search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெட்மி நோட் 8"

    பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையின் இரண்டாமாண்டு நிறைவையொட்டி, நவம்பர் 8-ம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்க உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. #Demonetisation #Blackday #Congress
    டெல்லி:

    கருப்பு பணத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுகிறது என பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி அறிவித்தது. அதை தொடர்ந்து சரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி.யையும் மத்திய அரசு அமல்படுத்தியது.

    ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. ஆகியவற்றால் பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்தது. பிரதமர் மோடியின் தவறான கொள்கைகளால் தான் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டதாக காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.



    கடந்த ஆண்டும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்த நவம்பர் 8-ம் தேதியை கருப்பு தினமாக கடைப்பிடித்து காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

    பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்ததற்காக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் நாளை போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.

    இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறுகையில், கருப்பு பணம் ஒழிப்பு, பயங்கரவாதிகளுக்கு செல்லும் நிதியை தடுத்தல், கள்ள நோட்டுகளை அழித்தல் ஆகிய மூன்று நோக்கங்களுக்காக பண மதிப்பிழப்பு மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், 2 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், எந்த நோக்கமும் நிறைவேறவில்லை. முன்பைவிட தற்போது அதிக அளவு பணம் புழக்கத்தில் உள்ளது என தெரிவித்துள்ளார்.
    #Demonetisation #Blackday #Congress
    கூல்பேட் நிறுவனத்தின் நோட் 8 ஸ்மார்ட்போன் இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #CoolpadNote8



    கூல்பேட் நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

    நோட் சீரிஸ் புதிய மாடலில் 5.99 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் MT6750 பிராசஸர், ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ, 16 எம்.பி. பிரைமரி கேமரா, 0.3 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 8 எம்.பி. செல்ஃபி கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் ஃபேஸ் அன்லாக் வசதி, கைரேகை சென்சார் வசதி கொண்டிருக்கும் புதிய நோட் 8 ஸ்மார்ட்போன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.



    கூல்பேட் நோட் 8 சிறப்பம்சங்கள்:

    - 5.99 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் மீடியாடெக் MT6750 பிராசஸர்
    - மாலி T860 GPU
    - 4 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0 
    - 0.3 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    கூல்பேட் நோட் 8 ஸ்மார்ட்போன் கருப்பு நிறம் கொண்டுள்ளது. இந்தியாவில் ரூ.9,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கூல்பேட் நோட் 8 ஸ்மார்ட்போன் பே.டி.எம். மால் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை மற்றும் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #note8


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 22-ம் தேதி இந்தியாவில் வெளியிடப்பட இருக்கிறது. புதிய வெளியீட்டுக்கு முன் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 

    இந்தியாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ரூ.67,500 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட நோட் 8 ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.55,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அமேசான் வலைத்தளம் மற்றும் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் புதிய விலையில் கேலக்ஸி நோட் 8 விற்பனை செய்யப்படுகிறது. 

    விலை குறைப்பு மட்டுமின்றி தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.4,000 வரை கேஷ்பேக் பெற முடியும். கேலக்ஸி நோட் 8 டூயல் பிரைமரி கேமரா கொண்ட சாம்சங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனாக அமைந்தது. இதன் பிரைமரி கேமரா யூனிட் இரண்டு 12 எம்பி கேமராக்கள், 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.



    சாம்சங் கேலக்ஸி நோட் 8 சிறப்பம்சங்கள்:

    - 6.3 இன்ச் குவாட் எச்டி+AMOLED டிஸ்ப்ளே
    - குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்
    - சாம்சங் எக்சைனோஸ் ஆக்டா கோர் சிப்செட் (சில சந்தைகளில் மட்டும்)
    - 6 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ப்ளூடூத் 5.0, எல்டிஇ
    - 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா அமைப்பு
    - 8 எம்பி செல்ஃபி கேமரா
    - 3300 எம்ஏஎச் பேட்டரி
    - ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்

    சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் IP68 சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் டூயல் பிரைமரி கேமரா அமைப்பு ஐபோன் 7 பிளஸ் கேமராவிற்கு போட்டியாக இருக்கிறது. இத்துடன் எஸ்-பென், ஆல்வேஸ்-ஆன் டிஸ்ப்ளே, லைவ் மெசேஜஸ் போன்ற ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது. 
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஆன்8 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். #GalaxyOn8


    சாம்சங் கேலக்ஸி ஜெ8 ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து கேலக்ஸி ஆன்8 (2018) ஸ்மார்ட்போனினை சாம்சங் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 6.0 இன்ச் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED 18:5:9 ரக இன்ஃபினிட்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 450 சிப்செட், 4 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.0 (ஓரியோ) இயங்குதளம் சார்ந்த சாம்சங் UI கொண்டிருக்கிறது.

