search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student jewelry snatch"

    பூங்கா நகர் ரெயில் நிலையம் அருகே மாணவரை கத்தியால் குத்தி செயின் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் அபினேஷ். அண்ணா பல்கலைக் கழகத்தில் என்ஜினீயரிங் படித்து வருகிறார்.

    இவர் நேற்று இரவு கோட்டூர்புரம் செல்வதற்காக பூங்காநகர் ரெயில் நிலையத்துக்கு நடந்து சென்றார்.

    தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்தபோது 3 பேர் அபினேசை வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில் அவரது முகத்தில் வெட்டு விழுந்தது. இதனால் வலிதாங்க முடியாமல் அலறி துடித்த அபினேசிடம் இருந்த செல்போனை 3 பேரும் பறித்தனர்.

    பின்னர் அவரிடம் பணம் எவ்வளவு வைத்திருக்கிறாய் என்று கேட்டனர். இதற்கு 330 ரூபாய் மட்டுமே உள்ளது என்று அபினேஷ் கூறியுள்ளார். அந்த பணத்தையும் கொள்ளையர்கள் பறித்தனர். பின்னர் அங்கிருந்து ஓட்டம் பிடித்து விட்டனர்.

    பின்னர் அபினேஷ் சென்னை ராஜிவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய கொள்ளையர்களை பிடிக்க தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

    வத்தலக்குண்டுவில் மாணவியிடம் நகை பறித்த 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

    வத்தலக்குண்டு:

    திண்டுக்கல் அருகில் உள்ள தாடிக்கொம்பை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகள் ஷாலினிதேவி. கல்லூரி மாணவி. இவர் நேற்று போடியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார்.

    வத்தலக்குண்டு பஸ் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து திண்டுக்கல் பஸ்சில் ஏற முயன்றபோது 2 பெண்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறித்துக்கொண்டு ஓடினர். உடனே அங்கிருந்த தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் அகிலன் மற்றும் பொதுமக்கள் அவர்களை விரட்டி பிடித்து வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசார் விசாரணையில் அவர்கள் தாராபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குமார் மனைவி செல்வி (30), கண்ணன் மனைவி முத்துமாரி (35) ஆகியோர் என தெரிய வந்தது. இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பிடிபட்ட 2 பெண்களையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×