search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளகோவில்"

    • விநாயகருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
    • அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் வளாக விநாயகர் கோவில், எல். கே. சி. நகர் புற்றுக்கண்ஆனந்த விநாயகர் கோவில்,திருவள்ளுவர் நகர் விநாயகர் கோவில், சக்தி நகர் விநாயகர் கோவில், குமாரவலசு விநாயகர் கோவில்களில் நேற்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அலங்காரம், தேன், பன்னீர், பஞ்சாமிரம், கனி, விபூதி, மஞ்சள், சந்தனம்,பூ அபிஷேகம்,தீபாராதனை நடைபெற்றது.

    அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அந்த பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • 110 விவசாயிகள் 50 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • முருங்கை ரூ.5 முதல் 12 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையையொட்டி ஞாயிறு தோறும் முரு ங்கைக்காய் கொள் முதல் நிலையம் செயல் பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்மு தல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கை க்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.நேற்று 110 விவசாயிகள் 50 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளை சேர்ந்த வியா பாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ செடி முருங்கை ரூ.10க்கும், மரம் முருங்கை ரூ.5முதல் 7வரைக்கும், கரும்பு முருங்கை ரூ.10 முதல் 12 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    கொள்முதல் செய்த முருங்கைக்காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்ட ன்சத்திரம், பெங்களூர், மைசூர், சட்டீஸ்கர், மும்பை,நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்பூர் ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்க்கெ ட்டுகளுக்கு அனுப்பி வைத்த னர்,இத்தகவலை முருங்கை க்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.

    • முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
    • ஒரு கிலோ முருங்கை ரூ.10 முதல் 35 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்,

    நேற்று 95 விவசாயிகள் 50 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளை சேர்ந்த வியா பாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.12க்கும், மரம் முருங்கை ரூ.10முதல் 35வரைக்கும், கரும்பு முருங்கை ரூ.20 முதல் 25 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.கொள்முதல் செய்த முருங்கை காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், மைசூர், சட்டீஸ்கர், மும்பை, நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்பூர் ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    • 51 ஆயிரத்து 413கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.51.39க்கும், குறைந்தபட்சம் ரூ.42.19க்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வார ம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பும், வியாழனன்று சூரியகாந்தி விதையும் ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்து விற்று செல்கிறார்கள். நேற்று வியாழக்கிழமை 61 விவசாயிகள் கலந்து கொண்டு 51 ஆயிரத்து 413கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர், இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த 11வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.51.39க்கும், குறைந்தபட்சம் ரூ.42.19க்கும் கொள்முதல் செய்தனர்.

    நேற்று மொத்தம் ரூ.24லட்சத்து 58ஆயிரத்து 480க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை க்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்து ள்ளார்.

    • 90 விவசாயிகள் 30 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • முருங்கை ரூ.30 முதல் ரூ.55 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையொட்டி மாதத்தில் ஞாயிறு தோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ள கோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து செல்கின்றனர். நேற்று 90 விவசாயிகள் 30 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.40க்கும், மரமுருங்கை ரூ.30முதல் 35வரைக்கும், கரும்பு முருங்கை ரூ.50 முதல் 55 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    வியாபாரிகள் முருங்கைகாய்களை சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், மைசூர், சட்டீஸ்கர், மும்பை,நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்பூர் ஆகிய பகுதியில் உள்ள மார்கெட் மற்றும் ஓட்டல் மற்றும் மார்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    • 1,313 மூட்டை சூரியகாந்தி விதைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா்.
    • சூரியகாந்தி விதை கிலோ ரூ.45.49 முதல் ரூ.52.29 வரை விற்பனையானது.

    வெள்ளகோவில் :

    வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.32.53 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு செங்காட்டூா், சீத்தப்பட்டி, அக்கரைப்பட்டி, காசிபாளையம், கன்னிவாடி உள்ளிட்ட ஊா்களில் இருந்து 67 விவசாயிகள் தங்களுடைய 1,313 மூட்டை சூரியகாந்தி விதைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 64,892 கிலோ.காரமடை, ஈரோடு, கோபி, சித்தோடு, காங்கயத்தில் இருந்து 8 வணிகா்கள் சூரியகாந்தி விதைகளை வாங்க வந்திருந்தனா்.சூரியகாந்தி விதை கிலோ ரூ.45.49 முதல் ரூ.52.29 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.48.66.

    ஒட்டுமொத்த விற்பனை தொகை ரூ.32.53 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.

    வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.27 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 598 விவசாயிகள் தங்களுடைய 5,675 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். மொத்த வரத்து 1,778 குவிண்டால்.

    திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சோ்ந்த 23 வணிகா்கள் பருத்தியை வாங்க வந்திருந்தனா். பருத்தி விலை குவிண்டால் ரூ.6,250 முதல் ரூ.8,089 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.7,350. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1.27 கோடி என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.ஏலத்துக்கான ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக்குழு முதுநிலைச் செயலாளா் (பொறுப்பு) கண்ணன், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

    • வீட்டின் விட்டத்தில் வேட்டியில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
    • வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (58) இவர் மளிகை கடைகளுக்கு மசாலா பொருட்கள் சப்பளை செய்யும் வேலை செய்து கொண்டிருந்தார். இவருக்கு மகாலட்சுமி (57) என்ற மனைவியும் அபிநயா என்ற மகளும் உள்ளனர்.

