search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரோடு ஷோ"

    • திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து மலைக்கோட்டை வரை ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
    • போலீஸ் கமிஷனர் காமினி அனுமதி மறுத்துள்ளார்.

    திருச்சி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.

    இந்த நிலையில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை தேனியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக விமானம் மூலம் இன்று இரவு அவர் திருச்சிக்கு வருகிறார்.

    இதனிடையே திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து மலைக்கோட்டை வரை ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சியினர் இதற்காக திருச்சி மாநகர காவல் துறையிடம் அனுமதி கேட்டனர்.

    அதற்கு போலீஸ் கமிஷனர் காமினி அனுமதி மறுத்துள்ளார். ரோடு ஷோவுக்கான அனுமதி கேட்கப்பட்ட பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி. பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய பகுதி என்பதால் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

    எனினும் திட்டமிட்டபடி ரோடு ஷோ நடத்த பா.ஜ.க.வினர் முடிவு செய்து உள்ளனர். அதற்கான மாற்று இடம் குறித்து அவர்கள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இடம் தேர்வு செய்யப்பட்டதும் உரிய அனுமதி பெற்று ரோடு ஷோ நடத்தப்படும் என்று பா.ஜ.க.வினர் தெரிவித்தனர்.

    • தேசிய கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், மத்திய மந்திரிகள் ஆகியோரும் தங்கள் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தமிழகத்துக்கு வர உள்ளனர்.
    • அடுத்த வாரம் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேலும் தீவிரம் அடைய உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலை யில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து உள்ளது.

    தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி என தமிழகத்தில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் அனைத்து கட்சிகளின் தலைவர்களுமே அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் தேசிய கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், மத்திய மந்திரிகள் ஆகியோரும் தங்கள் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தமிழகத்துக்கு வர உள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே பிரதமர் மோடி தமிழகத்துக்கு 5 முறை வந்து பிரசாரம் மேற்கொண்டார். அவர் இதுவரை கோவை, சேலம், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். கோவையில் நடந்த பிரமாண்ட ரோடு ஷோவிலும் பங்கேற்றார். மேலும் சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசினார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி மீண்டும் தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வர இருக்கிறார். பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் 4 நாட்கள் தமிழகத்தில் பிரசாரம் செய்ய உள்ளார். வருகிற 9-ந்தேதி, 10-ந்தேதி, 13-ந்தேதி, 14-ந்தேதி ஆகிய 4 நாட்கள் அவர் தமிழகத்தில் பிரசாரம் செய்கிறார்.

    வருகிற 9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழகம் வரும் பிரதமர் மோடி அன்று மாலை 4 மணிக்கு வேலூரில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளரான புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து ரோடு ஷோ மூலம் பிரசாரம் செய்கிறார். அப்போது தர்மபுரி தொகுதி பா.ம.க. வேட்பாளர் சவுமியா அன்புமணி, கிருஷ்ணகிரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நரசிம்மன், கள்ளக்குறிச்சி தொகுதி பா.ம.க. வேட்பாளர் தேவதாஸ், திருவண்ணாமலை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் அஸ்வத்தாமன், ஆரணி தொகுதி பா,ம.க. வேட்பாளர் கணேஷ் குமார், சிதம்பரம் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் கார்த்தியாயினி, கடலூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் தங்கர் பச்சான் ஆகியோருக்கு ஆதரவாகவும் வாக்கு சேகரிக்கிறார்.

    அன்று மாலை 6 மணிக்கு தென்சென்னை தொகுதிக்கு உட்பட்ட தி.நகரில் பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆதரவாக பிரதமர் மோடி ரோடு ஷோ மூலம் பிரசாரம் செய்கிறார். அப்போது மத்திய சென்னை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் வினோஜ் செல்வம், வடசென்னை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பால் கனகராஜ், திருவள்ளூர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பொன்.பாலகணபதி, ஸ்ரீபெரும்புதூர் தொகுதி த.மா.கா. வேட்பாளர் வேணுகோபால், காஞ்சிபுரம் தொகுதி பா.ம.க. வேட்பாளர் ஜோதி வெங்கடேசன், அரக்கோணம் தொகுதி பா.ம.க வேட்பாளர் கே.பாலு ஆகியோருக்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்கிறார்.

