search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரயில்"

    • மகுடி -சிர்புர் டவுன் - காகஸ்நகர் பிரிவு இடையே புதிய பிளாட்பாரம் அமைக்கும் பணி துவங்குகிறது.
    • ெரயில் ஆகிய 5 ெரயில்கள் தெலுங்கானா மாநிலம், சிர்பூர் காகஸ்நகர் நிலையத்தில் நிற்காது

    திருப்பூர்,செப்.20-

    செகந்திராபாத் ெரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட, மகுடி -சிர்புர் டவுன் - காகஸ்நகர் பிரிவு இடையே புதிய பிளாட்பாரம் அமைக்கும் பணி துவங்குகிறது. இதனால் அவ்வழியாக பயணிக்கும் ெரயில்கள் வழித்தடம், இயக்கம், நின்று செல்லும் நிலையங்கள் குறைக்க ப்பட்டுள்ளது. வருகிற 25-ந்தேதி பிலாஸ்பூர் - எர்ணாகுளம் வாராந்திர ெரயில் (எண்: 22815) மஜ்ரி ஜங்ஷன் - பெட்டபல்லி ஜங்ஷன் வழியாக மாற்று வழியில் இயக்கப்படும். வழக்கமான வழித்தடமான சந்திராபூர், பால்ஹர்ஷஹ் ஜங்ஷன், சிர்பூர் காகஸ்நகர் நிலையங்களுக்கு செல்லாது.

    இதே நாளில் கொச்சுவேலி - கோர்பா (எண்:22648) ரெயில், அட்டவணையில் உள்ள வழித்தடமான கம்மம், வாரங்கல், ராமகுண்டம், பெலம்பல்லி, டுர்க் ஜங்ஷன் வரை 10 நிலையங்களுக்கு செல்லாது. விஜயவாடா - பிலாஸ்பூர் வழித்தடத்தில் இயக்கப்படும்.

    நாளை 21, 22 மற்றும் 24-ந்தேதி, கோரக்பூர் - கொச்சுவேலி ெரயில் (எண்:12511) இன்று 20 மற்றும் 23ந்தேதி கோர்பா - கொச்சுவேலி ெரயில் (எண்: 22647), 21ந்தேதி, கொச்சுவேலி - கோர்பா (எண்:22648), 22ந் தேதி எர்ணாகுளம் - பரூனி (எண்:12522), இதே நாளில் கோவையில் இருந்து புறப்படும் ஜெய்பூர் எக்ஸ்பிரஸ் (எண்:12969) ெரயில் ஆகிய 5 ெரயில்கள் தெலுங்கானா மாநிலம், சிர்பூர் காகஸ்நகர் நிலையத்தில் நிற்காது என தெற்கு ெரயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ராமேசுவரம்- செகந்திராபாத் இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயிலை மீண்டும் இயக்க கோரிக்கை எழுந்துள்ளது
    • புதுக்கோட்டையை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருவண்ணாமலை, திருப்பதி, காளஹஸ்தி சென்று வர வசதியாக இருந்ததாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்

    புதுக்கோட்டை, 

    தென் மத்திய ரெயில்வே மண்டலம் சார்பாக செகந்திராபாத்- ராமேசுவரம்- செகந்திராபாத் இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயிலாக கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ரெயில் புதுக்கோட்டை, கும்பகோணம், திருவண்ணாமலை, காட்பாடி, திருப்பதி, குண்டூர் வழியாக இயக்கப்பட்டது. செகந்திராபாத்-ராமேசுவரம் சிறப்பு ரெயில் (வண்டி எண்-07685) ஒவ்வொரு வாரமும் செவ்வாய் இரவு 9.25 மணிக்கு புறப்பட்டு புதுக்கோட்டைக்கு புதன் இரவு 10.43 மணிக்கு வந்து ராமேசுவரம் அதிகாலை 3.10 மணிக்கு சென்றடைந்தது. மறுமார்க்கத்தில் ராமேசுவரம்-செகந்திராபாத் சிறப்பு ரெயில் (07686) ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு புதுக்கோட்டைக்கு வெள்ளி அதிகாலை 3.40 மணிக்கு வந்து செகந்திராபாத் சந்திப்புக்கு சனி அதிகாலை 7.10 மணிக்கு சென்றடைந்தது. இந்த ரெயில் புதுக்கோட்டையை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருவண்ணாமலை, திருப்பதி, காளஹஸ்தி சென்று வர வசதியாக இருந்தது. இந்த ரெயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 24-ந் தேதியுடன் இந்த சிறப்பு ரெயில் நிறுத்தப்பட்டது. இந்த ரெயிலை மீண்டும் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக ரெயில்வே நிர்வாகத்தினரிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

