என் மலர்
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நீட் விலக்கு சட்டம் ஆளுனர் மாளிகையை கடப்பதற்கே மொத்தம் 234 நாட்கள் ஆயின.
  • நீட் தேர்வுக்கு அஞ்சி நடைபெறும் தற்கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

  சென்னை:

  பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  2022-23-ம் ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வுகள் வரும் 17-ந்தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அத்தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ? என்ற அச்சத்தில் சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். நீட் தொடங்குவதற்கு முன்பாகவே தற்கொலை நிகழ்வுகள் தொடங்கி இயிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

  நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெறுவதன் மூலம் தான் மாணவர்களின் தற்கொலைக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும்.

  நீட் விலக்கு சட்டம் ஆளுனர் மாளிகையை கடப்பதற்கே மொத்தம் 234 நாட்கள் ஆயின. அதன்பின் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு 60 நாட்கள் நிறைவடைந்து விட்டன. அடுத்த 50 நாட்களில் மருத்துவ மாணவர் சேர்க்கை அறிவிக்கையை அரசு வெளியிட்டாக வேண்டும்.

  12-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்றால், அதற்கு முன்பாக நீட் விலக்கு சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றாக வேண்டும்.

  அமைச்சர்கள் குழு அல்லது அனைத்துக் கட்சிக் குழுவை டெல்லிக்கு அனுப்பி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் தமிழக அரசு நீட் விலக்கு சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும். அதன் மூலம் நீட் தேர்வுக்கு அஞ்சி நடைபெறும் தற்கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 10-ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
  • இதில் மாணவி 4 மாதம் கர்ப்பமானார். முருகன் மாணவியை ரெட்டியார்பாளையத்தில் உள்ள காந்தி என்ற பெண்ணிடம் அழைத்து சென்று மாத்திரைகள் கொடுத்து கருக்கலைப்பு செய்ய முயன்றுள்ளார்.

  திருவண்ணாமலை:

  திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடி அருகில் உள்ள மலையனூர் செக்கடி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 27).

  இவர் அப்பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

  இதில் மாணவி 4 மாதம் கர்ப்பமானார். முருகன் மாணவியை ரெட்டியார்பாளையத்தில் உள்ள காந்தி (65) என்ற பெண்ணிடம் அழைத்து சென்று மாத்திரைகள் கொடுத்து கருக்கலைப்பு செய்ய முயன்றுள்ளார்.

  இதற்கு பிரபு என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட மாணவி திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

  இது குறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் தானிப்பாடி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப் பதிவு செய்து முருகன், பிரபு ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். கருக்கலைப்பு மாத்திரை கொடுத்த காந்தியை போலீசார் தேடி வந்தனர்.

  இந்த நிலையில் தலைமறைவான காந்தியின் வீட்டில் மருத்துவ அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை செய்ததில் வீட்டில் ஏராளமான ஆங்கில மருந்து, மாத்திரைகள், ஊசி போன்றவை இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு அதனை பறிமுதல் செய்தனர்.

  காந்தி 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு தன்னை டாக்டர் என்றும், பிரபல மருத்துவமனையில் வேலை பார்த்ததாகவும் அறிமுகப்படுத்திக்கொண்டு தானிப்பாடி பகுதியில் பலருக்கு இதுபோன்ற சிகிச்சைகளை அளித்து வந்தது தெரியவந்துள்ளது.

  அதை தொடர்ந்து தலைமறைவாக இருந்த போலி பெண் டாக்டர் காந்தியை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சொத்து வாங்கியதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததையடுத்து வருமான வரித்துறை சொத்துகளை முடக்கியுள்ளது.
  • இதுவரை 2000 கோடிக்கும் அதிகமான சசிகலா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

  பினாமி பெயரில் சசிகலா வாங்கிய ரூ.15 கோடி மதிப்புள்ள சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.

  சென்னை தி.நகர் பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனத்தின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

  சசிகலா பினாமி பெயரில் சொத்து வாங்கியதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததையடுத்து வருமான வரித்துறை சொத்துகளை முடக்கியுள்ளது.

