search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ்"

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே 10 வயது பள்ளி சிறுமியை பலாத்காரம் செய்த கூலி தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அடைகலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ்(37). கூலி தொழிலாளியான இவர், கடந்த 2015ம் ஆண்டு ஜுலை மாதம் 22ம் தேதி அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்த 10 வயது சிறுமியை, மதிய உணவு இடைவேளையின் போது, தனது வீட்டிற்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

    இது குறித்து தகவல் அறிந்த அந்த சிறுமியின் பெற்றோர்கள், தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, பால்ராஜை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக பால்ராஜிக்கு 5 வருட சிறைத் தண்டனை மற்றும் ரூ. ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் கலையரசி ஆஜரானார்.
    சியோமி இந்தியா தீபாவளி விற்பனையின் இரண்டாவது நாளில் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போனினை ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. #DiwaliWithMi



    சியோமி நிறுவனத்தின் தீபாவளி சிறப்பு விற்பனையில் மொபைல் போன்கள், தொலைகாட்சி, உபகரணங்கள் மற்றும் பல்வேறு பொருட்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இரண்டாவது நாளான இன்று ரெட்மி நோட் 5 ப்ரோ, ரெட்மி வை2 மற்றும் Mi ஏ2 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

    முதல் நாள் விற்பனையில் போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் ஒரு ரூபாய் விலைக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது நாளான இன்று ரெட்மி நோட் 5 ப்ரோ கோல்டு நிற வேரியன்ட் ஒரு ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.14,999 எனும் துவக்க விலையில் கிடைக்கிறது. 

    ஒரு ரூபாய் ஃபிளாஷ் விற்பனை மட்டுமின்றி பண்டிகை கால சிறப்பு விற்பனையில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ.2,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ரூபாய் ஃபிளாஷ் விற்பனை சியோமியின் Mi.com வலைதளத்தில் இன்று (அக்டோபர் 24) மாலை 4.00 மணிக்கு நடைபெறுகிறது.



    இன்று மாலை நடைபெறும் ஃபிளாஷ் விற்பனையில் வாடிக்கையாளர்கள் ரெட்மி நோட் 5 ப்ரோ 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடலை ஒரு ரூபாய் விலையில் வாங்கிட முடியும். விற்பனை துவங்கும் முன் பயனர்கள் தங்களது Mi அக்கவுன்ட்டில் லாக் இன் செய்து கொள்ள வேண்டும்.

    மேலும் பயனர்கள் தங்களது கார்டு விவரங்கள் மற்றும் முகவரி உள்ளிட்டவற்றை ஃபிளாஷ் விற்பனை துவங்கும் முன் பதிவு செய்து கொள்ளலலாம். இதனால் விரைவில் பரிமாற்றத்தை நிறைவு செய்து சலுகையை பெறும் வாய்ப்பை அதிகப்படுத்திக் கொள்ளலாம். 

    தீபாவளி விற்பனை காலத்தில் வாடிக்கையாளர்கள் Mi பொருட்களை தள்ளுபடி விலையில் வாங்கிட முடியும். அந்த வகையில் Mi ஏ2 ஸ்மார்ட்போன் ரூ.2000 விலை குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று Mi எல்.இ.டி. டி.வி. 4ஏ 43-இன்ச் மாடல் ரூ.1,000 தள்ளுபடி செய்யப்பட்டு தற்சமயம் ரூ.21,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. #Xiaomi #DiwaliWithMi
    சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் சிவப்பு நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை விவரம் மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். #RedmiNote5Pro



    சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 ப்ரோ சிவப்பு நிற எடிஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை பிளாக், புளு, கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு உள்ளிட்ட நிறங்களில் ரெட்மி நோட் 5 ப்ரோ விற்பனை செய்து வந்தது. புதிய சிவப்பு நிற எடிஷனின் பின்புறம் மற்றும் பக்கவாட்டுகளில் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

    ரெட்மி நோட் 5 ப்ரோ மாடலில் 5.99 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 636 சிப்செட், 4 ஜிபி ரேம், ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், 12 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, 20 எம்பி செல்ஃபி கேமரா, ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ சிவப்பு நிற எடிஷன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வேரியன்ட் விற்பனை ஏற்கனவே துவங்கி, தற்சமயம் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக Mi.com தளத்தில் கிடைக்கும் நோட் 5 ப்ரோ மாடல் விரைவில் ப்ளிப்கார்ட் தளத்திலும் கிடைக்கும். 



    சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 5.99 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்
    - அட்ரினோ 509 GPU
    - 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் சார்ந்த MIUI 9
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX486 செனசார், f/2.2 அப்ரேச்சர், டூயல்-டோன் எல்டி பிளாஷ்  
    - 5 எம்பி பிரைமரி கேமரா, f/2.0 அப்ரேச்சர் 
    - 20 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், f/2.2 அப்ரேச்சர், எல்இடி பிளாஷ்
    - கைரேகை மற்றும் இன்ஃப்ராரெட் சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை. ப்ளூடூத்
    - 4000 எம்.ஏ.ஹெச் பேட்டரி
    உத்தரபிரதேசத்தில் குடிபோதையில் இருந்த லாரி டிரைவர் 5 பேரை ஏற்றி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மீரட்:

    உத்தரபிரதேச மாநிலம் பார்டாபூர் பகுதியில் உள்ள மொகாம்பூரில் இருந்து கண்டெய்னர் லாரி ஒன்று மீரட் நகருக்கு இரவில் சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை நூர்ஆலம் ஓட்டி வந்தார்.

    மீரட் நகருக்கு முன்பு 7 கி.மீட்டர் துரத்தில் வரும் போது அந்த லாரி தாறு மாறாக ஓடியது. ஒரு சைக்கிள் மற்றும் மோட்டார்சைக்கிள் மீதும் மோதியது. பின்னர் மீரட் நகருக்குள் நுழைந்ததும் ஒரு வேன் மீதும், இரு சக்கர வாகனம் மீதும் மோதி இடித்து தள்ளியது.

    அதில் இரு சக்கர வாகனத்தை ஒட்டியவரும், அவருக்கு பின்னால் அமர்ந்து இருந்தவரும் பலியாகினர். அதை தொடர்ந்தும் வேகமாக சென்ற லாரி டிரக் மீதும், சைக்கிள் ரிக்ஷா மீதும் மோதியது. அதில் டிரக் டிரைவரும், சைக்கிள் ரிக்ஷாவில் பயணம் செய்த 2 பேரும் உயிரிழந்தனர்.

    அதன் பிறகும் நிற்காமல் சென்ற லாரி ரோட்டின் ஓரம் தூங்கி கொண்டிருந்தவர்கள் கூட்டத்தில் புகுந்து நின்றது. அதில் அங்கு தூங்கி கொண்டிருந்த 12-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற மீரட் போலீசார் கண்டெய்னர் லாரி டிரைவர் நூர்ஆலமை கைது செய்தனர். அப்போது அவர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. # tamilnews
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற 4 பேர் துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது. #AsianGames2018 #IndiaRowingTeam
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப்போட்டியில் இன்று துடுப்பு படகு போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்திய வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். ஆண்களுக்கான இலகுரக துடுப்பு படகு ஒற்றையர் பிரிவில் துஷ்யந்த், இரட்டையர் பிரிவில் ரோகித் குமார், பகவான் தாஸ் ஆகியோர் வெண்கலம் வென்றனர்.

    இந்நிலையில் 4 வீரர்கள் பங்கேற்கும் துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது. இந்திய அணியில் சவார்ன் சிங், போகனால், ஓம் பிரகாஷ், சுக்மீத் சிங் ஆகியோர் இணைந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 6 நிமிடம் 17.13 வினாடிகளில் கடந்து சாதனை படைத்தனர். இந்தோனேசிய அணி வெள்ளிப் பதக்கமும், தாய்லாந்து அணி வெண்கலப் பதக்கமும் வென்றது.

