search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யோகா தினம்"

    • விரிவுரையாளர்கள் நிலா, அரவிந்த் ஆகியோர் யோகா பயிற்சியின் அவசியம் குறித்து எடுத்துக் கூறினர்.
    • மாணவர் அமுதன் யோகாசனங்களை செய்து காட்டினார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் எஸ். தங்கப்பழம் சட்டக் கல்லூரியில் உலக யோகா தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி தாளாளர் எஸ்.டி. முருகேசன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் காளிசெல்வி வரவேற்று பேசினர்.

    நிகழ்ச்சியில் எஸ். தங்கப்பழம் இயற்கை மற்றும் யோகா அறிவியல் மருத்துவ கல்லூரி விரிவுரையாளர்கள் நிலா, அரவிந்த் ஆகியோர் கலந்து கொண்டு யோகா பயிற்சியின் அவசியம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூறினர். தொடர்ந்து மாணவர் அமுதன் யோகாசனங்களை செய்து காட்டினார். நிகழ்ச்சியில் கல்லூரி உதவி பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர் மாரியப்பன் நன்றி கூறினார்.

    • வந்தவாசி அரசு மருத்துவமனையில் பயிற்சி நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வந்தவாசி:

    வந்தவாசி அரசு மருத்துவமனையில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

    மருத்துவ அலுவலர் டாக்டர் சிவப்பிரியா தலைமையில் நடைபெற்ற யோகா பயிற்சியில் டாக்டர் முகமது அர்க்கம், உதவியாளர்கள் சுரேஷ்,கல்பனா, மற்றும் செவிலியர்கள் மருந்தாளுனர்கள், மருத்துவமனை பணியாளர்கள் நோயாளிகள் கலந்து கொண்டு யோகா பயிற்சி பெற்றனர்.

    • நடப்பாண்டு 4,150 டீ-ஷர்ட்டுகள் நியூயார்க்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
    • அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, ஐ.நா.,வில் இன்று நடைபெறும் யோகா தினத்தில் பங்கேற்கிறார்.

    திருப்பூர்:

    அமெரிக்க தலைநகர் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா., தலைமையகத்தில் ஆண்டுதோறும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

    தற்போது அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, ஐ.நா.,வில் இன்று நடைபெறும் யோகா தினத்தில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்போர் அணிய சிறப்பாக வடிவமைக்கப்பட்ட 'டீ-ஷர்ட்' வழங்கப்படுகிறது.திருப்பூரை சேர்ந்த தனியார் ஏற்றுமதி நிறுவனம், ஆண்டுதோறும் சர்வதேச யோகா தின டீ-ஷர்ட்டுகளை தயாரித்து நியூயார்க்கிற்கு அனுப்பி வருகிறது.

    அவ்வகையில் நடப்பாண்டு 4,150 டீ-ஷர்ட்டுகள் நியூயார்க்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இன்று நடைபெறும் யோகா தின விழாவில் பங்கேற்போர், திருப்பூரில் தயாரான டீ-ஷர்ட்டுகளை அணிகின்றனர்.

    இது குறித்து ஏற்றுமதியாளர் ஒருவர் கூறியதாவது:-

    அமெரிக்காவில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் நியூயார்க் கிளை 2016 முதல் சர்வதேச யோகா கொண்டாட்டத்துக்கான டீ-ஷர்ட் தயாரிப்பு ஆர்டர்களை எங்களுக்கு வழங்கி வருகிறது.கடந்தாண்டு 1,800 டீ-ஷர்ட் தயாரித்து அனுப்பினோம். இந்த ஆண்டு 4,150 டீ-ஷர்ட் தயாரித்து அனுப்பி உள்ளோம். இந்த டீ-ஷர்ட்களில், எஸ்.பி.ஐ., லோகோ மற்றும் யோகா தின லோகோ பொறிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

    • உலகெங்கும் உள்ள சோதனைச் சாலைகளில் யோகா பற்றிய ஏராளமான ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
    • பத்து நிமிட தியானத்திற்கே பெரும் பயன் உண்டு என்று விஞ்ஞானிகளின் சோதனைகள் நிரூபிக்கின்றன.