    டூயல் பிரைமரி கேமரா, 16 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், ஃபேஸ் அன்லாக் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்து இயங்கும் சாம்சங் மால் ப்ரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.



    சாம்சங் கேலக்ஸி ஆன்8 சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் 1480x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED 18.5: 9, 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14nm சிப்செட்
    - அட்ரினோ 506 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி 
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - டூயல் சிம்
    - 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.7
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/1.9
    - 16 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.9
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சாம்சங் கேலக்ஸி ஆன்8 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் புளு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் கேலக்ஸி ஆன்8 விலை ரூ.16,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஆகஸ்டு 6-ம் தேதி முதல் துவங்குகிறது. இத்துடன் வட்டியில்லா மாத தவணை முறை வசதி, சிறப்பு டேட்டா சலுகை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. #Samsung #GalaxyOn8
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜெ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மே மாதம் இந்தியாவில் அறிமுகமான நிலையில், இவை சுமார் 20 லட்சம் யூனிட்கள் விற்பனையை கடந்திருக்கிறது. #galaxyj8 #GalaxyJ6



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜெ6 மற்றும் ஜெ8 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. கேலக்ஸி ஜெ8 ஸ்மார்ட்போனின் விற்பனை கடந்த மாதம் அறிமுகமான நிலையில் இதுவரை சுமார் 20 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் கேலக்ஸி ஜெ6 மற்றும் ஜெ8 ஸ்மார்ட்போன்களுக்கு அதிகபட்ச வரவேற்பு கிடைத்திருப்பதாகவும், நாள் ஒன்றுக்கு 50,000 வாடிக்கையாளர்களை இவை கவர்ந்திருப்பதாக சாம்சங் அறிவித்துள்ளது. கேலக்ஸி ஜெ8 மற்றும் ஜெ6 ஸ்மார்ட்போன்களில் சாட்-ஓவர்-வீடியோ அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் சாம்சங்கின் நொய்டா ஆய்வு கூடத்தில் உருவாக்கப்பட்டதாகும்.

    சாட்-ஓவர்-வீடியோ அம்சம் இயக்கப்பட்டால், மொபைலில் வீடியோ பார்த்துக் கொண்டே நண்பர்களுடன் சாட் செய்யலாம். அதாவது வீடியோ பார்க்கும் போது, அதன் மேல் கண்ணாடி வடிவில் கீபோர்டு தெரியும். இதனால் வீடியோவை பார்த்துக் கொண்டே சாட்டிங் செய்யலாம்.



    கேலக்ஸி ஜெ6 மற்றும் ஜெ8 ஸ்மார்ட்போன்களில் முறையே 5.6 இன்ச் மற்றும் 6.0 இன்ச் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED 18:5:9 இன்ஃபினிட்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி ஜெ6 ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7870 14என்.எம். சிப்செட், கேலக்ஸி ஜெ8 மாடலில் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் மற்றும் 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

    இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த சாம்சங்கின் யூசர் இன்டர்ஃபேஸ் கொண்டு இயங்குகிறது. கேலக்ஸி ஜெ6 ஸ்மார்ட்போனில் 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா, இரண்டு கேமராக்களிலும் எல்இடி ஃபிளாஷ், F/1.9 அப்ரேச்சர் வழங்கப்பட்டுள்ளது. 

    கேலக்ஸி ஜெ8 மாடலில் 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது. #galaxyj8 #GalaxyJ6
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜெ8 ஸ்மார்ட்போன் ஜூன் 28-ம் தேதி முதல் விறப்னை செய்யப்படுகிறது. ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.





    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜெ8 ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஜெ6, கேலக்ஸி ஏ6 மற்றும் கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. 

    புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தின் போது ஸ்மார்ட்போன் விற்பனை ஜூலை 20-ம் தேதி முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனினும் ஸ்மார்ட்போன் விற்பனையை சாம்சங் முன்கூட்டியே துவங்குகிறது. 

