search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரத்து"

    • முசிறி அருகே பரபரப்பு கோவில் பூஜை ரத்து செய்யப்பட்டது
    • காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் ஊர் கோவிலில் வழிபாடு செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் பிரச்சினை

    திருச்சி,

    திருச்சி மாவட்டம் முசிறி அருகே சூரம்பட்டி என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஒரு சமூகத்துக்கு சொந்தமான வேடிச்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இதில் எட்டு பட்டி கிராமத்தைச் சேர்ந்த அந்த சமுதாய மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் அந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் வேற்று சமூகப் பெண்களை காதல் திருமணம் செய்து கொண்ட 8 வாலிபர்களுக்கு கோவிலில் வழிபாடு நடத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இவர்களில் 2 பேர் ஊருக்குள் குடியிருந்து வருகின்றனர். மற்றவர்கள் சென்னை, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வருகின்றனர். கோவில் திருவிழாவை முன்னிட்டு ஊர் திரும்பினர். ஆனால் ஊர் கட்டுப்பாடு காரணமாக கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்த அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட காதல் திருமண ஜோடிகள் முசிறி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதைத்தொடர்ந்து முசிறி தாசில்தார் அலுவலகத்தில் முத்தரப்பு சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக விழாவில் அந்த வாலிபர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.ஆனால் அதன் பின்னர் நடைபெற்ற பூஜைகளிலும், வழிபாடுகளிலும் காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர்கள் தேங்காய் உடைத்து வழிபாடு செய்ய ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் மீண்டும் முசிறி போலீஸ் நிலையத்தை நாடினர்.அப்போது இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் இரு தரப்பையும் அழைத்து விசாரணை நடத்தினார். மேலும் காதல் திருமணம் செய்து கொண்டதற்காக யாரையும் ஒதுக்கி வைக்க சட்டத்தில் இடமில்லை. அவ்வாறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இருப்பினும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அதைத்தொடர்ந்து நடைபெற இந்த பூஜை வழிபாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டது.

    இது தொடர்பாக விசாரணை அதிகாரி கூறும் போது,

    காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் கோவிலில் வழிபட எதிர்ப்பு இல்லை. மற்றவர்களைப் போன்று அவர்களும் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து மொட்டை அடித்துக் கொள்ளலாம்.ஆனால் அவர்களிடமிருந்து கோவில் நிர்வாகம் வரி வசூல் செய்யவில்லை. இதுதான் அங்குள்ள பிரச்சனையாக இருக்கிறது. இப்போது நடந்த பேச்சுவார்த்தையில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் முப் பூஜைக்கு காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர்களிடம் வரி வசூல் செய்து ஊர் வழக்கப்படி சில சடங்குகளை செய்து அதன் பின்னர் அவர்களை சேர்த்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர் என தெரிவித்தார். ஆனால் இதற்கும் ஒரு தரப்பினர் முட்டுக்கட்டையாக உள்ளனர்.காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் கோவிலில் சாமி கும்பிட அனுமதி மறுத்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வீட்டுமனை பட்டாக்களை முறைகேடு செய்து விற்கப்படுகிறது.
    • பட்டாக்கள் மீதான ஒப்படைப்பு ஆணையை ரத்து செய்ய வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் காஞ்சிரங்குடி பகுதியில் ஆதிதிராவிட பயனாளிகளுக்கு 1995-ம் ஆண்டில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. தற்போது அது தொடர்பான ஆணைகளில் திருத்தம் செய்ய வேண்டி இருப்பதாகவும், அதற்காக தாசில்தார் அவற்றைக் கேட்பதாகவும் கூறி, சில தனிநபர்கள் பட்டாக்களை பயனாளிகளிடம் வாங்கிச் சென்றதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் அந்த நபர்கள் பட்டா ஆவணங்களை வைத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட இடங்களை வேலி அமைத்து ஆக்கிரமித்து வருவதாகவும், போலி ஆவணங்கள் தயாரித்து அந்த இடங்களை விற்பனை செய்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்டுத்தர வேண்டும் என காஞ்சிரங்குடி காலனி கிராமத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீசிடம் மனு அளித்தனர்.