    இந்த வெற்றியின்மூலம் இந்திய அணி 5 தங்கம், 4 வெள்ளி,  12 வெண்கலம் என மொத்தம்  21 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 9-வது இடத்திற்கு முன்னேறியது. #AsianGames2018 #IndiaRowingTeam
    மேட்டூர் அருகே வாலிபர் கொலையில் தொடர்புடைய 5 பேர் இன்று மதியம் நாமக்கல் மாவட்ட 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தமயந்தி முன்னிலையில் சரண் அடைந்தனர்.
    நாமக்கல்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கருமலைக் கூடல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மகன் கண்ணன் (வயது 30). திருமணமாகவில்லை.

    கடந்த 23-ந்தேதி இரவு இவர் கருமலைக்கூடல் அடுத்த கருப்பு ரெட்டியூரில் உள்ள டாஸ்மாக் கடை பாரில் அமர்ந்து சிலருடன் மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வைத்து அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் சிலர் கண்ணனை கத்தியால் பின் தலை உள்பட பல இடங்களில் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து கருமலைக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கொலையில் தொடர்புடைய 5 பேர் இன்று மதியம் நாமக்கல் மாவட்ட 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தமயந்தி முன்னிலையில் சரண் அடைந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணையில் கருமலைக் கூடலை சேர்ந்த மகேந்திரன், பிரசாத், செந்தில்குமார் என்கிற ஆறுமுகசாமி, மணி என்கிற மோகன்ராஜ், அழகு என்கிற தம்பிதுரை ஆகியோர் என்பது தெரியவந்து. சரண் அடைந்த இவர்கள் 5 பேரையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #motoe5



    மோட்டோரோலா நிறுவனத்தின் ஜி-சீரிஸ் மற்றும் இ சீரிஸ்-இல் மொத்தம் ஆறு புதிய ஸ்மார்ட்போன்கள் ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. மோட்டோ இ சீரிஸ் என்ட்ரி லெவல் மாடலாக மூன்று ஸ்மார்ட்போன்கள் மோட்டோ இ5, மோட்டோ இ5 பிளஸ் மற்றும் மோட்டோ இ5 பிளே அறிமுகம் செய்யப்பட்டன.

    மோட்டோ இ5 பிளே அமெரிக்க சந்தையில் மட்டும் பிரத்யேகமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்சமயம் ஐரோப்பியா மற்றும் லத்தின் அமெரிக்க நாடுகளில் வெளியாக இருக்கிறது. எனினும் இம்முறை ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்) கொண்டிருக்கிறது.

    சாம்சங் நிறுவனத்தின் முதல் ஆன்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் வெளியானதை தொடர்ந்து மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ5 பிளே அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதில் கூகுளின் ஆப்டிமைஸ் செய்யப்பட்ட ஆன்ட்ராய்டு இயங்குதளம் வழங்கப்படுகிறது.



    சிறப்பம்சங்களை பொருத்த வரை மோட்டோ இ5 பிளே ஸ்மார்ட்போனில் 5.3 இன்ச் 18:9 ரக டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பின்புறம் மோட்டோ லோகோவின் கீழ் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு வேரியன்ட்களிலும் 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் ஃபிளாஷ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மற்றபடி பிராசஸர், ரேம் சார்ந்த விவரங்கள் வழங்கப்படவில்லை, எனினும் முந்தைய மோட்டோ இ5 பிளே மாடலில் 2 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு கோ எடிஷன் மாடலில் 1 ஜிபி ரேம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மற்ற சிறப்பம்சங்கள் அமெரிக்க மாடலில் வழங்கப்பட்டு இருப்பதை போன்றே வழங்கப்படுகிறது. அந்த வகையில் புதிய மோட்டோ இ5 பிளே மாடலில் 2800 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம், வாட்டர் ரெஸ்டன்ட் வசதி, ஸ்னாப்டிராகன் 425 / 427 சிப்செட் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதில் 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது. #motoe5 #smartphone
    மோட்டோரோலா நிறுவனத்தின் இ5 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய ஸ்மார்ட்போன்களின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    மோட்டோரோலா நிறுவனத்தின் இ5 மற்றும் இ5 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மோட்டோ இ5 மற்றும் இ5 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் முறையே 5.7 இன்ச் மற்றும் 6.0 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், 4000 எம்.ஏ.ஹெச். மற்றும் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றன.

    ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கும் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் மோட்டோ டிஸ்ப்ளே மற்றும் மோட்டோ ஆக்ஷன், பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. மோட்டோ இ5 பிளஸ் மாடலில் 3D பாலிமர் கிளாஸ் பேக் மற்றும் உறிதியான சேசிஸ் வழங்கப்பட்டுள்ளது.



    மோட்டோ இ5 சிறப்பம்சங்கள்:

    - 5.7 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே
    - 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட்
    - அட்ரினோ 308 GPU
    - 2 ஜிபி ரேம்
    - 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0, 1.12um பிக்சல், PDAF
    - 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்



    மோட்டோ இ5 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 5.99 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட்
    - அட்ரினோ 505 GPU
    - 3 ஜிபி ரேம்
    - 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0, 1.25um பிக்சல், லேசர் ஆட்டோஃபோகஸ், PDAF
    - 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

    மோட்டோ இ5 ஸ்மார்ட்போன் ஃபிளாஷ் கிரே, ஃபைன் கோல்டு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. மோட்டோ ஹப் விற்பனை மையங்களில் இந்த ஸ்மார்ட்போனினை ரூ.9,999 விலையில் வாங்கிட முடியும். மோட்டோ இ5 பிளஸ் ஃபைன் கோல்டு மற்றும் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போனினை மோட்டோ ஹப் விற்பனையகங்கள் மட்டுமின்றி அமேசான் வலைதளத்தில் பிரத்யேகமாக வாங்கிட முடியும்.



    அறிமுக சலுகைகள்:

    - ஜூலை 11 மற்றும் 12-ம் தேதிகளில் அமேசான் வலைதளத்தில் மோட்டோ இ5 பிளஸ் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.800 வரை தள்ளுபடி பெற முடியும். 

    - அமேசான் தளத்தில் ஜூலை 11 மற்றும் 12-ம் தேதிகளில் வாங்குவோருக்கு வட்டியில்லா மாத தவனை முறை வசதி வழங்கப்படுகிறது.

    - அமேசான் தளத்தில் ஜூலை 11 மற்றும் 12-ம் தேதிகளில் தங்களது பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்வோருக்கு ரூ.1000 கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    - மோட்டோ இ5 மற்றும் இ5 பிளஸ் வாங்கும் ஜியோ பயனர்களுக்கு 130 ஜிபி வரை கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. 

    - மோட்டோ ஹப்களில் பேடிஎம் மால் செயலி மூலம் மோட்டோ இ5 அல்லது இ5 பிளஸ் வாங்குவோருக்கு ரூ.1,200 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
    உத்தரப்பிரதேசத்தில் அயோத்தி கோவில் அமைந்துள்ள பகுதியில் தடையை தாண்டி அத்துமீறி நுழைந்த ஐந்து பேரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். #Ayodhya #RamJanmaBoomi
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்சினை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 6 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.

    இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய பகுதியில் தடையை தாண்டி அத்துமீறி நுழைந்த ஐந்து பேரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

    இதுதொடர்பாக, ராமஜென்ம பூமியின் டெபுடி சூப்பிரன்டெண்ட் ராஜேந்திர சிங் கூறுகையில், ராமர் கோவில் அருகில் வந்த ஒரு காரை மடக்கி நிறுத்தினோம். அதில் இருந்த பவான் சவுரையா, நந்த்லால் திவாரி, ஆஷிஷ், கவுரவ் பாண்டே மற்றும் உமாசங்கர் சேத் ஆகிய 5 பேரை தடுத்து நிறுத்தினோம்.

