search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடுமுறை"

    • பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
    • மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

    புதுக்கோட்டை

     புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை, கறம்பக்குடி ஆகிய பகுதிகளில் செயல்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று பள்ளி முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவித்துள்ளனர்.

    பெரம்பலூர், கரூர், திருச்சி ஆகிய பகுதிகளில் இன்று காலை முதல் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

    காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வங்கக்கடலில் பலத்த காற்று வீசும். இதனால் புதுக்கோட்டை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் அரியலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது
    • அரியலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கன மழை பெய்தது

    திருச்சி,

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 21-ந் தேதி தொடங்கியது. இருப்பினும் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே வளிமண்டல மேலடுக்கு மற்றும் கீழடுக்கு சுழற்சிகளால் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை பரவலாக பெய்து வருகிறது.

    தற்போது பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (செவ்வாய் கிழமை) உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் ெ தற்கு அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இந்த சுற்சி காரணமாக தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) உருவாக வாய்ப்பு உள்ளது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து மத்தய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வருகிறது.

    இதன் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அரியலூர் மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    • தொடர் விடுமுறையால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை புரிவார்கள்.
    • கனமழை காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து காணப்படுகிறது.

    நாகப்பட்டினம்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாள் தொடர் விடுமுறையால் சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும்.

    ஆனால் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையால் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் வருகை புரிவார்கள்.

    இந்த ஆண்டு நாகப்பட்டி னத்தில் நிலவும் தொடர் கனமழை காரணமாக நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து காணப்படுகிறது.

    குறிப்பாக வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெறும் திருப்பலி, வேளாங்கண்ணி கடற்கரை, முடி காணிக்கை செலுத்தும் இடம்,கடைவீதி மெழுகுவர்த்தி கடைகள், பூக்கடைகள் உள்ளிட்ட இடங்களில் குறைவான கூட்டமே காணப்படுகிறது.

    எப்பொழுதும் அதிக கூட்டத்துடன் பரபரப்பாக காணப்படும் வேளாங்கண்ணி பேராலயம் கலை இழந்து காணப்படுகிறது. கடற்கரையில் அதிக கூட்டம் இல்லாததால் சிரமம் இல்லாமல் குடும்பத்துடன் நீராட முடிந்ததாகவும் தெரிவித்தனர்.

    மேலும் தீபா வளிக்கு அதிக வியாபாரம் நடக்கும் என எதிர்பார்த்த வியாபாரி களுக்கு உரிய விற்பனை இன்றி ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

    • சுற்றுலா தலங்கள் களை கட்டியது
    • கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    கன்னியாகுமரி :

    தீபாவளி பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை காரணமாக இன்று காலை முதல் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக கேரளா மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

    இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியிலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர்.

    கடந்த 3 நாட்களாக மழைமேகம் காரணமாக தெரியாமல் இருந்த சூரியன் உதயமாகும் காட்சி 3 நாட்களுக்கு பிறகு இன்று அதிகாலை சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் சூரியன் உதயமான காட்சியை பார்த்து ரசித்தனர்.

    அதேபோல கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர். வழக்கம்போல் இன்று காலை 8 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்துநின்று படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு விட்டு திரும்பினர்.

    133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் மண்டபத்துக்கும் இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடக்கவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை பார்வையிட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதனால் திருவள்ளுவர் சிலையை படகில் பயணம் செய்யும் போதும் கடற்கரையில் நின்ற படியும் சுற்றுலா பயணிகள் தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்துச்செல்கின்றனர்.

    மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா, மருந்துவாழ் மலை, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தளங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. வட்டக்கோட்டைக்கும் உல்லாச படகு சவாரி இயக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகை "திடீர்"என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • பண்டிகை மற்றும் முக்கிய விழாக்கள் நடைபெறும் நாட்களில் அதிக அளவு காய்கறிகள் விற்பனையாகும்.
    • சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்களும் ஒட்டன்சத்திரம் மார்க்கெட் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் இருந்து தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களு க்கும், கேரளா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் அதிக அளவில் காய்கறிகள் கொண்டு செல்லப்படுகிறது.

    தினசரி ரூ.1 கோடி வரை வர்த்தகம் நடைபெறும் நிலையில் பண்டிகை மற்றும் முக்கிய விழாக்கள் நடைபெறும் நாட்களில் அதிக அளவு காய்கறிகள் விற்பனையாகும். வழக்கமாக சனிக்கிழமை மார்க்கெட்டுக்கு விடுமுறை விடப்படும்.

    தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால் சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்களும் சந்தை செயல்படாது என்றும் விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வர வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
    • இது குறித்து திருநாவலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வண்டிப்பாளையம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த அஜித்குமார் (வயது 28). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்த இவர் இன்று காலை 7.30 மணியளவில் ரோட்டின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். வண்டிப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்ருந்தபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அஜித் குமார் மீது மோதியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி ஆனார். இது குறித்து திருநாவலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் அசோகன், சப் - இன்ஸ்பெக்டர் ராம தாஸ் தனிபிரிவு போலீஸ் காரர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாகனம் மோதி பலியான அஜித்குமார் உடலை மீட்டு முண்டியம் பாக்கம் அரசு மருத்து வக்கல் லூரி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காலை 8 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.
    • சுற்றுலா பயணிகள் வருகை “திடீர்”என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

    கன்னியாகுமரி :

    வாரத்தின் கடைசி விடுமுறை நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிக ரித்துள்ளது. குறிப்பாக கேரளா மற்றும் வட மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

    இன்று அதிகாலை கன்னி யாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை காண முக்கடலும் சங்க மிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியிலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதி யிலும் சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர்.

    கடந்த 3 நாட்களாக மழைமேகம் காரணமாக தெரியாமல் இருந்த சூரியன் உதயமாகும் காட்சி இன்று அதிகாலை சூரியன் உதய மான காட்சி தெளிவாக தெரிந்தது. இதனால் சுற்று லா பயணி கள் சூரியன் உதய மான காட்சியை பார்த்து ரசித்தனர். அதே போல கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர். வழக்கம்போல் இன்று காலை 8 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அதன்பிறகு சுற்றுலா பயணி கள் நீண்ட வரிசையில் காத்துநின்று படகில் பயணம் செய்து விவேகா னந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு விட்டு திரும்பினர்.

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் மண்டபத்துக்கும் இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணி நடை பெற்று வருவதால் திருவள் ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடக்க வில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை பார்வையிட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதனால் திருவள்ளுவர் சிலையை படகில் பயணம் செய்யும்போதும் கடற்கரை யில் நின்ற படியும் சுற்றுலா பயணிகள் தங்களது செல் போன்களில் புகைப்படம் எடுத்துச்செல்கின்றனர்.

    மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில், கொட்டா ரம் ராமர் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில் ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமரா ஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தளங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    வட்டகோட்டைக்கும் உல்லாச படகு சவாரி இயக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகை "திடீர்"என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் விடிய விடிய மழை பெய்தது.
    • பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    இலங்கை மற்றும் அதை யொட்டி உள்ள குமரி கடல் பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழக முழுவதும் கடந்த 2 நாட் களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக தென் தமிழக கடலோர மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வரு கிறது ராமநாதபுரம் மாவட் டத்தில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ராமநாத புரம் நகர் பகுதியில் மாலை யில் சாரலுடன் தொடங்கிய மழை விடிய விடிய இன்று காலை வரை பெய்தது.

    ராமநாதபுரம், ராமேசு வரம் மண்டபம், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், பசும் பொன் உள்ளிட்ட பகுதிகளி லும் பரவலாக மழை பெய் தது. இதன் காரணமாக முக்கிய சாலைகளில் தண் ணீர் குளம் போல் தேங்கியது. சில இடங்களில் மின்தடை யும் ஏற்பட்டது.

    ராமநாதபுரம் மாவட் டத்தில் இன்று காலையும் மழை நீடித்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தர விட்டுள்ளார்.

    இன்று காலை வரை மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் பின்வருமாறு:-

    கடலாடி 41.60, வாலி நோக்கம் 8, பள்ள மோர் க் குளம் 13, முதுகுளத்தூர் 6, பரமக்குடி 6.60, ஆர்.எஸ் மங்கலம் 9, மண்டபம் 16. 20, ராமநாதபுரம் 33.80, தீர்த்தாண்ட தானம் 15.20, திருவாடானை 6.20, வட்டா ணம் 12.60 மாவட்டத்தில் பெய்த மொத்த மழையின் அளவு 177.60 மில்லி மீட்டர் ஆகும்.

    • மருது பாண்டியர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டுள்ளார்.
    • நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நாளை (27-ந்தேதி, வெள்ளிக்கிழமை) மாமன்னர் மருது பாண்டியர் களின் 222-வது நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சட்டம், ஒழுங்கை பராமரிக்கும் வகை யில் நாளை 27-ந்தேதி சிவகங்கை மாவட்டத்தில் சிவ கங்கை, திருப்புவனம், இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை, தேவகோட்டை ஆகிய ஒன்றியங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படு கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • சிகிச்சைக்கு வருவோர் வராண்டா மற்றும் நடை பாதையில் தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    • நோயாளிகள் நடைபாதையில் படுக்க வைத்திருக்கும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

    புதுச்சேரி:

    வார விடுமுறை நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.

    அதிலும் தொடர் விடுமுறை நாட்களில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வருகின்றனர்.

    அதிலும் மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு விட அரசு அனுமதி அளித்துள்ளதால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வாடகை மோட்டார் சைக்கிளில் வலம் வருகின்றனர். இதனால் புதுவை நகர பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    நெரிசலில் சிக்கும் வாகனங்களால் வார விடுமுறை நாட்களில் அதிக விபத்து ஏற்படுகிறது. இதனால் விடுமுறை நாட்களில் அரசு ஆஸ்பத்திரிக்கு விபத்தில் சிக்கி சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.

