search icon
என் மலர்tooltip icon

    தைவான்

    • தைவானை மீண்டும் தன்னுடன் இணைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருகிறது.
    • சீனா தைவான் நாட்டு எல்லைக்கு போர் விமானங்கள் மற்றும் போர் கப்பல்களை அனுப்பி மிரட்டலும் விடுத்து வருகிறது,

    சீனாவுக்கும், தைவானுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. 2-ம் உலக போரின் போது சீனாவில் இருந்து தைவான் தனியாக பிரிந்து ஆட்சி அமைத்தது. ஆனால் தைவானை மீண்டும் தன்னுடன் இணைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருகிறது.

    மற்ற நாடுகளுடன் தைவான் வைத்திருக்கும் நட்புறவையும் சீனா கண்டித்து வருகிறது.

    மேலும் தைவானை சுற்றி தனது ராணுவத்தினரை குவித்து சீனா போர் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. இதனால் தைவான் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அவ்வப்போது சீனா தைவான் நாட்டு எல்லைக்கு போர் விமானங்கள் மற்றும் போர் கப்பல்களை அனுப்பி மிரட்டலும் விடுத்து வருகிறது,

    இந்நிலையில் நேற்று சீனாவின் ஜே-10, ஜே-11, ஜே-16 உள்ளிட்ட ரக விமானங்கள் மற்றும் குண்டு வீசும் விமானங்கள் உள்பட 24 போர் விமானங்கள் தைவான் எல்லைக்குள் அத்து மீறி பறந்ததாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. சீன விமானங்களை தைவான் தனது போர் கப்பல்கள் மற்றும் நிலத்தில் இருந்து ஏவக்கூடிய ஏவுகணைகள் மூலம் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

    • 71 சீன விமானங்கள், 9 கப்பல்கள் தைவானை சுற்றி வளைத்து இன்று போர் பயிற்சியில் ஈடுபட்டன.
    • இன்று 2-வது நாளாக சீனா போர் பயிற்சியை தொடர்ந்துள்ளது.

    தைபே:

    தைவான் அதிபர் சாய் இங் வென் சமீபத்தில் தென் அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தைபேவுக்கு வரும் வழியில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குச் சென்றார்.

    இந்தப் பயணத்தின் போது தைவான் அதிபரை அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி சந்திக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா, இந்தச் சந்திப்பு நடைபெறக் கூடாது என இருதரப்பையும் எச்சரித்தது.

    சீனாவின் எச்சரிக்கையையும் மீறி கடந்த சில தினங்களுக்கு முன், தைவான் அதிபர் சாய் இங் வென்னை அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி சந்தித்துப் பேசினார். இதனால் ஆத்திரமடைந்த சீனா, தைவானைச் சுற்றிவளைத்து போர் பயிற்சியை தொடங்கியது.

    தைவானைச் சுற்றிய வான் மற்றும் நீர் பரப்பில் சீன போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் கடும் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன என சீன ராணுவமும் தெரிவித்தது.

    இந்தப் போர் பயிற்சியானது இன்றும் தொடர்ந்தது. இதன்படி, இன்று காலை 6 மணியளவில் தைவானைச் சுற்றி 71 சீன விமானங்கள், 9 கப்பல்கள் வட்டமிட்டன. இதனால் தைவானைச் சுற்றி இன்று 2-வது நாளாக சீனா போர் பயிற்சியை தொடர்ந்துள்ளது என்பது தெளிவானது. இவற்றில் 45 விமானங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில், ஜே-11, ஜே-10, ஜே-16, ஒய்-8 ஏ.எஸ்.டபிள்யூ., ஒய்-20, கே.ஜே.-500 உள்ளிட்ட விமானங்களும் அடங்கும். அவை தைவான் ஜலசந்தியின் மையப்பகுதிக்குள் நுழைந்து தென்மேற்கு நகருக்குள் சென்றது என தைவான் அமைச்சகம் தெரிவிக்கின்றது.

    இந்நிலையில், தைவான் எங்களது தாய்வீடு. இந்த நிலத்தின் ஒவ்வொரு கதையும் எங்களது நினைவுகளில் பதிந்துள்ளது. எங்களது தாய்நாட்டை மற்றும் எங்களது வீட்டைப் பாதுகாக்க முழு மனதோடு, நாங்கள் போராடி வருகிறோம் என தெரிவித்துள்ளது.