    இது குறித்த அறிவிப்பை சாம்சங் மொபைல் இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தது. இந்த அறிவிப்புடன் ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் சிறிய வீடியோவாக பதிவிடப்பட்டு இருக்கிறது. இதில் புகைப்படத்தின் பின்புறம் இருக்கும் பேக்கிரவுன்ட் பிளர் பயனர் விருப்பப்படி வெவ்வேறு வடிவங்களில் செட் செய்து கொள்ளும் வகையில் வழங்கப்படுகிறது.

    இத்துடன் பல்வேறு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த அம்சங்களான போர்டிரெயிட் டால்லி, டூயல் பிரைமரி கேமரா மற்றும் புதிய சூம் எஃபெக்ட் உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது.



    சாம்சங் கேலக்ஸி ஜெ8 சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் 1480x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED 18.5: 9 இன்ஃபினிட்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 450 14nm சிப்செட்
    - அட்ரினோ 506 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.7
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/1.9
    - 16 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.9
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3500 எம்ஏஹெச் பேட்டரி

    இந்தியாவில் ரூ.18,990 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் கேலக்ஸி ஜெ8 ஸ்மார்ட்போன் புளு, பிளாக் மற்றும் கோல்டு என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. சாம்சங் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. சாம்சங் கேலக்ஸி ஜெ8 வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.1,500 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
    ஆடி நிறுவனத்தின் கியூ8 எஸ்யுவி மாடலின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஃபிளாக்ஷிப் எஸ்யுவி ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    புதுடெல்லி:

    ஆடி நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் எஸ்யுவி மாடல் ஷாங்காய் நகரில் ஜூன் 5-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

    அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன் ஆடி நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் மாடலின் டீசரை வெளியிட்டிருக்கிறது. ஆடி கியூ5 புதிய டீசர் இரண்டு வரைப்படங்களில் மாடலின் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ஏற்கனவே வெளியான ஸ்பை தகவல்களில் இடம்பெறவில்லை.

    புதிய வரைப்படங்களில் ஆடி கியூ8 முன்புறமும், பின்புறமும் காட்சியளிக்கிறது. இதன் முன்பக்கம் ஹூட் கிரீஸ் மற்றும் ஹெக்சாகோனல் கிரில் மற்றும் செங்குத்தாக பொருத்தப்பட்டிருக்கும் க்ரோம் ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் எல்இடி ஹெட்லைட்களும் பின்புறம் ஹேட்ச் மற்றும் டெயில் லைட்கள் வழங்கப்பட்டிருக்கிறது.



    கிரீஸ் செய்யப்பட்ட ஃபென்டர்கள் சக்கரங்களின் மேல் வழங்கப்பட்டிருப்பதோடு புதிய டிரேப்சாய்ட எக்சாஸ்ட் காரின் தோற்றத்தை மாற்றுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் கியூ சீரிஸ் மாடல்களை போன்று இல்லாமல் புதிய ஆடி கியூ8 வித்தியாச தோற்றம் பெற்றிருக்கிறது.

    புதிய ஆடி கியூ8 ஆடம்பர கூப் மற்றும் ஸ்போர்ட் கூப் மாடல்களை சேர்த்ததாக இருக்கும். ஆடி கியூ8 மாடல் 2017 டெட்ராயிட் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட கான்செப்ட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜெ மற்றும் ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் இன்று முதல் விற்பனை செய்யப்படுகின்றன.
    புதுடெல்லி:

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ6, கேலக்ஸி ஏ6 பிளஸ் மற்றும் ஜெ6 மற்றும் ஜெ6 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் இன்று முதல் விற்பனை செய்யப்படுகின்றன. சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, 18:5:9 ரக ஸ்கிரீன் கொண்டுள்ள நிலையில், கேலக்ஸி ஏ6 ஸ்மார்ட்போனில் 5.6 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன் மற்றும் ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6 இன்ச் FHD பிளஸ் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது.

    இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 16 எம்பி பிரைமரி கேமரா, f/1.7 அப்ரேச்சர், ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போனில் 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, லைவ் ஃபோகஸ் மோட் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் கொண்டு புகைப்படங்களை எடுக்கும் முன்போ அல்லது எடுத்த பின்னரோ டெப்த் ஆஃப் ஃபீல்டை இயக்க வழி செய்கிறது. கேலக்ஸி ஏ6 ஸ்மார்ட்போனில் 16 எம்பி செல்ஃபி கேமராவும், ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போனில் 24 எம்பி செல்ஃபி கேமரா, மற்றும் எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.

