என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வெள்ளகோவிலில் அரசு பள்ளியை சூறையாடிய கும்பல் - பரபரப்பு
  X

  சேதப்படுத்தப்பட்ட பொருட்களை படத்தில் காணலாம்.  

  வெள்ளகோவிலில் அரசு பள்ளியை சூறையாடிய கும்பல் - பரபரப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பள்ளியில் 650 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
  • சிசிடிவி கேமராவை சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர்.

  வெள்ளகோவில் :

  திருப்பூர் வெள்ளகோவிலில் திருச்சி- கோயம்புத்தூர் சாலையில் அரசு அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 650 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

  இன்று சனிக்கிழமை காலை சிறப்பு வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. பள்ளியின் தலைமை ஆசிரியர் குணசேகரன் அவரது அறைக்கு வந்துள்ளார். அப்போது கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் சேதமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தலைமை ஆசிரியர் அறைக்கு அருகில் உள்ள ஆசிரியர்கள் அறையின் கதவை உடைத்து உள்ளே வந்த மர்மநபர்கள் தலைமையாசிரியர் அறையில் இருந்த கம்ப்யூட்டர் மானிட்டர், மோடம் ஆகியவற்றை சேதப்படுத்தி உள்ளனர்.

  சி.சி.டி.வி. கேமராவின் கட்டுப்பாட்டு கருவி மற்றும் தலைமை ஆசிரியர் மேஜையில் இருந்த ட்ராவை உடைத்து அதிலிருந்த அனைத்து அறைகளின் சாவியையும் மர்மநபர்கள் எடுத்து சென்றுள்ளனர். பள்ளி வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி. கேமராவையும் சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர்.

  இதுகுறித்து வெள்ளகோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவு பள்ளிக்கு வந்த மர்மநபர்கள் கொள்ளையடிக்கும் முயற்சியில் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

  Next Story
  ×