  இதுவரை 2000 கோடிக்கும் அதிகமான சசிகலா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் இருந்த 14,413 பேர் நேற்று குணமாகி வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 28 லட்சத்து 36 ஆயிரத்து 906 ஆக உயர்ந்தது.
  • தற்போது 1,07,189 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 2,634 அதிகம் ஆகும்.

  புதுடெல்லி:

  இந்தியாவில் புதிதாக 17,070 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது.

  கடந்த 28-ந்தேதி பாதிப்பு 11,793 ஆக இருந்தது. மறுநாள் 14,506 ஆகவும், நேற்று 18,819 ஆகவும் உயர்ந்த நிலையில் இன்று குறைந்துள்ளது.

  இதில் அதிகபட்சமாக கேரளாவில் 4,083 பேர், மகாராஷ்டிராவில் 3,640 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  தமிழ்நாட்டில் 137 நாட்களுக்கு பிறகு பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்துள்ளது. மேற்கு வங்காளத்தில் 1,524, கர்நாடகாவில் 1,046, டெல்லியில் 865, குஜராத்தில் 547 அரியானாவில் 534, தெலுங்கானாவில் 468, உத்தரபிரதேசத்தில் 437 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

  நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து 69 ஆயிரத்து 234 ஆக உயர்ந்தது.

  கொரோனா பாதிப்பால் கேரளாவில் திருத்தப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்ட 15 மரணங்கள் உள்பட மேலும் 23 பேர் இறந்துள்ளனர்.

  இதுவரை தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,25,139 ஆக உயர்ந்துள்ளது.

  தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் இருந்த 14,413 பேர் நேற்று குணமாகி வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 28 லட்சத்து 36 ஆயிரத்து 906 ஆக உயர்ந்தது.

  தற்போது 1,07,189 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 2,634 அதிகம் ஆகும்.

  நாடு முழுவதும் இதுவரை 197 கோடியே 74 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் நேற்று 11,67,503 டோஸ்கள் அடங்கும்.

  இதற்கிடையே நேற்று 5,02,1510 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 86.28 கோடியாக உயர்ந்திருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வடசென்னை மேற்கு மாவட்டத்தில் நடைபெறும் போராட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்கிறார்.
  • நெல்லையில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., கோவையில் சி.பி.ராதா கிருஷ்ணன், வானதி சீனிவாசன், ஈரோடு தெற்கில் டாக்டர் சரஸ்வதி எம்.எல்.ஏ., பாயிண்ட் மணி ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

  சென்னை:

  தி.மு.க. அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறி விட்டதாக பா.ஜனதா குற்றம்சாட்டி வருகிறது.

  அரசு அறிவிப்புகளை தேர்தல் வாக்குறுதியை மேற்கோள் காட்டி அண்ணாமலை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

  இந்த நிலையில் தி.மு.க. அரசை கண்டித்து வருகிற 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.

  வடசென்னை மேற்கு மாவட்டத்தில் நடைபெறும் போராட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்கிறார்.

  தென்சென்னையில் கராத்தே தியாகராஜன், சென்னை கிழக்கில் எம்.என்.ராஜா, மத்திய சென்னை கிழக்கில் வினோஜ் பி.செல்வம், மத்திய சென்னை மேற்கில் சக்கரவர்த்தி, சென்னை மேற்கில் கரு.நாகராஜன், வடசென்னை கிழக்கில் ஆர்.சி.பால்கனகராஜ், வேலூரில் முன்னாள் மேயர் கார்த்தி யாயினி, கிருஷ்ணகிரியில் முன்னாள் எம்.பி. நரசிம்மன் ஆகியோர் தலைமையில் நடக்கிறது.

  திருச்சி நகரில் நடக்கும் போராட்டத்துக்கு முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார்.