    கேலக்ஸி ஏ6 சீரிஸ் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் மெல்லிய மெட்டல் வடிவமைப்பு, அதிக உறுதியுடனும் கையில் இருந்து நழுவமால் இருக்க ஏதுவான வடிவைப்பு கொண்டுள்ளது. இத்துடன் முக அங்கீகார வசதி, கைரேகை சென்சார், ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, பிக்ஸ்பி விஷன், ஹோம், ரிமைன்டர் மற்றும் சாம்சங் பே மினி உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.



    சாம்சங் கேலக்ஸி ஏ6 சிறப்பம்சங்கள்:

    - 5.6 இன்ச் 1480x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED 18.5: 9 இன்ஃபினிட்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் எக்சைனோஸ் 7870 14nm சிப்செட்
    - மாலி T830 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.7
    - 16 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.9
    - கைரேகை சென்சார்
    - சாம்சங் பே மினி
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்ஏஹெச் பேட்டரி



    சாம்சங் கேலக்ஸி ஏ6 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் 1080x2220 பிக்சல் FHD பிளஸ் சூப்பர் AMOLED 18.5: 9 இன்ஃபினிட்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 450 14nm சிப்செட்
    - அட்ரினோ 506 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.7 
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/1.9
    - 24 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.9
    - கைரேகை சென்சார்
    - சாம்சங் பே மினி
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3500 எம்ஏஹெச் பேட்டரி

    இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ6 மற்றும் ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் பிளாக், புளு மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. கேலக்ஸி ஏ6 ஸ்மார்ட்போனின் 32 ஜிபி விலை ரூ.21,990 என்றும் 64 ஜிபி விலை ரூ.22,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போன் விலை ரூ.25,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் அமேசான் வலைத்தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.

    சாம்சங் கேலக்ஸி ஏ6 சீரிஸ் தவிர அந்நிறுவனத்தின் ஜெ6 மற்றும் ஜெ8 ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. 

    சாம்சங் கேலக்ஸி ஜெ6 மற்றும் கேலக்ஸி ஜெ8 ஸ்மார்ட்போன்களில் முறையே 5.6 இன்ச் மற்றும் 6.0 இன்ச் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED 18:5:9 ரக இன்ஃபினிட்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளேக்களை கொண்டுள்ளன. கேலக்ஸி ஜெ6 ஸ்மார்ட்போனில் ஆக்டாகோர் எக்சைனோஸ் 7870 14nm சிப்செட், கேலக்ஸி ஜெ8 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் மற்றும் அதிகபட்சம் 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளன.

    கேலக்ஸி ஜெ6 ஸ்மார்ட்போனில் 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமராவும், இரண்டு கேமராக்களிலும் எல்இடி ஃபிளாஷ், f/1.9 அப்ரேச்சப் வழங்கப்பட்டுள்ளன. கேலக்ஸி ஜெ8 ஸ்மார்ட்போனில் 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளன.



    சாம்சங் கேலக்ஸி ஜெ6 சிறப்பம்சங்கள்:

    - 5.6 இன்ச் 1480x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED 18.5: 9 இன்ஃபினிட்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் எக்சைனோஸ் 7870 14nm சிப்செட்
    - மாலி T830 GPU
    - 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
    - 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.9
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.9
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்ஏஹெச் பேட்டரி

    சாம்சங் கேலக்ஸி ஜெ8 சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் 1480x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED 18.5: 9 இன்ஃபினிட்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 450 14nm சிப்செட்
    - அட்ரினோ 506 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.7
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/1.9
    - 16 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.9
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3500 எம்ஏஹெச் பேட்டரி

    சாம்சங் கேலக்ஸி ஜெ6 மற்றும் ஜெ8 ஸ்மார்ட்போன்கள் பிளாக், கோல்டு மற்றும் புளு நிறங்களில் கிடைக்கிறது. கேலக்ஸி ஜெ6 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் மாடல் விலை ரூ.13,990 மற்றும் 4 ஜிபி ரேம் மாடல் விலை ரூ.16,490 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    இந்தியாவில் கேலக்ஸி ஜெ6 ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் மற்றும் பேடிஎம் மால் வலைத்தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது. கேலக்ஸி ஜெ8 ஸ்மார்ட்போனின் விலை ரூ.18,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் இதன் விற்பனை மட்டும் ஜூலை மாத வாக்கில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கான அறிமுக சலுகைகள்:

