search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரி"

    • விக்கிரமராஜா குற்றச்சாட்டு
    • மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கன்னியாகுமரி:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரம ராஜா மார்த்தாண்டத்தில் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    தமிழகம் முழுவதும் 'செஸ்' வரி புதிதாக விதிக்க ப்பட்டதால் வியா பாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதை ரத்து செய்வதற்காக விரைவில் தமிழக முதல் வரை சந்திக்க உள்ளோம். வணிக வரித்துறை சார்பில் 'டெஸ்ட் பர்ச்சஸ்' என்ற பெய ரில் உணவுப் பொரு ட்கள் கொண்டு வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்து வருகின்றனர்.

    வியாபாரிகள் ஏற்கனவே வரிகளை சரியாக முறை யாக செலுத்தி வருகின்றனர் இதனால் தமிழகம் அதிக வரி வசூல் செய்யும் மாநில ங்களின் வரிசையில் முன்னி லையில் உள்ளது. பரிசோதனை செய்து 'டெஸ்ட் பர்ச்சஸ்' என்ற பெயரில் அபராதம் விதிப்பதை முழுமையாக நிறுத்த வேண்டும்.

    மார்த்தாண்டத்தைப் பொறுத்தவரை போக்கு வரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மேம்பாலம் அமைக்கப்பட்டது. தற்போது அனைத்து வாகனங்களும் மேம்பாலம் வழியாக செல்வதால் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளன. மேலும் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளது. எனவே மார்த்தாண்டம் வளர்ச்சி பாதையில் மீண்டும் கொண்டு செல்வதற்காக டவுன் பஸ், விரைவு பஸ் உட்பட அனைத்து பஸ்க ளும் மார்த்தாண்டம் மேம்பா லத்தின் கீழ்பகுதி வழியாக வந்து செல்ல வேண்டும்.

    அப்போது தான் பொது மக்களுக்கும் முழுமையாக பயன்படும். மேம்பாலத்தின் கீழ்பகுதி வருவதற்கு ஒரே ஒரு இடத்தில் அதாவது பம்மத்தில் மட்டுமே குறுகலான ரோடு உள்ளது.

    அந்தப் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள கட்டிடத்தை மாற்ற வேண்டும். அப்பொழுது அனைத்து வாகனங்களும் கீழ் பகுதி வழியாக வந்து செல்ல வாய்ப்பு உள்ளது. இதற்கு மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மார்த்தாண்டம் தொழில் வர்த்தக சங்கத் தலைவர் அல் அமீன், தென்காசி மாவட்ட தலைவர் வைகுண்ட ராஜா, பொருளா ளர் கலை வாணன், திருநெல்வேலி தெற்கு மாவட்ட தலைவர் சின்னத்துரை, குழித்துறை நகராட்சி சேர்மன் பொன் ஆசைத்தம்பி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கூடுதல் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ஆய்வு நடத்தினர்.
    • திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

    திருப்பூர் :

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் பொன்னையா ஆகியோர் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ஆய்வு நடத்தினர். பின்னர் திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் முன்னிலை வகித்தார். உதவி கமிஷனர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி, அம்ரூத் திட்டம், பொது நிதி, தொகுதி வளர்ச்சி நிதி, 15வது நிதிக்குழு மானியத் திட்டப்பணிகள், வரி உள்ளிட்ட வருவாய் இனம் குறித்த நிலவரம் என அனைத்து பணிகளும் ஆய்வு செய்யப்பட்டது. குடிநீர் சப்ளை நடைமுறை குறித்தும் அவர்கள் கேட்டறிந்தனர்.

    மாநகராட்சி நிர்வாகத்தில் வரியினங்கள், வாடகை உள்ளிட்ட கட்டண வசூல் ஆகியன விரைவுபடுத்தி வசூல் பணிகள் மேம்படுத்த வேண்டும். வரி மறு சீரமைப்பு பணிகள் துரிதகதியில் செய்து முடித்து நிலுவையின்றி வசூலிக்க வேண்டும். வளர்ச்சிப் பணிகள் குறித்த காலத்துக்குள் விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். பணிகள் தரமாகவும், எந்த புகாருக்கும் இடம் தராத வகையிலும் முறையாக மேற்கொள்ள வேண்டும்.சுகாதாரப்பணிகள், குடிநீர் வினியோகம் ஆகியன எந்த தடையுமின்றி பொதுமக்கள் நலன் சார்ந்து மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    • அரிசி, மாவு, தயிர், வெண்ணை, நெய் போன்ற உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும்.
    • ஈமச்சடங்கு மற்றும் மயான செலவின் மீது போடப்பட்ட வரியை ரத்து செய்ய வேண்டும்.