    • கரூர் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது
    • வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு ௩ நாட்கள் சிறப்பு ரயில் கரூர் வழியாக இயக்கப்படுகிறது

    கரூர்,

    தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை, வாஸ்கோடகாமா- வேளாங்கண்ணி சிறப்பு ரயில் வரும், 27, செப்டம்பர் 1, 6ம் தேதிகளில் வாஸ்கோட காமாவில் இருந்து இரவு, 9:51 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை, 3:50 வேளாங்கண்ணியை சென்றடையும். இந்த ரயில் வரும், 28, செப்., 2 மற்றும் 7ல் மாலை, 6:58 மணிக்கு கரூர் வந்து இரவு, 7:00 மணிக்கு வேளாங்கண்ணிக்கு புறப் பட்டு செல்லும். மறுமார்க்கத்தில், வேளாங்கண்ணி-வாஸ்கோடகாமா சிறப்பு ரயில், வேளாங்கண்ணியில் இருந்து வரும், 30, செப்டம்பர் 4, 9 மதியம், 1:20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு, 8:00 மணிக்கு வாஸ்கோடகாமா சென்றடையும். இந்த ரயில் கரூருக்கு வரும், 30 மற்றும் செப்., 4, 9 ல் இரவு, 7:48 மணிக்கு வந்து, 7:50 மணிக்கு, வாஸ்கோடகாமா புறப்பட்டு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • நாடு முழுவதும் உள்ள 500 ரயில் நிலையங்களை அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பிரதமர் நரேந்திர மோடி மேம்படுத்து வதற்கான உத்தரவு
    • பாண்டிச்சேரியில் மட்டும் 93 கோடி செலவில் மேம்படுத்தப்பட உள்ளது

    திருச்சி.  

    நாடு முழுவதும் உள்ள 500 ரயில் நிலையங்களை அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பிரதமர் நரேந்திர மோடி மேம்படுத்து வதற்கான உத்தரவை பிறப்பித்து அதற்கான அடிகல்லையும் நாட்டியுள்ளார்.

    அதில் தென்னக ரெயில்வேயில் உள்ள 25 ரெயில் நிலையங்களை மேம்படுத்து வதற்கான பணிகள் தொடங்கியுள்ள நிலையில் தென்னக ரெயில்வேயின் திருச்சி கோட்ட மேலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறுகையில்...

    இந்திய ரெயில்வே தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அதில் குறிப்பாக நவீன மயமாக்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் மத்திய அரசு மூன்று ரயில் நிலையங்கள் அதிகப்படியான மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் மத்திய பிரதேசத்தில் உள்ள ராணிகமலாபதி, பெங்களூர் விஸ்வரேஸ்சய்யா ரெயில் நிலையம், குஜராத் காந்திநகர் செயில் நிலையம் ஆகியவை நவீன மயமாக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் 1309 ரெயில்கள் நவீன மயமாக்கப்பட உள்ளன.

    அதில் திருச்சி கோட்டத்தை பொறுத்தவரை 15 ரெயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட உள்ளது.

    அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம், காரைக்கால், மன்னார்குடி, திருப்பாதிப்புலியூர், சிதம்பரம், அரியலூர், திருவண்ணாமலை, விருத்தாச்சலம், வேலூர், கண்டோன்மென்ட், போளூர், லால்குடி ஆகிய ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி வருகிற 6-ந் தேதி இந்த அம்ரித் பாரத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்நிகழ்ச்சியில் திருச்சி கோட்ட அளவில் 4 ரெயில் நிலையங்கள் இணைக்கப்படுகிறது. அதில் மயிலாடுதுறை, தஞ்சாவூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகியவை இணைக்கப்படுகிறது.