    அதில், கடந்த 1995-ம் ஆண்டு பட்டாக்கள் வழங்கப்பட்ட பயனாளிகளுக்கு இ-பட்டா வழங்க வேண்டும் என்றும், புதிதாக வழங்கப்பட்டுள்ள பட்டாக்கள் மீதான ஒப்படைப்பு ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தற்போது 40ம் எண்நூல் ஒரு கிலோ 245 ரூபாய்க்கும், 60ம் எண் நூல் ஒரு கிலோ 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
    • பல மில்கள் தினமும் ஒரு லட்சம் ரூபாய் முதல் இரண்டு லட்ச ரூபாய் இழப்புடன் இயங்கி வருகின்றன.

    திருப்பூர்:

    கோவை புறநகரில் சரவணம்பட்டி, கோவில்பாளையம், அன்னூர் மற்றும் புளியம்பட்டி பகுதியில் 3,000 முதல் 50 ஆயிரம் ஸ்பின்டில் திறன் வரை உள்ள ஸ்பின்னிங் மில்கள் உள்ளன. கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து பருத்தி மற்றும் பஞ்சு கொள்முதல் செய்து நூல் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு பெரும்பாலும் 40 மற்றும் 60ம் எண் நூல் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது.இங்கு உற்பத்தியாகும் நூல் சோமனூர், திருப்பூர், ஈரோடு மற்றும் பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    அன்னூர் தாலுகாவில் மட்டும் கரியாம்பாளையம், குன்னத்தூர், கெம்பநாயக்கன்பாளையம், பொகலுார், பசூர், கஞ்சப்பள்ளி உட்பட பல பகுதிகளில் 110 ஸ்பின்னிங் மில்கள் உள்ளன.கடந்த சில மாதங்களாக 3 ஷிப்டுகள் இயங்கி வந்த ஸ்பின்னிங் மில்கள், இரண்டு ஷிப்டுகளாக மாறின. தற்போது ஒரு ஷிப்ட் மட்டுமே இயங்கி வருகின்றன. ஒரு சில மில்கள் மட்டுமே இரண்டு ஷிப்டுகள் இயங்குகின்றன. சில ஸ்பின்னிங் மில்கள் வாரத்திற்கு 2 நாள் விடுமுறை அறிவித்துள்ளன.சில மில்களில் ஒடிசா, பீஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து வரவழைத்திருந்த தொழிலாளர்களுக்கு நீண்ட விடுமுறை அளித்து அனுப்பி விட்டனர்.

    இது குறித்து ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது:-

    கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவு ஸ்பின்னிங் மில்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்போது, 356 கிலோ எடையுள்ள ஒரு கண்டி பஞ்சு 65 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த பஞ்சில் நூல் உற்பத்தி செய்யும்போது ஒரு கிலோ நூல் வங்கிக் கடனுக்கான வட்டி இல்லாமல் 283 ரூபாய் அசல் ஆகிறது.

    தற்போது 40ம் எண்நூல் ஒரு கிலோ 245 ரூபாய்க்கும், 60ம் எண் நூல் ஒரு கிலோ 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோவுக்கு 33 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதிலும் வங்கியில் கடன் பெற்றவர்களுக்கு வட்டியை சேர்த்தால் ஒரு கிலோவுக்கு 50 ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. பல மில்கள் தினமும் ஒரு லட்சம் ரூபாய் முதல் இரண்டு லட்ச ரூபாய் இழப்புடன் இயங்கி வருகின்றன. இந்த நிலை மீண்டு விடும் என்கிற நம்பிக்கையில் நஷ்டத்துடன் விற்பனை செய்து வருகின்றனர். விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிக தொழிலாளர்களுக்கு வேலை தரும் ஜவுளித்துறை நிலைத்து நிற்க மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    மத்திய மாநில அரசுகள் உடனடியாக நூற்பாலைகளுக்கு மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். தற்போது வசூலிக்கப்படும் வங்கி கடனுக்கான வட்டியை குறைக்க வேண்டும். ஸ்பின்னிங் மில் முதலீட்டுக்கு மானியம் அளிக்க வேண்டும். உள்ளூரிலேயே பருத்தி அதிக அளவில் விளைவிப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும். வெளிநாடுகளுக்கு பருத்தி, பஞ்சு ஏற்றுமதி செய்யக்கூடாது. நூல் இறக்குமதிக்கு கூடுதல் வரி விதிக்க வேண்டும். அதிக கட்டுப்பாடு விதிக்க வேண்டும். நுால் ஏற்றுமதியாளர்களுக்கு கூடுதல் சலுகை தர வேண்டும் என்றனர்.