    உலகெங்கும் ஆண்டுதோறும் ஜூன் 21-ம் நாள் யோகா தினமாக 2015-ம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது.

    2014-ம்ஆண்டு ஐ.நா.வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் போது ஜூன் 21-ம் நாள் யோகா தினமாக உலகெங்கும் கொண்டாடப்படலாம் என்றும் ஒரு ஆண்டில் நீண்ட பகல் பொழுதைக் கொண்டிருக்கும் இந்த நாள் உலகில் உள்ள பல பகுதியினருக்கும் சிறப்பான நாள் என்றும் குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து ஐ.நா. வில் ஜூன் 21-யோகா தினமாகக் கொண்டாடப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    யோக சூத்திரம்: பதஞ்சலி முனிவர் வகுத்த அட்டாங்க யோகம் இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய எட்டு அடுக்கு எனப்படும் அட்டாங்க வழியைக் காண்பிக்கும் ஒன்று.

    இதனால் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும், சமுதாய நலனும் மேம்படும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு விட்டதால் உலகெங்கும் யோகா இப்போது நடைமுறைப் பழக்கமாக ஆகிவிட்டது.

    இதற்கென தனி இடமோ அல்லது விசேஷமான சாதனங்களோ தேவை இல்லை. உடலே இதற்கான கருவி. உள்ளமே உயரத்தை எட்டுவதற்கான ஏணி.

    யோகத்தினால் மூச்சை அடக்கிய யோகி:

    உலகெங்கும் உள்ள சோதனைச் சாலைகளில் யோகா பற்றிய ஏராளமான ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அவை வியத்தகு முடிவுகளை அறிவித்துள்ளன.

    மகராஜா ரஞ்சித் சிங் லாகூரை ஆண்டபோது அவருடன் இணைந்து பிரிட்டிஷ் ஜெனரலான சர் கிளாட் வேட் ஒரு சோதனையை நடத்தினார். அரசு முத்திரை பொறிக்கப்பட்ட ஒரு பெட்டியில் யோகியான ஹரிதாஸ் என்பவர் வைக்கப்பட்டு புதைக்கப்பட்டார். 120 நாட்கள் கழித்து குழி தோண்டப்பட்டு பெட்டியைத் திறந்து பார்த்த போது முன்னர் எப்படி அமைதியாக இருந்தாரோ அதே போல அவர் எழுந்து வந்தார். இதைப் பார்த்த அனைவரும் பிரமித்தனர்.

    1986-ம் ஆண்டு பிரிட்டன் ராணுவ ஆய்வு மையம் பிரெனர் மற்றும் கனாலி ஆகிய இரு விஞ்ஞானிகளை மூச்சை அடக்கும் யோகா திறன் பற்றி ஆய்வு செய்ய நியமித்தது.

    'தியானத்தின் மூலமாக மிக அதீத ஓய்வு நிலையைப் பெறுவதால் உடல் இயக்கம் நம்ப முடியாதபடி குறைந்து ஆக்சிஜன் தேவையை வெகுவாகக் குறைக்கிறது. ஆகவே இது சாத்தியமாகிறது' என்று அவர்கள் ஆய்வின் முடிவைக் கூறினர்.

    1927-ம் ஆண்டு பாரீசில் நடந்த பன்னாட்டு அதீத உளவியல் மாநாட்டில் பேராசிரியர் வான் ஷ்ரெங் நாட்ஜிங் முன்னிலை வகிக்க மாநாட்டில் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்க ஒரு இளைஞர் 27 முறை மேலே பறந்து காண்பித்தார். யோகத்தால் வந்த - மிதக்கும் - 'லெவிடேஷன்' சக்தி இது என்று அவர் கூறியபோது அனைவரும் வியந்தனர்.