    சம்பவத்தன்று ரவிச்சந்திரனின் மனைவி மகாலட்சுமி கடைக்கு காய்கறி வாங்க சென்று இருந்தார். மகள் வேலைக்கு சென்று விட்டிருந்தார். ரவிச்சந்திரன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மகாலட்சுமி கடைக்கு சென்று திரும்பி வந்து வீட்டுக்குள் பார்த்தபோது ரவிச்சந்திரன் வீட்டின் விட்டத்தில் வேட்டியில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

    உடனே அருகில் இருந்தவர்கள் உதவியுடன் ரவிச்சந்தி ரனை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவம னைக்கு கூட்டி சென்று பார்த்த போது வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து வெள்ளகோ வில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜமூர்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பள்ளியில் 650 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
    • சிசிடிவி கேமராவை சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர்.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் வெள்ளகோவிலில் திருச்சி- கோயம்புத்தூர் சாலையில் அரசு அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 650 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    இன்று சனிக்கிழமை காலை சிறப்பு வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. பள்ளியின் தலைமை ஆசிரியர் குணசேகரன் அவரது அறைக்கு வந்துள்ளார். அப்போது கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் சேதமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தலைமை ஆசிரியர் அறைக்கு அருகில் உள்ள ஆசிரியர்கள் அறையின் கதவை உடைத்து உள்ளே வந்த மர்மநபர்கள் தலைமையாசிரியர் அறையில் இருந்த கம்ப்யூட்டர் மானிட்டர், மோடம் ஆகியவற்றை சேதப்படுத்தி உள்ளனர்.

    சி.சி.டி.வி. கேமராவின் கட்டுப்பாட்டு கருவி மற்றும் தலைமை ஆசிரியர் மேஜையில் இருந்த ட்ராவை உடைத்து அதிலிருந்த அனைத்து அறைகளின் சாவியையும் மர்மநபர்கள் எடுத்து சென்றுள்ளனர். பள்ளி வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி. கேமராவையும் சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர்.

    இதுகுறித்து வெள்ளகோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவு பள்ளிக்கு வந்த மர்மநபர்கள் கொள்ளையடிக்கும் முயற்சியில் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • கோயம்புத்தூரில் இருந்து 12 பேர் கொண்ட குழுவினர் வேளாங்கண்ணி செல்வதற்காக ஒரு வேனில் புறப்பட்டு சென்றனர்.
    • லாரியும் சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.

    வெள்ளகோவில் :

    கோயம்புத்தூரில் இருந்து 12 பேர் கொண்ட குழுவினர் வேளாங்கண்ணி செல்வதற்காக ஒரு வேனில் புறப்பட்டு சென்றனர். காங்கேயம் அடுத்து கொழிஞ்சி காட்டு வலசு பிரிவு என்ற இடத்தில் வேன் சென்று கொண்டிருந்தபோது எதிரில் திருச்சியில் இருந்து கோயம்புத்தூரை நோக்கி வந்த லாரியும் சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் வேனை ஓட்டி வந்த பிரதாப் (வயது 22) மற்றும் வேனில் பயணம் செய்த செரில் (14) ,மேரி (70), ஷருண்(14),மேஜோ (59), கில்சர் (49) ஆகியோர் காயமடைந்தனர்.

    உடனே அந்த வழியாக வந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

    • திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்களம் என்.ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
    • ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் நேற்று மாலை வெள்ளகோவில் நகர பாஜக. நகர தலைவர் அருண்குமார் தலைமையில் பால் விலை, மின்சார கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர், இதில் திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்களம் என்.ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர்தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஜெகன் குமார், மாவட்ட நெசவாளர் பிரிவு தலைவர் சௌந்தரராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் குணமூர்த்தி, திருப்பூர் தெற்கு மாவட்ட மகளிர் அணி துணை தலைவர் சித்ரா, நகர பொருளாளர் ரத்தினசாமி, நகர பொதுச்செயலாளர்கள் நல்லசாமி, செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். வெள்ளகோவில் தெற்கு ஒன்றியத்தின் சார்பில் நேற்று காலை புதுப்பையில் தெற்கு ஒன்றிய தலைவர் கே.ராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.இதில் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • செவ்வாய்கிழமை 137விவசாயிகள் கலந்து கொண்டு 71ஆயிரத்து 142கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 89.30க்கும், குறைந்தபட்சம் ரூ.66.90 க்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும்.

    இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். நேற்று செவ்வாய்கிழமை 137விவசாயிகள் கலந்து கொண்டு 71ஆயிரத்து 142கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த 14வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 89.30க்கும், குறைந்தபட்சம் ரூ.66.90 க்கும் கொள்முதல் செய்தனர்.நேற்று மொத்தம் ரூ.56லட்சத்து 2ஆயிரத்து 376க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

    • செவ்வாயன்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்று வருகிறது.
    • 140விவசாயிகள் கலந்து கொண்டு 64ஆயிரத்து 846கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வா யன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெற்று வருகிறது.

    இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். நேற்று செவ்வாய்கிழமை 140விவசாயிகள் கலந்து கொண்டு 64ஆயிரத்து 846கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில், வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த 19 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 86.40க்கும், குறைந்தபட்சம் ரூ.60.80க்கும் கொள்முதல் செய்தனர், நேற்று மொத்த ரூ.49லட்சத்து 11ஆயிரத்து 593க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

    ×