search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீட்டில்"

    • காலிங்கராயன்பாளையம் பாரதிநகரை சேர்ந்தவர் முத்தம்மாள். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.
    • வீட்டு பீரோ திறக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த முத்தம்மாள் பீரோவை பார்த்தபோது அதில் இருந்த நகை-பணம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பவானி:

    ஈரோடு காலிங்கராயன்பாளையம் பாரதிநகரை சேர்ந்தவர் முத்தம்மாள் (82). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்த ன்று காலை ஓட்டலில் சாப்பாடு வாங்கி கொண்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் பின்னால் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்து கீழே 100 ரூபாய் நோட்டுகள் விழுந்து விட்டதாக கூறி முத்தம்மாளிடம் கொடுத்துள்ளார்.

    பின்னர் அந்த பெண் முத்தம்மாளிடம் நான் உங்களுடன் வீட்டுக்கு வந்து உதவி செய்கிறேன் என்று கூறி வந்துள்ளார். பின்னர் வீட்டு வேலைகளை செய்வது போல் அந்த பெண் பாசாங்கு செய்தார். இதனையடுத்து நைசாக வீட்டு பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகை, ரூ .60 ஆயிரம் ரொக்க பணத்தையும் திருடி சென்று விட்டார்.

    வீட்டு பீரோ திறக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த முத்தம்மாள் பீரோவை பார்த்தபோது அதில் இருந்த நகை-பணம் திருடு போயிருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில் வீட்டில் வேலைக்கு இருந்த பெண் மாயமானதும் தெரிய வந்தது.

    இதுகுறித்து முத்தம்மாள் சித்தோடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணை தேடி வருகின்றனர். இந்த நூதன திருட்டு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கொல்லம்பாளையம் பார்வதி கிருஷ்ணா வீதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வியை கைது செய்தனர்.

    ஈரோடு, ஆக. 9-

    ஈரோடு மதுவிலக்கு டி.எஸ்.பி. பவித்ரா உத்தர வின் பேரில் இன்ஸ்பெக்டர் கவிதா லட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் மோகன சுந்தரம், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், செந்தில் மற்றும் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது கொல்லம்பாளையம் பார்வதி கிருஷ்ணா வீதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் போலீசார் கொல்லம்பாளையம் பார்வதி கிருஷ்ணா வீதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர்.

    அப்போது வீட்டினுள் ஒரு பெண் இருந்தார். அவர் அருகே ஒரு பெரிய பை இருந்தது. சந்தேகத்தின் பேரில் அந்த பையை திறந்து பார்த்தபோது அதில் 100-க்கும் மேற்பட்ட கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. மொத்தம் 3.50 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதியை சேர்ந்த செல்வி (48) என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து மதுவிலக்கு போலீசார் அந்த பெண் மற்றும் கஞ்சா பொட்டலங்களை எடுத்துக் கொண்டு சூரம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வியை கைது செய்தனர். மேலும் கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • மொடக்குறிச்சி அருகே வீட்டில் இருந்த பிளஸ்-1 மாணவி மாயமானார்.
    • இதையடுத்து காணாமல் போன மகளை கண்டு பிடித்து தருமாறு தந்தை மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளி கஸ்தூரிபாய் காலனியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (49). இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு கவுசிகா (16), ஹர்சிதா என்ற 2 மகள்கள் உள்ளனர்.

    இவரது மகள் கவுசிகா மொடக்குறிச்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று பாலகிருஷ்ணன் தனது 2 மகள்களையும் வீட்டில் விட்டுவிட்டு உறவினர்கள் திருமணத்துக்காக நாமக்கல் சென்று விட்டார்.

    இந்நிலையில் ஹர்சிதா தனது அக்காள் கவுசிகா வீட்டில் இல்லாததால் தேடி பார்த்து உள்ளார். இதையடுத்து இரவு 7 மணிக்கு ஹர்சிதா தனது பெற்றோருக்கு போன் செய்து கவுசிகாவை காணவில்லை என்று கூறி உள்ளார்.

    இதையடுத்து பாலகிருஷ்ணன் அக்கம்பக்கம் கவுசிகாவை தேடி பார்த்தும் விசாரித்தும் கிடைக்காததால் தனது மகளை கண்டு பிடித்து தருமாறு மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவி கவுசிகாவை தேடி வருகின்றனர்.

    • கவுந்தப்பாடி அருகே வீட்டில் புகுந்த 7 அடி நீள சாரைப்பாம்பு பிடிப்பட்டது.
    • தீயணைப்பு வீரர்கள் சாரைப்பாம்பை லாவகமாக பிடித்து பையில் எடுத்து சென்றனர்.

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி அருகே ஓடத்துறை பாலாஜி நகரை சேர்ந்தவர் செல்வி (40). இவர் மகள் மகாஸ்ரீ, மருமகன் விக்னேஷ் ஆகியோருடன் அதே பகுதியில் குடியிருந்து வருகிறார்கள்.

    இந்நிலையில் இன்று காலை விக்னேஷ், செல்வி ஆகியோர் வேலைக்கு சென்று விட்டானர். மகா ஸ்ரீ மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்பொழுது கட்டிலுக்கு அடியில் சத்தம் கேட்டுள்ளது. அப்போது மகா ஸ்ரீ கட்டிலுக்கு கீழ் பார்க்கும்போது நீளமான பாம்பு இருப்பது தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து மகாஸ்ரீ அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து கோபி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலை அலுவலர் முருகேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் திருமலைசாமி, கோபாலகிருஷ்ணன், பிரேம்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    பின்னர் வீட்டின் கதவை திறந்து பார்க்கும்போது கட்டிலின் அடியில் 7 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு இருந்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் சாரைப்பாம்பை லாவகமாக பிடித்து பையில் எடுத்து சென்றனர்.

    ×