    விசாரணையில், அவர்கள் வழிதவறி அந்த பகுதிக்கு வந்ததாக தெரிவித்தனர். அதை உறுதிசெய்த பின்னரே அவர்களை மேற்கொண்டு செல்ல அனுமதித்தோம் என தெரிவித்தார். #Ayodhya #RamJanmaBoomi
    ஜம்மு காஷ்மீரின் பால்டால் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரு பெண் உள்பட 5 பேர் பலியாகினர். #Baltal #Landslide
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பால்டால் பகுதியில் இருந்து அமர்நாத் யாத்திரை தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களாக அந்த பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், பால்டால் பகுதியில் உள்ள பிராரிமார்க் என்ற இடத்தில் நேற்று இரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி ஒரு பெண் மற்றும் 4 ஆண்கள் உள்ளிட்ட 5 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    தகவலறிந்து அங்கு வந்த மீட்புப்படையினர் நிலச்சரிவில் சிக்கிய உடல்களை மீட்டனர். காயம் அடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். #Baltal #Landslide
    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி மற்றும் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி6 மற்றும் மோட்டோ ஜி6 பிளே ஸ்மார்ட்போன்கள் கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், மோட்டோ இ5 பிளஸ் மாடல் ஜூலை 10-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    இந்தியாவில் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கும் மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.



    மோட்டோ இ5 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 IPS டிஸ்ப்ளே
    - 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட்
    - அட்ரினோ 308 GPU
    - 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 435 சிப்செட்
    - அட்ரினோ 505 GPU
    - 2 ஜிபி / 3 ஜிபி ரேம்
    - 16 ஜிபி / 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0, 1.25um பிக்சல், லேசர் ஆட்டோஃபோகஸ், PDAF
    - 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - கைரேகை சென்சார்
    - P2i வாட்டர் ரெசிஸ்டன்ட் நானோ கோட்டிங்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் ஃபைன் கோல்டு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. மற்ற சந்தைகளில் 196 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.13,510) என விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், இந்தியாவில் இதன் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    மோட்டோரோலா இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மோட்டோ இ5 பிளஸ் வெளியீடு குறித்த டீசர் பதிவிடப்பட்டு இருக்கிறது.




    மோட்டோ இ5 டீசர்களை தொடர்ந்து மோட்டோரோலா இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மோட்டோ இ5 பிளஸ் டீசர் பதிவிடப்பட்டுள்ளது. முன்னதாக பேட்டரி சார்ந்த பிரச்சனைகள் குறித்த வீடியோவை அந்நிறுவன ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு இருந்தது.

    தற்சமயம் மோட்டோ இ5 பிளஸ் வெளியீடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதே நிகழ்வில் மோட்டோ இ5 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மோட்டோ இ5 ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் ரூ.11,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மூன்றாம் தரப்பு விற்பனையாளர் நிர்ணயித்திருக்கும் விலை என்பதால் இது அதிகாரப்பூர்வ விலை கிடையாது

    முன்னதாக ஏப்ரல் மாத வாக்கில் மோட்டோ இ5 பிளே ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது, எனினும் இந்த மாடல் இந்தியாவில் வெளியிடப்படாது என தெரிவிக்கப்பட்டது. அறிமுக நிகழ்வில் இந்த ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் மட்டும் வெளியிடப்படும் என்றும் மோட்டோ இ5 மற்றும் மோட்டோ இ5 பிளஸ் மாடல்கள் ஆசிய பசிபிக், ஐரோப்பா, லத்தின் அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.



    மோட்டோ இ5 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் ஹெச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி, 1440x720 பிக்சல் டிஸ்ப்ளே
    - குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 பிராசஸர்
    - 3 ஜிபி ரேம்
    - 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 12 எம்பி பிரைமரி கேமரா, f/2.0, எல்இடி ஃபிளாஷ், PDAF
    - 8 எம்பி பிரைமரி கேமரா, செல்ஃபி ஃபிளாஷ்
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - டர்போ பவர் சார்ஜிங் வசதி

    ஐரோப்பாவில் மோட்டோ இ5 பிளஸ் விலை EUR 149 (இந்திய மதிப்பில் ரூ.13,495) என நிர்ணயம் செய்யப்பட்டது.
    ×