    யோகம் தரும் பயன்கள்: தியானம் மற்றும் எளிய ஆசனங்கள் எல்லையற்ற பயனைத் தருபவை. தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் வரை இதற்கு ஒதுக்கினால் போதும். நல்ல ஒரு ஆசானிடம் எளிய ஆரம்பப் பயிற்சிகளைக் கற்று ஒருவர் இதில் ஈடுபட்டால் ஏராளமான பயன்களைப் பெறலாம்.


    சில பயன்களின் பட்டியல் இதோ:

    1) பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தியானம் ஒருவருக்கு ஆக்கபூர்வமான தொடர் வரிசை விளைவுகளை ஏற்படுத்துகிறது.

    2) நடத்தையைச் சீராக்கும் மருத்துவ சிகிச்சையில் இது தன்னைத் தானே கட்டுப்படுத்தும் ஒரு சிறந்த வழிமுறையாக ஆகிறது.

    3) மன அழுத்தத்தை இது நீக்குகிறது. நல்ல ஓய்வை உறுதி செய்கிறது.

    4) ஒருவரின் உண்மையாக தற்போது இருக்கும் ஆன்ம அடையாளத்தை அவரது லட்சியபூர்வமான ஆன்ம அடையாளத்துடன் சமப்படுத்துகிறது.

    5) அனைத்தும் உள்ளடக்கிய முழு மருத்துவத்தைத் தன்னுள்ளே கொண்டது இது.

    6) அகங்காரத்தை நீக்குகிறது.

    7) நிகழ்காலத்தில் வாழ வழி வகுக்கிறது.

    8) எண்ணங்களைத் தளர்த்தி வெளியேற்றும் சிறந்த உத்தியாக அமைகிறது இது.

    9) ஆரோக்கியத்திற்கான அற்புதத் திறவுகோல் இது. மாரடைப்பு, கேன்சர், பக்கவாதம் போன்ற கொடிய நோய்களை வரவிடாமல் செய்ய உள்ள அற்புத வழி இது.

    10) தியானத்தால் நம்பமுடியாத உடல் ரீதியான சாகசச் செயல்களைச் செய்ய முடியும்.

    11) தியானத்தினால் தானியங்கி நரம்பு மண்டலத்தை நமக்கு உகந்த படி கட்டுப்படுத்த முடியும்.

    12) மன அழுத்தம், மன இறுக்கம் சம்பந்தமான உளவியல் மற்றும் இதர பிரச்சினைகளை நீக்குவதற்கு உதவுவது இது.

    13) மனிதனுக்கு அகண்ட பார்வையைத் தருவது இது.

    14) வேக யுகத்தில் நமக்குள்ள தொழில்நுட்ப கலாசாரத்தின் தீமைகளை எளிதில் அகற்றுவது இது.

    15) மனித வாழ்வின் மாண்புகளையும் மதிப்புகளையும் உணர்த்துவது இது.

    16) நமக்குத் தெரிந்த கலைகளிலேயே மிக எளிதாகக் கற்கக் கூடிய கலை யோகக் கலையே.

    17) நமக்குத் தெரிந்த உத்திகளிலேயே மிக எளிதாகப் பயிற்சியை நடைமுறைக்குக் கொண்டுவருவது இதுவே.

    18) இதைச் செய்ய பணம் தேவை இல்லை.

    19) இதற்கு வயது வரம்பு கிடையாது.

    20) ஆண், பெண் என்ற பால் பாகுபாடு இல்லை.

    21) எந்த இடத்தில் வேண்டுமானாலும் செய்யலாம்.

    22) தியானத்தை எந்த நேரத்திலும் மேற்கொள்ளலாம்.

    23) இனம், மதம், நாடு, அந்தஸ்து என்ற பாகுபாடோ பேதமோ இல்லை.

    24) மனதைப் பண்படுத்தி உயரலாம்.

    25) உடலை மேம்படுத்தலாம்.

    26) ஆன்மீக சக்தியை அதிகப்படுத்தலாம்.

    27) மனித குலத்தின் பாரம்பரியத்தின் சிறந்த குணங்கள் தியானத்துடன் சம்பந்தமுள்ளவையாக இருக்கின்றன.

