search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Moto E5"

    மோட்டோரோலா நிறுவனத்தின் இ5 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய ஸ்மார்ட்போன்களின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    மோட்டோரோலா நிறுவனத்தின் இ5 மற்றும் இ5 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மோட்டோ இ5 மற்றும் இ5 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் முறையே 5.7 இன்ச் மற்றும் 6.0 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், 4000 எம்.ஏ.ஹெச். மற்றும் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றன.

    ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கும் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் மோட்டோ டிஸ்ப்ளே மற்றும் மோட்டோ ஆக்ஷன், பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. மோட்டோ இ5 பிளஸ் மாடலில் 3D பாலிமர் கிளாஸ் பேக் மற்றும் உறிதியான சேசிஸ் வழங்கப்பட்டுள்ளது.



    மோட்டோ இ5 சிறப்பம்சங்கள்:

    - 5.7 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே
    - 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட்
    - அட்ரினோ 308 GPU
    - 2 ஜிபி ரேம்
    - 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0, 1.12um பிக்சல், PDAF
    - 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்



    மோட்டோ இ5 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 5.99 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட்
    - அட்ரினோ 505 GPU
    - 3 ஜிபி ரேம்
    - 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0, 1.25um பிக்சல், லேசர் ஆட்டோஃபோகஸ், PDAF
    - 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

    மோட்டோ இ5 ஸ்மார்ட்போன் ஃபிளாஷ் கிரே, ஃபைன் கோல்டு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. மோட்டோ ஹப் விற்பனை மையங்களில் இந்த ஸ்மார்ட்போனினை ரூ.9,999 விலையில் வாங்கிட முடியும். மோட்டோ இ5 பிளஸ் ஃபைன் கோல்டு மற்றும் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போனினை மோட்டோ ஹப் விற்பனையகங்கள் மட்டுமின்றி அமேசான் வலைதளத்தில் பிரத்யேகமாக வாங்கிட முடியும்.



    அறிமுக சலுகைகள்:

    - ஜூலை 11 மற்றும் 12-ம் தேதிகளில் அமேசான் வலைதளத்தில் மோட்டோ இ5 பிளஸ் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.800 வரை தள்ளுபடி பெற முடியும். 

    - அமேசான் தளத்தில் ஜூலை 11 மற்றும் 12-ம் தேதிகளில் வாங்குவோருக்கு வட்டியில்லா மாத தவனை முறை வசதி வழங்கப்படுகிறது.

    - அமேசான் தளத்தில் ஜூலை 11 மற்றும் 12-ம் தேதிகளில் தங்களது பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்வோருக்கு ரூ.1000 கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    - மோட்டோ இ5 மற்றும் இ5 பிளஸ் வாங்கும் ஜியோ பயனர்களுக்கு 130 ஜிபி வரை கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. 

    - மோட்டோ ஹப்களில் பேடிஎம் மால் செயலி மூலம் மோட்டோ இ5 அல்லது இ5 பிளஸ் வாங்குவோருக்கு ரூ.1,200 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
    ×