    இந்தநிலையில் பஞ்சு மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என ஜவுளி உற்பத்தியாளர்கள் சார்பில், மத்திய ஜவுளித்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இது குறித்து விசைத்தறி மேம்பாடு மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்(பெடக்சில்) துணைத்தலைவர் பல்லடத்தை சேர்ந்த சக்திவேல் கூறியதாவது:-

    ஜவுளி தொழில் துறை சார்பில், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இணை அமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் ஆகியோரை, குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் நடந்த நிகழ்ச்சியின்போது சந்தித்து, கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. விஸ்கோஸ் மற்றும் செயற்கை நூல் இழைகளுக்கு, மத்திய அரசின் பல்வேறு தர கட்டுப்பாட்டு ஆணைகள் மூலம் கட்டாய சான்று பெறும் விதிமுறை நடைமுறையில் உள்ளது. ஜவுளி உற்பத்தி தொழில் வளர்ச்சிக்கு, இது பெரும் தடையாக உள்ளது. விஸ்கோஸ் மற்றும் செயற்கை நூல் இழைக்கு அரசின் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தில் இருந்து,விலக்கு அளிக்க வேண்டும்.

    உள்நாட்டில் போதிய அளவு பருத்தி சாகுபடி கிடையாது. துணி உற்பத்திக்கு தேவையான பருத்தி - பஞ்சினை வெளிநாட்டில் இருந்து தான் இறக்குமதி செய்தாக வேண்டும் என்ற நிலை உள்ளது. இவ்வாறு, இறக்குமதி செய்யப்படும் பஞ்சுக்கு 11 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இது துணி உற்பத்தி செலவை அதிகரிக்க செய்கிறது.உள்நாட்டில் பருத்தி சாகுபடியை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்சு மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும். இதன் மூலம் துணி உற்பத்தியை பெருக்கி ஏற்றுமதி வாய்ப்பை அதிகப்படுத்த முடியும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • கோவில்பட்டி-குமாரபுரம் இடையே ெரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
    • ெரயில் இன்றும், வருகிற 17-ந் தேதியும் தேதியும் ரத்து.

    கோவை,

    கோவை-நாகர்கோவில் ெரயில் இன்றும், வருகிற 17-ந் தேதியும் தேதி பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ெரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக சேலம் ெரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை ெரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட கோவில்பட்டி-குமாரபுரம் இடையே ெரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோவை-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் ெரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    அதன்படி, இன்றும், வருகிற 17-ந் தேதியும் காலை 8 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் கோவை-நாகர்கோவில் விரைவு ரயில் (எண் 16322) திண்டுக்கல்-நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட தேதிகளில் இந்த ெரயிலானது கோவை-திண்டுக்கல் இடையே மட்டும் இயக்கப்படும்.

    இதேபோல மே 3 மற்றும் 17-ந் தேதி காலை 7.35 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் நாகர்கோவில்-கோவை விரைவு ெரயில் (எண் 16321) நாகர்கோவில்-திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட தேதிகளில் இந்த ெரயிலானது, திண்டுக்கல்-கோவை இடையே மட்டுமே இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • வருகிற 16ந் தேதி வரை கோவையில் இருந்து காலை 9:05 மணிக்கு புறப்படும் (06802) ரெயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
    • கோவை - இருகூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள வழித்தடத்தில் என்ஜினீயரிங் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    திருப்பூர்:

    கோவை என்ஜினீரியங் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோவை - சேலம் இடையிலான மெமு ெரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ெரயில்வே துறை அறிவித்துள்ளது.