    28) தியானத்தின் போது ஆச்சரியகரமான அற்புத அனுபவங்கள் ஏற்படும்.

    29) நீண்ட ஆயுளை உறுதி செய்யும்.

    30) கெட்ட கனவுகள் அகலும்.

    31) இரவில் நல்ல தூக்கம் வரும்.

    32) தாடைகளை இறுக்குதல், முதுகெலும்பு, தோள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அகலும்.

    33) அனைவரையும் கவரும் வண்ணம் எல்லையற்ற அமைதியுடன் எப்போதும் இருக்க முடியும்.

    34) புன்னகை ஒளிர முகத்தில் ஒரு ஒளி தோன்றும்.

    35) வெட்கம் அகலும்.

    36) விளையாட்டு வீரர்கள், கணினி நிபுணர்கள், விஞ்ஞானிகள், பைலட்- என இப்படி எந்தத் துறையினருக்கும் இது பொருந்துவதோடு அவர்களின் திறனை வியத்தகு அளவில் கூட்டும்.

    தலாய்லாமாவின் அழைப்பு: 2000-ம் ஆண்டில் தலாய்லாமா அமெரிக்க விஞ்ஞானிகளை தியானம் பற்றி அறிவியல் ரீதியாக ஆராய வருமாறு அழைப்பு விடுத்தார். அவர்கள் ஒரு யோகியை சோதனைக்கு அனுப்புமாறு வேண்ட அமெரிக்காவிற்கு 30 வயதே ஆன ஒரு யோகியை தலாய்லாமா அனுப்பினார்.

    விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பிரபல நியூரோ விஞ்ஞானியான ரிச்சர்ட் டேவிட்சன் அந்த யோகியின் மீது சோதனைகளை மேற்கொண்டார்.

    யோகி ஆறு விதமான தியான நிலைகளைச் செய்து காண்பித்தார்.

    மாக்னெடிக் ரெசோனென்ஸ் இமேஜிங் மெஷின் (MRI) என்ற நவீன கருவியை உபயோகித்து ஒவ்வொரு தியானத்திலும் லாமாவின் மூளையில் ஏற்படும் மாற்றங்களை ரிச்சர்ட் ஆராய்ந்தார்.

    ஒவ்வொரு விநாடியும் அந்தச் செயல்பாடுகளை ஸ்கேன் செய்ய முடிந்தது. ஆறு தியான நிலைகளில் 'தயை' என்னும் தியானம் லாமாவின் மூளையில் இடது பக்க பிரண்டள் கைரசின் செயல்பாட்டைக் காண்பித்தன.

    இந்தப் பகுதி தான் ஒரு மனிதனின் சந்தோஷம், உற்சாகம், சக்தி, விழிப்புணர்வு ஆகியவற்றைக் குறிக்கும்.

    வலதுபக்க பிரிப்ரண்டல் பகுதி ஒருவரின் சோகம், துக்கம், கவலை, ஏக்கம், மனச்சோர்வு ஆகியவற்றைக் குறிக்கும். 'தயை தியானத்தில்' லாமாவின் மூளைப்பகுதி சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் எல்லையற்ற நலத்தையும் காண்பித்தன. இவற்றைப் பயிற்சி மூலம் பெறலாம் என்பதை இது உறுதிப்படுத்தியது.


    அடுத்த சோதனைத் தொடரை பால் எக்மன் என்னும் விஞ்ஞானி நடத்தினார். முகத்தில் ஏற்படும் நுணுக்கமான முகபாவ வேறுபாடுகளை ஆய்வதில் வல்லவர் அவர்.