    பின்னர் மறுநாள் 10-ந்தேதி காலை 11 மணிக்கு நீலகிரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளரும், மத்திய மந்திரியுமான முருகனுக்கு ஆதரவாக அங்கு ரோடு ஷோ மூலம் பிரசாரம் செய்கிறார். அதனைத் தொடர்ந்து அன்று மதியம் கோவையில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். அந்த பொதுக்கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவரும் கோவை தொகுதி பா.ஜ.க. வேட்பாளருமான அண்ணாமலை மற்றும் பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

    அதன் பிறகு பிரதமர் மோடி மீண்டும் 13-ந்தேதி தமிழகம் வருகிறார். அன்று காலை 11 மணிக்கு பெரம்பலூரில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். அப்போது கூட்டணி கட்சி வேட்பாளரான ஐ.ஜே.கே. தலைவர் பாரிவேந்தர் மற்றும் திருச்சி, தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

    பின்னர் 14-ந்தேதி விருதுநகர் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். அப்போது பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா சரத்குமார் மற்றும் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இந்த பொதுக்கூட்டங்களில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.

    பிரதமர் மோடி தமிழகத்துக்கு ஏற்கனவே 5 முறை வந்துள்ள நிலையில் இன்னும் 4 நாட்கள் அவர் பிரசாரம் செய்ய உள்ளதால் அடுத்த வாரம் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேலும் தீவிரம் அடைய உள்ளது.

    • இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று கேரளா வருகிறார்.
    • விமானம் மூலம் கொச்சிக்கு வரும் பிரதமர் மோடி ரோடு-ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    இன்று மாலை கேரளா செல்லும் பிரதமர் மோடி எம்.ஜி ரோட்டில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் இருந்து எர்ணாகுளத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை வரை ரோடு ஷோ செல்கிறார். அதனை தொடர்ந்து, நாளை கொச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி குருவாயூர் செல்கிறார். குருவாயூர் கிருஷ்ணர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் அங்கு நடக்கும் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.பி-யும் நடிகருமான சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்.

    அதன் பின்னர் காலை 10 மணிக்கு திரிச்சூர் மாவட்டம் திரிபிராயர் ஸ்ரீராமசுவாமி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துகிறார். அங்கிருந்து கொச்சிக்கு திரும்பும் பிரதமர் மோடி, கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்பு சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் 6 ஆயிரம் பேர் பங்கேற்கும் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். அதன் பிறகு டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

    பிரதமர் மோடி வந்து செல்லும் வரை, குருவாயூர் கோவில் மற்றும் திரிபிராயர் ஸ்ரீராமசுவாமி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி கிடையாது. பிரதமர் புறப்பட்டு சென்ற பின்னரே, பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமரின் வருகையால், காலை குருவாயூர் கோவிலில் நடைபெற இருந்த 39 திருமணங்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

    மோடி வருகையை முன்னிட்டு கேரளாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அவர் ரோடு-ஷோ மேற்கொள்ளும் இடங்கள், குருவாயூர் கிருஷ்ணர் கோவில், திரிபிராயர் ஸ்ரீராமசுவாமி கோவில், கொச்சி கப்பல் கட்டும் தளம், எர்ணாகுளம் அரசு விருந்தினர் மாளிகை உள்ளிட்ட இடங்களில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

    • பிரதமர் மோடி மாலை 5.45 மணிக்கு கன்ஹவுஸ் வட்டத்தில் திறந்த வாகனத்தில் ரோட் ஷோவை தொடங்கி வைக்கிறார்.
    • ரோடு ஷோ காரணமாக இன்று இரவு 8 மணி வரை நகரின் முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, இன்று மாலை நகரின் ராஜ்மார்க்கில் ரோடு ஷோ மூலம் வாக்காளர்களைக் கவரும் வகையில் சந்தித்து வருகிறார்.

    தேர்தல் அறிவிப்புக்கு பின் முதன்முறையாக மைசூரு வரும் பிரதமர் மோடி, மைசூருவின் மையப்பகுதியில் உள்ள கிருஷ்ணராஜா, சாமராஜா, நரசிம்மராஜா தொகுதிகளின் பிரதான சாலையில் திறந்த வாகனத்தில் 4 கி.மீ. ரோடு ஷோ நடைபெறுகிறது. இதில், சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரதமர் மோடியின் ரோடு ஷோவுக்கு பா.ஜ., சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன, வழிநெடுகிலும் பா.ஜ. கட்சி கொடிகள் கட்டப்பட்டு, வழித்தடத்தில் பூக்கள் இடுவதற்காக ஒரு டன் பூக்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

    கட்சியினர் பாரம்பரிய உடை அணிந்து ரோடு ஷோவில் பங்கேற்க முடிவு செய்துள்ளனர். மைசூரின் உள்ளூர் கலாச்சாரத்தை விளக்கும் கலைக்குழுக்களின் நிகழ்ச்சிகள் அந்தந்த இடங்களில் நடைபெறுகிறது.

