்கான காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், கவுண்டியின் தலைமை நிர்வாகி ஆஷ்லே கில்ஸ், பேக்கர் காலமான செய்தி 'நம் அனைவரையும் பேரழிவிற்கு ஆளாக்கியுள்ளது என்று கூறியுள்ளார்.

    பேக்கர் 2021-ம் ஆண்டு வொர்செஸ்டர்ஷயர் அணிக்காக விளையாடத் தொடங்கியபோது தனது முதல் தர கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினார்.

    ஆரம்ப கட்டத்தில் அவரது சாதனைகள், 17 வயதிலேயே தனது கவுண்டி கிளப்புடன் தனது முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். மேலும் சர்வதேச சுற்றுகளில் அவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான இங்கிலாந்து அணியிலும் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜெய்ஸ்வால் 67 ரன்னிலும் பராக் 77 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
    • ஐதராபாத் தரப்பில் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டும் நடராஜன், பேட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி களமிறங்கிய ஐதராபாத் அணி முதலில் தடுமாறினாலும் கடைசியில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

    இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நிதிஷ் ரெட்டி 76 ரன்னிலும் கிளாசன் 42 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு தொடக்கமே சொதப்பாலாக அமைந்தது. ராஜஸ்தான் முதல் ஓவரில் 1 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பட்லர், சாம்சன் 0 ரன்னிலும் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.

    இதனையடுத்து ஜெய்ஸ்வால் - ரியான் பராக் ஜோடி பொறுப்புடன் விளையாடினர். இருவரும் அரை சதம் விளாசி அசத்தினர். ஜெய்ஸ்வால் 67 ரன்னிலும் பராக் 77 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து ஹெட்மயர் 13 ரன்னில் நட்ராஜன் பந்து வீச்சில் அவுட் ஆனார்.

    இதனால் ராஜஸ்தான் வெற்றி பெற 2 ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை கம்மின்ஸ் வீசினார். முதல் பந்தில் ஜூரல் (1) விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த அஸ்வின் 1 ரன் எடுத்தார். அடுத்த 3 பந்துகளை ரோமன் பவல் டாட் பந்துகளாக மாற்றினார். கடைசி பந்தை பவல் சிக்சராக மாற்ற கடைசி ஓவரில் ராஜஸ்தானுக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது.

    கடைசி ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். முதல் பந்தை அஸ்வின் 1 ரன் எடுத்தார். 2-வது பந்தை பவல் 2 ரன்கள் எடுத்தார். 3-வது பந்தை பவுண்டரி விரட்டினார் பவல். இதனால் கடைசி 3 பந்தில் ராஜஸ்தானுக்கு 6 ரன்கள் மட்டுமே தேவைபட்டது. அடுத்த பந்தில் பீல்டிங்கின் தவறால் 2 ரன்கள் எடுக்கப்பட்டது. பரபரப்பான கட்டத்தில் 5-வது பந்தும் 2 ரன்கள் எடுக்கப்பட்டது.

    இதனால் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் சிறப்பாக பந்து வீசிய புவனேஸ்வர் குமார் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதனால் ஐதராபாத் அணி 1 ரன்னில் வெற்றி பெற்றது. ஐதராபாத் தரப்பில் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டும் நடராஜன், பேட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • யுஸ்வேந்திர சாஹல் 4 ஓவர்கள் வீசி 62 ரன்களை விட்டுக் கொடுத்தார்.
    • இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் தனது மோசமான சாதனையை சாஹல் படைத்துள்ளார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய ஐதராபாத் அணி முதலில் தடுமாறினாலும் பின்னர் அதிரடி காட்டி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது.

    ராஜஸ்தான் தரப்பில் யுஸ்வேந்திர சாஹல் 4 ஓவர்கள் வீசி 62 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் தனது மோசமான சாதனையை சாஹல் படைத்துள்ளார். இதற்கு முன்னர் கொல்கத்தா அணிக்கு எதிராக 1 விக்கெட் வீழ்த்தி 54 ரன்கள் விட்டுக் கொடுத்ததே மோசமான சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஐதராபாத் தரப்பில் நிதிஷ் ரெட்டி 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • ராஜஸ்தான் தரப்பில் ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட்- அபிஷேக் சர்மா களமிறங்கினர். ராஜஸ்தானின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அபிஷேக் 12 ரன்னிலும் அன்மோல்பிரீத் சிங் 5 ரன்னிலும் வெளியேறினர்.

    இதனையடுத்து டிராவிஸ் ஹெட் மற்றும் நிதிஷ் ரெட்டி ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடி ஸ்கோரை உயர்த்தினர். மெதுவாக விளையாடிய ஹெட் 44 பந்தில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கிளாசன் அவர் பங்குக்கு அதிரடியாக விளையாடினார். மறுமுனையில் அதிரடி காட்டிய நிதிஷ் அரை சதம் விளாசி அசத்தினார்.

    இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நிதிஷ் ரெட்டி 76 ரன்னிலும் கிளாசன் 42 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    • கேஎல் ராகுல் ஐபிஎல் தொடரில் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடி வருகிறார்.
    • சாம்சன் அனைத்து ஆர்டர்களிலும் ஆடுவார்.

    இந்திய அணி தேர்வு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் ரோகித் சர்மா மற்றும் அஜித் அகார்கர் பங்கேற்று செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கேஎல் ராகுல் இடம்பெறாறது குறித்து அஜித் அகார்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

    அதில், கேஎல் ராகுல் ஐபிஎல் தொடரில் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடி வருகிறார். டி20 உலகக் கோப்பை தொடரில் மிடில் ஆர்டரில் விளையாட எங்களுக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள்தான் தேவை.

    அதனால் சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட் ஆகியோரை தேர்வு செய்துள்ளோம். சாம்சன் அனைத்து ஆர்டர்களிலும் ஆடுவார். அதனால் இது யார் சிறந்தவர்கள் என்பது பற்றியதல்ல. எங்களுக்கு என்ன தேவை என்பதை பற்றியது.

    • இவ்விரு அணிகளும் இதுவரை 18 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன.
    • இதில் இரு அணிகளும் தலா 9-ல் வெற்றியை தனதாக்கி இருக்கின்றன.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    ஐதராபாத் அணி இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளி பெற்றுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, ஒரு தோல்வி என்று 16 புள்ளி பெற்று முதலிடத்தில் கம்பீரமாக வீறுநடைபோடுகிறது. இன்னும் ஒரு வெற்றி பெற்றால் அந்த அணி அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பை அதிகாரபூர்வமாக உறுதி செய்து விடும்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 18 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் இரு அணிகளும் தலா 9-ல் வெற்றியை தனதாக்கி இருக்கின்றன.

    • விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து எந்த கவலையும் இல்லை.
    • ரிங்கு சிங் அணியில் இடம்பெறாதது துரதிஷ்டமானது.

    டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்திய அணி தேர்வு குறித்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் ரோகித் சர்மா மற்றும் அஜித் அகார்கர் பங்கேற்று செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்து வருகின்றனர்.

    விராட் கோலி ஸ்டிரைக் ரேட் மற்றும் ரிங்கு சிங் இடம் பெறாதது குறித்து அகார்கர் விளக்கமளித்தார்.

    அதில் அஜித் அகார்கர் கூறியதாவது:-

    விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து எந்த கவலையும் இல்லை. அவர் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். ரிங்கு சிங் அணியில் இடம்பெறாதது துரதிஷ்டமானது. அவர் எந்த தவறும் செய்யவில்லை, சுப்மன் கில் கூட.

    அணியில் இரண்டு ரிஸ்ட் சுழற்பந்து வீச்சாளர்கள் தேவைப்பட்டது. மேலும் பேட்டிங் ஆல்ரவுண்டரான அக்சர் படேல் இருப்பது அணிக்கு கூடுதல் பலமாகும். இதனால் ரோகித் போட்டியின் போது ஆலோசனை செய்ய பயனுள்ளதாக இருக்கும். இந்த முடிவை எடுப்பது ரோகித் சர்மாவுக்கு கடினமாக இருந்தது. அணிக்காக மட்டுமே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    இவ்வாறு அஜித் அகார்கர் கூறினார்.