    தரங்கம்பாடி:

    ஒன்றிய பிஜேபிஅரசின் மக்கள் விரோத கொ ள்கையை கண்டித்து செம்பனார்கோயில் பி எஸ் என் எல் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டம் செய்தனர்.

    போராட்டத்திற்கு மாவட்ட விவசாய சங்க செயலாளர் வீரராஜ், செம்பனார்கோயில் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் தாங்கினர்.

    அப்போது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது.

    அரிசி மாவு தயிர் வெண்ணை நெய் போன்ற உணவுப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி ரத்து செய்ய வேண்டும்.

    ஈமச்சடங்கு மற்றும் மயான செலவின் மீது போடப்பட்ட வரியை ரத்து செய்ய வேண்டும்.

    உயிர் காக்கும் மருந்து மீது விதிக்கப்பட்ட வரியை ரத்து செய்ய வேண்டும்.

    மின்சார விநியோகத்தை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வழ ங்காதே. உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் செய்தனர்.

    நிகழ்ச்சியில் வேதநாயகம், சின்னத்துறை, இராதா கிருஷ்ணன், தவசிமுத்து, தரணி, தமிழ்ச்செல்வி, உள்ளிட்டோர் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டவர்.

    • 2022-2023 நிதி ஆண்டுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீா்க்கட்டணம் மற்றும் கடை வாடகை உடனடியாக செலுத்த வேண்டும்
    • காங்கயம் நகராட்சி ஆணையா் வெளியிட்டுள்ள அறிக்கை.

    காங்கயம் :

    காங்கயம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி உள்ளிட்ட வரியினங்களை உடனடியாக செலுத்துமாறு நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் 2022-2023 நிதி ஆண்டுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீா்க்கட்டணம் மற்றும் கடை வாடகை ஆகியவற்றை உடனடியாக செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நிதி சார்ந்த பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
    • ஊராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

    குடிமங்கலம் :

    உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் நிதி சார்ந்த பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் ஊராட்சி பொது நிதி மற்றும் மத்திய, மாநில அரசுகளில் மானியக்குழு நிதி, மாவட்ட திட்ட நிதி என பல்வேறு நிதி ஒதுக்கீடுகளின் கீழ், அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.

    பொதுமக்கள் நேரடியாக செலுத்தும் சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் வரி, வணிக நிறுவனங்களின் உரிம கட்டணம், தொழில் வரி வருவாய் உள்ளிட்டவை பொது நிதி கணக்கில் சேர்க்கப்படுகிறது.இருப்பினும், சில ஊராட்சிகளில், முறையான அனுமதி பெறாமலும், தொழில் மற்றும் சொத்துவரி செலுத்தாமலும் வரி ஏய்ப்பு செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    இது குறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:- ஊராட்சி அனுமதி பெறாமல், அதிகப்படியான தொழில் நிறுவனங்கள் துவக்கப்பட்டு வருகின்றன. தொழில் நிறுவனங்கள் செயல்படத்துவங்கினால், பணியாளர்களின் நலன் கருதி, அதனை தடை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. சொத்து வரி செலுத்தாமல் இருப்பது, தொழில் உரிமம் பெறாமலும், புதுப்பிக்காமல் இருத்தல் என வரி ஏய்ப்பும் செய்யப்படுகிறது. இதனால், ஊராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.வரி ஏய்ப்பு செய்யும் தொழில் நிறுவனங்களைக்கண்டறிய அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியப் பொருட்களுக்கு டிரம்ப் வரியை அதிகரித்ததை அடுத்து, அமெரிக்க தயாரிப்பு பொருட்களுக்கு கனடா வரியை அதிகரித்துள்ளது. #TrumpTaxPolicy #Canada
    ஒட்டாவா:

    கனடா, மெக்சிகோ மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியப் பொருட்களுக்கு 25 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என்றும், ஏற்கெனவே அளிக்கப்பட்ட வரி விலக்கு சலுகை ரத்து செய்யப்படுவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார். 

    இதற்கு பதிலடி தரும் வகையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்து இருந்தார். அமெரிக்காவின் வரி விதிப்பு ஏற்க முடியாத ஒன்று என்றும், தங்களது தொழிலாளர்கள் மீது தங்களுக்கும் அக்கறை இருப்பதாக தெரிவித்த  ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்க பொருட்கள் மீதான இறக்குமதி வரி ஜூலை ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் கூறியிருந்தார். 

    இதன்படி, வரி விதிக்கப்படும் பொருட்களுக்கான பட்டியலை கனடா வெளியிட்டது. இதில், சில பொருட்களுக்கான வரிப்பட்டியல் 10 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், ரூ.86 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அமெரிக்க பொருட்கள் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளது. 
    ×