search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை வழியாக நெல்லை- மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
    X

    உடுமலை வழியாக நெல்லை- மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

    • நெல்லையிலிருந்து வியாழக்கிழமை புறப்பட்டு வெள்ளிக்கிழமை பொள்ளாச்சி வந்து மேட்டுப்பாளையம் வரை இயக்கப்பட்டது.
    • இரவு 7:45 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் ெரயில் பொள்ளாச்சிக்கு இரவு 10:03 மணிக்கு வந்து 10:05க்கு புறப்படும். செவ்வாய்க்கிழமை காலை 7:45 மணிக்கு இந்த ெரயில் நெல்லை சென்றடையும்.

    உடுமலை:

    நெல்லை - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ெரயில் இயக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் 3மாதங்களாக இயக்கப்பட்ட iயில் நெல்லையில் வியாழக்கிழமை புறப்பட்டு வெள்ளிக்கிழமை பொள்ளாச்சி வந்து மேட்டுப்பாளையம் வரை இயக்கப்பட்டது.

    அதன்பின் மேட்டுப்பாளையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டு பொள்ளாச்சி வழியாக மீண்டும் நெல்லைக்கு சனிக்கிழமை சென்றடைந்தது.தற்போது ஜூலை 2-ந் தேதி முதல் செப்டம்பர் 25-ந் தேதி வரை இந்த ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரயில் இயக்கப்படும் நாட்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

    ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு நெல்லையில் புறப்படும் சிறப்பு ரெயில் திங்கட்கிழமை காலை 4:45 மணிக்கு பொள்ளாச்சி அடையும். அதன்பின் 4:47 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையம் சென்றடையும்.மறு மார்க்கத்தில் திங்கட்கிழமை இரவு 7:45 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் ரயில் பொள்ளாச்சிக்கு இரவு 10:03 மணிக்கு வந்து 10:05க்கு புறப்படும். செவ்வாய்க்கிழமை காலை 7:45 மணிக்கு இந்த ரயில் நெல்லை சென்றடையும். மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, போத்தனூர், பொள்ளாச்சி, உடுமலை, பழநி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லுார், தென்காசி, பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ரெயில்நிலையங்களில் நிறுத்தப்படும். இத்தகவலை தெற்கு ெரயில்வே பாலக்காடு கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ரயில்வே அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பில், பொள்ளாச்சிக்கு அடுத்ததாக போத்தனூர் ரயில்வே சந்திப்பில் வாராந்திர ரயில் நிற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த முறை கிணத்துக்கடவில் நிறுத்தப்பட்ட இந்த ரயில், தற்போது அங்கு நிறுத்தம் செய்ய அறிவிப்பு இல்லை.கிணத்துக்கடவில் ரயில் நிற்காமல் செல்வதால் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.இங்கும் ரயில் நிறுத்தம் செய்ய வேண்டும் என கிணத்துக்கடவு ரயில் பயணியர் வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×