    இது குறித்து தெற்கு ெரயில்வே சேலம் டிவிஷன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

    கோவை - இருகூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள வழித்தடத்தில் என்ஜினீயரிங் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் வருகிற 16ந் தேதி வரை கோவையில் இருந்து காலை 9:05 மணிக்கு புறப்படும் (06802) ரெயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல், சேலத்தில் இருந்து மதியம் 1:40 மணிக்கு புறப்படும் (06803) ரெயிலும் மே 1முதல் 16ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை, நிலக்கடலை காய் விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
    • அடுத்த வாரம் 9-ந் தேதி முதல் வழக்கம்போல் செவ்வாய் தோறும் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறும்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை, வெள்ளிக்கிழமை நிலக்கடலை காய் ஏலம் நடைபெறும்.

    இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை, நிலக்கடலை காய் விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    செவ்வாய்க்கிழமை நடைபெறும் தேங்காய் பருப்பு ஏலத்திற்கு விவசாயிகள் திங்கள் அன்று தங்களது தேங்காய் பருப்புகளை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வருவார்கள். நாளை மே 1 விடுமுறை தினம் என்பதால் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் செவ்வாய்க்கிழமை 2-ந் தேதி நடைபெறும் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறாது. அடுத்த வாரம் 9-ந் தேதி முதல் வழக்கம்போல் செவ்வாய் தோறும் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறும்.

    இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • காவேரி டெல்டா பகுதிகளில் விவசாயம் பாதிக்கபடும்.
    • மத்திய அரசு இந்த திட்டத்தை தற்போது கைவிடுவதாக அறிவித்தது

    மதுக்கூர்:

    அண்மையில் மத்திய அரசு காவேரி டெல்டா பகுதிகள் உள்ளடக்கிய பகுதிகளில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை அறிவித்தது.

    இந்த திட்டத்தால் காவேரி டெல்டா பகுதிகளில் விவசாயம் பாதிக்கபடும் என்பதால் இந்த திட்டத்திற்கு தமிழக அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தது.

    மேலும் இந்த டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு இந்த திட்டத்தை தற்போது கைவிடுவதாக அறிவித்தது.

    இதைத் தொடர்ந்து மதுக்கூர் ஒன்றியம் கீழக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரகிராமத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் ெபாது மக்கள் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

    மேலும் இந்தத் திட்டத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். 

    • கரூர்-திருச்சி இடையேயான 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து
    • பொறியியல் பணி நடைபெறுவதாக தென்னக ரெயில்வே அறிவிப்பு

    கரூர்,

    சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், கரூர் மாவட்டம் லாலாபேட்டை குளித்தலை ரயில்வே ஸ்டேஷன் இடையே பொறியியல் தொடர்பான பராமரிப்பு பணிகள் நாளையும் நாளை மறுநாளும் (3, 4-ந்தேதி) நடக்கிறது. இதனால், மதியம், 3:55 மணிக்கு கரூரில் இருந்து புறப்பட்டு, மாலை, 5:55 மணிக்கு திருச்சி செல்லும், எக்ஸ்பிரஸ் ரயில் (எண்-06882) சேவை ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் திருச்சியில் இருந்து மாலை, 6:20 மணிக்கு புறப்பட்டு, இரவு, 8:30 மணிக்கு கரூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்-06123) சேவையும், நாளையும், நாளை மறு நாளும் ரத்து செய்யப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    • வடகோவை-கோவை ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.
    • ஏப்ரல் 2, 3, 4, 7, 8, 9 ஆகிய தேதிகளில் ரெயில் ரத்து.

