என் மலர்
நீங்கள் தேடியது "Five dead in landslide"
ஜம்மு காஷ்மீரின் பால்டால் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரு பெண் உள்பட 5 பேர் பலியாகினர். #Baltal #Landslide
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பால்டால் பகுதியில் இருந்து அமர்நாத் யாத்திரை தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களாக அந்த பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், பால்டால் பகுதியில் உள்ள பிராரிமார்க் என்ற இடத்தில் நேற்று இரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி ஒரு பெண் மற்றும் 4 ஆண்கள் உள்ளிட்ட 5 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தகவலறிந்து அங்கு வந்த மீட்புப்படையினர் நிலச்சரிவில் சிக்கிய உடல்களை மீட்டனர். காயம் அடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். #Baltal #Landslide






