என் மலர்

  நீங்கள் தேடியது "black day"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ்நாட்டு மக்களின் நாட்டுப்பற்றையும், ஈகை குணத்தையும் வெளிப்படுத்திடவும், கொடிநாள் நிதிக்கு மக்கள் அனைவரும் தாராளமாக நிதி வழங்க வேண்டுமென முதல்-அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். #EdappadiPalaniswami #Blackday
  சென்னை:

  கொடிநாள் தினத்தையொட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  நம் தாய் திருநாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் புனிதப் பணியில் ஈடுபட்டுள்ள முப்படை வீரர்களின் சேவையையும் தியாகத்தையும் போற்றும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் திங்கள் 7-ம் நாள் நாடு முழுவதும் படை வீரர் கொடி நாளாக அனுசரிக்கப்படுகிறது.  இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்திருக்கும் நமது பாரத நாட்டின் எல்லைப் பகுதிகளை இரவு பகல் பாராது காவல் காப்பதோடு, புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின் போதும் நாட்டு மக்களை காக்கும் முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களின் நலன்களையும் பேணிக் காத்திடுவது நமது சமூகக் கடமையாகும்.

  தாய் நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை கொடுக்கும் தியாக சீலர்களான நமது முப்படை வீரர்களின் நலன் காத்திடவும், அவர்தம் குடும்பங்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, பல நலத் திட்டங்களை வகுத்து, சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது.

  போரில் உயிரிழந்த படை வீரர்களின் வாரிசு தாரர்களுக்கு உயர்த்தப்பட்ட கருணைத் தொகை மற்றும் கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குதல், முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகள் பட்ட படிப்புகள் மற்றும் பட்ட மேற்படிப்புகள் படிப்பதற்கான கல்வி உதவித் தொகையை உயர்த்தி வழங்குதல், முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர்க்கு மருத்துவ நிவாரண நிதியுதவித் தொகையை உயர்த்தி வழங்குதல், தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழகத்தின் வழியாக முன்னாள் படைவீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல் போன்ற பல்வேறு நலத் திட்டங்களை அம்மாவின் அரசு செவ்வனே செயல்படுத்தி வருகிறது.

  கொடி விற்பனை மூலம் திரட்டப்படும் நிதியானது, முப்படை வீரர்களின் குடும்ப நல்வாழ்விற்காகவும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்விற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

  இந்த சிறப்புமிக்க பணிகள் சீரிய முறையில் தொடர்ந்திடவும், தமிழ்நாட்டு மக்களின் நாட்டுப்பற்றையும், ஈகை குணத்தையும் வெளிப்படுத்திடவும், கொடிநாள் நிதிக்கு தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தாராளமாக நிதி வழங்கி சிறப்பிக்க வேண்டுமென நான் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

  இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். #EdappadiPalaniswami #Blackday
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையின் இரண்டாமாண்டு நிறைவையொட்டி, நவம்பர் 8-ம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்க உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. #Demonetisation #Blackday #Congress
  டெல்லி:

  கருப்பு பணத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுகிறது என பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி அறிவித்தது. அதை தொடர்ந்து சரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி.யையும் மத்திய அரசு அமல்படுத்தியது.

  ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. ஆகியவற்றால் பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்தது. பிரதமர் மோடியின் தவறான கொள்கைகளால் தான் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டதாக காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.  கடந்த ஆண்டும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்த நவம்பர் 8-ம் தேதியை கருப்பு தினமாக கடைப்பிடித்து காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

  பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்ததற்காக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் நாளை போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.

  இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறுகையில், கருப்பு பணம் ஒழிப்பு, பயங்கரவாதிகளுக்கு செல்லும் நிதியை தடுத்தல், கள்ள நோட்டுகளை அழித்தல் ஆகிய மூன்று நோக்கங்களுக்காக பண மதிப்பிழப்பு மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், 2 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், எந்த நோக்கமும் நிறைவேறவில்லை. முன்பைவிட தற்போது அதிக அளவு பணம் புழக்கத்தில் உள்ளது என தெரிவித்துள்ளார்.
  #Demonetisation #Blackday #Congress
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அசாம் குடிமக்கள் பட்டியல் விவகாரம் தொடர்பாக அசாம் சென்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மாநிலத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டதை கண்டித்து நாளை மறுநாள் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. #NRCBill #TMC
  கொல்கத்தா:

  அசாம் மாநிலத்தின் குடிமக்கள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் 40 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டும் வருகின்றனர்.  இதையடுத்து, அசாம் மாநிலத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் சென்ற போது, விமான நிலையத்திலேயே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்கள் பல மணி நேரம் காத்திருந்தும், மாநிலத்துக்குள் நுழைய அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதற்கு மக்களவையில் இன்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

  இந்நிலையில், நாளை (4.8.18) கருப்பு தினமாக அனுசரிக்க உள்ளதாகவும், இந்த விவகாரத்தை கண்டித்து, ஞாயிறு அன்று மிகப்பெரிய போராட்டம் நடத்த இருப்பதாகவும் மேற்கு வங்காள மந்திரி பர்தா சட்டர்ஜீ தெரிவித்துள்ளார். #NRCBill #TMC
  ×