search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரதமர் நரேந்திர மோடி வருகிற 6-ந் தேதி இந்த அம்ரித் பாரத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்
    X

    பிரதமர் நரேந்திர மோடி வருகிற 6-ந் தேதி இந்த அம்ரித் பாரத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்

    • நாடு முழுவதும் உள்ள 500 ரயில் நிலையங்களை அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பிரதமர் நரேந்திர மோடி மேம்படுத்து வதற்கான உத்தரவு
    • பாண்டிச்சேரியில் மட்டும் 93 கோடி செலவில் மேம்படுத்தப்பட உள்ளது

    திருச்சி.

    நாடு முழுவதும் உள்ள 500 ரயில் நிலையங்களை அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பிரதமர் நரேந்திர மோடி மேம்படுத்து வதற்கான உத்தரவை பிறப்பித்து அதற்கான அடிகல்லையும் நாட்டியுள்ளார்.

    அதில் தென்னக ரெயில்வேயில் உள்ள 25 ரெயில் நிலையங்களை மேம்படுத்து வதற்கான பணிகள் தொடங்கியுள்ள நிலையில் தென்னக ரெயில்வேயின் திருச்சி கோட்ட மேலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறுகையில்...

    இந்திய ரெயில்வே தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அதில் குறிப்பாக நவீன மயமாக்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் மத்திய அரசு மூன்று ரயில் நிலையங்கள் அதிகப்படியான மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் மத்திய பிரதேசத்தில் உள்ள ராணிகமலாபதி, பெங்களூர் விஸ்வரேஸ்சய்யா ரெயில் நிலையம், குஜராத் காந்திநகர் செயில் நிலையம் ஆகியவை நவீன மயமாக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் 1309 ரெயில்கள் நவீன மயமாக்கப்பட உள்ளன.

    அதில் திருச்சி கோட்டத்தை பொறுத்தவரை 15 ரெயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட உள்ளது.

    அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம், காரைக்கால், மன்னார்குடி, திருப்பாதிப்புலியூர், சிதம்பரம், அரியலூர், திருவண்ணாமலை, விருத்தாச்சலம், வேலூர், கண்டோன்மென்ட், போளூர், லால்குடி ஆகிய ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி வருகிற 6-ந் தேதி இந்த அம்ரித் பாரத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்நிகழ்ச்சியில் திருச்சி கோட்ட அளவில் 4 ரெயில் நிலையங்கள் இணைக்கப்படுகிறது. அதில் மயிலாடுதுறை, தஞ்சாவூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகியவை இணைக்கப்படுகிறது.

    இந்த ரயில் நிலையங்கள் அனைத்திலும் வெளிநாடுகளில் இருப்பது போல் மேம்படுத்த பட உள்ளோம். அதில் நகரின் இரண்டு பகுதிகளையும் இணைக்கும் வகையிலும், ரெயில் நிலையங்களின் கட்டிடங்களை மேம்படுத்தி மறு வடிவமைப்பு செய்தல், நவீன வசதிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள், பயணிகளின் வழிகாட்டுதலுக்கான சைன் போர்டு அமைக்கப்பட உள்ளது. நம்ம ஊரின் கலாச்சாரம் பண்பாட்டை குறிக்கும் வகையில் கட்டிடங்கள் வடிவமைக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக பிரதமர் மோடி 508 ரெயில் நிலையங்களுக்கு பணிகளை தொடங்கி வைக்கிறார்.

    திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட 15 ரயில் நிலையங்களுக்கு 120 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் மொத்தம் 18 ரயில் நிலையங்களும் கேரளாவிற்கு 5 ரயில் நிலையங்களும் கர்நாடகாவில் ஒன்றும் புதுச்சேரியில் ஒன்றும் என மொத்தம் 25 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளது.

    அதில் பாண்டிச்சேரி மட்டும் 93 கோடி செலவில் மேம்படுத்தப்பட உள்ளது என்று கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் வணிக பிரிவு மேலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் பங்கேற்றனர்.

    Next Story
    ×