search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வத்தலக்குண்டு"

    வத்தலக்குண்டு அருகே குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு அருகே உள்ள பழைய வத்தலக்குண்டு மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்காததால் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் பழைய வத்தலக்குண்டு ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கிளைச் செயலாளர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர்கள் இருளையா, ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து அனைத்து பகுதி மக்களுக்கும் 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என அவர்கள் கோ‌ஷமிட்டனர்.

    மோட்டார் இன்றி இயங்காமல் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் மோட்டார் பொருத்தி இயக்க வேண்டும். பழுதடைந்த சிறு மின் விசை பம்புகளை சரி செய்ய வேண்டும்.

    சேதமடைந்த சாக்கடை கால்வாய்களை சீரமைக்க வேண்டும். இப்பகுதியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். துணை சுகாதார நிலையத்தை ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என அவர்கள் கோ‌ஷமிட்டனர்.

    இந்த போராட்டத்தில் மாவட்ட குழு செயலாளர் சச்சிதானந்தம், மாவட்ட செயற்குழு குணசேகரன், ஒன்றிய குழு செயலாளர் கலைச் செல்வன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் தெய்வேந்திரன், தண்டபாணி, பாண்டியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வத்தலக்குண்டுவில் பெண்ணிடம் ஏ.டி.எம். கார்டை பெற்று ரூ.20ஆயிரம் பணத்தை அபேஸ் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு அருகில் உள்ள மேலக்கோவில் பட்டியை சேர்ந்தவர் கண்ணன். கூலிதொழிலாளி. இவரது மனைவி சசிகலா(25). நேற்று மாலை மதுரை மெயின்ரோட்டில் உள்ள ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்க வந்தார். பணம் எடுப்பது குறித்த தகவல் சரிவர தெரியாததால் அருகில் இருந்த ஒரு வாலிபரிடம் தனது அக்கவுண்டில் எவ்வளவு பணம் உள்ளது என பார்க்குமாறு கூறியுள்ளார்.

    கார்டை வாங்கிய அந்த வாலிபர் ரூ.20 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு உங்கள் அக்கவுண்டில் பணம் இல்லை என கூறி சென்றுவிட்டார். அவர் சென்றபிறகு ரூ.20ஆயிரம் பணம் எடுக்கப்பட்டதாக தனது செல்போன் எண்ணுக்கு வந்த தகவலை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் பணத்தை எடுத்தது தேனி மாவட்டம் டி.வாடிப்பட்டி எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த சாமிக்கண்ணு மகன் கனகராஜ்(30) என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து நிலக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    வத்தலக்குண்டு அருகே மாமியார் கொடுமையால் நிறைமாத கர்ப்பிணி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து மாமியாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு அருகில் உள்ள பழைய வத்தலக்குண்டு கோட்டைப்பட்டி தெருவை சேர்ந்தவர் அழகேஸ்வரி(24). இவருக்கும் ராமநாயக்கன் பட்டியை சேர்ந்த சத்யராஜ்(30) என்பவருக்கும் கடந்த 4½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இவர்களுக்கு இனியா(2) என்ற மகள் உள்ளார். அழகேஸ்வரி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். சத்யராஜ் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். 2 வாரங்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். இதனிடையே மாமியார் வீட்டில் தங்கியிருந்த அழகேஸ்வரியை அவர் தகாத வார்த்தைகளால் பேசி கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

    நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்த சத்யராஜிடம் இதுகுறித்து அழகேஸ்வரி கூறினார். ஆனால் அவர் தாயை கண்டிக்காமல் விட்டுவிட்டார். இதனால் மனமுடைந்த அழகேஸ்வரி வி‌ஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதுகுறித்து வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி ஆகியோர் வழக்குபதிவு செய்து மாமியார் பத்மாவதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வத்தலக்குண்டுவில் அரசு அதிகாரியிடம் நகையை பறித்தது தொடர்பாக மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    வத்தலக்குண்டு:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு யூனியன் அலுவலகம் அருகே உள்ள எழில்நகரில் வசித்து வருபவர் சக்திவடிவேல் முருகன். வத்தலக்குண்டு யூனியன் அலுவலகத்தில் துணைவட்டார வளர்ச்சி அலுவலராக(சத்துணவு) உள்ளார். அவரது மனைவி ரேணுகாதேவி, மகள் வர்ஷா, மகன் கோகுல். தற்போது பயிற்சிக்காக சக்திவடிவேல் முருகன் பவானிசாகருக்கு சென்றுள்ளார்.

