search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coolpad"

    கூல்பேட் நிறுவனம் இந்தியாவில் தனது கூல் 3 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. #Cool3 #Smartphone



    கூல்பேட் நிறுவனம் இந்தியாவில் கூல் 3 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய கூல் 3 ஸ்மார்ட்போனில் 5.71 இன்ச் ஹெச்.டி. பிளஸ் நாட்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் சிப்செட், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.

    புகைப்படங்களை எடுக்க 8 எம்.பி. பிரைமரி கேமரா, 0.3 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமராவும் செல்ஃபிக்களை எடுக்க 5 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் செல்ஃபி கேமராவுடன் பியூட்டிஃபை அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

    இத்துடன் ஃபேஸ் அன்லாக் வசதியும், ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புறம் இரட்டை நிறம் கிளாஸி பேக் கவர் கொண்டிருக்கிறது. 4ஜி வோல்ட்இ கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் கூல்பேட் கூல் 3 ஸ்மார்ட்போன் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.



    கூல்பேட் கூல் 3 சிறப்பம்சங்கள்:

    - 5.71 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
    - 1.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் பிராசஸர்
    - 2 ஜி.பி. ரேம்
    - 16 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆண்ட்ராய்டு 9.0 பை
    - 8 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 0.3 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    இந்தியாவில் கூல்பேட் கூல் 3 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், ரூபி பிளாக், ஓசன் இன்டிகோ மற்றும் டியல் கிரீன் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. கூல்பேட் கூல் 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.5,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் கிடைக்கிறது.
    கூல்பேட் நிறுவனத்தின் நோட் 8 ஸ்மார்ட்போன் இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #CoolpadNote8



    கூல்பேட் நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

    நோட் சீரிஸ் புதிய மாடலில் 5.99 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் MT6750 பிராசஸர், ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ, 16 எம்.பி. பிரைமரி கேமரா, 0.3 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 8 எம்.பி. செல்ஃபி கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் ஃபேஸ் அன்லாக் வசதி, கைரேகை சென்சார் வசதி கொண்டிருக்கும் புதிய நோட் 8 ஸ்மார்ட்போன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.



    கூல்பேட் நோட் 8 சிறப்பம்சங்கள்:

    - 5.99 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் மீடியாடெக் MT6750 பிராசஸர்
    - மாலி T860 GPU
    - 4 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0 
    - 0.3 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    கூல்பேட் நோட் 8 ஸ்மார்ட்போன் கருப்பு நிறம் கொண்டுள்ளது. இந்தியாவில் ரூ.9,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கூல்பேட் நோட் 8 ஸ்மார்ட்போன் பே.டி.எம். மால் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.
    கூல்பேட் நிறுவனம் இந்தியாவில் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. டூயல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனின் விலை மற்றும் முழு அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். #Smartphone


    கூல்பேட் மெகா 5ஏ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆஃப்லைன் சாதனமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5.45 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளே, குவாட்-கோர் ஸ்ப்ரெட்ரம் SC9850K பிராசஸர், 2 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டுள்ளது. 

    புகைப்படங்களை எடுக்க 8 எம்பி பிரைமரி கேமரா, ஃபிளாஷ், 0.3 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஃபேஸ் அன்லாக் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் மெகா 5ஏ ஸ்மார்ட்போனில் டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.



    கூல்பேட் மெகா 5ஏ சிறப்பம்சங்கள்:

    - 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்ப்ரெட்ரம் SC9850K பிராசஸர்
    - மாலி 400 GPU
    - 2 ஜிபி ரேம்
    - 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 8 எம்பி ஆட்டோஃபோகஸ் பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 0.3 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
    - 5 எம்பி செல்ஃபி கேமரா
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 2500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    கூல்பேட் மெகா 5ஏ ஸ்மார்ட்போன் தங்க நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் ஆஃப்லைன் முறையில் விற்பனைக்கு வரும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுக்க இன்று (ஆகஸ்டு 16) முதல் தமிழ் நாடு, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, டெல்லி, உத்திர பிரதேசம், அரியானா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
    ×