    திடீரென ஒரு பயங்கரமான ஓசையை அவர் ஏற்படுத்தி லாமாவைக் கவனித்தார். இந்த சத்தத்திற்கு யாராக இருந்தாலும் திடுக்கிட்டுப் பயப்படாமல் இருக்க முடியாது. ஆனால் லாமாவோ 'ஓபன் ஸ்டேட்' என்னும் தியான நிலையை மேற்கொண்டிருந்ததால் அவர் முகத்தில் எந்த வித பய உணர்ச்சியும் தெரியவில்லை. அவரது இதயத்துடிப்பும், ரத்த அழுத்தமும் சிறிது உயர்ந்தது. எந்த வித அதிர்ச்சி ஏற்பட்டாலும் உடனடியாக சமநிலைக்கு உடனே வர முடியும் என்பதை தியானம் மூலம் அவர் நிரூபித்தார்.

    இப்படி ஏராளமான சோதனைகள் நடந்தன. முடிவுகளை வெளியிட்ட விஞ்ஞானிகள் வியந்தனர்.

    பிரபல உளவியல் இதழான சைக்காலஜி டு டே தொடர்ந்து யோகாவின் சிறந்த பயன்களைப் பற்றிய அறிவியல் ஆய்வுகளை வெளியிட்டு வருகிறது.

    பத்து நிமிட தியானத்திற்கே பெரும் பயன் உண்டு என்று விஞ்ஞானிகளின் சோதனைகள் நிரூபிக்கின்றன.

    இந்த பத்து நிமிட தியானத்திலேயே தியானம் செய்வோர் அதிக அளவுஆல்பா அலைகளை (ஓய்வான மூளை அலைகள்) வெளியிடுவதையும், மனச்சோர்வு, மன அழுத்தம் இல்லாமல் இருப்பதையும் ஹார்வர்டு மெடிகல் ஸ்கூல் விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தமனிகளில் தடிப்பு ஏற்படும் ஆர்தெரோலெரோசீஸ் என்ற வியாதியால் அவதிப்பட்ட அமெரிக்கர்களில் அறுபது பேர் ஆறு முதல் ஒன்பது மாதம் வரை தியானம் செய்ய அவர்களின் தமனிகளில் தடிமன் குறைய ஆரம்பித்தது என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.

    மகரிஷி மகேஷ் யோகி கற்பித்த ஆழ்நிலை தியானத்தைப் பற்றி ஏராளமான அறிவியல் சோதனை முடிவுகள் இரு பாகங்களாக படங்களுடன் வெளியிடப்பட்டுள்ளன.

    கவனத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலம் ஒரு தனிமனிதனின் உணர்வில் செல்வாக்கை ஏற்படுத்தும் ஒரு உத்தியே தியானம் என அறிவியல் தியானத்தை வரையறுத்துக் கூறுகிறது. ஆனால் இதைத் தோற்றி வளர்த்துக் காக்கும் இந்து மதமோ, "உடல் ரீதியாக உயர்வது மட்டுமின்றி ஆன்மாவை உணர்வதற்கான கலையே யோகா" என்று கூறுகிறது.

    யோகம் கற்போம்! வளமுடன் வாழ்வோம்!!

    தொடர்புக்கு:- snagarajans@yahoo.com

    • விழாவில் மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று யோகாசனம் செய்தனர்.
    • மாணவர்களுக்கு பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டு அவைகளில் வெற்றிபெற்றோரை அனைவரும் பாராட்டினர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே இடைகாலில் அமைந்துள்ள ஸ்டஅக் ஹைடெக் பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்று பள்ளி மைதானத்தில் ஒரே நேரத்தில் யோகாசனம் செய்தனர்.

    சிறப்பு விருந்தினராக யோகாசன பயிற்றுநர் மற்றும் அத்துறையின் துணை பேராசிரியர் செல்வி சிதம்பரம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    மேலும் மாணவர்களுக்கு பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டு அவைகளில் வெற்றி பெற்றோரையும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளி தலைவர் முருகன், தாளாளர் புனிதா செல்வி மற்றும் முதல்வர் பிரவின்குமார் ஆகியோர் பாராட்டினர்.