  சிவகங்கையில் எச்.ராஜா, தேனியில் மீனாதேவ், கன்னியாகுமரியில் எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., தூத்துக்குடியில் முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, நெல்லையில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., கோவையில் சி.பி.ராதா கிருஷ்ணன், வானதி சீனிவாசன், ஈரோடு தெற்கில் டாக்டர் சரஸ்வதி எம்.எல்.ஏ., பாயிண்ட் மணி ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், ஒடிசா காவல்துறை உயர்மட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
  • ரத யாத்திரையை முன்னிட்டு குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  ஒடிசாவின் புனித நகரமான பூரியில் ஜகந்நாதரின் புகழ்பெற்ற ரத யாத்திரை விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

  இந்த யாத்திரைக்காக ஜகந்நாதர், தேவி சுபத்ரா மற்றும் பலபத்ரா ஆகிய மூன்று ரதங்களும் இழுக்கப்பட்டு நேற்று ஸ்ரீமந்திராவின் சிங்க துவாராவின் முன் நிறுத்தப்பட்டுள்ளன. உரிய சடங்குகளுக்குப் பிறகு யாத்திரை தொடங்குகிறது.

  விழாவையொட்டி, மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், ஒடிசா காவல்துறை உயர்மட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

  ரத யாத்திரையை முன்னிட்டு குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  அப்போது அவர், ரத யாத்திரையின் புனிதமான நாளில் நமது நாட்டு மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒடிசாவின் ரத யாத்திரை, பகவான் விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படும் பகவான் ஜகந்நாதரின் வருடாந்திர பயணத்தை சித்தரிக்கிறது. இறைவனின் கருணை மற்றும் தெய்வீகத்தனமையைக் கொண்டாடும் வகையில் ஒட்டுமொத்த சமூகமும் ஒன்றுசேர்ந்ததைக் காட்டுகிறது.

  ரத யாத்திரையில் சேரும் பக்தர்கள் ஜகந்தாதரின் தேர் இழுப்பதை தங்களின் பாக்கியமாக கருதுகின்றனர். ரத யாத்திரையின் சிறப்பும் மகத்துவமும் உண்மையிலேயே இணையற்றது. ரத யாத்திரையுடன் தொடர்புடைய புனிதமான மற்றும் உன்னத லட்சியங்கள் நம் வாழ்க்கையை அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் வளப்படுத்தட்டும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கே.ஜி.எப். பட தீம் மியூசிக் பின்னணியில் ஒலிக்க, ‘நாயகன் மீண்டும் வரார்’ என்ற பதிவுடன் உள்ள வீடியோ காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.
  • தனது உடல்நிலை பற்றி எந்த தகவல்களையும் பதிவிடாத அவர் தான் சமாதி நிலையில் இருப்பதாக மட்டுமே தொடர்ந்து கூறி வந்தார்.

  புதுடெல்லி:

  சர்ச்சை சாமியார் நித்யானந்தா கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சமாதி நிலையில் இருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

  அவர் சமீபத்தில் வெளியிட்ட பதிவில், உலக நன்மைக்காக சமாதி நிலையில் இருக்கிறேன். விரைவில் சத்சங்க உரையாற்றுவேன் என கூறப்பட்டிருந்தது.

  நித்யானந்தா சமாதி நிலைக்கு சென்று ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் நிலையில், வருகிற 13-ந் தேதி குரு பூர்ணிமாவை முன்னிட்டு, மீண்டும் நேரலையில் தோன்றி தரிசனம் தர இருப்பதாக சமூக வலைதளங்களில் அவரது சீடர்கள் வீடியோ வெளியிட்டு தகவல்களை பரப்பி வருகின்றனர்.

  கே.ஜி.எப். பட தீம் மியூசிக் பின்னணியில் ஒலிக்க, 'நாயகன் மீண்டும் வரார்' என்ற பதிவுடன் உள்ள அந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

  ஒரு மாதத்திற்கு முன்பு நித்யானந்தா மரணம் அடைந்ததாக தவறான தகவல் பரவியதை தொடர்ந்து அவர் தனது புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் மெல்லிய தேகத்துடன் காட்சி அளித்த நித்யானந்தாவுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.

