search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இந்தியாவில் 20 லட்சம் யூனிட்கள் விற்பனையான சாம்சங் ஸ்மார்ட்போன்
    X

    இந்தியாவில் 20 லட்சம் யூனிட்கள் விற்பனையான சாம்சங் ஸ்மார்ட்போன்

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜெ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மே மாதம் இந்தியாவில் அறிமுகமான நிலையில், இவை சுமார் 20 லட்சம் யூனிட்கள் விற்பனையை கடந்திருக்கிறது. #galaxyj8 #GalaxyJ6



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜெ6 மற்றும் ஜெ8 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. கேலக்ஸி ஜெ8 ஸ்மார்ட்போனின் விற்பனை கடந்த மாதம் அறிமுகமான நிலையில் இதுவரை சுமார் 20 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் கேலக்ஸி ஜெ6 மற்றும் ஜெ8 ஸ்மார்ட்போன்களுக்கு அதிகபட்ச வரவேற்பு கிடைத்திருப்பதாகவும், நாள் ஒன்றுக்கு 50,000 வாடிக்கையாளர்களை இவை கவர்ந்திருப்பதாக சாம்சங் அறிவித்துள்ளது. கேலக்ஸி ஜெ8 மற்றும் ஜெ6 ஸ்மார்ட்போன்களில் சாட்-ஓவர்-வீடியோ அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் சாம்சங்கின் நொய்டா ஆய்வு கூடத்தில் உருவாக்கப்பட்டதாகும்.

    சாட்-ஓவர்-வீடியோ அம்சம் இயக்கப்பட்டால், மொபைலில் வீடியோ பார்த்துக் கொண்டே நண்பர்களுடன் சாட் செய்யலாம். அதாவது வீடியோ பார்க்கும் போது, அதன் மேல் கண்ணாடி வடிவில் கீபோர்டு தெரியும். இதனால் வீடியோவை பார்த்துக் கொண்டே சாட்டிங் செய்யலாம்.



    கேலக்ஸி ஜெ6 மற்றும் ஜெ8 ஸ்மார்ட்போன்களில் முறையே 5.6 இன்ச் மற்றும் 6.0 இன்ச் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED 18:5:9 இன்ஃபினிட்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி ஜெ6 ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7870 14என்.எம். சிப்செட், கேலக்ஸி ஜெ8 மாடலில் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் மற்றும் 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

    இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த சாம்சங்கின் யூசர் இன்டர்ஃபேஸ் கொண்டு இயங்குகிறது. கேலக்ஸி ஜெ6 ஸ்மார்ட்போனில் 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா, இரண்டு கேமராக்களிலும் எல்இடி ஃபிளாஷ், F/1.9 அப்ரேச்சர் வழங்கப்பட்டுள்ளது. 

    கேலக்ஸி ஜெ8 மாடலில் 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது. #galaxyj8 #GalaxyJ6
    Next Story
    ×