    • நாடு முழுவதும் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது.
    • பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    மன்னார்குடி

    நாடு முழுவதும் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தளிக்கோட்டையில் மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் மாணவ- மாணவிகளுக்கு யோகாசன பயிற்சி அளிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு மிட்டவுன் ரோட்டரி தலைவர் சி. குருசாமி தலைமை தாங்கினார். மிட்டவுன் ரோட்டரி அறக்கட்டளை தலைவர் டாக்டர் வி. பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பா.ஜ.க. நகர பொதுச்செயலாளர் எம்.எஸ். ஜெயராமன் மாணவ- மாணவிகளுக்கு யோகாசனப் பயிற்சி அளித்தார். யோகாசனம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கிப் பேசினார்.இந்த பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ -மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தளிக்கோட்டை பா.ஜ.க கிளைத் தலைவர் பாரதிராஜா, கலியபெருமாள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்கள் யோகாசனம் செய்தனர்
    • 350 ராணுவ அதிகாரிகள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்கள் யோகாசனம் செய்தனர். யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி ஊட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவிகள் யோகாசனங்களை செய்து அசத்தினர். மேலும் அவர்கள் நடனமாடி யோகா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், யோகா உடலுக்கு மட்டுமல்ல மனதுக்கும் நன்மை அளிக்கும். அனைத்து வயது பிரிவினரும் யோகா கற்றுக்கொள்ளலாம் என்றனர். ஊட்டி கோர்ட்டில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட நீதிபதி முருகன் தலைமை தாங்கினார். நீதிபதிகள் ஸ்ரீதரன், ஸ்ரீதர், மோகனகிருஷ்ணன், தமிழினியன் மற்றும் கோர்ட்டு ஊழியர்கள் கலந்துகொண்டு யோகா பயிற்சிகளை மேற்கொண்டனர். ராணுவ அதிகாரிகள் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரி வளாகத்தில் உள்ள ஏகலைவா அரங்கத்தில் யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் ராணுவ பயிற்சி கல்லூரி கர்னல் திருப்பாதி தலைமையில் 350 ராணுவ அதிகாரிகள் தங்களது குடும்பத்தினருடன் கலந்துகொண்டு தரையில் அமர்ந்து மூச்சுப்பயிற்சி, சூரிய நமஸ்காரம், பத்மாசனம், புஜங்காசனம் போன்ற யோகாசனங்களை செய்தனர். ஊட்டி அருகே ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மற்றும் அரசு, தனியார் பள்ளிகள், அரசு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் யோகா தினம் கொண்டாடப்பட்டன.

    ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் நடந்த நிகழ்ச்சிக்கு டீன் மனோகரி தலைமை தாங்கினார். கூடலூர் கூடலூர் அரசு மாதிரி மேல்நிலை பள்ளி வளாகத்தில் மாணவ-மாணவிகள் நேற்று உடல் வலிமையை கூட்டும் வகையில் யோகா பயிற்சி செய்தனர். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் அய்யப்பன் பேசும்போது, யோகா செய்வதால் மனம், உடல் பலம் பெறுகிறது. நினைவுத் திறன் அதிகரிப்பதால் பாடங்களை எளிதில் புரிந்து படிக்க முடியும் என்றார். இதேபோல் அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களில் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது.

    கூடலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் சர்வதேச யோகா தினத்தை கடைபிடித்தனர். இதையொட்டி அனைவரும் யோகா செய்தனர். அதற்கான பயிற்சியை மனவளக்கலை பேராசிரியர் பாஸ்கர் அளித்தார். தொடர்ந்து கூடலூர் மனவளக்கலை மன்றத்தில் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில் கூடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் கலந்துகொண்டார்.

    • பள்ளி, கல்லூரி மற்றும் நீதிமன்றங்களில் உலக யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது.
    • நீண்ட நாள் உயிர் வாழலாம்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரி மற்றும் நீதிமன்றங்களில் உலக யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் யோகா பயிற்சி நடைபெற்றது.