    • சீனாவின் ஒரு நீர்மூழ்கி எதிர்ப்பு ஹெலிகாப்டர், 3 போர்க்கப்பல்கள் தைவானில் உள்ள ஒரு தீவை சுற்றி கண்டறியப்பட்டது.
    • சீனாவின் இந்த அத்துமீறலை தைவான் அரசு கண்டித்துள்ளது.

    சீனா தைவானை தனது நாட்டின் ஒரு பகுதியாக கருதுகிறது. தைவான் இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தைவானுக்கு அமெரிக்கா உதவி வருகிறது. இதனால் தைவானை அச்சுறுத்த சீனா தொடர்ந்து போர் பயிற்சிகளை எல்லையில் நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் சீனாவின் ஒரு நீர்மூழ்கி எதிர்ப்பு ஹெலிகாப்டர், 3 போர்க்கப்பல்கள் தைவானில் உள்ள ஒரு தீவை சுற்றி கண்டறியப்பட்டதாக தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    லாஸ் ஏஞ்சல்சில் அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை தைவான் அதிபர் சாய் இங்-வென் சந்தித்த பின்னர் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சீனாவின் இந்த அத்துமீறலை தைவான் அரசு கண்டித்துள்ளது. மேலும் ஆயுதப்படைகள் நிலைமையை தீவிரமாக கண்காணிப்பதாகவும் விமானங்கள் கடற்படை கப்பல்கள் ரோந்து சுற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட் டுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

    • உக்ரைன் வீரர்கள் பயன்படுத்தி வரும் அமெரிக்க மாடலைப் போன்று இந்த ஆளில்லா விமானம் உள்ளது.
    • தைவான் தனது அடுத்த தலைமுறை தற்கொலை தாக்குதல் ட்ரோன்களையும் உருவாக்கி வருகிறது

    தைவானை மீண்டும் தன்வசப்படுத்தி ஆதிக்கம் செலுத்தத் துடிக்கும் சீனா, ராணுவ நடவடிக்கை எடுக்கவும் தயாராகி வருகிறது. அவ்வப்போது போர் விமானங்களை அனுப்பி தைவானை பதற்றமடைய வைக்கிறது. தைவானைச் சுற்றி போர் ஒத்திகையை மேற்கொள்கிறது. சீனா போர் தொடுத்தால் எதிர்கொள்ள தயாராக உள்ளதாக தைவான் கூறி உள்ளது.

    சீனாவின் ராணுவ அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், தைவான் முதல் போர்ட்டபிள் ட்ரோனை (ஆளில்லா விமானம்) இன்று அறிமுகம் செய்து சீனாவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. ரஷியாவுக்கு எதிரான சண்டையில் உக்ரைன் வீரர்கள் பயன்படுத்தி வரும் அமெரிக்க மாடலைப் போன்று (ஸ்விட்ச்பிளேடு 300) இந்த ஆளில்லா விமானம் உள்ளது. இந்த ஆளில்லா விமானம் மூலம் எதிரிகளின் இலக்கை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்த முடியும்.

    தைவானில் தயாரிக்கப்பட்ட, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய இந்த ட்ரோன், ஒரு பையில் எடுத்துச் செல்லும் அளவுக்கு சிறியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 15 நிமிடங்கள் வரை வானத்தில் பறக்க முடியும் என தைவான் ராணுவத்தின் நேஷனல் சுங்-ஷான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் கூறியிருக்கிறது.

    தங்கள் நாட்டின் கடற்கரைக்கு அருகில் உள்ள இலக்குகளைத் தாக்குவதில் இது பயனுள்ளதாக இருக்கும் என அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன தலைவர் சி லி பின் கூறினார். மேலும், தைவான் தனது அடுத்த தலைமுறை தற்கொலை தாக்குதல் ட்ரோன்களையும் உருவாக்கி வருவதாகவும், நீண்ட தூர தாக்குதல்களில் பயன்படுத்தக்கூடிய பெரிய ட்ரோன்களும் இதில் அடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    • பொதுவாகவே சுற்றுலா செல்ல வேண்டுமென்றால் நாம் தான் பணம் செலவழிப்போம்.
    • தைவானில் சற்று வித்தியாசமாக சுற்றுலா வரும் பயணிகளுக்கு வெகுமதி வழங்கப்பட உள்ளது.

    தைவான்:

    பிரபலமான சுற்றுலாத்தலம் ஒன்று சுற்றுலாப்பயணிகளுக்கு 13 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெகுமதிகளை வழங்க உள்ளது. பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது...