    இன்று மாலை 5.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மைசூர் விவி ஓவல் மைதானத்தில் தரையிறங்கும் பிரதமர் மோடி, அங்கிருந்து எம்டிஏ வட்டம், ஜேஎல்பி சாலை, ராமசாமி வட்டம், சாமராஜா ஜோடி சாலை வழியாக கன்ஹவுஸ் சர்க்கிள் வரை காரில் பயணிக்கிறார்.

    பிரதமர் மோடி மாலை 5.45 மணிக்கு கன்ஹவுஸ் வட்டத்தில் திறந்த வாகனத்தில் ரோட் ஷோவை தொடங்கி வைக்கிறார். வட்டம், ஆயுர்வேத வட்டம், ஆர்எம்சி வட்டம், நெடுஞ்சாலை வட்டம், நெல்சன் மண்டேலா சாலை முதல் மில்லினியம் வட்டம் வரையிலும், அதன்பிறகு, மிலேனி சர்க்கிளில் திறந்த வாகனத்தில் இருந்து இறங்கி, வெளிவட்ட சாலையில் மைசூர்-பெங்களூரு சாலை சந்திப்பு வழியாகச் சென்று நஞ்சன்கூடு சாலையில் இருந்து மைசூர் விமான நிலையத்தை அடைந்து, அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

    கன்ஹவுஸ் சர்க்கிளில் இருந்து தொடங்கி பன்னிமண்டப மில்லினியம் சர்க்கிள் வரை 4 கி.மீ தூரம் வரை பிரதமர் மோடி ரோடு ஷோ நடைபெறும் சாலையின் ஒவ்வொரு அடியிலும் துணை ராணுவப் படையினருடன் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    800 துணை ராணுவப் படையினரும், 2500 போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஊர்க்காவல் படையினருடன் சிவில் மற்றும் போக்குவரத்து போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    ரோடு ஷோ காரணமாக இன்று இரவு 8 மணி வரை நகரின் முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. கவுடில்யா சர்க்கிளில் இருந்து எம்.டி.ஏ சந்திப்பு வரை ராதாகிருஷ்ணா சாலை, எம்.டி.ஏ சந்திப்பில் இருந்து ராமசாமி சர்க்கிள் வரை ஜே.எல்.பி சாலை, ராமசாமி சர்க்கிளில் இருந்து கன்ஹவுஸ் சர்க்கிள் வரை சாமராஜா ஜோடி சாலை, பசவேஸ்வரா சர்க்கிளில் இருந்து ஹைவே சர்க்கிள் வரை சாயாஜிராவ் சாலை வரையிலும், நெல்சன் மண்டேலா சாலையில் நெடுஞ்சாலை வட்டத்திலிருந்து எல்ஐசி வட்டம் வரையிலும், பழைய மைசூர் பெங்களூர் சாலையில் எல்ஐசி வட்டத்தில் இருந்து கெம்பேகவுடா வட்டம் வரையிலும், சுற்றுச் சாலையில் கெம்பேகவுடா வட்டத்திலிருந்து மைசூர் விமான நிலையம் வரையிலும் வாகனப் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.

    முன்னதாக இன்று காலை கர்நாடக மாநிலம் கோலார், ராம்நகர் ஆகிய பகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். 

    • பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ டெல்லியில் நடைபெற்றது
    • தேர்தல் குறித்த திட்டமிடல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    பா.ஜனதா பொதுச் செயலாளர்கள் கூட்டம் கடந்த 10-ந் தேதி நடைபெற்றது. இதில் கட்சியின் முக்கிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    அதன் தொடர்ச்சியாக பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் இன்றும், நாளையும் டெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் உள்ள என்.டி.எம்.சி. கன்வென்சன் சென்டரில் இன்று காலை தொடங்கியது. பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் இந்த கூட்டம் நடந்தது. கட்சியின் துணைத் தலைவர்கள், அனைத்து மாநில செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

    இந்த ஆண்டு 9 மாநில சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல் குறித்த திட்டமிடல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    ஜே.பி.நட்டாவின் பதவி காலம் வருகிற 20-ந் தேதி முடிவடைகிறது. இது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ (சாலை பேரணி) நடைபெற்றது.  திறந்த வாகனத்தில் பேரணியாக வந்த பிரதமர் மோடி, பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெறும் என்.டி.எம்.சி. கன்வென்சன் சென்டருக்கு வந்தடைந்தார். இதையொட்டி பா.ஜனதா கட்சியினர் அந்த பகுதியில் பிரதமர் மோடியின் கட் அவுட்களை வைத்து வரவேற்பு அளித்தனர். படேல் சவுக், சன்சாத் மார்க் பகுதியில் பா.ஜனதா கொடிகளும், கட் அவுட்களும் வைக்கப்பட்டிருந்தன. இதையொட்டி இந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ×