search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இந்திய அணியில் ரிங்கு சிங்குக்கு இடமில்லை- அஜித் அகார்கரை கிழித்தெடுத்த முன்னாள் வீரர்
    X

    இந்திய அணியில் ரிங்கு சிங்குக்கு இடமில்லை- அஜித் அகார்கரை கிழித்தெடுத்த முன்னாள் வீரர்

    • ரிங்கு சிங் கடந்த 6 மாதங்களாக இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார்.
    • தென் ஆப்பிரிக்கா மண்ணில் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார்.

    புதுடெல்லி:

    ஐசிசி சார்பில் அடுத்த மாதம் நடைபெறும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. பி.சி.சி.ஐ. அறிவித்துள்ள 15 பேர் கொண்ட இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் இடம்பெற்றுள்ளனர். இந்த அணி குறித்து முன்னாள் வீரர்கள் ஆதரவும் எதிர்ப்பு தெரித்து வருகின்றனர்.

    இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங்கை 15 பேர் கொண்ட அணியில் எடுக்காதது குறித்து அஜித் அகார்கரை முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிழித்தெடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ரிங்கு சிங் கடந்த 6 மாதங்களாக இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ரிங்கு சிங் சிறப்பாக இந்திய அணியை வெற்றி பெற வைத்துள்ளார்.

    குறிப்பாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரின் கடைசி டி20 போட்டியில் 22 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அந்த போட்டியில் ரோகித் சர்மா சதம் அடித்தார். ரிங்கு 69 ரன்கள் குவித்தார். இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால் இந்திய அணி 212 ரன்கள் குவித்தது.

    இப்படிப்பட்ட வீரரை இந்திய அணியில் சேர்க்காதது அநியாயம். இந்த தேர்வு மிகவும் மோசமான முடிவு. அவர் இந்திய அணிக்காக உயிரை கொடுத்து விளையாடுகிறார். அவரை பழிகாடாக ஆக்கி விட்டார்கள். அவரை இந்திய அணியில் மீண்டும் சேர்ப்பது கடினம். ஐபிஎல் தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கிடைப்படது கடினம். இனி ரிங்கு சிங்கை மக்கள் மறந்து விடுவார்கள்.

    இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறினார்.

    Next Story
    ×