    • 20 அணிகள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கின்றன.
    • ஜூன் 2-ந்தேதி தொடங்கி ஜூன் 29-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. ஜூன் 2-ந்தேதி தொடங்கி ஜூன் 29-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

    20 அணிகள் பங்கேற்கும் போட்டி தொடங்குவதற்கு இன்னும் 30 நாட்களே உள்ளன. பங்கேற்கும் நாடுகள் தங்களுடைய அணிகளை அறிவித்து வருகின்றன.

     

    இந்த நிலையில் ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான "anthem" இன்று வெளியிடப்பட்டுள்ளது. அவுட் ஆஃப் திஸ் வேர்ல்டு (Out Of This World) என்ற தலைப்பில் சீன் பால் மற்றும் கெஸ் பாடியுள்ளனர்.

    வெஸ்ட் இண்டீஸ் என்றாலே கடற்கரைதான். கடற்கரையில்தான் எதிர்கால வீரர்களாக வரவிருக்கும் சிறுவர்கள் விளையாடுவார்கள். அந்த காட்சிகள் இதில் இடம் பிடித்துள்ளது. இந்திய அணியின் விராட் கோலி அடிக்கும் ஷாட், கிறிஸ் கெய்லின் நடனம் ஆகியவையும் இடம் பிடித்துள்ளன.

    இந்த anthem 3.09 நிமிடமாக உருவாக்கப்பட்டுள்ளது.

    • ஒரு ஆஃப்-ஸ்பின்னரை சேர்ப்பதற்கான விருப்பம் பற்றி நாங்கள் விவாதித்தோம்.
    • துரதிர்ஷ்டவசமாக வாஷிங்டன் சுந்தர் அதிகம் கிரிக்கெட் விளையாடவில்லை.

    டி20 உலகக் கோப்பை ஜூன் 1-ந் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் யாரும் எதிர்பார்காத சில வீரர்கள் இந்திய அணியில் இடம் பிடிக்கவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் இந்திய அணி தேர்வு குறித்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் ரோகித் சர்மா மற்றும் அஜித் அகார்கர் பங்கேற்று செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்து வருகின்றனர்.

    இந்திய அணியில் 4 சுழற்பந்து வீச்சாளர்கள் ஏன் என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு ரோகித் சர்மா விளக்கமளித்துள்ளார்.

    அதில் ரோகித் கூறியதாவது:-

    4 சுழற்பந்து வீச்சாளர்கள் தேவை. அதற்கான காரணம் என்பது இப்போது நான் கூறவிரும்பவில்லை. அமெரிக்காவில் நடைபெறும் போட்டியின் போது புரியும்.

    ஒரு ஆஃப்-ஸ்பின்னரை சேர்ப்பதற்கான விருப்பம் பற்றி நாங்கள் விவாதித்தோம். துரதிர்ஷ்டவசமாக வாஷிங்டன் சுந்தர் அதிகம் கிரிக்கெட் விளையாடவில்லை. இதனால் அஸ்வின் மற்றும் அக்சரை எடுப்பதில் விவாதம் இருந்தது. 2 இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதாக நாங்கள் நினைத்தோம். மேலும் அக்சர் 50 ஓவர் உலகில் இருந்து சிறப்பாக ஆடி இருக்கிறார். அவர் நன்றாக பந்துவீசுகிறார். அவர் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரிங்கு சிங் கடந்த 6 மாதங்களாக இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார்.
    • தென் ஆப்பிரிக்கா மண்ணில் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார்.

    புதுடெல்லி:

    ஐசிசி சார்பில் அடுத்த மாதம் நடைபெறும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. பி.சி.சி.ஐ. அறிவித்துள்ள 15 பேர் கொண்ட இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் இடம்பெற்றுள்ளனர். இந்த அணி குறித்து முன்னாள் வீரர்கள் ஆதரவும் எதிர்ப்பு தெரித்து வருகின்றனர்.

    இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங்கை 15 பேர் கொண்ட அணியில் எடுக்காதது குறித்து அஜித் அகார்கரை முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிழித்தெடுத்துள்ளார்.

     

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ரிங்கு சிங் கடந்த 6 மாதங்களாக இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ரிங்கு சிங் சிறப்பாக இந்திய அணியை வெற்றி பெற வைத்துள்ளார்.

    குறிப்பாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரின் கடைசி டி20 போட்டியில் 22 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அந்த போட்டியில் ரோகித் சர்மா சதம் அடித்தார். ரிங்கு 69 ரன்கள் குவித்தார். இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால் இந்திய அணி 212 ரன்கள் குவித்தது.

    இப்படிப்பட்ட வீரரை இந்திய அணியில் சேர்க்காதது அநியாயம். இந்த தேர்வு மிகவும் மோசமான முடிவு. அவர் இந்திய அணிக்காக உயிரை கொடுத்து விளையாடுகிறார். அவரை பழிகாடாக ஆக்கி விட்டார்கள். அவரை இந்திய அணியில் மீண்டும் சேர்ப்பது கடினம். ஐபிஎல் தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கிடைப்படது கடினம். இனி ரிங்கு சிங்கை மக்கள் மறந்து விடுவார்கள்.

    இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறினார். 

    • காயம் காரணமாக தீபக் சாஹர் முதல் ஓவரிலேயே வெளியேறியது சிக்கலானது.
    • விக்கெட் கைப்பற்ற வேண்டிய தருணத்தில் 2 பவுலர்கள் மட்டுமே இருந்தனர்.

    சென்னை:

    ஐ.பி.எல் போட்டியில் சி.எஸ்.கே. அணி பஞ்சாப்பிடம் வீழ்ந்து 5-வது தோல்வியை தழுவியது. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்னே எடுக்க முடிந்தது.

    கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 48 பந்தில் 62 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), ரகானே 24 பந்தில் 29 ரன்னும் (5 பவுண்டரி) எடுத்தனர். ஹர்பிரீத் பிரார், ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டும், ரபடா, அர்ஷ்தீப் சிங் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 17.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பேர்ஸ்டோ 30 பந்தில் 46 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்), ரூசோ 23 பந்தில் 43 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ஷர்துல் தாக்கூர், ரிச்சர்ட் கிளீசன், ஷிவம் துபே தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது தோல்வியை தழுவியது. இந்த தொடரில் சேப்பாக்கத்தில் 2-வது தோல்வி ஏற்பட்டது.

    இந்த தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது:-

    நாங்கள் 50 முதல் 60 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம். நாங்கள் பேட்டிங் செய்த போது ஆடுகளம் ரன் குவிப்புக்கு ஏற்றதாக இல்லை. மேலும் பனியும் இருந்தது. இதனால் ஆடுகளத்தின் தன்மை மாறியது.

    பயிற்சியின் போது 'டாஸ்' போட்டு பழகுகிறேன். அதில் வெற்றி கிடைக்கிறது. ஆனால் களத்தில் டாசை இழந்து விடுகிறேன். இதனால் டாஸ் போட வரும் போது அழுத்தத்தில் உள்ளேன்.

    கடந்த போட்டியில் இதே ஆடுகளத்தில் ஐதராபாத்தை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆச்சரியமே. கடந்த 2 ஆட்டங்களில் ஆடுகளம் சிறப்பானதாக இருந்தது. 200 ரன்னுக்கு மேல் குவித்து எதிர் அணிக்கு சவால் கொடுத்தோம். இந்தப் போட்டியில் 180 ரன்கள் எடுப்பதே கடினமாக இருந்தது.

    காயம் காரணமாக தீபக் சாஹர் முதல் ஓவரிலேயே வெளியேறியது சிக்கலானது. விக்கெட் கைப்பற்ற வேண்டிய தருணத்தில் 2 பவுலர்கள் மட்டுமே இருந்தனர். பனி பொழிவு காரணமாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சவால் ஏற்பட்டது. இது கடினமானதுதான்.

    எங்களுக்கு இன்னும் 4 ஆட்டம் இருக்கிறது. வெற்றி பாதைக்கு நாங்கள் திரும்புவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    இவ்வாறு ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார். அவர் இதுவரை நடந்த 10 ஆட்டத்தில் 9 முறை டாசில் தோற்றுள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்சை மீண்டும் சந்திக்கிறது. இந்தப் போட்டி வருகிற 5-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) 3.30 மணிக்கு நடக்கிறது. சென்னை அணி 10 புள்ளியுடன் 4-வது இடத்திலும், பஞ்சாப் அணி 8 புள்ளியுடன் 7-வது இடத்திலும் உள்ளன.

    ×