  எனினும் தனது உடல்நிலை பற்றி எந்த தகவல்களையும் பதிவிடாத அவர் தான் சமாதி நிலையில் இருப்பதாக மட்டுமே தொடர்ந்து கூறி வந்தார்.

  தற்போது அவர் மீண்டும் நேரலையில் தோன்றுவதாக கூறப்படுவதால் அவரது சமாதி நிலை முடிவுக்கு வரும் என தெரிகிறது.

  நீண்ட இடைவேளைக்கு பிறகு அவர் மீண்டும் நேரலையில் தோன்ற இருப்பது அவரது பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடந்த 5 ஆண்டுகளில் முன்னாள் எம்.பி.க்கள் பயணம் செய்த செலவு ரூ.26.92 கோடி.
  • தற்போதைய எம்.பி.க்களின் பயண செலவு ரூ.35.21 கோடி என கூறப்பட்டு உள்ளது.

  புதுடெல்லி :

  பாராளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.) ரெயில்களில் முதல் வகுப்பு ஏ.சி. வகுப்பில் இலவசமாக பயணம் செய்யலாம். அவர்களின் துணையும் சில நிபந்தனைகளின் பேரில் இந்த இலவசத்தை பெற முடியும். இதைப்போல முன்னாள் எம்.பி.க்கள் 2-ம் வகுப்பு ஏ.சி. வகுப்பில் தனது துணையுடனோ அல்லது முதல் வகுப்பு ஏ.சி. வகுப்பில் தனிமையிலோ இலவச பயணத்தை மேற்கொள்ளலாம்.

  இதற்கான கட்டணத்தை மத்திய அரசு செலுத்தும். ரெயில்வேயின் கட்டணம் மற்றும் கணக்குகள் துறை இதற்கான ரசீதை மக்களவை செயலகத்துக்கு அனுப்பி வைக்கிறது. இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் முன்னாள் மற்றும் இந்நாள் எம்.பி.க்கள் பயணம் செய்த வகையில் மத்திய அரசு செலவழித்த தொகை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மக்களவை செயலகத்துக்கு மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் கடிதம் அனுப்பினார்.

  இதற்கு பதிலளித்துள்ள மக்களவை செயலகம், கடந்த 5 ஆண்டுகளில் மேற்படி எம்.பி.க்களின் ரெயில் பயண செலவு ரூ.62 கோடி என பதில் அளித்து உள்ளது. அந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளில் முன்னாள் எம்.பி.க்கள் பயணம் செய்த செலவு ரூ.26.92 கோடி எனவும், தற்போதைய எம்.பி.க்களின் பயண செலவு ரூ.35.21 கோடி எனவும் கூறப்பட்டு உள்ளது.

  அதேநேரம் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 2020-21-ம் ஆண்டில் இந்த செலவு முறையே ரூ.1.18 கோடி மற்றும் ரூ.1.29 கோடி எனவும் மக்களவை செயலகம் தெரிவித்து உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 2020-ம் ஆண்டின் வர்த்தக சீர்திருத்த செயல் திட்டத்தை அமல்படுத்தியதன் அடிப்படையில், தரவரிசை முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • சாதிக்க துடிக்கும் மாநிலங்களாக அசாம், கேரளா, கோவா, சத்தீஸ்கர், ஜார்கண்ட், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் ஆகிய 7 மாநிலங்கள் வகைப்படுத்தப்பட்டு உள்ளன.

  புதுடெல்லி:

  மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், தொழில் செய்ய உகந்த மாநிலங்கள் தரவரிசை பட்டியலை வெளியிட்டார்.