    சாம்சங் கேலக்ஸி ஜெ6, கேலக்ஸி ஏ6 மற்றும் கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை இன்று (மே 22-ம் தேதி) துவங்குகிறது. புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள் பேடிஎம் மால், சாம்சங் இ ஸ்டோர் மற்றும் இதர ஆன்லைன் விற்பனையாளர்களிடம் விற்பனை செய்யப்படுகிறது. கேலக்ஸி ஜெ6 ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்திலும், கேலக்ஸி ஏ6 மற்றும் கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அமேசான் இந்தியா தளத்தில் நடைபெறுகிறது. 

    கேலக்ஸி ஏ6 மற்றும் ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போன்களை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தினாலோ அல்லது பேடிஎம் மால் தளத்தில் வாங்கும் போது ரூ.3,000 கேஷ்பேக் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி ஜெ6 ஸ்மார்ட்போன் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு வாங்கினாலோ அல்லது பேடிஎம் மால் தளத்தில் வாங்கும் போது ரூ.1,500 வரை கேஷ்பேக் பெற முடியும்.
    இந்தியாவில் ஒன்பிளஸ் 6 வெளியானதை தொடர்ந்து சாம்சங் நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கு கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் 2018 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்ட நிலையில், சாம்சங் தனது ஸ்மார்ட்போன்களுக்கு கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது. 

    சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி ஏ8 பிளஸ் ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு ரூ.8000 வரை கேஷ்பேக் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புடன் More Than Just Speed என்ற டேக்லைன் இடம்பெற்றிருக்கிறது. சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, IP68 வாட்டர் ரெசிஸ்டண்ட், சாம்சங் பே மற்றும் பிக்ஸ்பி அசிஸ்டண்ட் போன்றவை இரண்டு ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

    இந்தியாவில் ஒன்பிளஸ் 6 வெளியிடப்பட்ட நாளில் சாம்சங் மொபைல் இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி ஏ8 பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கான சலுகை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. வேகத்தை கடந்து பல்வேறு விஷயங்களை பெறக்கூடிய சூழலில் ஏன் வேகத்திற்கு மட்டும் ஏற்று கொள்ள வேண்டும் என்ற வாக்கில் (Why settle for just speed when you can get much more than just speed) ட்வீட் செய்யப்பட்டிருந்தது. 



    சாம்சங் அறிவித்திருக்கும் புதிய சலுகையின் கீழ் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூ.8000 கேஷ்பேக் மற்றும் கேலக்ஸி ஏ8 பிளஸ் வாங்குவோருக்கு ரூ.5000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. சிறப்பு சலுகையின் கீழ் சாம்சங் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போனினை ரூ.37,990 விலையிலும், கேலக்ஸி ஏ8 பிளஸ் ஸ்மார்ட்போனினை ரூ.29,990 விலையில் வாங்கிட முடியும்.

    இரண்டு சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கான சலுகைகளும் பேடிஎம் மால் வலைத்தளத்தில் வழங்கப்படுகிறது. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போன் ரூ.45,990-க்கும், கேலக்ஸி ஏ8 பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ.32,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை சாம்சங் இந்தியா வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    சாசம்சங் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 8895 சிப்செட், 5.8 இன்ச் QHD பிளஸ் 1440x2960 பிக்சல் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, டூயல் வளைந்த டிஸ்ப்ளே, 18:5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டு பாதுகாக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது. 



    புகைப்படங்களை எடுக்க கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போனில் 12 எம்பி டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, OIS, f/1.7 அப்ரேச்சர், முன்பக்கம் 8 எம்பி செல்ஃபி கேமரா, f/1.7 அப்ரேச்சர், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போனில் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும், 3000 எம்ஏஹெச் பேட்டரி, வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

    கேலக்ஸி ஏ8 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம், 6.0 இன்ச் FHD பிளஸ் 1080x2220 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 18:5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, சாம்சங் எக்சைனோஸ் 7885 சிப்செட், 6 ஜிபி ரேம் கொண்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 16 எம்பி + 8 எம்பி செல்ஃபி கேமரா, 16 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

    64 ஜிபி இந்டெர்னல் மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ8 பிளஸ் ஸ்மார்ட்போனில் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி மற்றும் 3500 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. 
    ×