    இந்த ரயில் நிலையங்கள் அனைத்திலும் வெளிநாடுகளில் இருப்பது போல் மேம்படுத்த பட உள்ளோம். அதில் நகரின் இரண்டு பகுதிகளையும் இணைக்கும் வகையிலும், ரெயில் நிலையங்களின் கட்டிடங்களை மேம்படுத்தி மறு வடிவமைப்பு செய்தல், நவீன வசதிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள், பயணிகளின் வழிகாட்டுதலுக்கான சைன் போர்டு அமைக்கப்பட உள்ளது. நம்ம ஊரின் கலாச்சாரம் பண்பாட்டை குறிக்கும் வகையில் கட்டிடங்கள் வடிவமைக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக பிரதமர் மோடி 508 ரெயில் நிலையங்களுக்கு பணிகளை தொடங்கி வைக்கிறார்.

    திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட 15 ரயில் நிலையங்களுக்கு 120 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் மொத்தம் 18 ரயில் நிலையங்களும் கேரளாவிற்கு 5 ரயில் நிலையங்களும் கர்நாடகாவில் ஒன்றும் புதுச்சேரியில் ஒன்றும் என மொத்தம் 25 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளது.

    அதில் பாண்டிச்சேரி மட்டும் 93 கோடி செலவில் மேம்படுத்தப்பட உள்ளது என்று கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் வணிக பிரிவு மேலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் பங்கேற்றனர்.

    • நெல்லையிலிருந்து வியாழக்கிழமை புறப்பட்டு வெள்ளிக்கிழமை பொள்ளாச்சி வந்து மேட்டுப்பாளையம் வரை இயக்கப்பட்டது.
    • இரவு 7:45 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் ெரயில் பொள்ளாச்சிக்கு இரவு 10:03 மணிக்கு வந்து 10:05க்கு புறப்படும். செவ்வாய்க்கிழமை காலை 7:45 மணிக்கு இந்த ெரயில் நெல்லை சென்றடையும்.

     உடுமலை:

    நெல்லை - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ெரயில் இயக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் 3மாதங்களாக இயக்கப்பட்ட iயில் நெல்லையில் வியாழக்கிழமை புறப்பட்டு வெள்ளிக்கிழமை பொள்ளாச்சி வந்து மேட்டுப்பாளையம் வரை இயக்கப்பட்டது.

    அதன்பின் மேட்டுப்பாளையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டு பொள்ளாச்சி வழியாக மீண்டும் நெல்லைக்கு சனிக்கிழமை சென்றடைந்தது.தற்போது ஜூலை 2-ந் தேதி முதல் செப்டம்பர் 25-ந் தேதி வரை இந்த ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரயில் இயக்கப்படும் நாட்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

    ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு நெல்லையில் புறப்படும் சிறப்பு ரெயில் திங்கட்கிழமை காலை 4:45 மணிக்கு பொள்ளாச்சி அடையும். அதன்பின் 4:47 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையம் சென்றடையும்.மறு மார்க்கத்தில் திங்கட்கிழமை இரவு 7:45 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் ரயில் பொள்ளாச்சிக்கு இரவு 10:03 மணிக்கு வந்து 10:05க்கு புறப்படும். செவ்வாய்க்கிழமை காலை 7:45 மணிக்கு இந்த ரயில் நெல்லை சென்றடையும். மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, போத்தனூர், பொள்ளாச்சி, உடுமலை, பழநி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லுார், தென்காசி, பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ரெயில்நிலையங்களில் நிறுத்தப்படும். இத்தகவலை தெற்கு ெரயில்வே பாலக்காடு கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ரயில்வே அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பில், பொள்ளாச்சிக்கு அடுத்ததாக போத்தனூர் ரயில்வே சந்திப்பில் வாராந்திர ரயில் நிற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த முறை கிணத்துக்கடவில் நிறுத்தப்பட்ட இந்த ரயில், தற்போது அங்கு நிறுத்தம் செய்ய அறிவிப்பு இல்லை.கிணத்துக்கடவில் ரயில் நிற்காமல் செல்வதால் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.இங்கும் ரயில் நிறுத்தம் செய்ய வேண்டும் என கிணத்துக்கடவு ரயில் பயணியர் வலியுறுத்தியுள்ளனர்.

    • சென்னை - ராமேஸ்வரம் விரைவு ர‌யி‌லை மீண்டும் ரயில்வே இயக்க எடுக்க வேண்டும்.
    • விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள் பயன்படும் பேராவூரணி - சென்னைக்கு தினசரி விரைவு ரயில் இயக்க வேண்டும்.