  2020-ம் ஆண்டின் வர்த்தக சீர்திருத்த செயல் திட்டத்தை அமல்படுத்தியதன் அடிப்படையில், இந்த தரவரிசை முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், அதிகமாக சாதித்த மாநிலங்களாக 7 மாநிலங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அப்பட்டியலில் தமிழ்நாடு இடம் பெற்றுள்ளது. ஆந்திரா, குஜராத், தெலுங்கானா, அரியானா, கர்நாடகா, பஞ்சாப் ஆகியவை மற்ற 6 மாநிலங்கள் ஆகும்.

  சாதிக்க துடிக்கும் மாநிலங்களாக அசாம், கேரளா, கோவா, சத்தீஸ்கர், ஜார்கண்ட், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் ஆகிய 7 மாநிலங்கள் வகைப்படுத்தப்பட்டு உள்ளன.

  உருவெடுத்து வரும் வர்த்தக மாநிலங்களாக புதுச்சேரி உள்பட 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பால் தாக்கரேவால் ஈர்க்கப்பட்டு சிவசேனாவில் இணைந்தார் ஏக்நாத் ஷிண்டே.
  • உத்தவ் தாக்கரேயின் வலதுகரம் ஏக்நாத் ஷிண்டே பால்தாக்கரே குடும்பத்தின் தீவிர விசுவாசி.

  மும்பை :

  அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு பல உதாரணங்களை நமது நாடு கண்டுள்ளது.

  அந்த வகையில் தான் சிவசேனா அதிருப்தி அணி தலைவரான 58 வயது ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரா முதல்-மந்திரியாக யாருமே எதிர்பாராத வகையில் பதவி ஏற்றுள்ளார். அதிலும் ஆட்டோ டிரைவராக வாழ்க்கையை தொடங்கிய அவர், இன்று அரசியல் சாசனத்தின் உயரிய பதவிகளில் ஒன்றான முதல்-மந்திரி பதவியை எட்டி பிடித்துள்ளார். இவர் மகாராஷ்டிரா சத்தாரா மாவட்டத்தில் உள்ள ஜவாலி தாலுகாவை சேர்ந்தவர்.

  இவரது குடும்பம் வாழ்வாதாரத்திற்காக மாநில தலைநகர் மும்பை நோக்கி 1970-களில் இடம்பெயர்ந்தது. மும்பையை அடுத்த தானே நகரில் குடிபுகுந்தனர். ஏக்நாத் ஷிண்டே 11-ம் வகுப்பு வரை தானேயில் உள்ள பள்ளியில் படித்தார். பின்னர் படிப்பை நிறுத்திய அவர், சிறிது காலம் ஆட்டோ டிரைவராக இருந்தார். அந்த நேரத்தில் பால் தாக்கரேவால் ஈர்க்கப்பட்டு சிவசேனாவில் இணைந்தார். மண்ணின் மைந்தர் உரிமைக்காக சிவசேனா நடத்திய போராட்டங்களில் தவறாமல் கலந்து கொண்டு வந்தார்.

  அந்த நேரத்தில் தானேயில் பலம்வாய்ந்த சிவசேனா தலைவராக இருந்த ஆனந்த் திகேவுடன் அவருக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. 1997-ம் ஆண்டு ஆனந்த் திகே மூலமாக தானே மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு ஏக்நாத் ஷிண்டேவுக்கு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்தி கொண்ட அவர் தேர்தலில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

  ஏக்நாத் ஷிண்டேயின் மனைவி பெயர் லதா. இந்த தம்பதிக்கு 3 மகன்கள். இதில் மூத்த மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே தற்போது கல்யாண் நாடாளுமன்ற தொகுதி சிவசேனா எம்.பி.யாக உள்ளார். ஏக்நாத் ஷிண்டே அதிருப்தி அணியை உருவாக்கிய நிலையில், தந்தையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். இதற்கிடையே 2000-ம் ஆண்டு ஜூன் மாதம் சொந்த ஊரில் நடந்த படகு விபத்தில் ஏக்நாத் ஷிண்டேவின் இளைய மகன்கள் திபேஷ் (வயது 11), சுபந்தா (7) ஆகியோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஏக்நாத் ஷிண்டேவின் வாழ்க்கையில் பேரிடியாக அமைந்தது. அப்போது, அவர் அரசியலில் இருந்து விலகி செல்ல இருந்தார். அந்த நேரத்தில் ஆனந்த் திகே, ஏக்நாத் ஷிண்டேவுக்கு உறுதுணையாக இருந்து அவரை மீண்டும் அரசியல் பாதையில் பயணிக்க செய்தார்.

