தீபாவளி பண்டிகை: ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை விடுமுறை

பண்டிகை மற்றும் முக்கிய விழாக்கள் நடைபெறும் நாட்களில் அதிக அளவு காய்கறிகள் விற்பனையாகும். சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்களும் ஒட்டன்சத்திரம் மார்க்கெட் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் இருந்து தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களு க்கும், கேரளா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் அதிக அளவில் காய்கறிகள் கொண்டு செல்லப்படுகிறது.

தினசரி ரூ.1 கோடி வரை வர்த்தகம் நடைபெறும் நிலையில் பண்டிகை மற்றும் முக்கிய விழாக்கள் நடைபெறும் நாட்களில் அதிக அளவு காய்கறிகள் விற்பனையாகும். வழக்கமாக சனிக்கிழமை மார்க்கெட்டுக்கு விடுமுறை விடப்படும்.

தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால் சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்களும் சந்தை செயல்படாது என்றும் விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வர வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com