    நேற்றிரவு ரேணுகாதேவி தனது குழந்தைகளுடன் வீட்டில் தூங்கினார். நள்ளிரவு சமயம் மர்மநபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் ஹெல்மெட் மற்றும் டவுசர் அணிந்திருந்தனர். மர்மநபர்கள் 2 பேரும் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பீரோவை திறந்த அவர்கள் 2 பவுன்நகையை திருடிக்கொண்டனர். சத்தம் கேட்டு ரேணுகாதேவி திடுக்கிட்டு எழுந்தார். அப்போது மர்மநபர்கள் நிற்பதை பார்த்து கூச்சல் போட்டார்.

    உஷாரான அவர்கள் ரேணுகாதேவியின் கழுத்தில் கிடந்த 10 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துக்கொண்டு தலைமறைவானார்கள். இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வத்தலக்குண்டு நகரில் தொடர்ந்து கொள்ளைச்சம்பவம் நடந்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.#tamilnews
    வத்தலக்குண்டுவில் வங்கி ஊழியர் வீட்டில் நகை- பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    வத்தலக்குண்டு:

    திண்டுக்கல் அருகே உள்ள வத்தலக்குண்டு ஊர்காலசுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னசாமி. சித்தையன்கோட்டையில் உள்ள கூட்டுறவு வங்கியில் கிளார்க்காக உள்ளார். அவரது மனைவி தேன்மொழி. பழைய வத்தலக்குண்டுவில் உள்ள அரசு உயர்நிலைபள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர்கள் வசிக்கும் வீடு 2 மாடிகள் கொண்டது.

    நேற்று இரவு சின்னசாமி மனைவி, 2 குழந்தைகளுடன் கீழ் வீட்டில் தூங்கினார். அப்போது காற்றுக்காக கதவை திறந்து வைத்து இருந்தார். நள்ளிரவு சமயம் நைசாக மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். மாடி வீட்டுக்கு சென்ற அவர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த நகை-பணத்தை சுருட்டி கொண்டு கீழ் பகுதிக்கு வந்தனர். அங்கிருந்த பீரோவை நைசாக திறந்து அதில் இருந்த நகையை எடுத்து கொண்டு தலைமறைவானார்கள்.

    இன்று காலை எழுந்து பார்த்த சின்னசாமி வீட்டுக்கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பீரோவை பார்த்த போது அதில் இருந்த 12 பவுன் நகையை காணவில்லை.

    அதிர்ச்சி அடைந்த அவர் உடனே மாடி வீட்டுக்கு சென்று பீரோவை பார்த்தார். அப்போது அதில் 20 நகை மற்றும் பணம் கொள்ளை போனது கண்டு பதறி போனார்.

    இதுகுறித்து சின்னசாமி வத்தலக்குண்டு போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    வத்தலக்குண்டுவில் மாணவியிடம் நகை பறித்த 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

    வத்தலக்குண்டு:

    திண்டுக்கல் அருகில் உள்ள தாடிக்கொம்பை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகள் ஷாலினிதேவி. கல்லூரி மாணவி. இவர் நேற்று போடியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார்.

    வத்தலக்குண்டு பஸ் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து திண்டுக்கல் பஸ்சில் ஏற முயன்றபோது 2 பெண்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறித்துக்கொண்டு ஓடினர். உடனே அங்கிருந்த தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் அகிலன் மற்றும் பொதுமக்கள் அவர்களை விரட்டி பிடித்து வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசார் விசாரணையில் அவர்கள் தாராபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குமார் மனைவி செல்வி (30), கண்ணன் மனைவி முத்துமாரி (35) ஆகியோர் என தெரிய வந்தது. இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பிடிபட்ட 2 பெண்களையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×