    பேராவூரணி:

    விரைவு ரயில்கள் பேராவூரணி ரயில் நிலையத்தில் நின்று செல்லவும், ஏற்கனவே பேராவூரணி வழித்தடத்தில் தினசரி இயக்கப்பட்ட சென்னை - ராமேஸ்வரம் விரைவு ர‌யி‌லை மீண்டும் தொடர்ந்து இயக்க தென்னக ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, சுதந்திரப் போராட்ட வீரர்கள், வாரிசுதாரர்கள் நலப்பிரிவு மாநிலச் செயலாளர் சமூக ஆர்வலர் எஸ்.ஏ.தெட்சணாமூர்த்தி, தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, பேராவூரணி தாலுகா தலைநகரமாகவும், சட்டமன்றத் தொகுதி தலைமை இடமாகவும், தேர்வுநிலை பேரூராட்சியாகவும் உள்ளது.

    இப்பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் விவசாயம், மீன், கருவாடு, உப்பு, தேங்காய் ஏற்றுமதி தொழில், வேலை, கல்வி, மருத்துவம், ஆன்மீகம் என பல்வேறு தேவைகளுக்காக தினந்தோறும் வெளியூர் சென்று வருகின்றனர்.

    பேராவூரணி ரயில் நிலையம் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ரயில் நிலையம். சென்னை, மதுரை, ராமேஸ்வரம் செல்வதற்கும் பேராவூரணி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி பகுதி மக்கள் ரயில் போக்குவரத்தை பெரிதும் நம்பி உள்ளனர்.

    இந்த வழித்தடத்தில் ஏற்கனவே தினசரி விரைவு ரயில் ராமேஸ்வரம் - சென்னைக்கு இயக்கப்ப ட்டது. தற்போது, சிறப்பு ரயில் மட்டுமே அவ்வப்போது இயக்கப்படுகிறது.

    எனவே, இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள் பயன்படும் வகையில், பேராவூரணி வழியாக சென்னைக்கு தினசரி விரைவு ரயில் இரு வழிகளிலும் இயக்க வேண்டும்.

    மேலும், தற்போது இயக்கப்பட்டு வரும் செகந்திராபாத் - எர்ணாகுளம் சிறப்பு விரைவு ரயில் உள்ளிட்ட விரைவு ரயில்கள், பேராவூரணி ரயில் நிலையத்தில், ஒரு நிமிடம் நின்று பயணிகளை இறக்கி, ஏற்றிச் செல்லவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    மனுவின் நகல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ச.சு.பழனி மாணிக்கம் (தஞ்சாவூர்), சு.திருநாவுக்கரசர் (திருச்சி) கார்த்திக் சிதம்பரம் (சிவகங்கை), சட்டமன்ற உறுப்பினர்கள் என்.அசோக்குமார் (பேரா வூரணி), டி.ராமச்சந்திரன் (அறந்தாங்கி) மாங்குடி (காரைக்குடி) ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

    • தண்டவாளத்தை கடக்கும் போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த ரெயில் மாணிக்கம் மீது மோதியது.
    • திருப்பூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர், வஞ்சிபா ளையத்தை சேர்ந்தவர், மாணிக்கம் (58).இவர் கோவையில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக, திருச்சி - பாலக்காடு டவுன் ரயிலில் ஏற, வஞ்சிபாளையம் ஸ்டேஷனுக்கு வந்துள்ளார்.

    அப்போது தண்டவா ளத்தை கடக்கும் போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த ரெயில் மாணிக்கம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    தகவல் கிடைத்ததும் திருப்பூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருப்பூர் வரும் ரயில்களில் போதை பொருள்கள் கடத்தி வருவதாக ரயில்வே போலீசருக்கு தகவல் கிடைத்தது.
    • தன்பாத்திலிருந்து கேரளா மாநில செல்லும் விரைவு ரெயிலில் பொது பெட்டியில் போலீசார் சோதனை செய்தனர்.

    திருப்பூர் :

    மாநிலங்களிலிருந்து திருப்பூர் வரும் ரயில்களில் போதை பொருள்கள் கடத்தி வருவதாக திருப்பூர் ரயில்வே போலீசருக்கு தகவல் கிடைத்தது.

