search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Galaxy s8"

    இந்தியாவில் ஒன்பிளஸ் 6 வெளியானதை தொடர்ந்து சாம்சங் நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கு கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் 2018 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்ட நிலையில், சாம்சங் தனது ஸ்மார்ட்போன்களுக்கு கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது. 

    சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி ஏ8 பிளஸ் ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு ரூ.8000 வரை கேஷ்பேக் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புடன் More Than Just Speed என்ற டேக்லைன் இடம்பெற்றிருக்கிறது. சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, IP68 வாட்டர் ரெசிஸ்டண்ட், சாம்சங் பே மற்றும் பிக்ஸ்பி அசிஸ்டண்ட் போன்றவை இரண்டு ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

    இந்தியாவில் ஒன்பிளஸ் 6 வெளியிடப்பட்ட நாளில் சாம்சங் மொபைல் இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி ஏ8 பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கான சலுகை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. வேகத்தை கடந்து பல்வேறு விஷயங்களை பெறக்கூடிய சூழலில் ஏன் வேகத்திற்கு மட்டும் ஏற்று கொள்ள வேண்டும் என்ற வாக்கில் (Why settle for just speed when you can get much more than just speed) ட்வீட் செய்யப்பட்டிருந்தது. 



    சாம்சங் அறிவித்திருக்கும் புதிய சலுகையின் கீழ் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூ.8000 கேஷ்பேக் மற்றும் கேலக்ஸி ஏ8 பிளஸ் வாங்குவோருக்கு ரூ.5000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. சிறப்பு சலுகையின் கீழ் சாம்சங் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போனினை ரூ.37,990 விலையிலும், கேலக்ஸி ஏ8 பிளஸ் ஸ்மார்ட்போனினை ரூ.29,990 விலையில் வாங்கிட முடியும்.

    இரண்டு சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கான சலுகைகளும் பேடிஎம் மால் வலைத்தளத்தில் வழங்கப்படுகிறது. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போன் ரூ.45,990-க்கும், கேலக்ஸி ஏ8 பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ.32,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை சாம்சங் இந்தியா வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    சாசம்சங் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 8895 சிப்செட், 5.8 இன்ச் QHD பிளஸ் 1440x2960 பிக்சல் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, டூயல் வளைந்த டிஸ்ப்ளே, 18:5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டு பாதுகாக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது. 



    புகைப்படங்களை எடுக்க கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போனில் 12 எம்பி டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, OIS, f/1.7 அப்ரேச்சர், முன்பக்கம் 8 எம்பி செல்ஃபி கேமரா, f/1.7 அப்ரேச்சர், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போனில் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும், 3000 எம்ஏஹெச் பேட்டரி, வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

    கேலக்ஸி ஏ8 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம், 6.0 இன்ச் FHD பிளஸ் 1080x2220 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 18:5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, சாம்சங் எக்சைனோஸ் 7885 சிப்செட், 6 ஜிபி ரேம் கொண்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 16 எம்பி + 8 எம்பி செல்ஃபி கேமரா, 16 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

    64 ஜிபி இந்டெர்னல் மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ8 பிளஸ் ஸ்மார்ட்போனில் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி மற்றும் 3500 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. 
    ×