என் மலர்
நீங்கள் தேடியது "Indian Men Team"
- அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி 435 ரன்கள் குவித்தது.
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய ஆண்கள் அணி 418 ரன்கள் குவித்துள்ளது.
ராஜ்கோட்:
அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றி விட்டது.
இதனையடுத்து இரு மகளிர் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 435 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனைகளாக மந்தனா (135), பிரதிகா ராவல் (154) சதம் அடித்து அசத்தினர். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை படைத்துள்ளது.
மேலும் அதிக ரன்கள் குவித்த அணிகள் பட்டியலில் இந்தியா 4 -வது இடத்தில் உள்ளது. முதல் 3 இடங்களில் நியூசிலாந்து அணி உள்ளது.
இதனையெல்லாம் விட ஒருநாள் போட்டியில் ஆண்கள் இந்திய அணி குவித்த ரன்களை விட பெண்கள் அணி ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது. ஆண்கள் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 418 எடுத்ததே அதிக ரன்களாக இருந்தது. அதனை தற்போது பெண்கள் முறியடித்துள்ளது.
இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப்போட்டியில் இன்று துடுப்பு படகு போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்திய வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். ஆண்களுக்கான இலகுரக துடுப்பு படகு ஒற்றையர் பிரிவில் துஷ்யந்த், இரட்டையர் பிரிவில் ரோகித் குமார், பகவான் தாஸ் ஆகியோர் வெண்கலம் வென்றனர்.
இந்நிலையில் 4 வீரர்கள் பங்கேற்கும் துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது. இந்திய அணியில் சவார்ன் சிங், போகனால், ஓம் பிரகாஷ், சுக்மீத் சிங் ஆகியோர் இணைந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 6 நிமிடம் 17.13 வினாடிகளில் கடந்து சாதனை படைத்தனர். இந்தோனேசிய அணி வெள்ளிப் பதக்கமும், தாய்லாந்து அணி வெண்கலப் பதக்கமும் வென்றது.
இந்த வெற்றியின்மூலம் இந்திய அணி 5 தங்கம், 4 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 21 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 9-வது இடத்திற்கு முன்னேறியது. #AsianGames2018 #IndiaRowingTeam