    அந்த தகவல்களின் அடிப்படையில் திருப்பூர் ரயில்வே சாப்- இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, போலீஸ்கா ரர்கள் ராஜலிங்கம், சையது முகமது, கோபால் ஆகியோர் தன்பாத்திலிருந்து கேரளா மாநில செல்லும் விரைவு ரெயிலில் பொது பெட்டியில் போலீசார் சோதனை செய்தனர்.

    அப்போது பாத்ரூம் அருகில் ஒரு மூட்டை ஒன்று கிடந்தது அதனை சோதனை செய்து பார்த்தபோது அதில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் 12 கிலோ இருப்பது தெரிய வந்தது. போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். மேலும் அதை யார் கடத்தி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மயிலம் அருகே ரயில் மோதி மூதாட்டி பலியானார்.
    • காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டின் அருகே உள்ள ரயில் பாதையை கடக்க முயன்றுள்ளார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் அருகே மயிலம் போலீஸ் சரகம் சின்ன நெற்குணம் கிரா மத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. அவரது மனைவி குப்பம்மாள் (வயது70). இவர் இன்று அதி காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டின் அருகே உள்ள ெரயில் பாதை–யை கடக்க முயன்றுள்ளார். அப்போது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற ெரயில் மூதாட்டி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு மூதாட்டி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு ெரயில்வே இரும்பு பாதை போலீசார் மூதாட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • கடலூர் அருகே ரயில் மோதி பெண் இறந்தார்.
    • எதிர்பாராதவிதமாக ரயில் மோதி மூதாட்டி உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார் .

    கடலூர் :

    திருப்பதியில் இருந்து மன்னார்குடி நோக்கி எக்ஸ்பிரஸ் ெரயில் நெல்லிக்குப்பம் வழியாக நேற்று மாலை சென்று கொண்டிருந்தது . அப்போது கடலூர் அடுத்த கோண்டூர் பகுதியில் ரயில் தண்டவாளம் அருகே 50 வயது மூதாட்டி ஒருவர் சென்று கொண்டிருந்தார் . அப்போது எதிர்பாராதவிதமாக ரயில் மோதி மூதாட்டி உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார் . இத்தகவல் அறிந்த கடலூர் முதுநகர் ெரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த மூதாட்டி உடலை கைப்பற்றி கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர் . இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த பெண் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிேரதபரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
    • எனக்கு வாழப்பிடிக்க வில்லை, அதனால் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொள்கிறேன்.

    திருப்பூர்:

    திருப்பூர் 2-வது ரெயில்வேகேட் அருகே தண்டவாளத்தில் 17வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் ரெயில் அடிப்பட்டு பிணமாக கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிைடத்தது. தகவல் கிடைத்ததும் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிேரதபரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    பின்னர் ரெயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்த சிறுவன் யார் ,எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது திருப்பூர் பலவஞ்சிப்பளையம் மூகாம்பிகை நகரை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் விமல்ராஜ் (வயது 17) என்பதும், 11-ம் வகுப்பு மாணவன் என்பதும் தெரியவந்தது.

    போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய போது விமல்ராஜூக்கு திக்குவாய் இருந்துள்ளது. இதனால் தனது நண்பர்களுடன் சகஜமாக பேச முடியவில்லையே என்று பெற்றோரிடம் கூறி வந்துள்ளான். இதற்கிைடயே மாணவனின் வீட்டு தண்ணீர் கேன் அருகில் ஒரு கடிதம் இருந்தது. அதனை போலீசார் எடுத்து பார்த்த போது அது மாணவன் எழுதிய கடிதம் என்பது தெரிய வந்தது.

    அந்த கடிதத்தில் , எனக்கு திக்கு வாய் என்பதால் நண்பர்கள் யாருடனும் சகஜமாக பேசமுடியவில்லை, மேலும் எனது அப்பா அம்மாவுக்கும் எந்த வேலையும் செய்து கொடுக்க முடியவில்லை. எனக்கு வாழப்பிடிக்க வில்லை .அதனால் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் கிடையாது. இது நானே எடுத்த முடிவு. ஐ லவ்யூ அப்பா, அம்மா, தங்கை, பாட்டி, நண்பர்கள் என உருக்கமாக எழுதப்பட்டு இருந்தது. கடித்தை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×