    இதில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவருமான எஸ்.மகாலட்சுமி, மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி கர்ணன், குடும்ப நல நீதிபதி செல்வம், மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் சரவணன், சார்பு நீதிபதி ஜெயசூரியா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலர் அழகேசன், வழக்குரைஞர்

    சங்கத் தலைவர் மனோகரன், மாவட்ட நீதிமன்ற முதன்மை நிர்வாக அலுவலர் சௌந்தர்ராஜன் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். யோகா பயிற்றுநரும், இயற்கை மருத்துவருமான முத்துக்குமார் கலந்து கொண்டு யோகா பயிற்சியளித்தார்.

    சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற யோகா பயிற்சிக்கு அப்பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்து, யோகாவானது மனிதனின் உள்ளார்ந்த நல்வாழ்வுக்கான அறிவியல் அணுகுமுறையை உருவாக்குவதற்கான ஒருவகையான அடித்தளமாகும் என்றார்.

    மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிக கலோரிகள் உள்ள உணவை உட்கொண்டு உடலுழைப்பு இல்லாததால் மன அழுத்தம், இதய நோய், மனச்சோர்வு, உடல் பருமன், படபடப்பு போன்ற நோய்களுக்கு ஆளாகின்றனர்.

    தினமும் யோகா பயிற்சி செய்வதால் இத்தகைய நோய்களிலுருந்து விடுதலை பெற்று, உடல் மற்றும் மனம் இரண்டும் ஒருங்கிணைந்து செயல்பட்டு உடல் ஆரோக்கியமாக இருக்கவும் பல நோய்கள் வராமல் தடுக்கவும் வயது மூப்பை தடுத்து நீண்ட நாள் உயிர் வாழலாம் என்றார்.

    பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலக பணியளர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். இதே போல், மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது.

    • சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ பள்ளியில் மாணவர்கள் சார்பில் யோகா தினம் கொண்டாடப்பட்டது.
    • யோகாவின் வரலாறு மற்றும் அதன் பயன்களை பற்றி மாணவி விஜயரக்சா எடுத்துரைத்தார்.

    தென்காசி:

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஆவுடையானூர் கிராமம் பொடியனூரில் உள்ள சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ பள்ளியில் மாணவர்கள் சார்பில் யோகா தினம் கொண்டாடப்பட்டது.

    இந்த ஆண்டு யோகா கருப்பொருளான ' மனித குலத்திற்கான யோகா' என்ற கருத்தை மையமாக கொண்டு ஆசிரியை குயின்விக்டோரியாவால் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். கொரோனா போரின்போது துன்பங்களை களைவதில் யோகா எவ்வாறு மனித குலத்திற்கு சேவை செய்தது என்பதை சித்தரிக்கும் வகையில் இந்த கருப்பொருள் அமைந்தது. பள்ளி மாணவர்கள் இணைந்து யோகா சின்னத்தினை சில ஆசனங்கள் மூலமாகவும் மற்றும் கூர்நுனிக்கோபுரம் செய்து காட்டியும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர்.யோகாவின் வரலாறு மற்றும் அதன் பயன்களை பற்றி மாணவி விஜயரக்சா எடுத்துரைத்தார்.

    விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் பள்ளி ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் ஊழியர்களின் துணையுடன் பள்ளி முதல்வர் நித்யா தினகரன் செய்திருந்தார்.

    • மாணவ- மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
    • சங்கரநாராயண சுவாமி கோவில் முன்பு யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் முன்பு பதஞ்சலி யோகா அறக்கட்டளை சார்பில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு யோகா மாஸ்டர் ஜெயராம் தலைமை தாங்கினார். இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் மற்றும் பதஞ்சலி யோகா மையத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு யோகாசனம் செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    இதில் மாணிக்கம், சுந்தரராஜ், சுப்புரமணியன், கருப்பசாமி, ராமு, வெங்கட்ராமன், பெப்சி முருகன், ராகவன் மற்றும் உறுப்பினர்கள், பி.ஜே.பி. மாவட்ட பொது செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ராஜலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் உள்ள கவர்னர் மாளிகையில் யோகா தின நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
    • ஒரு மணி நேரம் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பல்வேறு யோகாசனங்களை செய்தார்.

