கட்சியினர் தடுக்கப்பட்ட விவகாரம் - போராட்டத்தில் ஈடுபட திரிணாமுல் காங்கிரஸ் திட்டம்
அசாம் குடிமக்கள் பட்டியல் விவகாரம் தொடர்பாக அசாம் சென்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மாநிலத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டதை கண்டித்து நாளை மறுநாள் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. #NRCBill #TMC
அசாம் மாநிலத்தின் குடிமக்கள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் 40 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டும் வருகின்றனர்.