    பொதுவாகவே சுற்றுலா செல்ல வேண்டுமென்றால் நாம் தான் பணம் செலவழிப்போம்... ஆனால் சற்று வித்தியாசமாக சுற்றுலா வரும் பயணிகளுக்கு வெகுமதி வழங்கப்பட உள்ளது.

    சுற்றுலாப்பயணிகளைக் கவரும் விதமாக தைவான் சுமார் 5 லட்சம் பேருக்கு பணம் அல்லது தள்ளுபடி ஊக்கத் தொகையை வழங்கத் திட்டமிட்டுள்ளது. இந்த வருடம் 60 லட்சம் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்க இலக்கு வைத்துள்ள தைவான், அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை இருமடங்காக்க முடிவு செய்துள்ளது.

    அதன்படி, 5 லட்சம் சுற்றுலாப்பயணிக்கு 13 ஆயிரத்து 600 ரூபாய் ரொக்கமும், 90 ஆயிரம் சுற்றுலா குழுக்களுக்கு 54 ஆயிரம் ரூபாயும் தைவான் அரசு வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வழக்கை விசாரித்த நீதிமன்றம் கிளியின் உரிமையாளரான ஹூவாங்கிற்கு 2 மாத சிறை தண்டனையும், 91,350 டாலர் (74 லட்சம்) அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
    • தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதாக ஹூவாங் தெரிவித்தார்.

    தைவானை சேர்ந்தவர் ஹூவாங். இவர் தனது வீட்டில் செல்லமாக கிளி ஒன்றை வளர்த்து வந்தார். அந்த கிளி 40 சென்டி மீட்டர் உயரம், 60 சென்டி மீட்டர் இறக்கையுடன் பெரிய அளவில் காணப்பட்டது.

    ஹூவாங் சம்பவத்தன்று அந்த கிளியை அப்பகுதியில் உள்ள பூங்காவிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அப்பகுதியை சேர்ந்த பிரபல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் லின் நடைபயிற்சி சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது திடீரென ஹவாங்கின் கிளியானது டாக்டர் லின் மீது பறந்து சென்று அவரது முதுகில் அமர்ந்து இறக்கையை பலமுறை அசைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர் லின் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

    இந்த சம்பவத்தில் டாக்டரின் இடுப்பு எலும்பும் முறிந்து விழுந்தது. இதனால் அவர் மருத்துவமனையில் தங்கி ஒரு வாரம் சிகிச்சை பெற்றுள்ளார். மேலும் காயம் முழுமையாக குணமடைய 3 மாதங்கள் ஆகியுள்ளது.

    இந்த சம்பவத்தால் டாக்டர் லின்னால் தொடர்ந்து 6 மாதங்கள் வேலை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

    இதனால் வருமான ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்ட டாக்டர் லின் உரிய நிவாரணம் கேட்டு தைனான் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தன்னால் தற்போது நடக்க முடிகிறது. ஆனால் அறுவை சிகிச்சை செய்யும் போது நீண்ட நேரம் நிற்க முடியவில்லை என டாக்டர் லின்னின் வழக்கறிஞர் வாதாடினார்.

    வழக்கை விசாரித்த நீதிமன்றம், கிளியின் உரிமையாளரான ஹூவாங்கிற்கு 2 மாத சிறை தண்டனையும், 91,350 டாலர் (74 லட்சம்) அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதாக ஹூவாங் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில் தைனான் மாவட்ட நீதிமன்றம் காணாத அறியதொரு வழக்கு என்று கூறப்படுகிறது.

    • ஒரு வருட கட்டாய ராணுவ சேவை 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் அமல்.
    • தைவானில் ஆண்கள் 4 மாதங்களுக்கு ராணுவத்தில் கட்டாயமாக பணியாற்ற வேண்டும்.

    தைவானை சீனா தனது நாட்டின் ஒரு பகுதி என சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.

    சமீபத்தில் தைவானை நோக்கி போர் விமானங்களை சீனா அனுப்பியதால் பதற்றம் நிலவி வருகிறது.

    இந்தநிலையில் சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் தைவான் தனது ராணுவத்தை பலப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி தைவானில் ராணுவத்தில் கட்டாய பணியாற்றும் காலம் ஒரு ஆண்டாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

    தைவானில் ஆண்கள் 4 மாதங்களுக்கு ராணுவத்தில் கட்டாயமாக பணியாற்ற வேண்டும் என்ற சட்டம் உள்ளது. தற்போது இந்த கட்டாய ராணுவ சேவை ஒரு ஆண்டாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

    ஒரு வருட கட்டாய ராணுவ சேவை 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் 2005-ம் ஆண்டுக்கு பிறகு பிறந்த ஆண்களுக்கு இது பொருந்தும் என்றும் தைவான் அதிபர் சாய் இங்வென் தெரிவித்தார்.

    • தைவானை சீனா தனது அங்கமாக கருதி ஆதிக்கம் செலுத்த நினைக்கிறது.
    • தைவானை சீனா தனது அங்கமாக கருதி ஆதிக்கம் செலுத்த நினைக்கிறது.

    தைபே

    சீனாவும், தைவானும் 1949-ம் ஆண்டு பிரிந்து விட்டன. ஆனாலும் தைவானை சீனா தனது அங்கமாக கருதி ஆதிக்கம் செலுத்த நினைக்கிறது. தைவானோ தான் ஒரு சுதந்திர நாடு என்று நினைக்கிறது.

    தைவானை அச்சுறுத்தி தன்னுடன் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று சீனா துடிக்கிறது. இதற்கான நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டும் வருகிறது. இதனால் அந்த பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

    இந்த நிலையில் தைவான் அருகே தனது போர் விமானங்களையும், குண்டு வீசும் விமானங்களையும் சீனா நேற்று முன்தினம் பறக்க விட்டுள்ளதாக தைவான் குற்றம் சாட்டுகிறது.

    இந்த வகையில் நேற்று முன்தினம் சீனாவின் 10 விமானங்கள், தைவான் ஜலசந்தியில் உள்ள இடைநிலைக்கோட்டின் அருகே (சீனாவை பிரிப்பது) பறந்ததாக தைவான் ராணுவ அமைச்சகம் சொல்கிறது. இந்த 10 விமானங்களில் 6 விமானங்கள் ஷென்யாங் ஜே-11 ரகம், 4 விமானங்கள் ஜே-16 ரகம் என தைவான் மேலும் கூறுகிறது. இதன் காரணமாக அங்கே புதிய பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது.

    தைவானுக்கு தென்மேற்கில் 4 செங்டு ஜே-10 ரக போர் விமானங்களும், ஒரு ஒய்-8 நீர்மூழ்கி எதிர்ப்பு போர் விமானமும், 3 எச்-6 குண்டு வீசும் விமானங்களும் நேற்று முன்தினம் காணப்பட்டதாகவும் தைவான் ராணுவம் கூறுகிறது.

    • 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தனர்.
    • 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி பேட்டிங் செய்தது.

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டின் முதல் சுற்றில் ஏ பிரிவில் இன்று கடைசிகட்ட லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. அதில் கீலாங் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்க தொடங்கிய முதல் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இலங்கை அணி, நெதர்லாந்துடன் மோதியது.

    இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து இலங்கை அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய பதும் நிசாங்கா 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டானார்.

    மற்றொரு தொடக்க வீரரான குசல் மெண்டிஸ் அதிரடியாக விளையாடி 44 பந்துகளில் 79 ரன்கள் (5 சிக்சர்கள், 5 பவண்டரிகள்) எடுத்து ஆட்டமிழந்தார்.

    தனஞ்செயா டி சில்வா ரன் எதுவும் எடுக்கவில்லை. தொடர்ந்து களமிறங்கிய சரித் அசலங்கா 31 ரன்களும் பனுகா ராஜபக்ச 19 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி பேட்டிங் செய்தது.

    இந்நிலையில், நெதர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி நெதர்லாந்தை வீழ்த்தி வெற்றிப்பெற்றது.

    • 7-வது ஓவரில் முதல் விக்கெட்டை பறிகொடுத்த அந்த அணிக்கு காஷிஃப் தாவூத், விர்தியா அரவிந்த் சற்று ஆறுதல் அளித்தது.
    • ஐக்கிய அரபு அமீரக அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நெதர்லாந்து அணி திரில் வெற்றி பெற்றது.

    8-வது டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கியது. தகுதிச் சுற்றுப்போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின.

    இதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய முஹம்மது வசீம், சிராக் சுரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வசீம் அதிகபட்சமான 41 ரன்களையும், சுரி 12 ரன்களையும் குவித்தார்.

    7-வது ஓவரில் முதல் விக்கெட்டை பறிகொடுத்த அந்த அணிக்கு காஷிஃப் தாவூத், விர்தியா அரவிந்த் சற்று ஆறுதல் அளித்தது.

    குறிப்பாக 18-வது ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்களை சேர்ந்திருந்த ஐக்கிய அரபு அமீரகம், 19-வது ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை மட்டுமே சேர்ந்ததது.

    இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்களை மட்டுமே சேர்த்தது. நெதர்லாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக பாஸ் தி லீடே 3 விக்கெட்டுகளையும், ஃபிரட் க்ளாஸன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    இதைதொடர்ந்து 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர் விக்ரம்ஜித் சிங் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அவரை தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் மேக்ஸ் 23 ரன்களில் ஆட்டமிழக்க நெதர்லாந்து அணி 41 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்தது. பின்னர் களமிறங்கிய நெதர்லாந்து வீரர்கள் பாஸ் தி லீடே (14 ரன்கள்) கோலின் அக்கர்மன் (17 ரன்கள்) டாம் கூப்பர் (8 ரன்கள்) அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர்.

    இதனால் அந்த அணி 13.3 ஓவர்களில் 76 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறியது. பின்னர் கேப்டன் எட்வர்ட்ஸ்- டிம் பிரிங்கிள் இணைந்து அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு செல்ல, பிரிங்கிள் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அப்போது நெதர்லாந்து அணியின் வெற்றிக்கு 9 பந்துகளுக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. பின்னர் வான் பீக் களமிறங்கினார். அனல் பறந்த போட்டியின் இறுதி ஓவரில் நெதர்லாந்து அணியின் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட 1 பந்து மீதம் இருக்கையில் நெதர்லாந்து அணி 112 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

    இதன் மூலம் ஐக்கிய அரபு அமீரக அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நெதர்லாந்து அணி திரில் வெற்றி பெற்றது. நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 16 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    • 20 ஓவர்கள் முடிவில் ஐக்கிய அரபு அமீரகம் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் எடுத்தது.
    • 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.

    16 அணிகள் பங்கேற்கும் 8-வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கி நவம்பர் 13-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    16 அணிகளில் 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறின. மீதமுள்ள 4 அணிகளை தேர்வு செய்யும் விதமாக முதல் சுற்று ஆட்டங்களில் 8 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன.

    டி20 உலக கோப்பையின் முதல் சுற்றின் முதலாவது ஆட்டத்தில் இலங்கை மற்றும் நமிபியா அணிகள் மோதின. இந்த போட்டியில் நமிபியா அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது.

    இந்த நிலையில் பிற்பகலில் தொடங்கிய முதல் சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம்-நெதர்லாந்து அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இதையடுத்து ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் தொடக்க வீரராக களமிறங்கிய சிராக் சுரி 12 ரன்களில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான முகமது வாசீம் அதிரடியாக விளையாடி 41 ரன்கள் (2 சிக்சர்கள் 1 பவுண்டரி) எடுத்து அவுட்டானார்.

    அடுத்ததாக களமிறங்கிய காசிப் தாவுத் 15 ரன்களும் விரித்யா அரவிந்த் 18 ரன்களும் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஐக்கிய அரபு அமீரகம் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.

    • தைவானின் தென்கிழக்கு கடற்கரையில் இன்று பிற்பகல் 2.44 மணிக்கு 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • புஜியன், குவாங்டாங், ஜியாங்சு மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் நில அதிர்வுகள் தெளிவாக உணரப்பட்டது.

    தைவானின் கிழக்கு கடற்கரையில் இன்று உள்ளூர் நேரப்படி இரவு 9.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலோர நகரமான டைட்டங்கிற்கு வடக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6. அலகாக பதிவாகியிருந்தது.

    நிலநடுக்கத்தால் கடலோர பகுதிகளில் உள்ள கட்டுமானங்கள் கடுமையாக குலுங்கின. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட காயமோ பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதாகவோ தகவல் வெளியாகவில்லை.

    இந்நிலையில், தைவானின் தென்கிழக்கு கடற்கரையில் இன்று பிற்பகல் 2.44 மணிக்கு 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தைடுங் நகருக்கு வடக்கே 50 கி.மீ தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது.

    இதன் எதிரொலியால் தைவான் அருகே உள்ள தொலைதூர தீவுகளுக்கு ஜப்பான் வானிலை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இன்று மாலை 4 மணியளவில் ஒரு மீட்டர் உயர அலைகள் எழும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலநடுக்கம், புஜியன், குவாங்டாங், ஜியாங்சு மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் நில அதிர்வுகள் தெளிவாக உணரப்பட்டதாக சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் தெரிவித்துள்ளது.

    ×