    சென்னை:

    8-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டது. சென்னையில் உள்ள கவர்னர் மாளிகையில் யோகா தின நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    இன்று காலை 6.30 மணிக்கு ராஜ்பவனில் யோகா தின நிகழ்ச்சி தொடங்கியது. அதில் கவர்னர் ஆர்.என்.ரவி, அவரது மனைவி லட்சுமி ரவி, கவர்னர் மாளிகை ஊழியர்கள், அண்ணா பல்கலைக்கழகம், விளையாட்டு பல்கலைக்கழக மாணவர்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

    ஒரு மணி நேரம் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பல்வேறு யோகாசனங்களை செய்தார். நிகழ்ச்சியில் மாணவர்களும் யோகாசனங்களை செய்தனர்.

    • சர்வதேச யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
    • பல்லவ சாம்ராஜ்ய பூமியில் அமர்ந்து நான் யோகா செய்ததை பெருமையாக உணர்கிறேன்.

    மாமல்லபுரம்:

    சர்வதேச யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி மாமல்லபுரத்தில் 3 இடங்களில் யோகா பயிற்சிக்கு பிரம்மாண்ட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இன்று காலை 6 மணி அளவில் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் யோகா பயிற்சி தொடங்கியது. இதில் மத்திய சமூகநீதித்துறை மந்திரி நாராயணசாமி கலந்து கெண்டார். 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். அங்கு பிரதமர் மோடி பங்கேற்ற யோகா நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த யோகா நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    இதைத்தொடர்ந்து மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் பாரதிய ஜனதாகட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர். இதில் மத்திய மந்திரி நாராயணசாமி பங்கேற்றார்.

    இதைத்தொடர்ந்து யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 75 கலைஞர்களுக்கு தங்க தாமரை விருதை மத்தியமந்திரி நாராயணசாமி வழங்கினார்.

    ஆவடியில் சர்வதேச உலக யோகா தினத்தை முன்னிட்டு, மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் மற்றும் குடும்பத்தினர் 300க்கும் மேற்பட்டவர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

    இதில் மத்திய ரிசர்வ் காவல்துறை துணைத்தலைவர் எம்.தினகரன், மத்திய பயிற்சி காவல் துணைத்தலைவர் கேவல்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இதுகுறித்து யோகா கலை நிபுணர் வினோத் கூறும்போது, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு 58நாடுகளில் தொடங்கப்பட்ட இந்த யோகா தற்போது 183 நாடுகளில் கடைபிடிக்கபடுகிறது. உடல் நலத்தை பாதுகாக்க யோகா முக்கிய பங்காற்றுகிறது. யோகா பயிற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றார்.

    பல்லவ சாம்ராஜ்ய பூமியில் அமர்ந்து நான் யோகா செய்ததை பெருமையாக உணர்கிறேன்.

    அ.தி.மு.க வில் ஒற்றை தலைமை என்பது அவர்களது கட்சி நிலைப்பாடு. நாங்கள் தலையிடவோ,கருத்து சொல்லவோ விரும்பவில்லை. எல்லாம் நாளை மறுநாள் சரியாகி விடும். அ.தி.மு.க உடனான கூட்டணி தொடரும். எங்களது கட்சிக்கான உறுப்பினர் சேர்க்கை கிராமம், கிராமமாக அதிகரித்து வருகிறது.

    "அக்னிபாத்" இராணுவ திட்டம் பற்றி எதிர் கட்சிகள் தவறாக மக்களிடம் திணிக்கிறார்கள். இளைஞர்களை முன்புபோல் பொய் சொல்லி யாரும் ஏமாற்ற முடியாது. அவர்கள் நன்றாக படித்து புரிந்து வருகிறார்கள். எனவே அக்னிபாத் திட்டம் மோடி நினைத்ததை விட எழுச்சி அடையும். இராணுவமும் பலமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×