    கோவை,

    கோவை-மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் 2 ரெயில்கள் 6 நாட்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சேலம் கோட்ட ரெயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வடகோவை-கோவை ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் கோவையில் இருந்து ஏப்ரல் 2, 3, 4, 7, 8, 9 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.45 மணிக்கு மேட்டுப்பாளையம் புறப்பட்டு செல்லும் ரெயில் (எண்.06816) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    மேலும் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஏப்ரல் 2,3,4,7,8,9 ஆகிய தேதிகளில் மாலை 4.45 மணிக்கு கோவை புறப்பட்டு ரெயில்(எண்:06817) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    வருகிற 4-ந் தேதி பிற்பகல் 3.42 மணிக்கு கோவை வர வேண்டிய, பிலாஸ்பூர்-எர்ணாகுளம் இடையிலான வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில்(எ ண்:22815) கோவைக்கு பதில் இருகூர்-போத்தனூர் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

    இந்த ரெயில் போத்தனூருக்கு பிற்பகல் 3.42 மணிக்கு வந்தடைந்து, பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

    திருச்சி பாலக்காடு நகரம் இடையிலான தினசரி ரெயில்(எண்:16843) ஏப்ரல் 2, 3, 4, 7, 8, 9 ஆகிய தேதிகளில் தேவையான இடத்தில் 15 நிமிடங்கள் நிறுத்தி வைத்து இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள மற்றொரு செய்திகுறிப்பில், கோவை-திருப்பூர் வழித்தடத்தில் பல்வேறு இடங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டி இருப்பதால் கோவையில் இருந்து காலை 9.05 மணிக்கு சேலம் புறப்பட்டு செல்லும் மெமு ரெயில்(எண்:06802) இன்று முதல் வருகிற 30-ந் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திருச்சி-கரூர் இடையே ரத்து செய்யப்பட்டு உள்ளது
    • தென்னக ரயில்வே அறிவிப்பு

    கரூர்,

    திருச்சி ஜங்ஷனில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு வரை செல்லும் பயணிகள் ரயில்( எண் 16843) நாளை ஒருநாள் மட்டும் திருச்சி-கரூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது நாளை ஒருநாள் மட்டும் கரூரில் இருந்து புறப்பட்டு செல்லும் என்று தென்னக ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

    • செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது, போதையில் வாகனம் ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு 6 மாதம் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுகிறது.
    • போதையில் வாகனம் ஓட்டியவர்களுக்கு ரூ.10 ஆயிரமும், ெஹல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு ரூ.1000 அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    தமிழகத்தில் வாகன விபத்துக்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது, போதையில் வாகனம் ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு 6 மாதம் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுகிறது. போதையில் வாகனம் ஓட்டியவர்களுக்கு ரூ.10 ஆயிரமும், ெஹல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு ரூ.1000 அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

    சேலம் சரகத்தில் கடந்த மாதத்தில் அதிவேகமாக வாகனம் ஓட்டிய 49 பேர், அதிகபாரம் ஏற்றி வந்த 9 டிரைவர்கள், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி வந்த 19 டிரைவர்கள், சிக்னலை மீறிய 57 பேர், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 45 பேர் உள்ளிட்ட 216 பேரின் லைசென்சை ரத்து செய்ய, வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு போலீசார் பரிந்துரை செய்தனர்.

    அதன்படி போதையில் வாகனம் ஓட்டிய 216 பேரின் லைசென்ஸ் 3 மாதங்களுக்கு தற்காலிமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    • கடலூர், பாண்டி, சென்னை ரயில் பாதை திட்டத்திற்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது./
    • இதனை தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    கடலூர்

    கடலூரின் நீர் ஆதாரமாய் விளங்கும் கொண்டங்கி ஏரியை மாசு படாமல் பாதுகாக்க வேண்டும். கடலூர் மாநகராட்சி புதிய பஸ் நிலையம் எம். புதூரில் அமையும் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். கடலூர், பாண்டி, சென்னை ரயில் பாதை திட்டத்திற்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு கடலூர் அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் இளங்கோவன், கிருஷ்ணமூர்த்தி, ரமணி, நடராஜன், புருஷோத்தமன் முன்னிலை வகித்தனர். இதனை தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. உதவி பொதுச் செயலாளர் தேவநாதன் நன்றி கூறினார்.

    ×