    கடந்த 2 நாட்களாக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் விபத்து சிகிச்சை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. அவசர சிகிக்சை பிரிவில் 25 படுக்கைகள் மட்டுமே உள்ளதால் கூடுதலாக சிகிச்சைக்கு வருவோர் வராண்டா மற்றும் நடை பாதையில் தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இது பற்றி சுகாதாரதுறை அதிகாரிகளிடம் கேட்ட போது, விடுமுறை நாட்களில் புதுவைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகளும் மற்றும் உள்ளூர் மக்களும் அதிக அளவு கொண்டாட்டத்தில் போதையுடன் வாகனங்கள் ஓட்டி விபத்து ஏற்படுகிறது.

    இதில் பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரிக்கு வருபவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்படுவார்கள். இரவு மட்டுமே தங்க வேண்டிய சூழ்நிலை உள்ளவர்கள் அவசர சிகிச்சை பிரிவு வராண்டாவில் தான் தங்க வைக்கப்படுகிறார்கள்.

    இதில் பெரும்பாலானோர் மறுநாள் காலையில் சென்று விடுவார்கள். இது ஒவ்வொரு வாரமும் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் அரசு ஆஸ்பத்திரியில் நடைபெறுகிறது

    ஆனாலும் விடுமுறை நாட்களில் டாக்டர்கள் சிகிச்சை அளிக்க தயாராக இருப்பார்கள் என தெரிவித்தனர். இருப்பினும் நோயாளிகள் நடைபாதையில் படுக்க வைத்திருக்கும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

    • வெளிமாநில சுற்றுலா பயணிகள் வாகனங்களில் நகரின் பல்வேறு இடங்களில் வலம் வந்தன.
    • போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

    புதுச்சேரி:

    சுற்றுலா தலமான புதுவைக்கு வார இறுதிநாட்கள் மற்றும் தொடர் விடுமுறைநாட்களில் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். இந்நிலையில் சனி, ஞாயிறு, திங்கட்கிழமை (ஆயுதபூஜை), செவ்வாய்க்கிழமை (விஜயதசமி) என தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இதனால் வெளிமாநிலங்களில் இருந்து புதுவைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்துள்ளனர். குறிப்பாக சென்னை- பெங்களூரில் ஏராளமான உள்ள சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.

    இதனால் புதுவையில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. மேலும் ரெஸ்டோ பார், மதுபார்களில் மதுப்பிரியர்கள் கூட்டம் களைகட்டுகிறது.

    சுற்றுலா பயணிகள் வருகையால் புதுவை கடற்கரை, பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, படகு குழாம், மணக்குள விநாயகர், அரவிந்தர் ஆசிரமம் உள்ளிட்டபல்வேறு இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியதை காண முடிந்தது.

    வெளிமாநில சுற்றுலா பயணிகள் வாகனங்களில் நகரின் பல்வேறு இடங்களில் வலம் வந்தன. இதனால் புதுவை அண்ணா சாலை, காமராஜ் சாலை, புஸ்சி வீதி, கடற்கரைசாலை, ஆம்பூர் சாலை, செஞ்சி சாலை, ஓயிட் டவுன் பகுதி, நேரு வீதி, காந்தி வீதி உள்ளிட்ட பிரதான சாலைகளில், முக்கிய சந்திப்புகளில் நேற்று மாலை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

    புதுச்சேரிக்கு பெரும்பாலும் தமிழக அரசு பஸ்கள் தான் இயக்கப்படுகிறது. இந்தநிலையில் புதுச்சேரிக்கு வரும் தமிழக அரசு பஸ்கள் புதுவை புதிய பஸ் நிலையத்திற்குள் வருவதில்லை என பயணிகள் தரப்பில் புகார் தெரிவித்தனர். இதன் காரணமாக தமிழக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நேற்று மறைமலையடிகள் சாலையில் திடீர் ஆய்வு நடத்தினார்கள். அப்போது புதுவை பஸ் நிலையத்திற்குள் வராமல் சென்ற பஸ்களை மறித்து டிரைவர், கண்டக்டர்களை எச்சரித்தனர். 

    • தொடர் விடுமுறை என்பதால் பலரும் வெளியூர் செல்வர் என்பதால் பயணிகள் வசதிக்காக திருப்பூர் மண்டலத்தில் இருந்து 145 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், சிறப்பு பஸ்களில் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படும்.

    திருப்பூர்,அக்.21-

    தொடர் விடுமுறை என்பதால் பலரும் வெளியூர் செல்வர் என்பதால் பயணிகள் வசதிக்காக திருப்பூர் மண்டலத்தில் இருந்து 145 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    திருப்பூர் கோவில்வழி பஸ் நிலையத்தில் இருந்து, சிவகாசி, சிவகங்கை, மதுரை, தேனி, திருச்செந்தூர், திருநெல்வேலி, செங்கோட்டை, நாகர்கோவில், சங்கரன் கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு 75 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. புதிய பஸ் நிலையத்தில் இருந்து,திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணத்துக்கு 40 சிறப்பு பஸ்கள், மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சேலம், திருவண்ணாமலைக்கு 30 பஸ்கள் என மொத்தம் 145 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், சிறப்பு பஸ்களில் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படும்.

    கூட்டத்துக்கு ஏற்ப இரவில் பஸ்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றனர்.

    ×