  இதற்கிடையே 2004-ம் ஆண்டு முதல் முறையாக எம்.எல்.ஏ.வாக ஏக்நாத் ஷிண்டே தேர்வானார். அவருக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை பால் தாக்கரே கொடுத்து இருந்தார். அதன்பிறகு ஏக்நாத் ஷிண்டே தானே மாவட்டத்தில் சிவசேனாவின் பலம் வாய்ந்த தலைவராக உருவெடுத்தார். கடந்த 2014-ம் ஆண்டு மீண்டும் எம்.எல்.ஏ.வாக தேர்வு ஆனார்.

  அப்போது அமைந்த பா.ஜனதா- கூட்டணி ஆட்சியில் ஏக்நாத் ஷிண்டே மந்திரி ஆனார். அவருக்கு பொதுப்பணித்துறை, சுகாதாரம் ஆகிய முக்கிய இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. 2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு, 3-வது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்வானார். உத்தவ் தாக்கரேயின் வலதுகரம் ஏக்நாத் ஷிண்டே பால்தாக்கரே குடும்பத்தின் தீவிர விசுவாசி. கட்சி பணிக்கு உத்தவ் தாக்கரேக்கு வலதுகரமாக இருந்தார். இதனால் உத்தவ் தாக்கரே ஆட்சியில் முக்கிய இலாகாவான நகர்புற மேம்பாட்டு துறை ஏக்நாத் ஷிண்டேவுக்கு வழங்கப்பட்டது

  இந்தநிலையில் கட்சியிலும், ஆட்சியிலும் தான் ஓரங்கட்டப்படுவதாக ஷிண்டே உணர்ந்தார். உத்தவ் தாக்கரே அவரது மகன் ஆதித்ய தாக்கரேயை கட்சியிலும், ஆட்சியிலும் வளர்த்து விட்டதும், அவர்கள் இருவரும் தனது இலாகாக்களில் தலையிட்டு வந்ததும் ஏக்நாத் ஷிண்டேக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. உத்தவ் தாக்கரே மீது மனகசப்புகள் ஏற்பட்டது.

  மேலும் உத்தவ் தாக்கரே தனது சொந்த கட்சி எம்.எல்.ஏ.க்களை பல்வேறு காரணங்களால் நேரில் சந்திப்பதை தவிர்த்து வந்த நிலையில், உத்தவ் தாக்கரேயின் விசுவாசியாக கருதப்பட்ட ஏக்நாத் ஷிண்டேவிடம் அவர்கள் தஞ்சம் அடைந்தனர். இந்தநிலையில் தான் யாரும் எதிர்பாராத வகையில் அவர் பா.ஜனதாவுடன் இணைந்து மகாராஷ்டிரா ஆட்சி கனியை தனது வசமாக்கி உள்ளார்.

  2019-ம் ஆண்டு தேர்தலில் சிவசேனாவின் சட்டமன்ற குழு தலைவராக ஏக்நாத் ஷிண்டே தான் தேர்வு செய்யப்பட்டார். சிவசேனா தலைமையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தபோது ஏக்நாத் ஷிண்டே தான் முதல்-மந்திரியாக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

  எனினும் கூட்டணி ஆட்சியை திறம்பட நடத்தி செல்ல உத்தவ் தாக்கரே தான் முதல்-மந்திரியாக பதவி ஏற்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கேட்டுக்கொண்டார். எனவே அப்போது ஏக்நாத் ஷிண்டே ஏமாற்றம் அடைந்தார். தற்போது பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக ஏக்நாத் ஷிண்டேக்கு அந்த பதவி கிடைத்து இருக்கிறது.

  ×